இந்த இயக்கத்தின் உற்சாகம் நாடெங்கும் பா.ஜ.க தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் திட்டமிட்டதை விடப் பெரிதாக, தீயாகப் பற்றிக் கொண்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஒற்றுமை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்…. ஒவ்வொரு கிராமத்தின் மண்ணும், அந்த மண்ணின் விவசாயிகளின் பயன்பாட்டில் இருந்த இரும்புத் துகள்களும் சேகரிக்கப் படும். அந்த மண் ஒற்றுமைச் சிலையின் பீடமாகும். அந்த இரும்புத் துகள்கள் உருகி, இறுகிப் பிணைந்து இந்தியாவின் இரும்பு மனிதரின் சிலை உருக்கொண்டு எழும்… இதுவரை மோதி மக்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார். இப்போது மக்கள் மோதியின் கோரிக்கையின் பேரில் தேச ஒற்றுமைக்காக ஓடப் போகிறார்கள். இது எத்தகைய எழுச்சியை உருவாக்கும் என்று உணர்கிறீர்களா?…
View More இந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள்Tag: இந்து ஒற்றுமை
சாமி சரணம்
ஐயப்பன் மார்களில் ஏராளமான பேர் அயோத்தி இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தோம். ஆயினும் வாவர் பள்ளியில் சென்று வணங்குவதில் யாருக்கும் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை… மணிகண்டன் காட்டு பகுதியில் மக்களுக்குப் பல கொடுமைகளை செய்து வந்த உதயணன் போன்ற கொள்ளைக் காரர்களை கடுத்தன், கருப்பன், வாவர், வில்லன் – மல்லன் ஆகிய படைத் தளபதிகளின் உதவியுடன் முறியடிக்கிறான். சபரிமலையில் யோகத்தில் அமர்கிறான். வரலாற்று நாயகனான இந்த வீர மணிகண்டன் சாஸ்தாவின் திரு அவதாரமாகவே மக்களால் கொண்டாடப் படுகிறான்… சரணம் ஐயப்பா என்று உள்ளம் உருக விளிக்கும் பக்தன், அங்கே சிவனும் சக்தியும் விஷ்ணுவும் புத்தனும், பிரபஞ்சமும், தானும் ஆன அழியாத சத்திய ஸ்வரூபத்தையே அழைக்கிறான்…
View More சாமி சரணம்மகாத்மா காந்தியும் மகா பெரியவரும்
போலி மதச்சார்பின்மையாளர்கள் விரும்புவோர் வந்தேமாதரம் பாடலாம் என்று சொன்ன போதும் தேச பிரிவினையின் முன்னோட்டமாக வந்தேமாதரத்தை சிதைத்த போதும் என்ன மனநிலையில் செயல்பட்டார்களோ அதே மனநிலையில்தான் சாதியத்தை ஆதரிப்போர் செயல்படுகின்றனர். சுவாமி தயானந்த சரஸ்வதியும், சட்டம்பி சுவாமிகளும், ஸ்ரீ நாராயண குருவும், சுவாமி விவேகானந்தரும் கொண்டு வந்த ஞான கங்கை சாதிய ஒழிப்பு. அது பாரம்பரியம் என்கிற பெயரில் உருவான பாலையில் வறண்டு போக விடுவது ஹிந்து சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும்…. போலி மதச்சார்பின்மை, சாதியம் – பாபா சாகேப் அம்பேத்கரே இந்த இரண்டு தீமைகளையும் ஹிந்து சமுதாயத்தை பீடித்திருக்கும் இணையான வியாதிகள் என்கிறார்….
View More மகாத்மா காந்தியும் மகா பெரியவரும்தர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறை
கலப்பு காதல் திருமணங்களில் மணமகன் / மணமகள் ஆகியோரில் ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில், அது ஒரு குடும்ப ரீதியான கசப்புணர்வு என்பதையும் தாண்டி, கடும் சாதிய வெறுப்பு விஷமாக மாறி விடுகிறது…. ஒரு குடும்ப சோகத்தை, தற்கொலையை முகாந்திரமாக்கி அதன் மூலம் இன்னொரு சமூகத்தினருக்கு எதிரான கடும் வெறுப்பை கூட்டு வன்முறை மூலம் வெளிப்படுத்துவது என்பது ஒரு ஜனநாயக நாட்டில், நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாத செயல்… இந்து இயக்கங்கள் இந்த விஷயத்தில் மௌனம் காப்பது மிக மோசமான வரலாற்றுத் தவறாகும். ஒவ்வொரு இந்துவும் தன்னில் தலித் சகோதரர்களின் வலியை உணரும் நாளே உண்மையான இந்து ஒற்றுமை உருவாகும்…
View More தர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறைஎழுமின் விழிமின் – 20
கல்வியென்பது ஒருவனுடைய மூளையில் விஷயங்களைத் திணிப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் விஷயங்கள் ஜீரணமாகாமல் வாழ்நாள் முழுவதும் குழப்பமுண்டாக்கிக் கொண்டிருக்கும். வாழ்க்கையை உருவாக்குகிற, ஆண்மையுண்டாகுகிற, ஒழுக்கமூட்டுகிற கல்வி வேண்டும்… உங்களுக்கு இளமையின் சக்தித்துடிப்பு இருக்கும் பொழுதுதான் உங்களது வருங்காலத்தைப் பற்றி நிர்ணயிக்க வேண்டும். நீங்கள் தளர்ந்து வாடித் தேய்ந்துபோன பிறகு அல்ல; பணி புரியுங்கள். இதுவே தக்க தருணம்… உங்கள் ஆத்மாவில் அளவற்ற சக்தியிருக்கிறதென்றும் இந்நாடு முழுவதையும் உங்களால் தட்டியெழுப்ப உங்களால் முடியும் என்றும் உங்களில் ஒவ்வொருவரும் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்….
