காலந்தோறும் நரசிங்கம்

பழங்குடி வேர்களிலிருந்து கிளைத்து வீரர் குடித் தெய்வமாக, பக்த ரட்சகனாக அவதரிக்கும் நரசிம்மர் பின்னர் யோகமும் போகமும் ஞானமும் கலந்த தத்துவக் கடவுளாக பேருருக் கொள்கிறார். ஆனால் இந்த நகர்வு ஒன்றை மறுத்து மற்றொன்றுக்குப் போவதல்ல. பண்பாட்டு ரீதியான இணைப்பினாலும், தத்துவச் செழுமையினால் தகவமைக்கப் பட்ட குறியீடுகளின் விகாசத்தினாலும் நிகழும் நகர்வு இது. ஒவ்வொரு முறையும் ஒரு சிற்ப இலக்கண மரபு உருவாகிக் கொண்டிருக்கும்போதே அது மெலிதாக மீறப்பட்டும் விடுகிறது. அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிவிடுகிறது. இந்திய செவ்வியல் கலைகள் மரபுக்கும், மரபு மீறலுக்குமான ஊடாட்டங்களாகவே எப்போதும் இருந்து வந்திருக்கின்றன. இந்த தன்மையே அவற்றை பாரம்பரியப் பெருமை கொண்டதாகவும், அதே சமயம் உயிரோட்டமுள்ளதாகவும் ஆக்குகிறது.

View More காலந்தோறும் நரசிங்கம்

ஞானமெனும் அடர்காட்டில்: பிரகதாரண்யக உபநிஷதம் – 1

அடியே, மனைவி கணவனை விரும்புவதனால் கணவன் அன்பிற்கு உரியவன் ஆவதில்லை. தன்னை (ஆத்மாவை) விரும்புவதாலேயே கணவன் அன்பிற்கு உரியவனாகிறான்… வீணை இசைக்கப் படும்போது அதன் பிரத்யேக அதிர்வுகள் புறத்தே உணரப் படுவதில்லை. அவை வீணையின் நாதத்தில் இணைந்துள்ளன. வீணையைப் பல்வேறு விதமாக இசைக்கும்போது எழும் ஓசைகளும் அவ்வாறே… வானுக்கும் மேலுள்ளதும், பூமிக்கும் கீழுள்ளதும், வானுக்கும் பூமிக்கும் இடையிலுள்ளதும், கடந்தவையும் நிகழ்பவையும், வருபவையும் ஊடும் பாவும் போல விரவியுள்ளதும் ஆகாசம் (வெளி)….

View More ஞானமெனும் அடர்காட்டில்: பிரகதாரண்யக உபநிஷதம் – 1

கம்பனின் சித்திரகூடம்

பெண் யானை இரைத்து இரைத்து மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. இளமையான யானை தான், ஆனால் உண்டாகி இருக்கிறது. களைத்துப் போய் உட்கார்ந்து விட்டது. கூட வரும் ஆண்யானை நறுமணம் கமழும் செந்தேனை துதிக்கையால் தன் துணைக்கு ஊட்டி விடுகிறது… கம்பர் சித்தரித்துக் காட்டும் அடர் கானகத்தில் ஒருவிதமான ஒத்திசைவும் ஒழுங்கும் உள்ளது. கொடிய கானகத்திலும் இராமன் சீதைக்குக் காட்டும் காட்சிகளில் எல்லாம் அன்பின் ததும்பலே வெளிப்படுகிறது. .. குடிசை கட்டி முடித்து நிற்கும் குன்று போர்ந்த உயர்ந்த அந்தத் தோள்களைப் பார்க்கிறான் இராமன். “இது போல எப்போதடா கற்றுக் கொண்டாய் லட்சுமணா?”..

