ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறக்காட்டா நிச்சயமாக ஒரு காரணமும் இருக்க முடியாது. அப்படியே பிறந்திருப்பினும், உங்களோட நம்பிக்கையின் சுய லாபங்களையும், இடர்களையும் சீர் தூக்கிப் பாருங்க. என்னையே எடுத்துக்குங்க…
எது உண்மைக்கு நெருக்கமானது, மனுசனுக்கு நன்மையானது: ஆனந்தப் பிரம்மமா, அகண்ட நரக நெருப்பா? ஆனா, சின்ன வயசுலேயே கிறிஸ்தவத்துக்கு வசக்கப் பட்டவர்கள், வயசாகியும் வாத்துக்களைப் போலக்கூடப் பரிணாம வளர்ச்சி அடையல்ல…
Tag: தாய்மதம் திரும்புதல்
ஃபாத்திமா ஆன சபரிமாலா: செய்தி தரும் பாடம் என்ன?
ஏதோ அரசியல் காரணத்திற்காக முஸ்லிம் ஆதரவு நிலை எடுக்கப் போனவர் படிப்படியாக groom செய்யப்பட்டு, மூளைச்சலவைக்கு ஆட்பட்டு, இஸ்லாம் என்னும் இருள் படுகுழியில் ஒரு தமிழ்ப்பெண் விழுந்திருக்கிறார் என்பது சகஜமான விஷயமல்ல, மிகவும் கவலைக்குரிய ஒன்று. ஒரு கட்டத்தில் மதம் மாறாவிட்டால் உயிருக்குக் கூட உத்தரவாதமில்லை என்ற அளவுக்கான அழுத்தம் அவருக்குத் தரப்பட்டிருக்கலாம்.. இஸ்லாமிய ஜிகாதி கழுகுகளால் கொத்திச் செல்லப் படும் இத்தகைய ஆபத்தான நிலையிலுள்ளவர்களுக்கு அந்தக் கழுகுகளிடமிருந்து பாதுகாப்பு தரும் அளவுக்கு காவல்துறையும் மற்ற இந்து சமூக அமைப்புகளும் இங்கு இல்லை. குறிப்பாக இளம் ஆண், பெண்களுக்கு இந்துத் தரப்பிலிருந்து சரியான counseling தரும் அமைப்புகள் தமிழ்நாட்டில் இல்லை.
View More ஃபாத்திமா ஆன சபரிமாலா: செய்தி தரும் பாடம் என்ன?வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்
மானமுள்ள வன்னியர்கள் யாராவது இருந்தால் “வன்னிய கிறிஸ்தவர்” “கிறிஸ்தவ வன்னியர்” ஆகிய அவமானகரமான பெயர்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வைக்கக் கிளர்ந்தெழ வேண்டாமா? புனிதமான அக்னிச்சட்டியின் மீது மானுட விரோத அன்னியமத சின்னமான சிலுவையை வரைந்திருப்பதை எப்படி சகித்துக் கொள்கிறீர்கள்?… அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் முழுக்க வன்னியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவருகிறார்கள். காரணம் என்னவென்று தெரியவில்லை. மதம் மாறினாலும் அவர்கள் வன்னியர் சங்கத்திலும், பாமகவிலும் தொடர்ந்து இருப்பதால் பாமக தலைமையும் கண்டுகொள்வதில்லை… மதமாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிட்ட சாதி சமுதாய அமைப்புகளும், இந்து அமைப்புகளும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இணைந்து இயங்கினால் கிறிஸ்தவ மதமாற்றப் பிசாசுகளை கட்டாயம் விரட்ட முடியும். அது நிகழ விடாமல் தடுப்பது சாதிக்கட்சிகளின் சுயநல சுயலாப அரசியலும், அதை நன்றாகப் புரிந்து வைத்துள்ள கிறிஸ்தவ மதமாற்றிகள் விரித்த வலையில் அந்த சாதி அமைப்புகள் வீழ்ந்து விட்டதும் தான்…
View More வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்தாய்மதம் திரும்புதலும் சாதியும்