View More எழுமின் விழிமின் – 20ஆதிக்க சாதி இந்துக்களின் மனசாட்சிக்கு ஒரு அறைகூவல்
“உயர் வகுப்பினர் என தம்மை அழைத்துக் கொள்வோர் தங்களோடு இணைந்த சகதோழர்களுக்காக ஆற்ற…
View More ஆதிக்க சாதி இந்துக்களின் மனசாட்சிக்கு ஒரு அறைகூவல்எழுமின் விழிமின் – 11
அழியாப்பேறு பெற்றவர்களின் புதல்வர்களே! எனது நாட்டினரே! ஒளிமிகுந்து விளங்கிய பல நூற்றாண்டுகளாக வாழ்க்கைக் கடலைக் கடந்து நமது தேசியக் கப்பல் ஓடிவந்துள்ளது…ஆனால் இன்றைக்கோ- நமது குற்றத்தினாலோ அல்லது வேறு எந்த காரணங்களினாலோ அதில் ஓட்டை விழுந்து, பழுதுபட்டுள்ளது. இந்தக் கப்பலில் அமர்ந்துள்ள நீங்கள் இப்பொழுது என்ன செய்வீர்கள்? அதைச் சபித்துக்கொண்டும் உங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டும் பூசலிட்டுக்கொண்டும் நிற்பீர்களா? நீங்கள் அனைஅரும் ஒற்றுமையுடன் ஒன்றுசேர்ந்து ஓட்டைகளை அடைக்க, சிறந்தமுறையில் முயற்சிக்க மாட்டீர்களா? ஆகவே இப்பணியைச் செய்வதற்காக நாம் அனைவரும் நமது நெஞ்சத்து உதிரத்தை மகிழ்வுடன் அளிப்போம்…
View More எழுமின் விழிமின் – 11இந்த வாரம் இந்து உலகம் (பிப்ரவரி – 17, 2012)
மகேந்திர கிரி மலைத்தொடர்கள் பின்னணியில் கம்பீரமாக ஆசி வழங்க, சீருடை அணிந்த ஸ்வயம்சேவகர்கள் 16,000 பேர் அணிவகுத்து நின்றனர்…. உத்தபுரத்தில் இரு தரப்பினரும் இந்த சாதி மோதல் தொடர்பாக தாங்கள் போட்டிருந்த அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்றுக் கொண்டனர்…உல்லாச சுற்றுலாத் தலமாக மட்டுமே இந்தியர்களால் கருதப் பட்டு வந்த இந்த சின்ன தீவில் இஸ்லாமிய மதவெறி வளர்ந்து மிக மோசமான பரிணாமத்தை எட்டியுள்ளது… பள்ளி ஆண்டு விழாவில் ‘நவீன ராமாயணம்’ என்ற பெயரில் இந்து கடவுளர்களை திட்டமிட்டு இழிவுபடுத்தி நாடகம் போட்டார்களாம்…
View More இந்த வாரம் இந்து உலகம் (பிப்ரவரி – 17, 2012)குமரியில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ் விழா, இந்து சங்கமம்
சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டை வரவேற்கும் விதமாக பிப்-12 ஞாயிறு அன்று கன்னியாகுமரியில் மாபெரும் நிகழ்வு.. 25,000 ஸ்வயம் சேவகர்களையும் சேர்த்து மொத்தம் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.. சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி அரு.இராமலிங்கம், ஆர் எஸ் எஸ் அகில பாரத தலைவர் மோகன்ஜி பாகவத்.. இந்த நற்பணிக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர்… பல துறவிகளும், சமயாசாரியர்களும் தங்கள் அருளாசியை வழங்கின்றனர்… வரவேற்புக் குழுவில் சமூகப் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்..
View More குமரியில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ் விழா, இந்து சங்கமம்ஹிந்துத்துவம் – ஒரு கண்ணோட்டம்
ஐரோப்பிய சிந்தனை முன்வைத்த தேசியவாதத்தையும், இந்திய கலாசார ஒற்றுமையையும் கலந்து இப்படி ஒரு சித்தாந்தத்தை சாவர்க்கர் முன்வைத்தார் என்று இன்றைய அரசியல் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும்…. ஒரு மனிதனது நாடி நரம்புகளில் மனிதகுலம் முழுவதின் ரத்தமும் ஓடுகிறது என்பதே உண்மையாக இருக்கும்…. “இது தான் ஹிந்துத்துவம்னா நான் இன்னிலேர்ந்து ஹிந்துத்துவ வாதி என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்” என்று என்னிடம் அடித்துக் கூறினாள்… உலகில் ஏதோ பகுதியில் ஒடுக்கப் படும் இந்துக்களின் குரலை உலக அரங்கில் யார் கேட்கச் செய்ய முடியும்? இந்தியா மட்டும் தான்…
View More ஹிந்துத்துவம் – ஒரு கண்ணோட்டம்