இந்தக் கோட்பாட்டின்படி, கிமு 1500 ம் ஆண்டளவில் வட இந்தியாவானது, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவின் எல்லைப் பகுதியில் நாடோடிகளாகத் திரிந்து கொண்டிருந்த வெளிர் தோலுடைய ‘ஆரியர்கள்’ என்ற இனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. இந்த படையெடுப்பானது, ஏற்கனவே வட இந்தியாவில் வாழ்ந்து வந்த மேம்பட்ட நாகரிகத்தை அழித்து, அவர்கள் மீது ஆரியர்களின் கலாச்சாரம் மற்றும் மொழியை திணித்தது. அத்துடன் ஹைபர் கணவாயூடாக இந்தியாவிற்குள் வந்தார்களென்றும், சிந்து சமவெளியில் வாழ்ந்த திராவிட மக்களை தென்னிந்தியாவிற்கு இடம் பெயர வைத்தார்களென்றும் இந்தக் கட்டுக்கதை சொல்லப்பட்டது.
View More ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 1Tag: ஆரியப் படையெடுப்பு
ஆரியர் படையெடுப்பின் சுவடுகள் இன்னமும் இல்லை: கோயன்ராட் எல்ஸ்ட் நூலை முன்வைத்து
டாக்டர் கோயன்ராட் எல்ஸ்ட் மிகவும் ஆபத்தான அறிஞர். இடதுசாரிகள் அவர்மீது வன்மத்தைப் பொழிகின்றர் எனில், சில இந்து ஆசாரவாதிகளுக்கும், சமூகவளைதளக் காவிகளுக்கும் கூட அவரை ஒப்புகொள்வதில் சங்கடம் உள்ளது இந்த சலசலப்புகளைத் தாண்டி, அவரது வரலாற்று நூல்கள் காலத்தை வென்று நிற்கும்.. மனுஸ்ம்ரிதி ஒரு “ஜாதிய அறிக்கை” கிடையாது. மனுவின் பார்வை மிகவும் விரிவானது, அதே சமயம் முரண்கள் நிறைந்தது. வர்ணக்கலப்பு விஷயத்தில் அறநெறிப் பார்வையும் உள்ளது.. குதிரையின் இருப்பு ஹரப்பா நாகரீகத்தில் இன்று தொல்லியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதைவைத்து இந்துத்துவ சார்புள்ள வரலாற்று அறிஞர்கள் மீது மோசமான, கீழ்த்தரமான அவமதிப்புகள் நிகழ்ந்தன… வள்ளுவர்கள் பிராமணர்கள் போலவே கோவிலில் பணியாற்றினார்கள் என்று தெரிகிறது..
View More ஆரியர் படையெடுப்பின் சுவடுகள் இன்னமும் இல்லை: கோயன்ராட் எல்ஸ்ட் நூலை முன்வைத்துபுதிய மரபணு ஆய்வு ஆரியர் படையெடுப்பை நிரூபித்துவிட்டதா? கொஞ்சம் பொறுங்கள் – ஸ்ரீகாந்த் தலகேரி
மரபணுவியலை வைத்து, கலாசார நகர்வைத் தீர்மானிப்பது எடுத்த எடுப்பிலேயே பிழையான முயற்சி… ரிக்வேதம்தான் மிகப்பழைய இந்தோ-ஆரிய நூல். ஹரப்பாவின் மொழி இந்தோ-ஆரிய மொழி கிடையாது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அதைவிட, அது திராவிட மொழி என்பதற்கு (அப்படி யாரேனும் சொல்லத் துணிந்தால்) அடிப்படைச் சான்றுகூடக் கிடையாது… “இந்தியாவில் இருந்து வெளியே சென்ற மக்கள் இந்தோ-ஐரோப்பிய மொழி, கலாசார ஒற்றுமைக்குக் காரணமாக இருக்கலாம்” என்பதுதான் “இந்தியாவிலிருந்து வெளிப்போதல்” கொள்கை (OIT). ஆனால், பல ஐரோப்பிய, அமேரிக்க இந்தியவிலாளர்கள் படையெடுப்புக் கொள்கையை கைவிடத் தயாராக இல்லை…
View More புதிய மரபணு ஆய்வு ஆரியர் படையெடுப்பை நிரூபித்துவிட்டதா? கொஞ்சம் பொறுங்கள் – ஸ்ரீகாந்த் தலகேரிஎழுமின் விழிமின் – 23
ஐரோப்பியர்களே! உங்களை நான் ஒன்று கேட்கலாமா? எந்த ஒரு நாட்டையாவது நீங்கள் மேல்நிலைக்கு உயர்த்தியிருக்கிறீர்களா? எங்காவது பலவீனமான இனத்தினரைக் கண்டால் அவர்களைப் பூண்டோடு வேரறுத்திருக்கிறீர்கள்…. எந்த வேதத்தில், எந்த ஸூக்தத்தில் வெளிநாட்டிலிருந்து பாரதத்தினுள் ஆரியர் வந்ததாக உங்களுக்குத் தெரிகிறது? நீங்கள் ராமாயணம் படித்தது வீணாகி விட்டதே. அதிலிருந்து பெரிய, அருமையான கட்டுக் கதையொன்றை எதற்காக உற்பத்தி செய்கிறீர்கள்?.. பெண் என்கிற பால் பாகுபாட்டை ஒதுக்கி விட்டு, பொதுவான மனிதத்துவ உணர்ச்சியின் அடிப்படையில் நீங்கள் பழகக் கற்றுக் கொள்கிற வரையில், உங்கள் பெண்ணினம் வளர்ச்சியடையாது….