View More கம்பனின் சித்திரகூடம்

நீயே அது – சாந்தோக்ய உபநிஷதம்

அன்பு மகனே, ஒரு மண்கட்டியினால் மண்ணாலானவை அனைத்தும் அறியப் படுகின்றன. மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. மண் மட்டுமே சத்தியம்… உண்ணும் அன்னம் மூன்றாய்ப் பிரிகிறது. அதன் பருண்மை மலமாகிறது. அதன் நடுவுரு ஊனுடம்பாகிறது. நுண்மை மனமாகிறது… விதவிதமான மரங்களிலிருந்து அவற்றின் ரசத்தை எடுத்துச் சேர்த்து ஒரு ரசமாக, தேனாக சமைக்கின்றன தேனீக்கள். அந்த ரசங்களுக்கு நான் இந்த மரத்தின் ரசம், நான் அந்த மரத்தின் ரசம் என்று பகுத்தறியும் விவேகம் இருப்பதில்லை.. அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது…

View More நீயே அது – சாந்தோக்ய உபநிஷதம்

அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 2

அவரது உரைநடை எவ்வகையிலும் அடங்காதது. கவிதை, சங்கீதம், ஓவியம், சிற்பம் எல்லாமாகவும் தோற்றமளிக்க்க் கூடிய மாயத்தைத் தன்னுள் பொதிந்து வைத்திருப்பது… நவீன இலக்கிய பிரதிகளுக்கு இருந்தாக வேண்டிய வரலாற்று பிரக்ஞை, சமூக பிரக்ஞை, கலாசார பிரக்ஞை ஆகியவை லாசரா எழுத்தில் மிகக் குறைவாக இருக்கிறது, சமயங்களில் இல்லாமலே போய்விடுகிறது…கண்கள் பிரகாசிக்க, குறும்புப் புன்னகையுடன் ராமாமிருதம் நம்மைக் கேட்கக் கூடும் – ருஷ்ய புரட்சியும் வியட்நாம் யுத்தமும் புல்லின் மீது படிந்திருந்த பனித்துளியை என்ன செய்தன? அது எம்மாற்றமும் அடைந்ததா?…ஒரு கலைஞர் என்ற வகையில், லா சராவின் இந்த அகங்காரம் நிறைந்த தனிமைக்கு நாம் தலைவணங்கியே ஆக வேண்டும்…

View More அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 2

அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1

இந்தப் பாத்திரங்கள் பிரக்ஞை நிலையில் வெறி பிடித்தது போல நடந்து கொள்வதால் தான், சாதாரண காட்சிகள் நாடகீயமாக ஆகின்றன, காவிய ரூபம் கொள்கின்றன. சாதாரணப் பெண் சன்னதம் வந்த நிலையில் காளியாக மாறுவது போல… கடற்கரை மணலில் கால்பட்ட இடமெல்லாம் சங்கும் சிப்பியும் இடறுவது போல, எழுத்தெங்கும் படிமங்கள் இறைந்து கிடைக்கும் வெளி லாசராவின் எழுத்து… மீண்டும் மீண்டும் ஒருவித லயத்தில் வரும் உச்சாடனங்கள் போன்ற சொற்கள் – மந்திரமாகின்றன… உன்னதமாக்கப் பட்ட காமம் தான் லா.ச.ரா படைப்புகளின் அடிநாதமாக இருக்கிறது. இந்த நிலைக்கு வருவதற்காக தத்தித் தாவி மோதும் முயற்சியே அவரது சிருஷ்டிகர செயல்பாட்டின் பல வடிவங்களும்…

View More அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1

ஈசாவாஸ்ய உபநிஷதம்

பொன்மயமான மூடிக்குள் மறைந்துள்ளது – சத்தியத்தின் முகம். பேணி வளர்ப்போனே, சத்திய இயல்பினர் காண அதைத் திறந்திடுக… அடர் காரிருள் வழிச் சென்றடைவர் அறியாமையில் ஒழுகுவோர் – அதனினும் பெரிய இருளடைவர் அறிவில் ஆழ்ந்தோர்… கடவுள் – உலகம், துறவு – இன்பம், செயல் தரும் பந்தம் – செயலின்மை தரும் முக்தி, ஒன்று – பல, அறிவு – அறியாமை, இவ்வுலகம் – அவ்வுலகம் என்று ஒன்றுக்கொன்று எதிராக உள்ள கருத்தாக்கங்களை… காந்தி பரவசத்துடன் எழுதுகிறார் – எல்லா புனித நூல்களும் தத்துவங்களும் அழிந்து சாம்பலாகி விட்டாலும் கூட’ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ என்ற இந்த ஒரு சுலோகம் இந்துக்களின் நினைவில் எஞ்சியிருந்தால் போதும்…

