வேட்டையாடி விளையாடும் அரங்கன்

வையாளி: இது ஸ்ரீரங்கத்தில் திருவரங்கனின் கோவிலில் மட்டுமே காணக்கிடைக்கும்
ஒரு வைபவம். ஆன்ம அனுபவம். நம்பெருமாளின் ராப்பத்து திருவிழாவின் 8-ம் நாள்
இந்த இன்ப அனுபவம் கிட்டும். இறை நம்பிக்கை உள்ளவர் இல்லாதவர் என்ற பாகுபாடு இன்றி, உணர்வுள்ள அனைவர் உள்ளங்களிலும் உயரனுபவம் ஏற்படுத்தும் உன்னத நிகழ்வு இது. பக்தரோடு, பத்தரும் பரவசமடையும் தருணம் இது.

எதனால் இந்த பரவசம் ஏற்படுகிறது? ஒத்திசையும் சக்திகள் ஒருங்கே வெளிப்படுவதால்
இந்த பரவச அனுபவம் நிகழ்கிறது. இங்கே வேகமும், வலிமையும், விவேகமும், நளினமும் ஒன்றாய் கலந்து வெளிப்படுகிறது. கடவுளின் காந்தி காந்தமாய் தீண்டுகையில் உடம்பு அதிருகிறது. மனது பரவசம் பரவசம் என்கிறது.

View More வேட்டையாடி விளையாடும் அரங்கன்

இந்து யார்?: சுவாமி விவேகானந்தர்

இந்து என்ற பெயர் தாங்கிய மனிதனுக்கு ஏற்படும் துன்பம், உங்களது உள்ளத்தை வந்து தாக்கி, உங்களது மகனே துன்பப்படுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் இந்து ஆவீர்கள்.

View More இந்து யார்?: சுவாமி விவேகானந்தர்

மகான்கள் வாழ்வில் – 2: யோகி ராம்சுரத்குமார்

‘கடவுளின் குழந்தை’ எனப் போற்றப்பட்டவர் யோகி ராம்சுரத்குமார். வடநாட்டில் பிறந்திருந்தாலும் திருவண்ணாமலையையே இறுதிவரை…

View More மகான்கள் வாழ்வில் – 2: யோகி ராம்சுரத்குமார்

தலித்துகள் வீட்டுக்கே செல்லும் திருப்பதி வெங்கடாசலபதி

தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் ஆகியோரிடம் ஹிந்து மதத்தின் பெருமையை எடுத்துச் செல்லும்விதமாக பல்வேறு முயற்சிகளை…

View More தலித்துகள் வீட்டுக்கே செல்லும் திருப்பதி வெங்கடாசலபதி

மகான்கள் வாழ்வில் – 1: ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

ஒரு நாள் ராமகிருஷ்ணர் தனது அறையின் முன் உள்ள வராந்தாவில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தார். அவர் நடைபயிலுவதை தூரத்தில் தன் அறையில் இருந்தவாறே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் மதுர்பாபு. அப்போது திடீரென அங்கே பரமஹம்சரின் உருவத்துக்குப் பதில் காளியின் உருவம் நடமாடுவது தெரிந்தது. நம்பமுடியாமல் கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தார் மதுர்பாபு. ஆம், அங்கே காளிதான் நடமாடிக் கொண்டிருந்தார். மறுகோடிக்குச் சென்று திரும்பியதும் காளி உருவம் மறைந்தது. சிவன் உருவம் தோன்றியது. பகவான் ராமகிருஷ்ணர் காளியாகவும் சிவனாகவும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தார்…

View More மகான்கள் வாழ்வில் – 1: ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

இந்து சேவை அமைப்புகளின் தொண்டு

மாற்றுமத சகோதரர் ஒருவர் என்னிடம் ‘எங்கள் மதத்தில் பாருங்கள் எவ்வளவோ தொண்டு அமைப்புகள்…

View More இந்து சேவை அமைப்புகளின் தொண்டு

இந்து மகத்துவக் கும்மி

கும்மியடி பெண்ணே கும்மியடி – கையில்
கோலவளை கொஞ்சக் கும்மியடி
நம்மவர் ஒற்றுமை ஓங்கிடவும் – தமிழ்
நாடு செழிக்கவும் கும்மியடி.

View More இந்து மகத்துவக் கும்மி

அலைஸ் கால்ட்ரோன் – உலக அமைதிக்காக உழைத்த இந்து

அமெரிக்க இசை கலைஞரும் சனாதன தருமத்தின் ஆன்மிக இசை பாரம்பரியத்தின் மூலமும் நாடு, இன மத பேதமின்றி உலக அமைதிக்காக உழைத்தவருமான இந்த பெண் கலைஞரினை உலக நன்மைக்கு உழைத்த இந்துக்கள் வரிசையில் தன் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் தமிழ்இந்து.காம் பெருமை அடைகிறது.

View More அலைஸ் கால்ட்ரோன் – உலக அமைதிக்காக உழைத்த இந்து