இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 1

கிறிஸ்தவர்களைப் பொறுக்கி எடுத்து முன்னேற்றுவதற்காக இந்திய மக்களின் வரிப்பணம் மானியமாக செலவாகிக் கொண்டிருக்கிறது… வளர்ந்துவரும் ஒரு நவீன தேசம் தனது குடிமக்களின் ஒரு பிரிவினருக்கு எதிராக, அதுவும் பெரும்பான்மையினருக்கு எதிராக இப்படி பாரபட்சமாக நடந்து கொள்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.. இந்திய மக்கள் தொகையில் 2.3 சதவீதம் (2001 சென்சஸ் படி) உள்ள கிறிஸ்தவர்கள், இந்தியாவிலுள்ள 22 சதவீதம் கல்வி நிறுவனங்களைத் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துள்ளார்கள். அதாவது தங்கள் எண்ணிக்கையைப் போல 10 மடங்கு கல்வி நிறுவனங்கள்…

View More இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 1

தமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்

ஒரு அட்டவணை திராவிடர்கள் மற்றும் ஆரியர்களின் பண்புகளை கட்டம் கட்டி அழகாக ஒன்பது பாயிண்டுகளில் பட்டியலிடுகிறது. காலனிய காலகட்டத்தின் பிழையான இனவாத கருத்துக்களில் இருந்து கொஞ்சம் கூட நகராமல் அதையே இங்கு சொல்கிறார்கள் – நவீன மானுடவியலும், மரபணு அறிவியலும் ஒட்டுமொத்தமாக அதைப் பொய்யானது என்று நிரூபித்துவிட்ட போதும்.. ”லெமூர் மூதாதைகளிலிருந்து தமிழ் பேசிக்கொண்டே உருவான ஆதி மானுடம்” எப்படி அபத்தத்திலும் மகா அபத்தமான கருதுகோள் என்பது புரிய வரும்…(மூலம்: மிஷேல் டேனினோ)

View More தமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்

அறியும் அறிவே அறிவு – 2

பார்ப்பவனின் மனதும் காட்சியின் ஒரு பகுதியே… உலகத்தின் இயல்பை ஆராய்வதை விட்டு, இந்த உலகத்தைக் காணும் தான் யார், தனது தன்மை என்ன, தனது எல்லா நிலைகளிலும் உலகம் இப்படித்தான் இருக்கிறதா, அல்லது உலகம் என்பது உண்மையிலேயே இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்தாலாவது பயன் இருக்கும்.

View More அறியும் அறிவே அறிவு – 2

ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்

இந்தப் புராணத்தில், ஆசிரியர் தக்க இடங்களில் அந்நிய மதத்தாரால் ஈழநாட்டில் இந்துமதத்திற்கு ஏற்பட்ட தொல்லைகளையும் பதிவு செய்து வைத்துள்ளார்… தாமன் என்பது ‘தாமசு’ என்பதன் மரூஉ. கனகசபாபதி குருக்கள், மறைவாக, ‘தாமன்’ என்ற அந்தப் பெயரையே ‘தாமோதரன்’ என மாற்றியமைத்து, தமது சைவசமய ஆசாரப்படி… அருணாசலம் மதமாற்றத்திற்குச் சிறிதும் மனங்கொள்ளாது, முந்தினநாள் இரவே பாடசாலை மதிலை ஏறிக் குதித்து…

View More ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்

அறியும் அறிவே அறிவு – 1

“IIT என்னும் வார்த்தையில் இரண்டு I-கள் இருப்பதால் அங்கிருப்பவர்களுக்கு அகந்தை சற்றே அதிகமாக இருக்குமோ?”… ஆலமரத்திற்கு முதல் என்றும் முடிவு என்றும் இல்லாத நிலையாக விழுதுகளே வேராக வளர்ந்து ஒரு தொடர் நிகழ்வைக் குறிக்கின்றன. கல்வி, அறிவு இவைகளின் குணமும் அப்படித்தானே… எனக்குப் பகலில் சூரியன், இருளில் விளக்கு. இந்தப் பிரகாசத்தை எல்லாம் உணரக்கூடிய பிரகாசம் எது? கண்ணின் ஒளியினால் உணர்கிறேன். அந்தக் கண்ணை உணர்கின்ற ஒளி எது?…

View More அறியும் அறிவே அறிவு – 1

எல்லோரும் ஏமாந்துகிட்டிருக்காங்க.. அப்ப நீங்க?

ஒரு அறையில் சின்னதாக தனித்தனியாக லேமினேட் செய்யப் பட்டு மூன்று குழந்தைகளின் போட்டோக்கள் ஒரு மேசையில் இருந்தன. இதில எல்லாம் மதத்தைப் பார்த்தா நாம என்ன சார் மனுஷங்க?… திட்டமிட்டு இரண்டு பிராமணர்களை தேர்ந்தெடுத்து, மூளைச்சலவை செய்து, புரோடஸ்டண்ட் சர்ச்சில் மதம்மாற்றி.. இந்தியா இந்த அவலத்தை சகித்துக் கொள்வது மட்டுமல்ல, இதற்குத் துணைபுரியவும் செய்கிறது… இப்படி ஏமாத்தி இருக்காங்களே? நானும் ஏமாந்திருக்கேனே என்று நொந்து கொண்டார் நண்பர்..

View More எல்லோரும் ஏமாந்துகிட்டிருக்காங்க.. அப்ப நீங்க?

ஆசிரியர் தினம் – சில எண்ணங்கள்

பல நல்ல ஆசிரியர்கள் வெறுத்துப் போய் இந்த தொழிலை விட்டு வேறு நல்ல வேலைக்கு செல்ல விரும்புவதாகவே ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது… பல்கலைக் கழகங்களில் நியமனம் பெறுகிற பேராசிரியர்களும், துணை வேந்தர்களும் சாதி பார்த்தே நியமிக்கப் படுகிறார்கள்…. இன்னமும் பல இடங்களில் பெயர், முகம் வெளிப்படாமல், இன்றைய நிலையை நினைத்து மனதுக்குள் வெறுத்துப் போனாலும், விடாமல் தனது பணியை முடிந்தவரை சிறப்பாக செய்து வரும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்…

View More ஆசிரியர் தினம் – சில எண்ணங்கள்

நாகர்கோவிலில் பா.ஜ.க பிரம்மாண்ட போராட்டம்: நேரடி ரிப்போர்ட்

ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அலைகடலெனத் திரண்டு வந்து இந்த ஆர்ப்பாட்டதிற்கு ஆதரவளித்தனர். சாதாரண மக்கள் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்… வழக்கமான ஆட்டோவில் செல்லும்போது ஆட்டோ டிரைவர் “தவறாம வந்திருங்க சார். இது நம்ம குழந்தைகளின் உரிமைக்காக” என்று அழைத்தாராம்.. “ஏழை இந்து குழந்தைகளை புறக்கணிக்க அனுமதிக்க மாட்டோம் என தமிழகத்தில் யுக புரட்சி வருகிறது. அதன் ஒரு அங்கமாக இங்கு அமர்ந்து இருப்பவர்கள் உள்ளனர்… தமிழகத்திலும் காவிக் கொடி ஆட்சி கொண்டு வந்தே தீருவோம்.”…

View More நாகர்கோவிலில் பா.ஜ.க பிரம்மாண்ட போராட்டம்: நேரடி ரிப்போர்ட்

தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி

வாசிக்கும் போது மனதில் கசப்பும் அவமானமும் ஊறுகிறது. தமிழின் பெயரில் கூத்தடிக்கும் அரசியல் கோமாளிகள் ஒருபக்கம், அரசியல் வைராக்கியத்துடன் இந்திய வம்சாவளியினர் நலனைப் பாதுகாக்கும் முதுகெலும்பும் அக்கறையும் அற்ற மத்திய அரசு மறுபக்கம், நம்மக்கள் படும் துயரை புறக்கணிக்கும் ஊடகங்கள் மறுபக்கம், இவை எதிலும் அக்கறையில்லாமல் இலவசங்களுக்கும் ஆயிரங்களுக்கும் ஜனநாயகத்தையே அடகு வைக்கும் மந்தையாக நாம் மறுபக்கம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?… இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழர்கள் அயல்நாடுகளில் அனுபவிக்கும் அன்றாட வாழ்க்கை அவலங்களையும் காய்தல் உவத்தலின்றி முன்வைக்கும் முக்கியமான முயற்சி இது….

View More தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி

வறுமைக்கும் உண்டோ மதம்? பா.ஜ.கவின் ஜூலைப் போராட்டம்

”.. ஸ்டீபனும், அருள்ராஜும் பழிப்பு காட்டிட்டுப் போறானுங்கம்மா.. நம்ப அவங்களை விட ரொம்ப ஏழைங்க தான? பின்ன ஏம்மா எனக்குப் பணம் தரல?” … இந்து மாணவர் சமுதாயத்திற்கு செய்யப்படும் இதுபோன்ற துரோகத்தை பாஜக ஏற்றுக் கொள்ளாது. மதமாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளில் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மதத்தின் பெயரால் வாக்குகளை அறுவடை செய்ய திமுக தயாராக இருக்கிறது.. ஜூலை 25ம் தேதி கன்னியாகுமரியில் ஒரு லட்சம் பேர் திரளும் மிகப் பெரிய போராட்டம்…

View More வறுமைக்கும் உண்டோ மதம்? பா.ஜ.கவின் ஜூலைப் போராட்டம்