View More எழுமின் விழிமின் – 23திராவிட இனம் – வரலாற்று உண்மையா?
திராவிட இனம் என்ற கொள்கைக்கு வரலாறு, அகழ்வாராய்ச்சி அடிப்படையில் ஆதாரங்கள் உள்ளனவா? திராவிடர்களுக்கு அவர்களது தனி அடையாளத்தை அளித்தவர் பிஷப் கால்டுவெல். அவரை ஏன் மோசமாக சித்தரிக்கிறீர்கள்? சமூகநீதியை வலியுறுத்துகிறது என்பதால் தானே திராவிட இயக்கத்தை எதிர்க்கிறீர்கள்? .. மேலும் சில கேள்விகள், விவாதங்கள் – வீடியோ வடிவில்…
View More திராவிட இனம் – வரலாற்று உண்மையா?தமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்
ஒரு அட்டவணை திராவிடர்கள் மற்றும் ஆரியர்களின் பண்புகளை கட்டம் கட்டி அழகாக ஒன்பது பாயிண்டுகளில் பட்டியலிடுகிறது. காலனிய காலகட்டத்தின் பிழையான இனவாத கருத்துக்களில் இருந்து கொஞ்சம் கூட நகராமல் அதையே இங்கு சொல்கிறார்கள் – நவீன மானுடவியலும், மரபணு அறிவியலும் ஒட்டுமொத்தமாக அதைப் பொய்யானது என்று நிரூபித்துவிட்ட போதும்.. ”லெமூர் மூதாதைகளிலிருந்து தமிழ் பேசிக்கொண்டே உருவான ஆதி மானுடம்” எப்படி அபத்தத்திலும் மகா அபத்தமான கருதுகோள் என்பது புரிய வரும்…(மூலம்: மிஷேல் டேனினோ)
View More தமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்செம்மொழி விருதுகள்: சில கேள்விகள்
தனது வாழ்க்கையையே சிந்து சமவெளி இலச்சினைகளை விளக்கிட செலவழித்த மகாதேவன், ஹரப்பா பண்பாடு வேதப் பண்பாடு என்று சொல்வதை கொஞ்சமும் இலட்சியம் செய்யாமல் ஒரு இனவாதச் சட்டகத்தில் அந்த பண்பாட்டின் வரலாற்றை விளக்கி அதனை இன்றைய அரசியலுடன் முடிச்சு போடக்கூடியவர்களிடம் எவ்விதம் ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் விழா மதிப்பு பெறுகிறார்?… பழந்தமிழரின் ஆன்மிகப் பண்பாட்டின் இந்த மைய அச்சுக்கள், பழந்தமிழரை பாரதப் பண்பாட்டுச் செழுமையுடன் இணைக்கும் இப்பாவுகள் – காட்டப்பட்டனவா இம்மாநாட்டில்? வலியுறுத்தப்பட்டனவா? (மூலம்: டாக்டர் எஸ்.கல்யாணராமன்)
View More செம்மொழி விருதுகள்: சில கேள்விகள்சோமபானம் என்னும் மர்மம்
இந்திய ஆன்மிக அனுபவம் என்பதை போதை என்பதாக மட்டுமே காணும் ஐரோப்பிய இனமையப் பார்வையையும் இங்கு காணலாம். மேலும் ஆரிய-படையெடுப்புக் கோட்பாட்டாளர்களுக்கு இந்தியாவுக்கு முழுக்க முழுக்க அன்னியமானதான ஒரு தாவரத்தைக் கண்டடைய வேண்டிய அவசியமும் இருக்கிறதென்பது விஷயத்தை இன்னும் சிக்கலாக்குகிறது…. ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டுக்கு நவீன ஆராய்ச்சி அளித்துள்ள மற்றொரு அடி.
View More சோமபானம் என்னும் மர்மம்நூல் அறிமுகம்: வரலாற்று ஆராய்ச்சி
ஆரியப்படையெடுப்பு என்பது பொதுவாக இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரையிலும் ஒரு முக்கியமான அரசியல் கேள்வியாக ஆகியுள்ளது. ஏனெனில் சில முக்கிய அரசியல் இயக்கங்கள் தமது கோட்பாட்டின் அடித்தளமாகவே இந்த ஆரிய இனவாதத்தை முன்வைக்கின்றன. மேற்கத்திய பெரும் அகாடமிக் நிறுவனங்களில் பல இந்த கோட்பாட்டை வாழவைப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இக்கோட்பாட்டின் முக்கிய மேற்கத்திய விமர்சகராக திகழ்பவர் டாக்டர்.எல்ஸ்ட். இவரது இந்நூல் குறித்து ஒரு அறிமுகமாக இக்கட்டுரையை தமிழ் ஹிந்து வெளியிடுகிறது.
View More நூல் அறிமுகம்: வரலாற்று ஆராய்ச்சி