கும்பமேளாவில் புனித நீராடிய அந்தப் பெண்கள் எல்லா வகையிலும் சமூக மீட்சிக்கான முன்னுதாரணங்கள். பதினைந்தாண்டுகள் முன்பு வரை மனிதக் கழிவை அகற்றும் பணியில் தள்ளப் பட்டிருந்தவர்கள் அவர்கள். கோயில்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப் படவில்லை. அவர்களுக்கான மதச் சடங்குகளை நடத்தி வைக்க யாரும் முன்வரவில்லை… சுலப் அமைப்பு அவர்கள் விடுதலைக்கு வழி செய்தது. அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களையும், கல்வி கற்பதற்கான வாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது… உண்மையில் தூய்மையடைய வேண்டியிருந்ததது அந்த சகோதரிகள் அல்ல. அவர்களது மீட்சியின் மூலம் நூற்றாண்டுகளாக இந்து சமுதாயத்தைப் பீடித்திருக்கும் சாதிய அடக்குமுறைகள், சாதியம் விளைவித்த வெறித்தனங்கள் வக்கிர மலங்கள்….
View More கும்பமேளாவில் தலித் சகோதரிகள்Category: வழிகாட்டிகள்
குருமார்கள், மகான்கள், வீரர்கள், பெண்மணிகள், சமூக சீர்திருத்தவாதிகள், அறிஞர்கள், அறிவியலாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான இந்து ஆன்றோர்களையும் பற்றி..
போதிசத்வரின் இந்துத்துவம் – 1
பாபா சாகேப் அம்பேத்கரை ஒரு இந்துத்துவ சார்புடையவராக சொல்வது போல கடும் கண்டனத்துக்கு ஆளாகக் கூடிய விசயம் வேறெதுவும் ‘மதச்சார்பற்ற’ இந்தியாவில் இருக்க முடியாது… அந்த கண்டனங்களுக்கு அப்பால், அம்பேத்கரின் ஒட்டுமொத்த சமூக-தத்துவ சிந்தனைகளின் அடிப்படையில், அவரது மனமண்டலத்தில் இந்துத்துவம் குறித்த கருத்துகள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எப்படி அறிந்து கொள்ளப்பட்டன என்பதைக் காண்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்… ’பிரதியெடுக்க இயலாத பண்பாட்டு ஒற்றுமை’ என பாரதத்தின் பண்பாட்டு ஒருமையை அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.. இந்து சீர்திருத்த போராளிகளான வீர சாவர்க்கர், சுவாமி சிரத்தானந்தர் ஆகியோரிடம் மிக்க அன்பும் வெளிப்படையாக பாராட்டும் மனமும் கொண்டிருந்தார் பாபா சாகேப்…. ”இஸ்லாமுக்கோ கிறிஸ்தவத்துக்கோ மதம் மாறுவது ஒடுக்கப்பட்ட மக்களை தேசியத்தன்மை இழக்க வைத்துவிடும்” என்கிறார். அம்பேத்கர் ஹிந்து சிவில் சட்டத்தின் வரைவில் இந்துக்களை வரையறை செய்யும் போது வீர சாவர்க்கரின் வரையறையின் தாக்கத்தையே அதில் காண்கிறோம்…
View More போதிசத்வரின் இந்துத்துவம் – 1[பாகம் 23] இறை உறவாகிய இன்ப உறவு
அடியவர்க்கும் ஆண்டவனுக்கும் என்றென்றும் அறாத உறவு இருந்து வருகிறது.
பாரில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் என்று வீறுகொண்டு முழங்குவோரும் பரிபூரணனுக்கு அடிமை செய்ய முந்துகின்றனர். நாமார்க்கும் குடியல்லோம் என்று இறுமாந்து பேசும் நாவரசர் பெருமானும் இறைவன் முன் மீளா ஆளாகி அடிமைப்பட்டு நிற்கிறார். இவ்வாறு அனைத்துயிர்களையும் பிணிக்கும் பேராற்றல் ஒன்று நின்று நிலவி நம்மை உய்யக் கொள்ளுகிறது. அத்தகைய பேராற்றலுக்கும் நமக்கும் உள்ள உறவே இனிய உறவாக, மெய்யான உறவாக அமைகிறது. பிற உறவனைத்தும் கண்மயக்காய் ஒழியும் பொய்த்தன்மையவே.
ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்
இருபதாம் நூற்றாண்டிலும், தாழ்த்தப் பட்டவர்களிடையே ஆன்மீக ஞானிகள் உருவாக முடியும் என்பதை உலகிற்கு காட்டியவர் சுவாமி சகஜானந்தர். உயர்சாதி இந்துக்களும் வெள்ளையர்களும் தாழ்த்தப்பட்டவர்களின் மனதில் பதியும் அளவுக்கு எதிர் பிரச்சாரத்தை செய்த சூழலிலும், அவர்கள் இந்துக்களே என்பதை ஆணித்தரமாக நிரூபித்தவர்… எட்டாம் வகுப்பை தாண்டாத சுவாமிகள் தமிழிலும், வடமொழியிலும் மிக்க புலமை பெற்றிருந்தார்… 1959 வரை சிதம்பரம் தனித் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும் செயல்பட்டார்…. கோயில் நிலங்களை ஏழைகளுக்குக் கொடுப்பது குறித்தும், தாழ்த்தப் பட்டவர்கள் பெயரால் கிறிஸ்தவ மிஷன்களுக்கு அரசு எந்த நிதி உதவியும் வழங்கக் கூடாது என்றும் சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் புரட்சிகரமானவை… தமிழகத்தின் மாபெரும் தலித் இயக்க முன்னோடி, இந்து சமுதாய சிற்பி சுவாமி சகஜானந்தர் குறித்த விரிவான கட்டுரை இது…
View More ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்நரேந்திரர் வழியில் நாளைய இந்தியா
எனது கனவு பதவியோ அதிகாரமோ அல்ல, பாரதத்தை மீண்டும் உலகின் குருவாக ஆக்கிட வேண்டும் என்ற சுவாமிஜியின் கனவே என் கனவும்… விவேகானந்தரை வைத்து மோடி அரசியல் செய்கிறார் என்று புலம்புகிறார்கள் ஒரு சாரார். அதில் என்ன தவறு?…. கடந்த பத்தாண்டுகளில் 80,000 புதிய வகுப்பறைகளையும், 22000 கம்ப்யூட்டர் பரிசோதனை சாலைகளையும் அரசுப் பள்ளிகளில் குஜராத் மாநில அரசு நிறுவியுள்ளது. ..காங்கிரஸ் காரர்கள் நரேந்திர மோடி மீது வைக்கும் அதிக பட்ச ஊழல் ’குற்றச் சாட்டு’ அவரிடம் 200க்கும் மேற்பட்ட ’குர்தா’க்கள் இருக்கின்றன என்பது தான்… அம்மாநில உழவர்களின் பூரித்த முகங்களும், தரிசு நிலமாகக் காய்ந்து கிடந்த கட்ச் பாலைவனம் முழுதும் இன்று சாலைகளின் இருமருங்கிலும் அலையடிக்கும் பசுமையுமே…
View More நரேந்திரர் வழியில் நாளைய இந்தியாமானனீய ஸ்ரீ அஷோக் சிங்கல்ஜியும் மனு ஸ்மிருதியும்
விஷ்வ ஹிந்து பரிஷத் அகில உலகத் தலைவர் மானனீய ஸ்ரீ அஷோக் சிங்கல்ஜியின் அறிவிப்பு
View More மானனீய ஸ்ரீ அஷோக் சிங்கல்ஜியும் மனு ஸ்மிருதியும்[பாகம் 18] சித்பவானந்தரின் சிந்தனைகள்- அடைக்காத தாழ், கல்வியில் ஆச்ரமவழி
தாயிடம் பிடிவாதம் செய்து பக்ஷணம் பெற்ற பாலனைப் போலப் பெருமிதத்துடன் கிரீஷர் அன்னையைப் பணிந்து திரும்பினர். அன்னையின் அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!… ஐந்து வயதுக்குப் பிறகு இந்தியச் சிறுவன் ஒருவனுக்கு ஆச்ரம வாழ்க்கை ஆரம்பிக்கிறது… தொழில் புரியவும், செல்வம் திரட்டவும் தெரியாத குடும்பி எந்த ஆச்ரமத்துக்கும் ஏற்றவனல்லன்… ஆச்ரம வாழ்க்கையில் தொழில் புரிதற்கும் திரவியம் தேடுதற்கும் இடமுண்டு என்றாலும், போட்டி போடுதற்கு அதில் இடமில்லை… திரண்ட வெண்ணெய் தண்ணீரில் கலங்காதிருப்பது போன்று, ஆச்ரமப் பயிற்சியில் ஊறியவன், தீயவர்களுக்கிடையில் கெடாதிருப்பான்…
View More [பாகம் 18] சித்பவானந்தரின் சிந்தனைகள்- அடைக்காத தாழ், கல்வியில் ஆச்ரமவழிஅஞ்சலி: ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கு.சி.சுதர்சன்ஜி
வாழ்வே தவமாக தேச நலனுக்கும், இந்து ஒற்றுமைக்கும் பாடுபட்ட திரு கு.சி.சுதர்ஷன் அவர்களின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி… தனது 9வது வயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகராக இருந்து வந்தவர். தனது பட்டப்படிப்பினை முடித்துவிட்டு வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் சமுதாயப் பணிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். கௌஹாத்தியை மையமாகக் கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். மிகச் சிறந்த சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர். உண்மையில் அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகமாகவே இருந்துவந்தார்….
