அறியும் அறிவே அறிவு – 9

பிராணாயாம வழிகளில் செல்லும் போது நமது அறிவு முடிவான “உள்ள நிலை”யைத் தெரியாதிருப்பதோ, அல்லது அதைத் தேர்ந்தெடுத்துச் செல்லாதிருப்பதோ மிக அபாயகரமானது… ரமணர், “கற்றும் அடங்காரில் கல்லாதாரே உய்ந்தார்” என்பார்… இருக்கும் எல்லாப் பற்றினுள் தேகப் பற்றே ஆழமானதும் விடுதற்கு அரியதுமானதும் ஆகும்.

View More அறியும் அறிவே அறிவு – 9

அறியும் அறிவே அறிவு – 8

மதங்கள் பல விதம். ஆத்மா உண்டென்கிறது ஆஸ்திகம், இல்லை என்கிறது நாஸ்திகம். உருவம் உண்டு என்கிறது சகுண உபாசனா மார்க்கம், நிர்குண உபாசனை ஒன்றே என்பது அத்துவித உண்மை. இரண்டென்பது துவிதம். பலவிதம் என்கிறது விசிஷ்டாத்வைதம். இங்கு அத்துவிதமென்றது மதத்தின் அடிப்படையில் அல்ல. அனுபவ உண்மையே சொல்லப்பட்டது. அத்துவிதம் மதம் அல்ல, அது அனுபவமே.

View More அறியும் அறிவே அறிவு – 8

அறியும் அறிவே அறிவு – 7

தனக்கு வெளியில் உள்ளது அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் வழிகாட்டிகள் ஆகுமே அன்றி, தானே ஆக முடியாது. வேத, உபநிஷத்துகள் அனைத்துமே “அது நீ” போன்ற மகா வாக்கியங்களைக் கூறுகின்றன. அவைகளை, நாம் மறந்து விட்ட நமது இயல்பு நிலையை நமக்கு நினைவூட்டுவது போல எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட வாக்கியங்கள் தியானப் பயிற்சிக்கு உதவலாம். அதைக் கேட்டதும் சீடன் தனக்குள்ளே ஆழ்ந்து “இந்த நான் யார்?”, “இதன் தன்மை என்ன?” என்று விவேகத்துடன் தன்னுள் மூழ்கி ஆத்ம முத்தை அடைய வேண்டிய முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

View More அறியும் அறிவே அறிவு – 7

காங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று

1980-களில் அகாலிகளை அடக்குவதற்காக இந்திரா-ராஜீவ் இருவருமே பிந்திரன்வாலேயை சீக்கியர்களின் தலைவராகத் தட்டிக் கொடுத்து வளர்த்தனர். ராஜீவ் காந்தியால் “சந்த்” எனப் புகழாரம் சூட்டப்பட்ட அதே பிந்திரன்வாலே, பின்னர் பாகிஸ்தானிய உளவு ஸ்தாபனமான ISI -உடன் கைகோர்த்துக்கொண்டு நம் நாட்டின் வரலாற்றிலேயே காணப்படாத பயங்கர வாதத்தை கட்டவிழ்த்து விட்டான். இது தவிர இலங்கையை ஆட்டம் காணச் செய்யும் முறையில் LTTE -யை காங்கிரஸ் அரசு கட்டிக் காத்து உதவியதையும் நாம் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.

View More காங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று

அறியும் அறிவே அறிவு – 6

ஆக அகந்தையின் மூலத்தை அறிய வேண்டுமென்ற உறுதிதான் ஞான விசாரத்தின் உயிர் நாடி. அந்த உறுதி தளராமல் இருக்குமானால், சீடன் வேறு எந்த சாதனையும் செய்யத் தேவை இல்லை. ஆதலால் ஆன்மாவாகிய பிரம்மத்தை மனத்தில் இருத்தி செய்யப்படும் தியானம் துணையாகுமே அன்றி எப்படி மனத்தையே அழிக்கும் சாதனமாகும் என்று கேட்கிறார் ரமணர்.

