தாமஸ் பெய்ன் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர், சிந்தனையாளர். இவர் மதங்களுக்கு எதிரானவர் என்பது பொதுவான கருத்து, ஆனால் இறைமறுப்பாளர் இல்லை. எனில், அவர் எதிர்த்தது எதை? அவர் ஏற்க விரும்பிய இறைவன், யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதநூல்களில் விவரிக்கப்படும் இறைவன் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தாமஸ் பெய்ன் ஹிந்து தர்மத்தைப் பற்றி எழுதியதாவோ, அதுபற்றிய அறிவு அவருக்கு ஏற்பட்டதாகவோ தெரியவில்லை. ஒருவேளை, ஹிந்து தர்மத்தின் மெய்யியல் கொள்கைகளை அவர் படித்திருந்தால், நிச்சயமாக அவர் அதனை ஒப்புக்கொண்டு இருப்பார் என்று தோன்றுகிறது…
View More ஆபிரகாமிய மதங்களும் ஆன்மீகமும்Category: விவாதம்
விவாதங்கள், உரையாடல்கள், கண்டனங்கள், எதிர்வினைகள்..
ஆரியர் படையெடுப்பின் சுவடுகள் இன்னமும் இல்லை: கோயன்ராட் எல்ஸ்ட் நூலை முன்வைத்து
டாக்டர் கோயன்ராட் எல்ஸ்ட் மிகவும் ஆபத்தான அறிஞர். இடதுசாரிகள் அவர்மீது வன்மத்தைப் பொழிகின்றர் எனில், சில இந்து ஆசாரவாதிகளுக்கும், சமூகவளைதளக் காவிகளுக்கும் கூட அவரை ஒப்புகொள்வதில் சங்கடம் உள்ளது இந்த சலசலப்புகளைத் தாண்டி, அவரது வரலாற்று நூல்கள் காலத்தை வென்று நிற்கும்.. மனுஸ்ம்ரிதி ஒரு “ஜாதிய அறிக்கை” கிடையாது. மனுவின் பார்வை மிகவும் விரிவானது, அதே சமயம் முரண்கள் நிறைந்தது. வர்ணக்கலப்பு விஷயத்தில் அறநெறிப் பார்வையும் உள்ளது.. குதிரையின் இருப்பு ஹரப்பா நாகரீகத்தில் இன்று தொல்லியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதைவைத்து இந்துத்துவ சார்புள்ள வரலாற்று அறிஞர்கள் மீது மோசமான, கீழ்த்தரமான அவமதிப்புகள் நிகழ்ந்தன… வள்ளுவர்கள் பிராமணர்கள் போலவே கோவிலில் பணியாற்றினார்கள் என்று தெரிகிறது..
View More ஆரியர் படையெடுப்பின் சுவடுகள் இன்னமும் இல்லை: கோயன்ராட் எல்ஸ்ட் நூலை முன்வைத்துஆங்கிலேயர் வருகைக்கு முன்பு நமது கல்விமுறை எப்படி இருந்தது
சோழர்காலத்தில் மக்களின் கல்வித்தரம் மேம்பட்டிருந்ததை இந்த கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. அதோடு பிராமணர்களுக்கு மட்டும்தான் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்று கதைப்போருக்கு தரம்பாலின் அழகிய மரம் எனும் நூலானது பெருத்த அடியை தருகிறது. சங்ககாலத்திலேயே 450 க்கும் மேற்பட்ட புலவர்கள் இருந்தார்கள் – முழுப்பட்டியலைக் கீழே கொடுத்திருக்கிறேன்.. இதில் ஆங்கிலேயன் வந்துதான் நமக்கு கல்வி தந்தான், திராவிட இயக்கங்கள் வந்துதான் கல்வி தந்தார்கள் என்பதுபோன்ற வெட்டி விளம்பரங்களை இந்த அறிவார்ந்த தமிழ் சமூகம் எப்படி ஏற்கிறது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது…
View More ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு நமது கல்விமுறை எப்படி இருந்ததுதமிழகத்துக்கு நயவஞ்சகம் இழைத்தாரா நரேந்திர மோடி?
திமுக மற்றும் அதன் ஆதரவு ஊடகங்கள் திட்டமிட்டுப் பரப்பும் காழ்ப்புணர்வைத் தாண்டி, தமிழர்கள் பிரதமர் மோதி மீது வெறுப்பும் காழ்ப்பும் கொள்வது நியாயம்தானா? அதற்கான ஏதேனும் குன்றிமணி அளவுக்கான காரணமாவது உள்ளனவா? உண்மை நிலவரம் என்ன?.. நன்றி மறப்பது நன்றன்று. உப்பிட்டவரை உள்ளளவு நினை என்றெல்லாம் தமிழர்கள் சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டவர்கள். ஆனால் அதைக் காற்றில் பறக்க விட்டு தமிழகத்தின் மீது பாசத்துடனும் அன்புடனும் அக்கறையுடனும் செயல்பட்டு வரும் ஊழல் கறை படியாத அப்பழுக்கற்ற பாரதப் பிரதமரை அவமதிப்பது என்பது….