View More அஞ்சலி: ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கு.சி.சுதர்சன்ஜிமகாகவி பாரதியின் புனித நினைவில்…
அன்று எங்கள் ஊர் வாசகசாலையில் ஆண்டு விழா. தலைவர் பாரதி. மூன்று மணி நேரம் பண்டிதர்களின் மூச்சு முட்டும் முழக்கடித் தமிழ். அது வரையில் மேடையில் அமர்ந்திருந்த பாரதி ஆடவில்லை, அசையவில்லை. சுவாசம் விட்டாரோ என்னவோ, அதுகூட சந்தேகம். ஏதோ ஒரு சிற்பி செதுக்கிய ருத்ரன் சிலை அமர்ந்திருப்பது போலத் தோன்றியது. மீசையை முறுக்கும் போது அன்றி, வேறு யாதொரு சலனமும் கிடையாது. பேசுவதற்கு அவருடைய முறை வந்தது. எழுந்தார் – எழுந்தார் என்பது தப்பு; குதித்தெழுந்தார், அவர் அமர்ந்திருந்த நாற்காலி உருண்டது. மேஜை முன்னே தாவித் தயங்கியது. அவருடைய பேச்சு? அதில் வாசக சாலையைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கிடையாது. பண்டிதர்களின் மூன்று மணி நேரப் பிரசங்கங்களுக்கு மூன்று நிமிஷங்கள் முடிவுரைகூட இல்லை…
View More மகாகவி பாரதியின் புனித நினைவில்…[பாகம் 17] சித்பவானந்தரின் சிந்தனைகள்- பற்றுவிடுதல்
இறையுணர்வு என்பது அனைத்தையும் வெறுத்து அகல்வது என்று ஆகாது. உலகுடன் ஒன்றி நின்று அனைத்துயிர்களும் இறைவடிவாக இலங்கும் உண்மையைத் தெரிந்து, அவற்றினிடத்தன்பு கொண்டு, எல்லாம் இறைமயம், இன்பமயம் என்று கண்டு இறைவனுக்கு ஆட்பட்டு வாழ்கின்ற எளிய வாழ்விலும் இறையுணர்வு கைகூடப் பெறலாம். எனவே அகத்துறவே இறையுணர்விற்கு அடிப்படையானது என்பது தெளிவாகின்றது. ‘யான்’, ‘எனது’ என்று நம்மையறியாமலே நம்மிடத்து ஓங்கி வளர்ந்துள்ள செருக்குணர்வு ஒன்றைனையே நாம் வேருடன் களைய வேண்டும்… தோரோ, எமர்ஸன், விட்மன் முதலான அமெரிக்க அறிஞர்தம் கருத்துகளை இவண் எடுத்துரைப்பது நம் இந்து சமயத்தின் பெருமையைக் காட்டுவதற்காக அன்று ; எந்நாட்டவராயினும், எம்மதத்தைச் சார்ந்தவராயினும் அடிப்படையான தத்துவக் கருத்துகள்…
View More [பாகம் 17] சித்பவானந்தரின் சிந்தனைகள்- பற்றுவிடுதல்