View More அறியும் அறிவே அறிவு – 6

அறியும் அறிவே அறிவு – 5

சீட்டாட்டத்தின்போது விழும் சீட்டுகள் விதி; அதை வைத்துக்கொண்டு ஆடுபவரின் திறன் மதி என்பார் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்… நாம் மற்ற விலங்கினங்களைவிட இயற்கையில் பலம் இல்லாது உள்ளோம். அறிவே நமது பலம். எதையும் நல்ல முறையிலோ தீய முறையிலோ பயன்படுத்திக் கொள்வது அவரவர்கள் அறிவு முதிர்ச்சியைப் பொருத்து அமைகிறது.

View More அறியும் அறிவே அறிவு – 5

ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி

சோனியா காந்தியைப் போலவே நானும் மேலை நாட்டைச் சேர்ந்தவன், ஒரு கிறிஸ்தவன். சோனியாவைப் போலவே நானும் இந்தியாவில் பல வருடங்களாக வாழ்பவன்… முதலில் காங்கிரஸ் அரசு சாதி அடிப்படையில் இராணுவத்தினரைப் பற்றி ஒரு ஜனத்தொகை கணக்கு எடுத்தது. அது அவர்களிடையே ஒரு பிரிவினை உண்டாக்கவா அல்லது… இந்தியாவுக்கு அயல் நாடுகளிலிருந்து என்ன நன்மைகள் வந்த போதிலும் இந்து சமயத்தின் பழமையும், பெருமையும் மிக்க ஆன்மீக உணர்வுகளே உலகளவில் இந்தியாவின் தனித் தன்மைக்கு கைகொடுத்திருக்கிறது…(மூலம்: ஜான் மெக்லிதான்)

View More ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி

அறியும் அறிவே அறிவு – 4

ரமணரின் “நான் ஆன்மாதான்” என்று மதுரையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், பிற்காலத்தில் அதைப்பற்றி “அருணாச்சல அஷ்டக”த்தில் அவரே எழுதியுள்ளதையும் பாருங்கள். முதல் செய்யுளில், “அருணாச்சலம் எனக் கேட்டதும், அதுதான் திருவண்ணாமலை என ஒருவர் சொல்லியும், அது ஏதோ எல்லாவற்றையும் விட மிகப் பெரியது என்று என் புத்தியில் தோன்றிக்கொண்டு இருந்தது. அதன் உண்மைப் பொருளை நான் அறியவில்லை. என் அறிவை அது மயக்கி, என்னை அதன் அருகினில் ஈர்க்க நானும் வந்த போது அது அசலமாய் இருக்கக் கண்டேன்” என்கிறார்.

View More அறியும் அறிவே அறிவு – 4

அறியும் அறிவே அறிவு – 3

அறிவில் அறியாமை கலந்திருக்கிறது. அறியாமையில் அறிவு கலந்திருக்கிறது. அறியாமையில் அறிவின் கலப்பு இல்லையென்றால், தெரியவில்லை என்று (கூடச்) சொல்லமுடியாது [..] இது பக்தி வழி என்றால், அது ஞான வழி என்றும், இரண்டும் ஒரே இடத்திற்கு சாதகனை இட்டுச் செல்கிறது என்றுதானே அர்த்தம்? [..] மெய்யான ஞானத்தை விட்டு விதவிதமாகத் தோன்றும் உலக ஞானம் தனித்து நில்லாது. (ஆனாலும்) உலகம் தோன்றும்போது ஆத்மா தோன்றாது. ஆத்மா தோன்றும்போது உலகம் தோன்றாது [..]

View More அறியும் அறிவே அறிவு – 3

அறியும் அறிவே அறிவு – 2

பார்ப்பவனின் மனதும் காட்சியின் ஒரு பகுதியே… உலகத்தின் இயல்பை ஆராய்வதை விட்டு, இந்த உலகத்தைக் காணும் தான் யார், தனது தன்மை என்ன, தனது எல்லா நிலைகளிலும் உலகம் இப்படித்தான் இருக்கிறதா, அல்லது உலகம் என்பது உண்மையிலேயே இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்தாலாவது பயன் இருக்கும்.

View More அறியும் அறிவே அறிவு – 2