View More தமிழகத்துக்கு நயவஞ்சகம் இழைத்தாரா நரேந்திர மோடி?கண்ணனின் கட்டளையற்ற கட்டளையும் நியோ-ஹிந்துத்துவமும்
சுவாமி விவேகானந்தர் உபநிஷதங்களின் சாரத்தை, வேதாந்தத்தின் மகத்துவத்தை மேலைநாடுகளில் முழங்கினார். இதைத் தாங்கொணாத மிஷனரிகள் “இந்தியாவில் இருக்கும் உண்மையான ஹிந்துமதம் பற்றி இவர் பேசவில்லை. மேலைநாட்டு தத்துவங்களைப் படித்துவிட்டு, அதையொட்டி, இவை ஏற்கனவே ஹிந்துமதத்தில் உள்ளன என்று நம்மை ஏமாற்றுகிறார்” என்று பிரசாரம் செய்தனர். பின்பு பால் ஹேக்கர் முதலானோர் தமது நூல்களில் இதனை வளர்த்தெடுத்தனர். சேவை, கர்மயோகம் போன்ற கருத்துக்கள் அனைத்தும் நமது சனாதன தர்மத்தின் அடிப்படையில் என்றும் இருப்பவை. ஆனால் இவற்றை நாம் கிறிஸ்தவ மதத்தில் இருந்து கடன் வாங்கினோம். அதனால் தான் பழைய ஹிந்து மதத்தை விட்டுவிட்டு, நியோ-ஹிந்துமதம் எனும் பொய் உருவானது என்பது பல மிஷனரிகளின் வாதம். இதுதான் நியோ-ஹிந்து எனும் கருத்து உருவான இடம்.. ஆனால் இப்போது, சில ஆசாரவாதிகள் காலத்துக்கு ஏற்ப சிந்தனை செய்யும் அனைத்து ஹிந்துத்துவவாதிகளையும் ‘நியோ’ என்று பட்டம் கொடுத்து ஏசுகிறார்கள். நம்மவர்களுக்கு இந்த விபரீதப்பொருள் தெரியுமா என்று எனக்குச் சந்தேகம்தான்… “பழமையை விடமுடியாமல், அதற்காக நிதர்சனத்தைத் தியாகம் செய்யும் அடிப்படைவாதிகள்” என்ற தோற்றம் ஹிந்து தர்மத்துக்குப் பொருந்தாத ஒன்று. அதனைப் பொருந்துமாறு செய்யும் வேலையை ஆசாரவாதிகள் பார்கின்றனர்…
View More கண்ணனின் கட்டளையற்ற கட்டளையும் நியோ-ஹிந்துத்துவமும்புதிய மரபணு ஆய்வு ஆரியர் படையெடுப்பை நிரூபித்துவிட்டதா? கொஞ்சம் பொறுங்கள் – ஸ்ரீகாந்த் தலகேரி
மரபணுவியலை வைத்து, கலாசார நகர்வைத் தீர்மானிப்பது எடுத்த எடுப்பிலேயே பிழையான முயற்சி… ரிக்வேதம்தான் மிகப்பழைய இந்தோ-ஆரிய நூல். ஹரப்பாவின் மொழி இந்தோ-ஆரிய மொழி கிடையாது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அதைவிட, அது திராவிட மொழி என்பதற்கு (அப்படி யாரேனும் சொல்லத் துணிந்தால்) அடிப்படைச் சான்றுகூடக் கிடையாது… “இந்தியாவில் இருந்து வெளியே சென்ற மக்கள் இந்தோ-ஐரோப்பிய மொழி, கலாசார ஒற்றுமைக்குக் காரணமாக இருக்கலாம்” என்பதுதான் “இந்தியாவிலிருந்து வெளிப்போதல்” கொள்கை (OIT). ஆனால், பல ஐரோப்பிய, அமேரிக்க இந்தியவிலாளர்கள் படையெடுப்புக் கொள்கையை கைவிடத் தயாராக இல்லை…
View More புதிய மரபணு ஆய்வு ஆரியர் படையெடுப்பை நிரூபித்துவிட்டதா? கொஞ்சம் பொறுங்கள் – ஸ்ரீகாந்த் தலகேரிஇந்துத்துவ அறிவியக்கம் என்று ஒன்று இருக்கிறதா?
