கொடுப்பதை, சிரத்தையுடன் கொடுத்திடுக. அசிரத்தையுடன் கொடுத்தல் தகாது. செல்வத்திற்கேற்பக் கொடுத்திடுக. நாணத்துடன் கொடுத்திடுக. அச்சத்துடன் கொடுத்திடுக. சம்மதத்துடன் கொடுத்திடுக என்கிறது தைத்திரிய உபநிஷதம்… அச்சம் ஏன்? கொடுப்பதால் நமக்கு அகம்பாவம் ஏற்பட்டு விடக் கூடாதே, நல்ல உள்ளத்துடன் நாம் கொடுத்தாலும் பெறுபவன் மனம் புண்பட்டு சிறுமையடைந்துவிடக் கூடாதே என்பதான அச்சம். ‘ஸம்வித்’ என்பதற்கு ‘நட்புணர்வுடன்’ என்று சங்கர பாஷ்யம் தரும் பொருள் சிறப்பானது. கொடையைப் பற்றிய முழுமையான விளக்கத்தை இந்த ஆறு உபநிஷத வாக்கியங்கள் அளித்து விடுகின்றன…
View More கொடை: ஆறு உபநிஷத வாக்கியங்கள்Tag: தானம்
வஞ்சகன் கண்ணன் [சிறுகதை]
மிருகநயனியின் குரல் உயர்ந்து கொண்டே போனதை அவளே அறியவில்லை. ஆனால் இறக்கமாட்டார் என்று அவள் சொன்னது பெருங்கூவலாகவே முடிந்தது. மிருகநயனியின் கண்ணீர் விசும்பல்களாக மாறும் வரை கூடாரமே நிசப்தமாக இருந்தது. அவளை திரௌபதி கொஞ்சம் தயக்கத்தோடு அணுகி அவள் கையைப் பிடித்துக் கொண்டாள். அர்ஜுனன் தலைகுனிந்து கூடாரத்தின் அடித்தள மண்ணையே பார்த்தபடி நின்றான். ஒரு சுற்று சுற்றி வந்த மிருகநயனியின் பார்வை கடைசியில் கண்ணனிடம் நின்றது. கண்ணன் முகத்தின் புன்னகை சிறிதும் மாறவில்லை. சஞ்சலமே இல்லாத கண்களுடன் அவன் மிருகநயனியை நோக்கினான். அவன் புன்னகை மிருகநயனிக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்தது. அவனைப் பார்த்து கண்ணா என்று அழைத்தாள்… கால் போன போக்கில் நடந்த கண்ணன் சில நாழிகைகள் கழித்தே தன் கூடாரத்துக்குத் திரும்பினான். திரும்பும் வழியில் ஒரு சூதன் பாடிக் கொண்டிருந்ததை தள்ளி நின்று கேட்டான்…
View More வஞ்சகன் கண்ணன் [சிறுகதை]கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 9
சந்தோஷம் என்பது பணத்தால் வருவதில்லை. மன அமைதியினால் மட்டுமே பெறக்கூடியது. இது அடிப்படையிலேயே மற்ற நாகரீகங்களிடமிருந்து வித்தியாசப்படும். சந்தோஷம் என்பதை புலன் வழியான சந்தோஷமாகவே பார்க்க பழகின மேற்கத்திய சமூகங்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை. நம் முன்னோர்கள் கூறிய சந்தோஷம், Contentment (சம்ஸ்கிருதத்தில் சமாதானம்) என்பதை சுட்டும். இந்த மன நிலையை அடைய பணம் அவசியமே இல்லை. மேற்கூறியவையெல்லாம் எனக்குப் புரிந்தவரை அற்புதமான உளவியல் சாதனங்கள். பச்சையாக கூறினால், ஏழைகளை கட்டுக்குள் வைத்திருக்க உபயோகப்பட்ட உளவியல் சாதனங்கள் என்றே நான் புரிந்து கொள்கிறேன். பொதுவுடைமையை முழுமையாக சமூகத்தில் நடைமுறை படுத்த முடியாது என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனாலும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உடைய ஒரு சமூகத்தை நிர்வகிக்க சட்டங்கள் மட்டும் போதாது என்பதையும் தெளிவாகவே உணர்ந்திருந்தார்கள். மேலே கூறப்பட்ட பல உளவியல் சாதனங்களை பயன்படுத்தி ஏழ்மையிலும் சந்தோஷமாக வாழ முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்தினார்கள்.
