ஆனாலும், இன்னமும் வல்லிக்கண்ணனைப் புரிந்து கொண்டதாகச் சொல்லமுடியவில்லை. “கோயில்களை மூடுங்கள்” என்னும் பிரசார சிறுபிரசுரத்தில் காணும் வல்லிக்கண்ணனைத் தெரியவில்லை. அதைத் தொடர்ந்து மேலே ஈ.வே.ரா.விலிருந்து கருணாநிதி வரை அத்தனை திராவிட இயக்கத் தலைவர்களையும் 1963-லேயே கிண்டலும் கண்டனமுமாக, எங்கே இடம் கிடைக்கும், எழுதவேண்டுமே என்று எழுதிய வல்லிக்கண்ணன்தானா, ஈ.வே.ரா, சின்னக்குத்தூசியிடம் பாராட்டு பெற்ற வல்லிக்கண்ணன் என்பதும் தெரியவில்லை. அந்த வல்லிக்கண்ணன், 40 வருட காலம்…
View More நம்மிடமிருந்து மறைந்திருந்த ஒரு வல்லிக்கண்ணன்Tag: தமிழ் இலக்கியம்
இப்படித்தான் ஆரம்பம் -2
‘இனிமே வாட்சை அடகு வச்சா மீக்கற வேலையில்லை! ஒரு குச்சி இருந்தா போதும்’ என்றபடியே ஒரு குச்சியை உடைத்து பரிசோதனைகள் செய்து நிழலை அளந்து,குச்சியை அளந்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு,”ரவி!! பணி பதினொண்ணு’ என்று அறிவித்தார்.
View More இப்படித்தான் ஆரம்பம் -2கம்பன் கண்ட சிவராம தரிசனம்
நுரைத்து ஓடும் கங்கை நீரின் துளிகள் ராமனின் சடைக் கற்றைகள் வழியாக விழுகின்றன. திரண்ட அவன் புயங்கள் அந்த நீரில் ஜொலிக்கின்றன. தன் கணவனைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள் சீதை… இவன் கல்லாத கலை என்று ஒன்று உண்டா? அப்படி உண்டானால், அது இல்லாத உலகத்தில் தான் இருக்க வேண்டும்! யாரப்பா இந்தச் சொல்லின் செல்வன்? இவன் பிரமனோ? சிவனோ?
View More கம்பன் கண்ட சிவராம தரிசனம்சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 2
60 வருடங்களும், நிலம், தட்பவெப்பம் குறித்து, சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் வந்துள்ளன. இவற்றைக் குறித்தும் வைத்துள்ளனர். அதன் அடிப்படையில், வருடப் பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்று நாம் பின்பற்றும் வருடக் கணக்கு, நம் பகுதியில் உள்ள வெப்பம், பருவ மழை இவற்றைப் பொருத்ததே.
வருடப் பலன்களை அறிந்து கொள்ள, அவற்றின் பெயர்களே போதும். அப்படி என்றால், இப்பெயர்களைத் தமிழ்ப் படுத்தி இருக்கலாமே என்று கேட்கத் தோன்றும். அது எளிதல்ல. பல பெயர்களுக்கும் சரியான மொழிபெயர்ப்பு தமிழில் மட்டுல்ல, பிற மொழிகளிலும் கிடையாது. தமிழ்விரும்பிகள் கோபப்படாமல் இதைப் படிக்க வேண்டும்.
View More சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 2சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 1
தொல்குடி என்றும், செம்மொழி என்றும் நம் பழமையைப் பற்றி நாம் பேசும் அளவுக்கு அந்தப் பழமையின் மீதும், தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கங்களின் மீதும் நமக்கே மரியாதையும், நம்பிக்கையும் இருக்கவில்லை என்பதைப் பறைசாற்றும் ஒரு சான்றுதான், தையில் வருடப் பிறப்பு என்று பிரகடனம் செய்தது.
View More சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 1தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!
ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கிலிருக்கும் ஒரு பழக்கத்தை அரசாணையாலும் பொய்யான பரப்புரைகளாலும் அரசு மாற்ற முனைந்து கொண்டிருகிறது. அரசின் இந்த முனைப்பு தமிழ் மரபுக்கு சற்றும் பொருத்தமில்லாதது என்பதோடு தமிழ் மரபிற்கே எதிரானது… மேற்கொள்ள எந்த தரவுகளுமற்ற நிலையில் இது சிலரின் தனிப்பட்ட அபிலாஷை என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த அபிலாஷை நிறைவேற்றலை தமிழைக் கொண்டு செய்ய முற்படும்போது உண்மையான தமிழன்பர்கள் வெட்கமும் வருத்தமும் அச்சமும் கொள்ளவேண்டி இருக்கிறது.
View More தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!தமிழர் கண்ட நீளா தேவி
தமிழ் மரபில் மட்டும்தான் இவளைப் பற்றி செய்திகள் உள்ளன என்பது, தமிழர்கள் வேதக் கருத்துகளில் எந்த அளவு ஆழ்ந்திருந்தனர் என்று காட்டுகிறது … மஞ்சள் துண்டு மகிமையைக் கண்டவருக்கு, போகம் காட்டி அவன் பாதையில் திரும்ப வேண்டி மோகம் கொள்ளச் செய்ய வேண்டும். தோஷங்களை அவன் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு நிழல் போன்ற நீளா தேவியின் கருணை – கருணைக்கே கருணை காட்டும் நீர்மை- தேவைப்படுகிறது.
View More தமிழர் கண்ட நீளா தேவிஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்
மகாப் புனிதரான மாணிக்கவாசகரை ஒழுக்கம் கெட்ட பாவியென நினைக்கத் துணிந்தாரே போப்! மணிவாசகப் பெருமான் பெண் மயக்கத்தால் ஒழுக்கங்கெட்டு பாவமன்னிப்பு கேட்டு ஒப்புதல் கொடுத்தார் என்ற பழிச்சொல்லையும் உலகமுழுதும் பரவச்செய்தார்… ”இயேசு கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்?” எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார்.
View More ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்பெரியசாமி தூரன்: தமிழகத்தின் உண்மையான பெரியார்
தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் அறிவியக்கத்திற்கு இவர் ஆற்றியுள்ள பங்கு ஒப்பிடலுக்கு அப்பாற்பட்டது… பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தபோது, செட்டியார் மனமுவந்து அளித்த முப்பது ரூபாய் மாதச் சம்பளத்தை அதிகம் என்று மறுத்து வெரும் பதினைந்து ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு பணியாற்றினார். தூரன் என்ற பெயர் சொன்னாலே அது “கலைக்களஞ்சியம்” என்று சொல்லப்பட்ட “தமிழ் அபிதான சிந்தாமணி”யைத்தான் (தமிழ் என்ஸைக்ளோபீடியா) குறிக்கும். ஏனென்றால், கடுமையாக உழைத்து அதைப் பத்து தொகுதிகளாக தமிழுலகிற்கு அளித்த கொடை வள்ளல் அல்லவா அவர்?
View More பெரியசாமி தூரன்: தமிழகத்தின் உண்மையான பெரியார்போகப் போகத் தெரியும் – 31
’தேசத்திற்காகவும் கட்சிக்காகவும் தியாகங்கள் பல செய்தவர்கள் எல்லாம் இருக்குமிடம் தெரியாமல் ஒரு பக்கம் போக இன்னொரு பக்கம் எந்தவிதமான தேசிய மரியாதைக்கும் லாயக்கற்றவர்களான திமுக-வினர் பதவியும் அதிகாரமும் பெற்று, காங்கிரசுக்கு சவால்விட்டுத் திரிகிற கொடுமை சகிக்க முடியாமலிருந்தது. அவர்கள் செய்த ஆர்ப்பாட்டங்களும் மக்கள் மத்தியில் நோய்மாதிரிப் பரவிவந்த அவர்களது போலிப் புகழும் பேசிய பொய்களும் மறுத்துரைக்கப்படாமலிருப்பது ஒரு தேசிய அறிவுலக அவமானம் என்று நான் மனம் புழுங்கினேன்.’ – ஜெயகாந்தன்.
View More போகப் போகத் தெரியும் – 31