‘ஒரு ரொமிலா தாப்பரை உருவாக்கியிருக்கிறீர்களா’ என கொக்கரிக்கிறார்கள் இடதுசாரிகள். இல்லை என்பதுதான் சந்தோசமான விசயம்.. அரசு அதிகார உதவியுடன் வெளிநாட்டு பல்கலைக்கு சென்று இந்திய வரலாற்றைப் படித்து அதை காலனிய-மார்க்சிய நோக்கில் மட்டுமே அணுகி தன்னை ஒரு அதிகார மையமாக மாற்றிய ஒரு ஆளுமையை இந்துத்துவம் உருவாக்கவில்லை. ஆனால் பீம்பெதகா குகைகளை கண்டுபிடித்து அவற்றுக்கு உலக குகையோவியங்களின் தொல்வரலாற்றில் சரியான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த விஷ்ணு வகங்கர் ஆர்.எஸ்.எஸ்.காரர். ஆசியாவின் மிகச் சிறந்த தொல்லியலாளர் என சர்வதேச தொல்லியலாளர்களால் அறியப்பட்ட பிரஜ் பஸி லால் இந்துத்துவர்… இந்துத்துவர்கள் உருவாக்கும் சிந்தனைகள் என்பது அவர்களின் வாழ்க்கைகளேதான். ‘களப்பணி’, ‘அறிவியக்கம்’ என்பது போன்ற பாகுபாடுகளை கேட்கும் போது துணுக்குற செய்கிறது. பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவும் தத்தோபந்த் தெங்கடிஜியும் தாணுலிங்க நாடாரும் சுவாமி சித்பவானந்தரும் செமினார் சிந்தனையாளர்களல்ல. அவர்களின் வாழ்க்கைக்கும் அவர்கள் சிந்தனைக்கும் கோடு கிழிக்க முடியாது…
View More இந்துத்துவ அறிவியக்கம் என்று ஒன்று இருக்கிறதா?திருக்குறளும் மஞ்ச்சூரியனும்
திருவள்ளுவர் தடாலென்று வானத்திலிருந்து குதித்து தடாலடியாக 1330 குறள் எழுதிவிடவில்லை. அவரது பண்பாட்டில், சூழலில் ரிஷிகளும் முனிவர்களும் உபதேசித்து, வாழ்ந்து ஊறிய ஞானத்தைத் தான் குறளாகப் படைத்தார். ஆனால், இந்த உண்மையைச் சொன்னால் தமிழ்பேசும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், கம்யூனிஸ்டு ஆசாமிகளும் அதைக் கற்க விரும்ப மாட்டார்கள், எதிர்ப்பார்கள். எனவே, திராவிட இயக்கம் உருவாக்கிய அந்தப் பொய் அப்படியே நீடிக்கட்டுமே. தமிழகம் “அமைதிப் பூங்காவா” இருக்கவேண்டாமா? – இப்படியும் ஒரு தரப்பு…
View More திருக்குறளும் மஞ்ச்சூரியனும்தமிழ்க்கடவுள், ஹிந்திக்கடவுள்? – திருமாவுக்கு ஒரு பதிலடி
ஆரிய கடவுள் வேறு, திராவிட கடவுள் வேறு என்றெல்லாம் சப்பரம் இழுத்துக் கொண்டிருந்த கோமாளி கூத்து காலமெல்லாம் முடிந்துவிட்டது. இன்று எல்லாமே வெளிப்படையாக இருக்கிறது. சங்க இலக்கியங்களை விரும்புகிற யாரும் அதை திறந்து வாசிக்க முடியும்… நக்கீரர் பாடிய புறநானூறு (பாடல் 56) தெளிவாக சிவன், திருமால், முருகன் ஆகியோரது தெய்வ அடையாளங்களைக் கூறுகிறது. இதற்கும் இன்று நாம் கோவில்களில் வணங்கும் கடவுளர்களுக்கும் என்ன வித்தியாசம்? இந்தியா முழுக்க இதைத்தான் ஹிந்து கடவுள் என்று வழிபாடுகிறார்கள்…..
View More தமிழ்க்கடவுள், ஹிந்திக்கடவுள்? – திருமாவுக்கு ஒரு பதிலடிநமது கல்வித் துறையில் பத்து குறைகள்
அண்மையில் ஐடி நிறுவனம் ஒன்று, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு புரோகிராமர் வேலை என்று விளம்பரம் செய்திருந்தார்கள். அதில் ஆச்சரியமான உண்மை ஒன்று இருக்கிறது. கணினித் துறையில் புரோகிராமராக நுழைய அந்தக் கல்வியே போதும் என்பதுதான்… தரமற்ற கல்வி ஒரு சுமை. இங்கே கல்வி என்பது பாடப்புத்தகம், அதனைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் இரண்டையும் குறிக்கிறது. இந்தக் கல்விமுறை ஒரு மாணவனுக்குச் சிந்திக்கும் திறனையோ, தன்னம்பிக்கையையோ, தேர்வில் வெற்றி பெற வேண்டிய உழைப்பையோ ஊக்கப்படுத்துவதாகவே இல்லை… ஒரு மாணவர் தனக்கு எந்தக் கல்வித் துறையில் ஆர்வம் என்று எண்ணிப் பார்த்து அதற்காகவெல்லாம் உழைப்பது இல்லை. அப்படி ஒரு குறிக்கோளை அவருக்கு யாரும் சொல்லித் தருவதும் இல்லை, ஊக்கப்படுத்துவதும் இல்லை, தானாகக் கண்டடைவதும் இல்லை. எது சுலபம், எதில் ஏமாற்றலாம் என்பதை நோக்கியே மாணவர்களும் இருக்கிறார்கள்…
View More நமது கல்வித் துறையில் பத்து குறைகள்