கண்டிப்பாக இது அனிதாவே முடிவு செய்திருக்க முடியாது. அவரை மூளைச் சலவை செய்திருக்கலாம். அல்லது இது ‘கொலை’யாக கூட இருக்கலாம். இன்று அனிதாவிற்காக குரல் கொடுக்கும் அத்தனை தமிழக கட்சிகளும் நினைத்தால் நீட்டில் தேர்வெழுதிய அத்தனை தலித் மாணவர்களுக்கும் தங்கள் சொந்த செலவிலேயே மெடிக்கல் சீட் வாங்கிக் கொடுத்திருக்க முடியும். அவ்வளவு மெடிக்கல் கல்லூரிகளையும், அவ்வளவு பணபலத்தையும் இந்த அரசியல்வாதிகள்தான் வைத்திருக்கிறார்கள். ஆனால் அப்படி செய்ய இவர்கள் என்ன தியாகிகளா? நீட் தேர்வில் பாதிக்கப்பட்டது இந்த திராவிட அரசியல்வாதிகள்தான். அதனால் திட்டம்போட்டு அனிதாவை பலிகடா ஆக்கியிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வர பாஜக தமிழ்நாட்டில் முட்டுக்கட்டையாக இருக்கிறது. அதனால் பாஜகவை முதலில் ஒழிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடாக கூட இது இருக்கலாம். அதனால் அனிதா தற்கொலையில் சிபிஐ நீதிவிசாரணை வேண்டும். முதலில் திமுகவை விசாரித்தால் உண்மை வெளிவரலாம். வெளிவரும்… அனிதா சாவுக்கு ‘ஒரு தரப்பை’ கைநீட்டி வசைபாடும் முன் தயவுசெய்து இந்த
10 கேள்விகளுக்கு விடை தேட முயற்சி செய்யுங்கள்..
Tag: சுயநல அரசியல்வாதிகள்
பாரத தேசத்தில் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் கூட கட்சி அமைத்துக் கொண்டு, காலம் காலமாக வளர்ந்து நிற்கும் ஆலமரத்துக்கும் அரச மரத்துக்கும் சவால் விட்டுக் கொண்டிருப்பது எப்படி? எந்த வகையிலும் வருமானம் வர வாய்ப்பில்லாத சிலர் ஒன்றுகூடி கட்சி அமைப்பதும், அவர்களிடம் கோடி கோடியாகப் பணம் கொட்டிக் கிடப்பதும் எப்படி? தெரியவில்லையே… நமது தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வருவது அப்புறம் இருக்கட்டும். நமது மக்கள் மனங்களில், அரசியல் கட்சியினரின் மனங்களில், பதவிக்கென்று ஆலாய் பறக்கும் சுயநலமிகள் மனதிலும், இவர்களது ஆதாயங்களைக் காட்டிலும், இந்த நாட்டின் எதிர்காலமும், மக்களின் வளமும், செல்வமும், பெருமையும் பெரிது, மிகப் பெரிது என்ற எண்ணத்தை முதலில் உருவாக்க வேண்டும். இந்த மாற்றத்தை எந்த சட்டத்தாலும் கொண்டுவர முடியாது. மனமாற்றம் ஒன்றுதான் இதற்கு வழி…
View More பாரத தேசத்தில் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?டெசோ: புதிய மொந்தையில் பழைய கள்!
எப்போதெல்லாம், தனக்கும் திமுகவுக்கும் சிக்கல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஈழத் தமிழர் பிரச்னைக்காக உருகுவது…
View More டெசோ: புதிய மொந்தையில் பழைய கள்!வேதாளம் சொன்ன பேரறிஞர் கதை
தமிழகத்தில் எத்தனையோ அறிவு ஜீவிகள் இருந்தும் அவர்களையெல்லாம் விஞ்சி நிற்கும் பேரறிஞர் அண்ணாவின் ஆளுமை பற்றி உன் கருத்து என்ன? அண்ணா தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் ஏற்றி வைத்தார் என்று சொல்லலாமா? அண்ணாவின் அரசியலை அடியொற்றி வளரும் தமிழக அரசியல் எப்படி அமையும் என்று நீ நினைக்கிறாய்?
இதற்கெல்லாம் பதில் தெரிந்தும் பேசாமல் இருந்தால் உன் தலை சுக்கு நூறு.” என்று நிறுத்தியது வேதாளம்.
View More வேதாளம் சொன்ன பேரறிஞர் கதைகான மயிலாட… : திமுக கோவை பொதுக்கூட்டம்
”மைனாரிட்டி அரசு என்று சொல்வதால் நான் கவலைப்படப் போவதில்லை. சிறுபான்மை சமூகத்தை மைனாரிட்டி என்பார்கள். அதைப் போல தி.மு.க சிறுபான்மையினருக்காக என்றும் பாடுபடக் கூடியது”.. தமிழகத்தை வளர்க்க வேண்டுமானால் அழகிரியையும் ஸ்டாலினையும் பலிகொடுக்கத் தயாராக இருப்பதாக முழங்கியதுதான் உச்சகட்ட நகைச்சுவை… தி.மு.கவைப் பிளந்த கோபாலசாமி அளித்த அனுபவத்தை “முதியவர்’ மறந்திருக்க மாட்டார். ஆயினும், தனது பங்குக்கு சாமிகளை மேடையேற்றி அழகு பார்த்தார்…
View More கான மயிலாட… : திமுக கோவை பொதுக்கூட்டம்தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி
வாசிக்கும் போது மனதில் கசப்பும் அவமானமும் ஊறுகிறது. தமிழின் பெயரில் கூத்தடிக்கும் அரசியல் கோமாளிகள் ஒருபக்கம், அரசியல் வைராக்கியத்துடன் இந்திய வம்சாவளியினர் நலனைப் பாதுகாக்கும் முதுகெலும்பும் அக்கறையும் அற்ற மத்திய அரசு மறுபக்கம், நம்மக்கள் படும் துயரை புறக்கணிக்கும் ஊடகங்கள் மறுபக்கம், இவை எதிலும் அக்கறையில்லாமல் இலவசங்களுக்கும் ஆயிரங்களுக்கும் ஜனநாயகத்தையே அடகு வைக்கும் மந்தையாக நாம் மறுபக்கம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?… இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழர்கள் அயல்நாடுகளில் அனுபவிக்கும் அன்றாட வாழ்க்கை அவலங்களையும் காய்தல் உவத்தலின்றி முன்வைக்கும் முக்கியமான முயற்சி இது….
View More தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி