ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இருக்க வேண்டும் என்றும், முட்டாளாகத் திரிய வேண்டும் என்றும் நம் முன்னோர்கள் நினைத்தார்கள் என்று எண்ணுவது அவர்களுக்கு நாம் செய்யும் துரோகம். வள்ளுவர் நாணுடைமை என்ற ஓர் அதிகாரத்தையே உருவாக்கியிருக்கிறார். அங்கே ஆண்/பெண் வேறுபாடில்லை…
View More அர்த்தங்கள்: அச்சம், மடம், நாணம், பயிர்ப்புTag: பெண்கள்
ஆனைமுகனும் தமிழ்ப்பண்பாடும்
விநாயகப் பெருமானின் வழிபாடு அதன் முன்னோடி வடிவில் சங்க காலத்திலேயே தமிழகத்தில் இருந்திருப்பதையும் அதன் உட்பொருளும் சடங்கியல் நோக்கமும் மாறாமல் அது இன்றும் நம் பிள்ளையார் வழிபாட்டில் தொடர்வதையும் நம்மால் காண முடிகிறது… உலகில் எனக்கு தெரிந்து வேறெந்த பண்பாடும் யானையை போல ஒரு பிரம்மாண்ட விலங்கை தன்னகப்படுத்தியதில்லை. அதை செய்த ஒரே பண்பாடு நம்முடையதுதான். யானைக்கு வர்மப்புள்ளிகளைக் கூட கணித்த பண்பாடு கோவில் யானைகளை பராமரிக்க சரிவான தீர்வை அளிக்காதா? அதை செய்யாமல் நம் பண்பாட்டின் உயர் உச்சமொன்றை முழுமையாக ஒழித்துக் கட்டுவதில் ஏன் இவ்வளவு முனைப்பு? யானைகளை கோவில்களில் வளர்ப்பது அவசியம்….
View More ஆனைமுகனும் தமிழ்ப்பண்பாடும்அம்மாவும் சில மாமிகளும் மற்றும் நானும் [சிறுகதை]
அந்த வீட்டு மாமா வருகிற கார் சத்தம் தெரு முனையில் கேட்டவுடனேயே மாமி பேச்சை அவசர அவசரமாக நிறுத்தி விட்டு “வரேன் மாமி” என சன்னலை விட்டு ஓடுவாள்.இது அம்மாவுக்கும் எங்களுக்கும் பெரிய ஆச்சரியம், ஏனெனில் எங்கள் அப்பா வருகிறாரென்று நாங்கள் எந்த வேலையையும், விளையாட்டையும், பேச்சையும் பாதியிலே நிறுத்தியதேயில்லை… ஒரு விதத்தில் மாமாவும் நல்லவர்தான். மாமியும் பாவம் பரம சாது. ஆனால் அவர்களின் உறவின் இழையில் நுண்ணிய சிக்கல்கள். சராசரி நல்ல தனத்தொடு கூடிய ஒரு ஆண் + சராசரியான ஒரு நல்ல பெண் = ஒரு சராசரி சந்தோஷமான தம்பதிகள் என்ற சமன்பாடு சரியாக இருக்கின்ற தருணங்கள் வெகு குறைவே என்ற ஞானம் எனக்கு பிறந்தது… நான் சொன்னேன் ”அந்த மாமி பாவம் இல்ல!!” அண்ணா சொன்னான் “போடி பாவமும் இல்ல ஒண்ணும் இல்ல! பெரிய பங்களாவில இருங்காங்க. கார் வச்சுண்டு இருக்காங்க பையன் கான்வெண்டில படிக்கறான் ஊட்டியிலயோ எங்கயோ, நம்மளை மாதிரி கார்பரேஷன் ஸ்கூலா என்ன? ஜாலியாத்தான் இருக்காங்க. நாமதான் பாவம்!”….
View More அம்மாவும் சில மாமிகளும் மற்றும் நானும் [சிறுகதை]இந்துமதத்தில் பெண்கள்: உரை
இந்துமத வரலாற்றில் பெண்களின் இடம் என்ன, வேதகால பெண் ரிஷிகள், சீதை பெண்ணடிமைத் தனத்தின் அடையாளமா, தாய் மனைவி முதலிய குடும்ப உறவுகளைத் தாண்டி பெண்ணின் சுயம் பற்றி இந்து தத்துவம் என்ன கூறுகிறது, இன்றைய இந்து சமுதாயத்தில் பெண்களின் நிலை ஆகிய விஷயங்களை ஒரு பறவைப் பார்வையாக இந்த 30 நிமிட உரை தொட்டுச் செல்கிறது. இங்கே கேட்கலாம்..