இந்துமதத்தின் வரலாற்றில் அன்னியர்களை சுவீகரித்து ஏற்பதும் மதம் மாறியவர்களைத் திரும்பக் கொண்டு வருவதும் நீண்ட நெடிய காலமாக நடந்து வந்துள்ளது. இது ஒன்றும் நவீனகாலக் கண்டுபிடிப்பு அல்ல… தேவல ஸ்மிருதி (Devala Smriti) என்ற சம்ஸ்கிருத நூல் பொ.பி 10ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. மிலேச்சர்களால் கைப்பற்றப்பட்டவர்களையும் மதமாற்றத்தினால் தர்ம நெறிகளிலிருந்து தவறியவர்களையும் மீண்டும் சமுதாயத்திற்குள் சுவீகரிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை இந்த நூல் கூறுகிறது.. விஜயநகரப் பேரரசை நிறுவிய சகோதரர்களில் ஒருவரான புக்கராயரும்கூட இவ்வாறு தாய்மதம் திரும்பியவர்தான் என்று இந்தப் பேரரசு குறித்த காவியப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது… இவ்வளவு நீண்டகாலமாக இது நடந்து வந்திருக்கிறது என்னும்போது, தாய்மதம் திரும்பும் இந்துக்கள் எந்த சாதிகளுக்குள் இணைந்தார்கள்? விடை மிக எளிது…
View More தாய்மதம் திரும்புதலும் சாதியும்மதமாற்றங்களும் போலி மதச்சார்பின்மை வாதங்களும்
2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பார்த்தால், சுதந்திரத்திற்குப் பின் கடந்த 67 ஆண்டுகளில் இஸ்லாமிய, கிறிஸ்துவ மிஷினரிகள் மத மாற்ற வேலையை எந்த அளவுக்கு செய்திருக்கிறார்கள் என்பது தெரியும்… கிறிஸ்துவ மத மாற்றத்தின் காரணமாக சமூக அமைதி குலைவதையும், கலவரங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க வேண்டுமென்றால், ஆசை காட்டி மோசம் செய்து கட்டாயப்படுத்தி, செய்யப்படும் மத மாற்றங்களை தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் – இது வேணுகோபல் கமிஷன் தெரிவித்த பரிந்துரை… சட்டத்தின் மூலம் மதமாற்றத்திற்கு தடை விதிக்கும் போதெல்லாம் கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயத் தலைவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்புவதை பாரக்கிறோம். வாக்கு வங்கி அரசியலை மறந்து விட்டு, தேசிய சிந்தனையோடு இப்பிரச்சனையை அனுக வேண்டும்…
View More மதமாற்றங்களும் போலி மதச்சார்பின்மை வாதங்களும்உ.பி.யில் 5500 பேர் தாய்மதம் திரும்பினர்
2013 டிசம்பர் 25 அன்று உத்திர பிரதேச மானிலத்தின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் இருந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் தாய்மதமாம் இந்து மதத்திற்குத் திரும்பினர். இந்த முக்கியமான நிகழ்வு குறித்த செய்திகளை ஆஜ்தக், ஜாக்ரன் போன்ற பிரபல ஹிந்தி பத்திரிகைகள் விரிவாக வெளியிட்டன. ஆனால் தேசிய அளவிலான ஆங்கில ஊடகங்கள் முழுமையாக இருட்டடிப்பு செய்தன. இந்து இயக்கங்களும், ஆன்மீக அமைப்புகளும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிகளில் துறவிகள், மடாதிபதிகள், சமூகத் தலைவர்கள், உள்ளூர் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு கீழே..
