குனிந்த தலையை நிமிர்த்தினாள்; சோர்ந்த விழியில் ஒளி சேர்த்தாள்; கலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள்; இருண்ட மதியிலே ஒளி கொடுத்தாள்… உள்ளம் தெளிந்திருக்க, உயிர் வேகமும் சூடும் உடையதாக, உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க, மஹா சக்தியின் அருள் பெறுதலே வாழ்தல்; நாம் வாழ்கின்றோம்.
View More சக்தி வாழ்க! – மகாகவி பாரதிTag: வழிபாடு
காலந்தோறும் நரசிங்கம்
பழங்குடி வேர்களிலிருந்து கிளைத்து வீரர் குடித் தெய்வமாக, பக்த ரட்சகனாக அவதரிக்கும் நரசிம்மர் பின்னர் யோகமும் போகமும் ஞானமும் கலந்த தத்துவக் கடவுளாக பேருருக் கொள்கிறார். ஆனால் இந்த நகர்வு ஒன்றை மறுத்து மற்றொன்றுக்குப் போவதல்ல. பண்பாட்டு ரீதியான இணைப்பினாலும், தத்துவச் செழுமையினால் தகவமைக்கப் பட்ட குறியீடுகளின் விகாசத்தினாலும் நிகழும் நகர்வு இது. ஒவ்வொரு முறையும் ஒரு சிற்ப இலக்கண மரபு உருவாகிக் கொண்டிருக்கும்போதே அது மெலிதாக மீறப்பட்டும் விடுகிறது. அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிவிடுகிறது. இந்திய செவ்வியல் கலைகள் மரபுக்கும், மரபு மீறலுக்குமான ஊடாட்டங்களாகவே எப்போதும் இருந்து வந்திருக்கின்றன. இந்த தன்மையே அவற்றை பாரம்பரியப் பெருமை கொண்டதாகவும், அதே சமயம் உயிரோட்டமுள்ளதாகவும் ஆக்குகிறது.
View More காலந்தோறும் நரசிங்கம்கண்ணன் வந்தான்
நிர்மால்யம் என்பது முன்தினம் இரவு கோயில் மூடும்முன் செய்த கடைசி பூஜையின் அலங்காரங்கள் அகற்றபட்டு ஸ்வாமி அபிஷேகத்திற்காகக் காத்திருக்கும் வேளை… இந்தக் கோயிலில் தரிசனத்திற்குக் கட்டணம் கிடையாது… ஆறுமாதத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றும் அவர் அந்தக் காலத்தில் சன்னதியிருக்கும் பிரதான மண்டபத்தை விட்டு வெளியே, பிரஹாரத்துக்குக்கூட வரமாட்டார்… வழிபாடுகளில் யானைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம்… முதல்வர் ஜெயலலிதா 2002-இல் கொடுத்த யானை சீனியராகக் கோயில் பணிகள் ஆற்றியபின் இப்போது மஸ்தியினால்…
View More கண்ணன் வந்தான்தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையினரின் பகற்கொள்ளை.. [புத்தக அறிமுகம்]
•அற நிலையத் துறைக்கு “வானளாவிய’ அதிகாரங்கள் உள்ளனவா? சட்டங்களும், உச்ச நீதிமன்ற, உயர்நீதி மன்றத் தீர்ப்புகளும் அத்தகைய அதிகாரம் ஏதும் கிடையாது என்பதைக் தெளிவாக எடுத்துக் கூறியும், இச்சட்டங்களையும், தீர்ப்புகளையும் சிறிதும் மதியாமல், தான் செய்வது சட்ட மோசடி என்று தெரிந்தே ஆயிரக்கணக்கான கோயில்களை இந்தத் துறை எடுத்துக் கொண்டு வருவதே இந்தத்துறையின் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகும்… ‘சமுதாயச் சீர்திருத்தம்’ என்ற பெயரில் கோயிலின் எந்தப் பழக்கவழக்கத்தையும் மாற்றவோ, குறைக்கவோ, புதிதாய்ச் சேர்க்கவோ அதிகாரம் இல்லை…
View More தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையினரின் பகற்கொள்ளை.. [புத்தக அறிமுகம்]ரிக்வேதத்தின் அக்னி சூக்தங்கள்
ஆலமரத்தைத் தன்னுள் அடக்கிய விதை போல, இந்து ஞான மரபின் வளர்சிதை மாற்றங்களுக்கான கூறுகள் ரிக்வேதத்திலேயே உருவாகத் தொடங்கிவிட்டன… அந்த மாபெரும் ஒரே கல்தான் இந்தக் கோயிலும் அதன் விமானமும் அதன் பிராகாரங்களும்; அதன் சிவலிங்கமும் கூட. அதன் மீது நான் நின்று கொண்டிருக்கிறேன். அதையே வணங்கிக் கொண்டிருக்கிறேன்… அனைத்து இந்தியர்களின் தொல்மூதாதைகளான ரிஷிகள் வளர்த்த அக்னியே வேள்வித் தீயாக, ஆசைத் தீயாக, சக்தித் தீயாக, உயிர்த் தீயாக, அறிவுத் தீயாக, கலைத் தீயாக, யோகத் தீயாக, ஞானச் சுடராக பல்வேறு தோற்றம் கொண்டு வளர்ந்து இன்றும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறது…
View More ரிக்வேதத்தின் அக்னி சூக்தங்கள்திரிபே வரலாறாக? – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து..
