மும்பை இந்து-கிறிஸ்தவ உரையாடல்கள்: ஒரு பார்வை

”சகிப்புத் தன்மையுள்ள நாடான இந்தியாவில், ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடப்பது ஏன்” என்றார் வாத்திகன் பிரதிநிதி. ஆனால், இந்துத் துறவியர் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் கிறிஸ்தவ மதப்பிரசாரம் மற்றும் மதமாற்றங்களே என்பதை ஆணித்தரமாக முன்வைத்தனர். இந்துத் தரப்பின் சார்பாக வெளியிடப் பட்ட அறிக்கையின் மையமான கருத்துக்கள்…

View More மும்பை இந்து-கிறிஸ்தவ உரையாடல்கள்: ஒரு பார்வை

இயக்குனர் ஸ்ரீதரின் கிறிஸ்தவ நண்பன்

.. ஆனால் அதற்கு 10 நிமிடம் முன்னதாக கிறிஸ்தவ மாணவர்களுக்காக ஒரு பிரத்யேகமான பிரேயர் நடைபெறும். அதற்கும் எல்லா ஹிந்து மாணவர்களும் கட்டாயம் வரவேண்டும் என்றது பள்ளிக்கூட நிர்வாகம். அப்படி வராதவர்களுக்கு பள்ளிக்கூட வருகைப் பதிவேட்டில் ஆப்செண்ட் போட்டார்கள்…. இறுதியாய் என்னைப் பார்த்து “நீ ஏன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறக் கூடாது?” என்று கேட்டார். நான் அதிர்ந்து போனேன்.

View More இயக்குனர் ஸ்ரீதரின் கிறிஸ்தவ நண்பன்

மூவர் முதலிகள் முற்றம்

சைவம், வைணவம் ஏனய சமய சிந்தாந்தங்களும் தாமஸ் அவர்களது சிந்தனையின் விளைவு என்னும் புரட்டு ஆராய்ச்சியை எதிர்த்து ஒரு சிறு வெளியீடை – கும்பகோணத்தில் ‘தை’ மாதத்தில் நடத்த உத்தேசித்துள்ள ஒரு கருத்தரங்கின் முன்னோட்டமாக. சைவ சிந்தாந்தில் ஈடுபாடுள்ள சிலரது முன் முயற்சியில் இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

View More மூவர் முதலிகள் முற்றம்

புனிதர் அல்போன்ஸா ஒரு இனவாதக்குறியீடா?

ஒரு வெள்ளை இனமேன்மை வாத மனம் தான் போப் பதினாறாம் பெனிடிக்ட் *இந்தியாவின்* *முதல்* பெண் புனிதரை பட்டமளித்து அங்கீகரித்ததாகக் கூற முடியும்.. ஏனெனில் இந்தியா ஏற்கனவே அதன் மண்ணில் வளர்ந்த தெய்வீகப் பெண்களான புனிதைகள் பலரைக் கொண்டிருக்கிறது. சொல்லப் போனால், இனம் குறித்த அதீத உணர்ச்சி கிறிஸ்தவ சபையில், குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் அதிகமாக இல்லாதிருந்திருந்தால் அல்போன்ஸா (”இந்தியாவுக்கான” என்றில்லாமல்) கத்தோலிக்க உலகனைத்துக்குமான புனிதையாகக் குறிப்பிடப்பட்டிருப்பார்.

View More புனிதர் அல்போன்ஸா ஒரு இனவாதக்குறியீடா?

ஏற்றுமதி/இறக்குமதி அல்லது அடிமைக்கிறிஸ்தவம்

போரை உருவாக்கி இறையாண்மை குறையும் போது திருச்சபையின் தூதர்கள் நற்சேதியுடன் போய் கதிகலங்கிப்போயிருக்கும் மக்களை மதம் மாற்றம் செய்வது ஒரு சர்வதேச தொழில்நுட்பமாக மாறிப்போயுள்ளது… வாத்திகனின் பணபலம், செல்வாக்கு இங்கு எல்லோரையும் விலைக்கு வாங்கிவிட்டது என்று தெரிகிறது…இதனுடைய ஒரு நீட்சியாகவேதான் தமிழ்ப்பாதிரிகளின் இச்செயல்களை நான் காண்கிறேன். உண்மையான தமிழ்ப்பிடிப்புள்ள ஒரு தமிழன், தமிழின் வேர்களை சொந்த மண்ணில் தேடுவானே தவிர வேற்று மண்ணில் தேடமாட்டான்.. ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்யுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்றமகர்க்கு’ என்று எழுதிய வள்ளுவனை, செய்நன்றி மறந்த தோமையரின் சீடராக்க தமிழ் பற்றுள்ள ஒரு பாதிரியால் எப்படி முடிந்தது?

View More ஏற்றுமதி/இறக்குமதி அல்லது அடிமைக்கிறிஸ்தவம்

மதம் மாற்றாதீர்கள் !

மூலம்: டாக்டர் திருமதி ஹில்டா ராஜா
மொழியாக்கம்: ஸ்ரீநிவாசன் ராஜகோபாலன்
“நான் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவள்தான். எனது புரிதலின்படி கன்வர்ஷன் என்பது வாழ்நாள் முழுவதும் உண்மையைத் தொடர்ந்து தேடும் ஒரு வாழ்க்கைமுறை. மத மாற்றம் என்பது ஒரு தனிப்பட்ட விஷயம், ஒரு தெருக்கூத்தல்ல, எண்ணிக்கையைக் கூட்ட நிகழ்த்தப்படும் ஒரு செயலுமல்ல. மதமாற்றம் என்பது கண்டிப்பாக ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்துக்கு மனிதர்களைக் களவாடும் வேலை அல்லவே அல்ல… அன்னிய நாட்டு நிறுவனங்கள் எதற்காக இவ்வித மதமாற்றத்திற்குப் பண உதவி புரிகின்றன? சர்ச்சுகளுக்கு வரும் அன்னிய நாட்டு பண வரவை நாம் சட்டப் படி தடை செய்து விட்டு, அதற்குப் பிறகு எவ்வளவு மத மாற்றங்கள் நடை பெறுகின்றன என்று தான் பார்க்கலாமே!

View More மதம் மாற்றாதீர்கள் !

வனவாசிப் பழங்குடிகள் இந்துக்களே

ஜவஹர்லால் நேருவின் தோழரான வீரியர் எல்வின் கிறிஸ்தவ மிஷினரி ஆவார். இந்திய வனவாசிகளை மதம் மாற்ற அவர் வந்தார். அவரது தொடக்க காலங்களில் வனவாசிகள் இந்துக்கள் அல்ல என்றும் இந்துமயமாக்கப்படுவதே வனவாசிகளுக்குப் பெரும் தீமை என்றும் அவர் பிரசாரம் செய்து வந்தார். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் வனவாசிகளுடன் வாழ்ந்த பின்னர் அவர் எழுதினார்: “பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் முதன்முதலில் ஆதிகுடிகளுடன் வாழ வந்தபோது அவர்கள் இந்துக்கள் அல்ல எனக் கருதினேன். ஆனால் பத்து ஆண்டுகள் அவர்களைக் குறித்து ஆழமாக ஆராய்ச்சி செய்தபோது நான் கொண்டிருந்த எண்ணம் தவறு என்பது நிரூபணமாகிவிட்டது.”…

View More வனவாசிப் பழங்குடிகள் இந்துக்களே