அந்தியில் சூரியதேவனை உபாசிக்கின்றனர். அந்த சூரியனும் சிவஸ்வரூபம் அன்றோ? என்கிறார் அப்பர். இக்கருத்து எங்கிருந்து வருகிறது? நேரடியாக வேதத்திலிருந்து தான். “கரிய கழுத்துடைய நீலக்கிரீவராகிய அவரே சிவந்த வர்ணமுடைய இந்த சூரியனாக வெளிக்கிளம்புகிறார். (சூரிய ரூபியாகிய) இவரை இடையர்களும் கூடக் காண்கின்றனர். தண்ணீர் சுமந்து வரும் பெண்களும் காண்கின்றனர். இந்த ருத்திரனை மற்றும் எல்லாப் பிராணிகளும் கூடக் காண்கின்றன” என்கிறது ஸ்ரீருத்ரம்…
View More வைதிக மாமணி அப்பர்Tag: திருமுறை
ஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்
சம்பந்த பெருமான் தமது பதிகங்கள் ஒவ்வொன்றின் திருகடைக்காப்பிலும் அப்பதிகங்களை ஒதுவதால் ஆன்மாக்கள் பெற்றுய்யும் பலன்களை எடுத்துரைப்பார். பல பதிகங்களில், பயன்களை கூறினாலும், அவர் அருளிய நான்கு பதிகங்களில் மட்டும் “*ஆணைநமதே *” என்று திருகடைக்காப்பில் அருளிப்பாடுகின்றார்… நம்பியாண்டார் நம்பிகள் போல் அக்கால மக்களுக்கும் இவ்வார்த்தை மிகவும் பிடித்துவிட்டது. அவர்கள் தங்கள் பெயராகவே வைத்துக்கொண்டனர். பிரான் மலை கல்வெட்டில், இத்தன்ம சாசனத்துள் கையெழுத்திட்டவருள் ஒருவர் “ஆணை நமதென்ற பெருமாள்” என்று உள்ளது…
View More ஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்சைவத்திருமுறைகள் தொடரட்டும்…
இன்று எமக்குக் கிடைத்துள்ள அரும்பெருm சொத்தான சைவத் திருமுறைகள் பன்னிரெண்டும் ஒரே நேரத்தில் தொகுக்கப் படவில்லை என்பது தெளிவு… பதின்மூன்றாம் நூற்றாண்டுடன் முற்றுப்பெற்ற திருமுறைத் தொகுப்பை ஏன் தொடரக் கூடாது? இடையில் இருக்கிற எழுநூறாண்டுகளில் எத்தனையோ, சைவத்திருநூல்கள் மலர்ந்துள்ளன. அவற்றில் தகுதி கண்டு ஏன் திருமுறைகளாக இணைத்து வகுத்தலாகா? என்பதே இன்றுள்ள வினா. இத்திருமுறைத் தொகுப்பு காலத்தின் தேவையாக, சிவப்பணியாக மேன்மேலும் சிறப்புறுமா என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது… சைவத்தில் புரட்சிக்கும் புரட்சியாளர்களுக்கும் குறைவே இருக்கவில்லை. சேக்கிழார் அவ்வாறான ஒருவரே….
View More சைவத்திருமுறைகள் தொடரட்டும்…ஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்
இந்து சமய கிரியை வழிபாட்டு முறையிலே ‘யாகம்’ என்பது தொன்மையானது. இதனைத்
தமிழில் வேள்வி என்று கூறுவார்கள். வேட்டல் என்ற சொல்லும் இதே பொருளுடையது. யாகம் என்ற சொல் யஜ் என்ற அடியை உடையது. யஜ் என்றால் வழிபாடு, ஆகவே பக்தி பூர்வமான சிறப்பான வழிபாடு யாகம் எனலாம். இதனையே யக்ஞம் என்ற சொல்லும் விளக்கி நிற்பதாகவும் காட்டுவர். யாகம் என்று சொல்லும் போது, எரியோம்பல் என்கிற அக்னி வழிபாடே முதன்மை பெறுகின்றது. அதற்கு அங்கமாக அந்த அக்னி குண்டத்திற்கு அருகிலும், சுற்றிலும், யாகமண்டபம் அமைத்து, கும்பங்களை ஸ்தாபித்து, பல்வேறு தேவ தேவியர்களை ஆவாஹனம் செய்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.