View More இந்துமதத்தில் பெண்கள்: உரைமானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)
தலை மயிரை இழப்பதை பெண்கள் அபசகுனமாகவே நினைப்பார்கள்.நோய்வாய்ப்பட்டு அதன் காரணமாக தலை முடியை இழக்க நேரும் போது கூட அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுவார்கள் வருந்துவார்கள். கோவிலுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதைத் தவிர மற்ற நேரங்களில் தங்கள் கூந்தலை இழக்க மனம் ஒப்ப மாட்டார்கள். இந்த நிலையில் ஒரு பெண் தனது அலங்காரத்தோடு கூடிய கூந்தலை இழக்க நேரிட்டால்? அது எவ்வளவு கொடுமை! அதுவும் தன் திருமண நாளன்று? அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடு பட்டிருக் கும்? இப்படி ஒரு சம்பவம் நடப்பதை எந்தத் தாயால் பொறுக்க முடியும்? என்றாலும் தந்தைக்காகத் தன் அலங்கரிக்கப் பட்ட கூந்த லையும் தியாகம் செய்கிறாள் ஒரு மகள்…
View More மானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 21
முந்தைய பகுதிகள் : தொடர்ச்சி… சென்ற கட்டுரையில் பங்களா தேஷ்…
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 21சில திருக்குறள்கள் குறித்த ஒரு பார்வை
சிற்சில திருக்குறள்களுக்கு பரிமேலழகர் முதலான அறிஞர்கள் பலரும் கண்ட கருத்துக்கள் யாவும் ஏற்றுக்கொள்ளத் தக்கனவாகத் தெரியாத நிலை கூட இருக்கிறது…. தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள் என்ற குறளில், பெண்கள் கணவனைத் தவிர, பிற தெய்வம் தொழார் என்று ஒரு கருத்து உரையாசிரியர்களால் நிறுவப்படுகிறது. இவ்வுரை மூலம் பெண்களின் இறைவழிபாட்டு உரிமை மறுக்கப்படுகின்றது. எனவே, இதற்கு எதிர்மறையாகப் பொருள் கொண்டால் என்ன? இப்படி முப்பதிற்கும் மேற்பட்ட குறட்பாக்களுக்கு பரிமேலழகர் எதிர்மறைப் பொருள் கொள்கிறார்….கணவனையே நினைந்து கொண்டு, மனதால் வணங்கிக்கொண்டு துயிலெழுகின்றவளாகிய கற்புடைய பெண் கணவனதும் மற்றை எல்லோரதும் நலனுக்காக கடவுள் வழிபாடு செய்பவளாவாள். அவள் எல்லோரும் விரும்புகின்ற போது, பெய்த மழைக்கு ஒப்பாவாள்….
View More சில திருக்குறள்கள் குறித்த ஒரு பார்வைஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 18
ஜாம்பவான் கூறினார் – “குரங்குகளில் புலியே! எழுந்திரு! அகன்ற கடலை நீ தாண்டுவாய்”.. மிக வலுவான சக்தி இருக்கும் அனுமானுக்கே அத்தகைய ஊக்கம் தேவைப்பட்டதென்றால், மற்றவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?… ஒருவனது பிறப்பிலிருந்து இறப்பு வரை பெண்ணினம் காட்டும் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் மனித குலமே தழைத்து வளர்ந்திருக்க முடியாது என்று உணர்ந்து அவர்களுக்கு அன்புடன் செலுத்தப்படும் ஒரு நன்றியுணர்ச்சிக் காணிக்கைதான், ஆதியிலிருந்தே இந்த மாதிரியான வழக்கம் இருப்பதன் காரணம்…
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 18எழுமின் விழிமின் – 22
“ஒவ்வோர் இயக்கமும் தனக்கே உரிய ஒரு சிறப்புத் தன்மையினால் வெற்றி அடைகிறது. அது வீழ்ச்சி அடையும் போதே பெருமைக் குரிய அதே சிறப்புத் தன்மை அதனுடைய பலவீனத்துக்கும் முக்கியமான காரணமாக ஆகி விடுகிறது. புத்த பகவான் – மாந்தருள் மாணிக்கம், அசாதாரணமான ஒற்றுமை நிர்மாண சக்தி வாய்ந்தவர். இதன் மூலம் அவர் உலகமே தம்மைப் பின்பற்றும் படி செய்தார். ஆனால் அவரது சமயம் மடாலயத் துறவு வாழ்க்கை நிலையை அடிப்படையாகக் கொண்ட சமயமாகும். ஆகையால் இந்த சமயத்தில் பிக்ஷுவின் ஆடையைக் கூட மதித்துப் போற்றும் ஒரு தீய விளைவு ஏற்பட்டது. மடாலயங்களில் துறவியர் கூட்டம் கூட்டமாகக் கலந்து வாழும் முறையை முதன்முதலில் புத்தரே ஏற்படுத்தினார். ஆனால் அந்த மடங்களில் ஆண்களை விட பெண்களுக்குத் தாழ்ந்த நிலை தராமலிருக்க அவரால் முடியவில்லை. மடத்துத் தலைவிகள் எவ்வளவு உயர்ந்தவரானாலும் சில ஆண்தலைவர்களது அனுமதியின்றி எந்த ஒரு முக்கியமான காரியத்தையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஏற்பாடு தற்காலிகமாக புத்த சமயத்தின் ஒற்றுமையை உறுதிப் படுத்தியது என்றாலும் அதன் நீண்ட கால விளைவுகள் குறை கூறிக் கண்டிக்கத் தக்கதாகி விட்டன!”
View More எழுமின் விழிமின் – 22அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1
இந்தப் பாத்திரங்கள் பிரக்ஞை நிலையில் வெறி பிடித்தது போல நடந்து கொள்வதால் தான், சாதாரண காட்சிகள் நாடகீயமாக ஆகின்றன, காவிய ரூபம் கொள்கின்றன. சாதாரணப் பெண் சன்னதம் வந்த நிலையில் காளியாக மாறுவது போல… கடற்கரை மணலில் கால்பட்ட இடமெல்லாம் சங்கும் சிப்பியும் இடறுவது போல, எழுத்தெங்கும் படிமங்கள் இறைந்து கிடைக்கும் வெளி லாசராவின் எழுத்து… மீண்டும் மீண்டும் ஒருவித லயத்தில் வரும் உச்சாடனங்கள் போன்ற சொற்கள் – மந்திரமாகின்றன… உன்னதமாக்கப் பட்ட காமம் தான் லா.ச.ரா படைப்புகளின் அடிநாதமாக இருக்கிறது. இந்த நிலைக்கு வருவதற்காக தத்தித் தாவி மோதும் முயற்சியே அவரது சிருஷ்டிகர செயல்பாட்டின் பல வடிவங்களும்…
View More அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1