ஆங்கிலம், கார், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், அலோபதி மருத்துவம், அறுவை சிகிச்சைகள், மின் விளக்குகள், ஃப்ரிட்ஜ், டி.வி, செல்போன், குளிர்பானங்கள் என எதையும் பயன்படுத்தக்கூடாது. மேற்குலகின் கண்டுபிடிப்புகள் வேண்டும். மேற்குலகைப் பழிக்கவும் வேண்டும் என்றால் எப்படி நியாயம் என்று ஒரு கேள்வி இங்கு எழுகிறது. மேற்குலகினர் நம்மை முடக்கினார்கள் என்பதைச் சொல்லும் தார்மிகத் தகுதியை அரை மேற்கத்தியராக ஆகிவிட்டிருக்கும் நாம் இழந்துவிட்டிருக் கிறோம். அந்த உண்மையைச் சொல்லவேண்டுமானால் நாம் நம் கடந்த காலத்துக்குத் திரும்பியாகவேண்டும். மாட்டுவண்டி, திண்ணைப் பள்ளி, பாட்டி வைத்தியம், ஓட்டு வீடு, அரிக்கேன் விளக்கு, அரை ஆடை, பிரசவ கால மரணங்கள், மண் ரோடு, கமலை ஏற்றம், ராட்டை, கிட்டிப்புள், கபடி, மரத்தடி பஞ்சாயத்து எனத் திரும்பியாகவேண்டும். இது சாத்தியமா?…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 12Tag: வர்ணங்கள்
புதிய பொற்காலத்தை நோக்கி – 11
உலகம் முழுவதுமே எல்லாத் தொழில்களும் பரம்பரை வழியிலேயே கைமாற்றித் தரப்பட்டபோதிலும் பாரதத்தில் மட்டுமே அப்படி இருந்ததாகவே மெக்காலே கல்வி முத்திரை குத்தியது. ஐரோப்பாவிலும் நவீன பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகே கல்வி அனைவருக்கும் கிடைத்தது என்றாலும் பாரதத்தில் மட்டுமே கல்வி அனைவருக்கும் மறுக்கப்பட்டதாக அவர்கள் நம் வரலாற்றை எழுதிக் கொடுத்தார்கள். அதுவே இன்றைய அறிவுஜீவி, அரசியல் ஜீவி மட்டங்களில் மனனம் செய்யப்பட்டு முழங்கப்படுகிறது…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 11புதிய பொற்காலத்தை நோக்கி – 10
எல்லாரும் எல்லா தொழிலையும் கற்றுக் கொண்டு விருப்பமான தொழிலைத் தேர்ந்தெடுக்கும் இன்றைய பள்ளிக் கல்வி முறை அன்று உலகில் யாராலும் நினைத்துப் பார்க்கவே பட்டிருக்கவில்லை. எனவே இந்தியாவிலும் அது இருந்திருக்கவில்லை… அக மண முறையும், குல பந்தி – குல விருந்து முறையும் இயல்பான தேர்வாகவே இருந்திருக்கிறது. இந்துசமூகத்தில் மட்டும் கடைநிலையில் இருந்தவர்களும் இழிவான தொழிலைச் செய்தவர்களும் மேலேற முடியாமல் போய்விட்டது என்ற வாதத்தில் அர்த்தமே இல்லை. அவர்களுக்கான வெளிகள், உரிமைகள், அதிகாரங்கள் எல்லா காலத்திலும் இருக்கவே செய்திருக்கின்றன…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 10நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)
பறையர்-பள்ளர்கள் நில உடமையாளர்களாகவும் நிலக் குத்தகைதாரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய நிலை பிற தலித்களை விடப் பல மடங்கு மேலானதுதான். நில உடமைச் சமுதாயத்தினருக்குச் சேவைத் தொழில் செய்து வந்த சக்கிலியர், நாவிதர், வண்ணார், தோட்டி, வெட்டியார் போன்றவர்களே உண்மையில் ‘தலித்’ (Broken) என்று சொல்லத் தகுந்தவர்கள். இந்து சாதி அமைப்பின் கடைசிநிலையில் இருந்தவர்களாக, இருப்பவர்களாக அவர்களையே சொல்லவேண்டும்… இந்த இடத்தில்தான் சாதி அமைப்புக்கு நாம் முன்வைத்த நவீனத் தீர்வின் தோல்வி பற்றி சிந்திக்க வேண்டிவருகிறது. இந்த நவீனத் தீர்வு மூன்று வகையில் பிழையுடையதாக இருந்திருக்கிறது… பிற நாடுகளில் இருக்கும் அகமண முறை சாதியாக ஆகியிருக்காத நிலையில் இந்தியாவில் மட்டும் அகமண முறை மூலம் பிராமணர்கள் சாதிப் பிரிவினையை எப்படி நிலை நாட்டியிருக்க முடியும் என்ற கேள்வி வருகிறது….