தாண்டவபுரம் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போராட்டம்
கோவை, பிப்ரவரி-2 வியாழன் காலை முதல் மாலை வரை – நமது சமயக் குரவர்களில் முதன்மையானவரான திருஞானசம்பந்த பெருமானை குறித்து அவதூறு செய்யும் தாண்டவபுரம் என்னும் நாவலை எதிர்த்து உண்ணாநோன்பு – அறப்போராட்டம்…
View More தாண்டவபுரம் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போராட்டம்சாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்கை
பிறப்படிப்படையிலான எவ்விதக் கொடுமைக்கும் அடக்குமுறைக்கும் வேதங்களில் எவ்வித ஆதாரமும் இல்லை… நமது நாடு அந்நியர்களிடமிருந்து சுதந்திரமடைந்த பிறகு நம் ஜனநாயகத்தில் நம் அரசியல் சக்திகள் சாதியத்தை தங்கள் ஓட்டுவங்கி அரசியலுக்காகப் பயன்படுத்தியுள்ளன… ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா மானுட சுயமரியாதையையும் சமூக சமரசத்தையும் பேணி வளர்ப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ளது.
View More சாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்கைதலபுராணம் என்னும் கருவூலம் – 7 [நிறைவுப் பகுதி]
சோழமன்னனும் அரசியும் புனலாடிக் கரையேறியபோது அரசியின் மார்பில் மாலை இல்லாததைக் கண்டான். “இறைவனே! உனக்குச் சாற்ற நினைத்த முத்துமாலையைக் காவிரிவெள்ளத்தில் இழக்கும் தீவினையை உடையவன் ஆயினேன். இந்த ஆரத்துக்கு நிகரான வேறு ஆரமெவ் வுலகினு மில்லையே!. என்னுடைய பிழையைத் தீர்த்தாண்டருள் புரிவையேல், அந்த ஆரத்தை நின் திருமேனியில் நீயே பெற்று அணிந்தருள வேண்டும்!” என்று இறைவனிடம் முறையிட்டான். முத்தாரம் சொன்னவாறு இறைவன் திருமேனியை அடைந்தது.
View More தலபுராணம் என்னும் கருவூலம் – 7 [நிறைவுப் பகுதி]தஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை
தொன்மையான சைவ மரபினைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதலும் சைவ சமயத்தை இழிவு படுத்துபவர்களுக்கு கண்டனம் தெரிவித்தலும் கழகத்தின் முக்கிய கொள்கைகள் என கூறினார்… மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – தமிழகத்தில் பூசையே நடைபெறாத சிவாலயங்களை ஆங்காங்கே சைவப் பெருமக்கள் தத்தெடுத்து நித்திய பூசைகள் சிவாகம முறைப்படி நிகழ… வேத ஆகம பாராயாணத்தைக் கண்ட அன்பர்கள் மிகுந்த பரவசமடைந்தனர். பெங்களூர் அன்பர்கள் நடத்திய ஸ்ரீசண்டேச நாயனார் மற்றும் ஸ்ரீகண்ணப்ப நாயனாரின் நாடகங்கள் காண்போர்களின் மனதை பறித்தன…
View More தஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வைதிருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்
“பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பித்தனே” என்று உரிமையோடு தனக்காக அருளிய பெருமையை திருவாசகத்தில் பதிவு செய்கிறார்.. திருவாசக ஏடுகளை கொண்டு சென்று பிரம்மனுக்கும் மஹாவிஷ்ணுவிற்கும் தேவர்களுக்கும் ‘நம் அடியவன் எழுதிய இந்தத் தேன்தமிழைப் பாருங்கள் பருகுங்கள்’ என்று… மாணிக்கவாசகப் பெருமானுக்கு இன்றைக்கும் இலங்கையில் மிகுந்த சிறப்பிடம் செய்யப்பட்டு வருகின்றது. உபசாரங்கள் யாவற்றையும் மாணிக்க வாசகருக்கே வழங்கி நிறைவில் திருக்குளத்தில் மாணிக்கவாசகரின் திருவுருவத்தையே திருநீராட்டும் வழக்கமும்..
View More திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்இலங்கையில் திருமுறை வேள்விகள்: வேகும் தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு மருந்து!
அச்சம் மீதூர தமிழர்கள் நிலை இருக்கையில், மாற்றுச் சமயத்தில் சேர்ந்து விடு என்று அருகாமையிலேயே ஆர்ப்பரிக்கும் குரல்கள்.. புத்தர் சிலைகள் சைவத் தமிழர் நிலப்பகுதியெங்கும் அமைக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. மளமளமென்று விகாரங்கள் எழுகின்றன.. இலங்கையின் பதினேழு மாவட்டங்களிலும் உள்ள சைவத் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட முதற்கட்டமாக 150 திருமுறை வேள்விகளை நிகழ்த்துகிறோம்.
View More இலங்கையில் திருமுறை வேள்விகள்: வேகும் தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு மருந்து!