புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு

நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் ஒரு முக்கிய கருத்தியல் புரட்சிக்கான தொழில்நுட்ப விதை போடப்பட்டது. அதிகமாக பெயர் அறியப்படாத ஒரு கணிதப் பேராசிரியர் தான் வடிவமைத்த ஒரு பொருளை நகர சபையாரின் முன்னால் வைத்தார்,. சில அடிகளே உள்ள மரத்தாலான குழாயின் உள்ளே ஆடிச்செல்லுகளை வைத்து செய்யப்பட்ட அந்த அமைப்பு விரைவில் மேற்கின் கருத்தியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என யார்தான் நினைத்துப் பார்த்திருக்க முடியும்!

View More புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு

சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்

சுவாமி சித்பவானந்தர் எழுதுகிறார், “ஹிந்து மதத்தில் யாரையாவது விலகிவைத்தல் (exclusion) என்பது மட்டும் இடம் பெறக்கிடையாது என்று அவர் வைதிக மதத்தைப் பெருமை பாராட்டினார். அத்தகைய வேதாந்தத்தினுள் சிறுமையும் அற்பத்தனமும் எவராவது நுழைத்துவிடக் கிடையாதா? இதை ஆராய்வதற்குஆதாரங்கள் வேண்டிய அளவில் இருக்கின்றன. இங்கு எழுந்துள்ள கேள்வியே அதைச் சுட்டிக்காட்டுகிறது ….”

View More சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்

இயற்கை முரண்களும், இருவேறு கலாசாரங்களும்

… இரண்டுமே சாதாரண வரையறைகளுக்குள் அடங்காத விசித்திர பிராணியைக் கற்பனை செய்தன. ஒரு கலாசாரம் அதனை தெய்வீகத் தன்மை கொண்ட அதிசயமாகப் பார்த்தது. மற்றது சாத்தானிய (diabolical) தன்மை கொண்ட அரக்கனாகப் பார்த்தது… விசித்திரங்கள் கொண்ட புராணங்களும், கோயில் சிற்பங்களும் நாம் காணாதவை, நாம் அறியாதவை பிரபஞ்சமெங்கிலும் உண்டு என்பதை நமக்கு எப்போதும் நினைவூட்டிக் கொண்டிருக்கும். முத்திரை குத்தி மனதை மூடிக் கொள்வதைக் காட்டிலும், புரிந்து கொள்ளும் முயற்சியுடன் மனதைத் திறந்து வைத்திருப்பதே சிறந்தது என்று நமக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும்.

View More இயற்கை முரண்களும், இருவேறு கலாசாரங்களும்

வைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை

நாட்டார் வழிபாட்டு நெறிகளைப் பழித்து அழித்து ஒழிக்காமல் அவற்றைத் தழுவி ஏற்றுக் கொண்டு ஒருபெருந்தெய்வ வழிபாட்டினை அறிமுகப்படுத்தும் வைதிகநெறியின் ஆற்றலை உணர்ந்து போற்ற வேண்டும்… வேதத்தில் முதல்வனுக்கும் உயிருக்கும் உள்ள உறவினை விளக்கும் ‘அத்துவிதம்’ என்னும் பதத்திற்கு மெய்கண்டாரே உண்மையான பொருளை விளக்கியருளினார். மெய்கண்டதேவரின் திருவவதாரம் இந்திய தத்துவ ஞான வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

View More வைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 4

பசு, பதி, பாசம் இம்மூன்றும் உள்பொருள்கள் எனப் பேசுவது சைவசித்தாந்தம்; சம்பந்தர் இந்தக் கலைச் சொற்களை வேதத்தினின்றும் எடுத்து ஆண்டார்… வைதிகர் என்னும் பெயர் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்குதல் பிற்காலத்தில் நேர்ந்து விட்டபிழை; வேதவழக்கை உடன்பட்ட அனைவரும் வைதிகரே.

View More வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 4

தலைவர்களைத் தேசத்திற்குத் தந்த குரு

“… இந்த புத்தகம் முழுக்க முழுக்க நடைமுறை உபயோகத்திற்கானது என்பதை நாம் உணர்ந்துகொள்ளவே இல்லை. நாம் மட்டும் புரிந்துகொண்டிருந்தால் ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த படையெடுப்புகளோ, நமக்குள் நடக்கும் ஜாதிப் பிரச்சினைகளோ, பிரபுத்துவ கொடூரங்களோ, பிரம்மாண்டமான ஏழ்மையோ ஏற்பட்டிருக்காது. நாம் கீதைக்கு முக்கியத்துவமே தரவில்லை… ” [ஸ்வாமி ரங்கநாதானந்தர் By எல்.கே.அத்வானி, குருபூர்ணிமா சிறப்புக் கட்டுரை]

View More தலைவர்களைத் தேசத்திற்குத் தந்த குரு

காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 1

கடலில் தோன்றி, கடலின்மீது அலைகள் உருண்டோடி விளையாடுவது போன்று ஜகத்தும் ஜீவனும் பரத்தில் தோன்றி பரத்தில் நிலைபெற்றிருக்கின்றன… உள்ளத்தைச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற தாமரை மலராகக் கருதவேண்டும். அதில் சுயம் ஜோதி சொரூபமாக வழிபடு தெய்வம் வீற்றிருப்பதாக உணர்தல் வேண்டும். இந்த உணர்வில் நிலைத்திருப்பது தியானமாகிறது.

View More காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 1