1963-ல் திருவள்ளுவர் தினம் சூலையில் (ஆடி) வேண்டும் என்பது அண்ணாவின் கோரிக்கை. அதிலிருந்து மூன்றாவது ஆண்டு அதாவது 1966-இல், சூனில் (வைகாசி) திருவள்ளுவர் தினம் அறிவித்தவுடன், கோரிக்கை வைத்த அறிஞர் அண்ணா உட்பட அனைவரும் வரவேற்கின்றனர். அதிலிருந்து 3 ஆண்டிற்குள் கருணாநிதி 1970-இல், தை மாதத்தை திருவள்ளுவர் தினமாக அறிவிக்கிறார்! எண்கணிதம் படித்த வரலாற்று நிபுணர்களுக்கு, மூன்று என்பது ராசியான எண் போலும்!
View More திரிபே வரலாறாக? – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து..வரலாறு.காமும் தமிழ்ப்புத்தாண்டும்
வரலாறு என்பது சிலரின் விழைவுக் கற்பனையோ அல்லது பரப்புரைப் புனைவோ அல்ல. வரலாறு நமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களாலேயே உருவாக்கப் படுகிறது. இதை பின்பற்றுபவர்கள் மட்டுமே வரலாற்று ஆய்வாளர்களாகவும் அறிஞர்களாகவும் இருக்க முடியும். வரலாற்று அறிஞர்களிடம் பல விஷயங்களில் இருக்கும் கருத்து வேற்றுமைகள் கூட கிடைக்கும் ஆதாரங்களை புரிந்தேற்றுக் கொள்வதில் வரும் மாறுபாடுகளாலேயே வருகின்றன. அவ்வாறு இருக்கும் போது எந்த ஆதாரமும் எந்த வகையிலும் இல்லாத தை மாத தமிழ்ப் புத்தாண்டு என்பதை ஒரு வரலாற்றுக்கான தளம் ஏற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை விதந்தோதுவதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர்களைப் பழிப்பதும் சற்றும் சகிக்கக்கூடியதாக இல்லை.
View More வரலாறு.காமும் தமிழ்ப்புத்தாண்டும்கும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்
பிப்ரவரி 25, 26 (சனி, ஞாயிறு இரு நாட்களும்). பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புகழ்பெற்ற அறிஞர்கள், ஸ்தபதிகள், கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள் பங்கு பெறுகின்றனர். இரு நாட்களும் கலை நிகழ்ச்சிகளும் உண்டு. அனுமதி இலவசம். அனைவரும் வருக! சம்ஸ்கார் பாரதி அமைப்பின் தமிழகக் கிளை இந்தக் கருத்தரங்கத்தை நடத்துகிறது.
View More கும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்கதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்
புத்தர் இந்தப் பிணக்கைத் தீர்க்க மணிபல்லவம் வந்தார்… ‘எந்த விக்கிரகத்தின் வலது கால் அசைவதைக் காண்கிறாயோ, அதுவே சரியானது என்று காட்டு’ எனக் கட்டளையிட்டாள்… “ஒரு மார்பிழந்த திருமாபத்தினி” என்று போற்றப்படும் கண்ணகியின் கற்பு அவளை தெய்வீக நிலைக்கு உயர்த்தியிருக்கிறது… அம்பாள் திருவடிவத்தை கிறிஸ்துவின் அன்னையான மரியாள் என்று காட்டினார்கள். வந்தவர்கள் மகிழ்ந்து அக்கோயிலை கத்தோலிக்க மரபுப்படி மாற்றி ஜெபமாலை மாதா என்று போற்றினார்களாம்..
View More கதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்பாலகிருஷ்ணனும் பசித்த துறவியும்
கிருஷ்ணனை அந்தத் துறவியின் முன்னால் கொண்டு வந்து அவருடைய பாதங்களில் கிடத்தினார்கள். கிருஷ்ணனும் பவ்யமாக நமஸ்காரம் செய்துக் கொண்டே துறவியின் பாதங்களை இறுக்கத் தழுவிக் கொண்டார்… நீலமேக வண்ணன் வெள்ளை வெளேரென்றிருந்த பால்பாயாசத்தை உண்ணலானார். என்ன ஒரு கான்ட்ராஸ்ட்! கோமளமான வாயைச் சுற்றிலும் பாயாசம்… இந்த மாளிகையைச் சுற்றி நான்கு வாசல்கள் உள்ளன. ஒரு வாசலுக்கு ஒருத்தர் என்ன இரண்டு பேரைக் காவலுக்கு நியமிக்கிறேன். நந்தகோபரும் அவர்களோடு சேர்ந்து வாசலைக் காப்பார்….
View More பாலகிருஷ்ணனும் பசித்த துறவியும்