View More உ.பி.யில் 5500 பேர் தாய்மதம் திரும்பினர்எழுமின் விழிமின் – 21
”சுவாமிஜி! இவர்கள் எந்த ஜாதியினரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்?” என்று நான் துணிந்து கேட்டேன். ”நம் மதத்தில் மீண்டும் சேருகிறவர்கள் தங்கள் சொந்த ஜாதியையே பெறுவார்கள். புதியவர்கள் தங்களுக்குரிய ஜாதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்” …எங்கே உனது நம்பிக்கை? எங்கே உனது தேச பக்தி? கிறிஸ்தவப் பாதிரிகள் உங்கள் கண்ணெதிரிலேயே ஹிந்து மதத்தைத் தூற்றுகிறார்கள். அப்படியிருப்பினும் உங்களில் எத்தனை பேர்களுக்கு அந்த அநீதி சகியாமல் இரத்தம் கொதிக்கிறது? எத்தனை பேர் அதனைப் பாதுகாப்பதற்காக வரிந்து கட்டி நிற்கப் போகிறீர்கள்?….
View More எழுமின் விழிமின் – 21சுவாமி சைதன்யாநந்தருடன் ஒரு நேர்காணல்
துறவிகள் அன்பை மட்டுமே போதிப்பார்கள். ஆனால், சுவாமிஜி அன்பை மட்டுமின்றி வீரத்தையும் அறிவுறுத்துவார்… புற சமயத்தவர்களின் மதமாற்றம் என்பது ஹிந்து மதத்திற்குப் பெரும் சவாலாக இருக்கிறது… காதலித்தால், அங்கு ஹிந்து மதத்தைச் சார்ந்தவர் மட்டுமே கட்டாயமாக மதம் மாற்றப்படுகிறார்… ஒரு ஹிந்து தெரிந்திருக்க வேண்டியவை தொகுக்கப்பட்டு ஐந்து நிலை கொண்ட பாடத்திட்டத்தினை உருவாக்கினோம்… கோயில் திருவிழா என்றால், ஆடல், பாடல் என பெரும் தொகை வீணடிக்கப்பட்டு வந்தது… மீண்டும் தாய்மதம் திருப்பும் பணியையும் செய்து வருகிறோம்…
View More சுவாமி சைதன்யாநந்தருடன் ஒரு நேர்காணல்ஆரிய சமாஜம் நூல் விமர்சனத்தை முன்வைத்து..
மரணத்தையொட்டிய எளிய சடங்கினை வேத நெறிப்படி விதிக்கும் சுவாமி தயானந்தர், வருடந்தோறும் மேற்கொள்ள வலியுறுத்தப்படும் சிராத்தச் சடங்கைத்தான் தேவையில்லை எனக் கூறுகிறார். உற்றார் உறவினர் உயிரோடு இருக்கையில் அவர்களை நன்கு பராமரியுங்கள், அவர்கள் இறந்தபின் அவர்களை முன்னிட்டுச் சடங்குகளின் பெயரால் வீண்செலவு செய்வதால் என்ன பயன் என்றுதான் அவர் கேட்கிறார்.
View More ஆரிய சமாஜம் நூல் விமர்சனத்தை முன்வைத்து..ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்
[இந்து மதத்தை] இழிவு படுத்துவது லாபம் தரும் அரசியலும் வாழ்வுமாகி அதுவே பகுத்தறிவுமாகிவிட்ட கட்டத்தில், ஹிந்து தர்மத்தின் இன்னொரு வெளிப்பாடாகத் தோன்றிய ஆரிய சமாஜம் பற்றியும், அதை உருவாக்கிய துறவியும் ஞானியுமான தயானந்த சரஸ்வதி பற்றியும் ஒரு புத்தகம் தமிழில் வெளிவருகிறதென்றால், அது எதிர்நீச்சலிடும் காரியம் தான். பலத்த தொடர்ந்த இரைச்சலுக்கு எதிராகக் குரல் எழுப்பும் காரியம் தான். […….]மலர் மன்னன் தயானந்த சரஸ்வதியின் வரலாற்றையும் அனுபவங்களையும் அவர் காலத்திய சூழலையும், அவர் கருத்துக்களையும் பற்றி விரிவாக எழுதியுள்ளார். புராணங்களையும் விக்கிரஹங்களையும், சடங்குகளையும், கோவில்களையும் நிராஹரித்த இந்த நாஸ்திகரையும் தமிழ்ச் சமூகம் அறிந்து கொள்ளட்டுமே என்று.
View More ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்