View More கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 9எழுமின் விழிமின் – 18
தானங்களில் எல்லாம் தலையாயது ஆத்மீக ஞானம் புகட்டுவது தான். அதற்கு அடுத்து உலகியல் ஞானம் கற்பித்தல்; அதற்கு அடுத்து ஒருவனது உயிரைக் காப்பாற்றுதல்; கடைசியாக உணவும் நீரும் அளித்தல்… சமயமானது நமது மக்களினத்தின் பொதுச் சொத்து ஆகும். அவர்களது பொதுவான பிறப்புரிமையாகும். அதனை ஒவ்வொரு வீடுதோறும் எவ்வித தடையுமின்றிக் கொண்டு செல்லல் வேண்டும். கடவுள் அளித்துள்ள காற்றைப் போல சமயத்தை எல்லோருக்கும் எளிதில், தடையின்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும்…சம்ஸ்கிருத சொற்களின் தொனியினாலேயே இந்த மக்களினத்திற்கு ஒரு கௌரவ உணர்ச்சியும், ஆற்றலும், சக்தியும் கிடைக்கின்றன…
View More எழுமின் விழிமின் – 18இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 2
மனித முயற்சிக்கும் அப்பாற்பட்ட காவியம் ஒன்றைப் படைப்பதற்கு எது நடந்தாலென்ன என்றதொரு துறவு மனமற்று, சுற்றுமுற்றும் பார்த்து உள்ளம் கனிந்து உருக வேண்டிய நிகழ்ச்சி ஒன்று தேவைப்பட்டது. அதுவும் வால்மீகி முனிவருக்குத் தானாகவே அமைந்தது… ராம ராஜ்யத்தில் அதிகாரிகள் மட்டுமல்லாது மக்கள் அனைவருமே ராமரைப் போலவே நீதி, நேர்மையுடன் வாழ்வதால் அரசு என்றோ அரசாங்கம் என்றோ ஒரு அதிகாரத்துடன் கூடிய அமைப்பு கூடத் தேவை இல்லாத நிலை உருவாகும்… அரசு அலுவல்களின் ஒரு பகுதியாக தானம் செய்யவேண்டிய அதிகாரிகளுக்கு, வசிஷ்ட மகாமுனிவர் அவர்கள் எத்தகைய மனப்பான்மையுடன் தானம் அளிக்கவேண்டும் என்று கூறுகிறார்…
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 2பத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்
அந்த செல்வம் யாருக்கும் சொந்தம் இல்லை, நிச்சயமாக எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை [..] சுய நலமிகுந்து தாங்கள் செய்வதெல்லாம் சரி, மற்றவர்கள் செய்வதெல்ளாம் தவறு என்ற எண்ணம் வளர்ந்து வரும் இன்றைய மக்களிடம் நமது நம்பிக்கைகளை புரிய வைப்பது மிககஷ்டம். நான் என்ன செய்கிறேன் என்பதை விட எனக்கு என்ன கிடைக்கும் என்றே இன்றைய உலகம் இயங்குகிறது. [..] அதிக பணம் ஆணவத்தை வளர்க்கும் என்று எணணிய அவர் திருவாங்கூர் சமஸ்தான மன்னர்கள் பத்மநாபருக்கு “தாஸர்கள்” “ என அறிவித்தார். தாஸர்கள் என்றால் கட்டளையேற்று ஊழியம் செய்பவர்கள். வேலைகாரர்கள் இல்லை. ஒரு வேலையாள் ராஜினமா செய்யலாம், ஒய்வு பெறலாம். ஆனால் தாஸர்கள் வாழ்நாள் முழுவதும் ஊழியம் செய்யவேண்டும் [..]
View More பத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்கம்பன் பாடிய குறள்
இந்த சிறிய பிரசங்கத்தையும் கவித்துவம் மிளிரும் அழகிய பாடல்களில் கம்பன் விவரிக்கிறான்.. ஆலமரம் முழுவதையும் தன் உள்ளே அடக்கிய விதை போல, நெடியோனாகிய திருமால் வாமனனாக அவதரித்தான்.. குள்ளனான வாமனன் ஓங்கி உயர்ந்து நின்றதற்கு அபாரமான ஒரு உவமை சொல்கிறார், உயர்ந்தவர்க்கு உதவிய உதவி போல… மண்ணில் நின்று உலகம் அளந்தது வாமனக் குறள். வானிலும் மண்ணிலும் நின்று உலகம் அளந்தது வள்ளுவர் குறள்.. அன்று தன் நெடுமையால் மாயன் அளந்த உலகை எல்லாம், தன் மனத்தில் நினைந்து செய்யும் கொடுமையாள் அளந்தவள் இவள்…
View More கம்பன் பாடிய குறள்அறியும் அறிவே அறிவு – 10
அறியும் அறிவே அறிவு – பகுதி 1 | பகுதி 2 |…
View More அறியும் அறிவே அறிவு – 10