View More ஈசாவாஸ்ய உபநிஷதம்

உஷை: வைகறைப் பெண்ணின் வனப்புகள்

போய்விட்டனர் முன்னாள்களில் உஷையின் உதயம் கண்ட மானிடர்.. நாம், இன்று வாழும் நாம், அவளது நல்லொளி காண்கிறோம்… வரும் நாள்களில் அவளைக் காண நமது பின்னோர் வருகிறார்கள்.. மகாசக்தியின் பேரியல்பை பெண்மையின் சோதிமுகமாக, புன்முறுவலாக, பெண்மையின் தீண்டலாக, ஸ்பரிசமாக, பெண்ணின் பால்பொழியும் கருணையாகக் கண்டானே ஆதி வேத ரிஷி! அவன் பெரும் ஞானி மட்டுமல்ல, பெருங்கவிஞனும் கூட… வசன கவிதைகளில் பாரதி வேத இலக்கிய உருவகங்களை அற்புதமாக எடுத்தாள்கிறார்… வேத கவிதை உருவகத்தை முழுமையாக உள்வாங்கி முற்றிலும் புதுப் புதுப் படிம வெளிகளுக்கு ஜெயமோகன் எடுத்துச் செல்கிறார்..

View More உஷை: வைகறைப் பெண்ணின் வனப்புகள்

ரிக்வேதத்தின் அக்னி சூக்தங்கள்

ஆலமரத்தைத் தன்னுள் அடக்கிய விதை போல, இந்து ஞான மரபின் வளர்சிதை மாற்றங்களுக்கான கூறுகள் ரிக்வேதத்திலேயே உருவாகத் தொடங்கிவிட்டன… அந்த மாபெரும் ஒரே கல்தான் இந்தக் கோயிலும் அதன் விமானமும் அதன் பிராகாரங்களும்; அதன் சிவலிங்கமும் கூட. அதன் மீது நான் நின்று கொண்டிருக்கிறேன். அதையே வணங்கிக் கொண்டிருக்கிறேன்… அனைத்து இந்தியர்களின் தொல்மூதாதைகளான ரிஷிகள் வளர்த்த அக்னியே வேள்வித் தீயாக, ஆசைத் தீயாக, சக்தித் தீயாக, உயிர்த் தீயாக, அறிவுத் தீயாக, கலைத் தீயாக, யோகத் தீயாக, ஞானச் சுடராக பல்வேறு தோற்றம் கொண்டு வளர்ந்து இன்றும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறது…

View More ரிக்வேதத்தின் அக்னி சூக்தங்கள்

காந்தியின் (கி)ராம தரிசனம்

குண்டு பாய்ந்தவுடனேயே காந்தியின் உயிர் பிரிந்து விட்டது. அவர் வாயிலிருந்து சொற்கள் எவையும் வெளிவரவில்லை… நோயாளிகளுக்கு ராம நாமத்தையும், சில இயற்கை வைத்திய முறைகளையுமே மருந்தாக மருந்துச் சீட்டில் எழுதிக் கொடுத்திருக்கிறார்.. சத்தியத்தின், அகிம்சையின் தரிசனத்தை நாம் கிராமங்களின் எளிமையில் மட்டுமே காண முடியும்… இந்தியாவில் நகரங்களின் வல்லாதிக்கம் நிகழ்கிறது. கிராமங்கள் நொறுக்கி உண்ணப்படுகின்றன. கிராமங்களை உறிஞ்சி நகரங்களை வலுப்படுத்தும் ஓர் அரசியல் இங்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கிராமியமனநிலை என்பதே பிற்போக்குத்தனம்…

View More காந்தியின் (கி)ராம தரிசனம்