View More நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)புருஷ சூக்தம்
புருஷனே ஆகுதியாக வேள்வி செய்தனர் தேவர்கள் – வசந்தம் நெய்யாக, கோடை விறகாக, சரத்காலம் அவியுணவாக ஒரு வேள்வி… பிராமணன் முகமானான் – கைகள் அரசன் – தொடைகள் வைசியன் – பாதங்களில் சூத்திரன் தோன்றினான்… பரம்பொருளே சிருஷ்டியின் கூறுகளாக வியாபித்திருக்கிறார் என்று போற்றிப் புகழ்கிறது இந்தப் பாடல். புருஷன் ஒவ்வொரு உயிரின் விழிகளாலும் பார்க்கிறான், ஒவ்வொரு உயிரின் பாதங்களாலும் நடக்கிறான். முடிவற்று விரிந்து செல்லும் விண்வெளி புருஷனின் தொப்புள் என்று கூறியது அபாரமான அழகியல்… வர்ணங்களை வைத்து உண்டான ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இதில் கற்பிக்கப் படவில்லை. வேதங்களில் எங்கு தேடினாலும் பிறப்பு அடிப்படையிலான சமூகப் பாகுபாடுகள் மற்றும் வர்ண ஏற்றத் தாழ்வுகளுக்கான சான்றுகள் கிடைக்காது…
View More புருஷ சூக்தம்தீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்?: ஓர் எதிர்வினை – 1
அண்மையில் எம்.டி. முத்துகுமார சுவாமி எனும் தமிழக அறிவுஜீவி இந்து மூல நூல்கள் நான்கு வர்ணத்தாருக்கு அப்பாற்பட்ட இனக் குழுக்களை தன் மனிதர்களாகவே கருதவில்லை; அவை தீண்டாமை குறித்துப் பேசின என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு சான்றாக, மகாபாரதத்தில் உள்ள அரக்கு மாளிகை சம்பவம், காண்டவ வன அழிப்பு, கடோத்கசன் மரணம் ஆகிய சம்பவங்களைக் குறிப்பிட்டிருந்தார். .. இதனை மறுத்து, உண்மையில் இச்சம்பவங்கள் வியாச பாரதத்தில் சித்தரிக்கப் பட்டுள்ள விதம் என்ன, இவற்றில் உள்ள மானுடவியல், சமூக வரலாற்று பார்வைகள் என்ன என்பதை ஆதாரபூர்வமாக விளக்குவதற்காகவே இந்த எதிர்வினை…
View More தீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்?: ஓர் எதிர்வினை – 1எழுமின் விழிமின் – 23
ஐரோப்பியர்களே! உங்களை நான் ஒன்று கேட்கலாமா? எந்த ஒரு நாட்டையாவது நீங்கள் மேல்நிலைக்கு உயர்த்தியிருக்கிறீர்களா? எங்காவது பலவீனமான இனத்தினரைக் கண்டால் அவர்களைப் பூண்டோடு வேரறுத்திருக்கிறீர்கள்…. எந்த வேதத்தில், எந்த ஸூக்தத்தில் வெளிநாட்டிலிருந்து பாரதத்தினுள் ஆரியர் வந்ததாக உங்களுக்குத் தெரிகிறது? நீங்கள் ராமாயணம் படித்தது வீணாகி விட்டதே. அதிலிருந்து பெரிய, அருமையான கட்டுக் கதையொன்றை எதற்காக உற்பத்தி செய்கிறீர்கள்?.. பெண் என்கிற பால் பாகுபாட்டை ஒதுக்கி விட்டு, பொதுவான மனிதத்துவ உணர்ச்சியின் அடிப்படையில் நீங்கள் பழகக் கற்றுக் கொள்கிற வரையில், உங்கள் பெண்ணினம் வளர்ச்சியடையாது….
View More எழுமின் விழிமின் – 23சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 3
பகவத் கீதை சாதியை கடவுளே உருவாக்கியதாக கூறுகிறதே? ..வெளிநாட்டு ஆதிக்கக் கைப்பாவையாக இருந்த திருவிதாங்கூர் மன்னன் ”அரச பரம்பரையை விட்டு கடவுள் என்ன தீண்டத்தகாத குலத்தில் பிறப்பாரா?” எனக் கேட்டான்… இன்றைக்கு தேவர் சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் இடையே கலவரங்கள் தூண்டி விடப்படுகின்றன. ஆனால் வரலாற்றில் இந்த இருசமுதாயத்தினரும் இணைந்து ஆதிக்க சக்திகளை எதிர்த்துள்ளதையும் நாம் காணலாம்.
View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 3சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 1
சாதிகள், சாதியம் இவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன? சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா? சாதியத்தை எதிர்க்க இந்து தருமம் அளிக்கும் கருத்தியல் என்ன? இத்தகைய கேள்விகளுக்கு இந்தச் சிறு நூல் சுருக்கமாக விடையளிக்க முயல்கிறது. (எழுதியவர்கள்: அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி)
View More சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 1சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்: பகுதி 2
“சிவ” எனுஞ் சொல்லைச் சொல்லுகின்றவன் சாதியிற் சண்டாளனாக இருப்பினும் அவனைக் காணின், அவனோடு கலந்து பேசுக, அவனோடு உறைக, அவனோடு உண்ணுக .. அடிமைப் பெண்ணின் மகனாகிய கச்சீவது என்பவன் ஆரிய வேதம் செய்த இருடிகளில் ஒருவனாக இருத்தலினாலும், அகத்தியரின் பத்தினி உலோபாமுத்திரை முதலாய பல பெண்கள் இருக்கு வேதத்தின் சில பாகங்களைச் செய்திருப்பதனாலும் சூத்திரரும் பெண்களும் வேதம் ஓதலாம் எனும் நியாயம் ஏற்படுகின்றது” என்று கூறுகிறார் பாம்பன் சுவாமிகள்.
View More சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்: பகுதி 2