எனக்கு மிகவும் பிடித்த முதல் கவிஞர் அழ.வள்ளியப்பா தான். அவர் பாடல்கள் தொகுப்புகளை படித்தால் ஒன்று தெரியும். அவருக்கு கண்ணனிடம் அலாதி அன்பு. கண்ணனை பரம்பொருளாக, தோழனாக, கீதை அளித்த நல்லாசிரியனாக குழந்தை பருவத்தில் நமக்குள் கோவில் கொள்ள செய்தவர்களில் அழ.வள்ளியப்பா முக்கியமானவர். முதன்மையானவர்… அவரது சில அற்புதமான கண்ணன் பாட்டுக்கள் அவை புத்தகத்தில் வெளிவந்த அதே வடிவில் கீழே..
View More அழ. வள்ளியப்பாவின் கண்ணன் பாட்டுக்கள்Category: சிறுவர்
மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்
இக்கதைமுறையை மீட்டெடுப்பதும் இவை போன்ற கதைகளை மீண்டும் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் நம் பழம் தலைமுறையையும் அவர்களது மதிப்பீடுகளையும் மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன். மேலைநாட்டில் எழுதப்படும் கிறித்துவ சார்பான புராண/மாயாஜாலக் கதைகள் கொண்டாடப்படுகின்றன. நம் ஊரிலும் அதே கதைகளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதுவே நம் மரபான கதைகள் என்றால் இவர்கள் இன்னொரு நிலைப்பாட்டுக்குப் போய்விடுகிறார்கள். இந்த இரட்டை நிலைப்பாட்டை முதலில் நாம் புரிந்துகொண்டால்தான் இக்கதைகளுக்கு மீண்டு வரமுடியும். அதுவே இக்கதைகளின் நோக்கம்… என் மகனுக்கும் மகளுக்கும் என் அண்ணாவின் குழந்தைகளுக்கும் பற்பல கதைகளைச் சொல்லி இருக்கிறேன். அவர்கள் விழிவிரியக் கேட்பதைப் பார்ப்பதே பேரானந்தம். அதே பேரானந்தத்தை இக்கதைகளைப் படிக்கும் சிறுவர்களும் அடையவேண்டும் என்பதே என் ஆசை. அந்த ஆசைக்கு நியாயத்தை இக்கதைகளில் செய்திருக்கிறேன் என்றே நம்புகிறேன்…
View More மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்தென்புலத்தார் திரும்பிவரும் நாளில் – கோகோ (Coco) திரைப்படம்
எள்ளுப்பாட்டனார் எர்னெஸ்டோவின் நினைவிடத்தில் நுழைந்து அவர் சமாதி அறையில் மாட்டி வைத்திருக்கும் கிடாரை உருவி எடுக்கையில் தடுமாறி விழுகிறான் மிகைல். அந்தக் கணத்தில் தென்புலத்தார் உலகம் திறந்து வழிவிட, யார் கண்களுக்கும் தென்படாமல், யாதும் சுவடுபடாமல் அவ்வுலகில் நுழைகிறான்.. டிஸ்னி படங்களில் நாம் கண்டுவந்த பாகன்மார் கதைகளை, அவர்தம் ஆதார நமபிக்கைகளை, தொன்மங்களை, கோகோ (Coco) என்ற இந்த ஆண்டின் ஆஸ்கார் விருது வென்றிருக்கும் திரைப்படம் மிக வெளிப்படையாகவே சித்தரித்திருக்கிறது. சாதலை எண்ணி அஞ்ச வேண்டியதில்லை என்பது இந்தப்படத்தின் முக்கியச் செய்தி…
View More தென்புலத்தார் திரும்பிவரும் நாளில் – கோகோ (Coco) திரைப்படம்திருவள்ளுவர் ஜெயந்தி [நாடகம்]
சிறுவன் அவர் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான். வகுப்பறையில் இருக்கும் அனைவருமே வள்ளுவரைக் கண்டு அதிசயித்து நிற்கிறார்கள். மடமடவென குழந்தைகளும் ஐயனை வணங்கி ஆசி பெறுகின்றன. ஒன்றிரண்டு பெரிய வகுப்பு மாணவர்கள் மட்டும் கைகளைக் கட்டியபடி தள்ளி நின்று பார்க்கிறார்கள்… இந்த முரண் என்பவை வாழ்க்கையின், உயிர்களின், உலகின் ஆதார அம்சம். மானுக்குப் புலி முரண்… பூவுக்கு முள் முரண்…நீருக்கு நெருப்பு முரண்… இரவுக்குப் பகல் முரண்… சூரியனுக்கு நிலவு முரண்… உலகம் பெரும் ஒத்திசைவால் ஆனது… அதுபோலவே முரண்களாலும் ஆனது… அறங்கள் முரண்படவில்லை… இரவையும் பகலையும் போல் இணை பாதையில் செல்கின்றன அருகருகே அகலாது அணுகாது… நல்லது ஐயனே… இப்போது லேசாகப் புரிகிறது…
View More திருவள்ளுவர் ஜெயந்தி [நாடகம்]அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார் சதுர்த்தி பிரம்மோத்சவம்
ஊர்திக்குமுன்னே பலர் முழக்கமிட்டபடி ஆனந்தக்கூத் தாடியவாறே முன்செல்ல, “ஊர்தியைப் பார்த்தவாறு நாம் ஏன் செல்லவேண்டும்? நமது ஆடும் அடியார்களின் ஆட்டத்தை இரசிப்போம்,” என்பதுபோல, பேருருவப் பிள்ளையார் செல்லும் திசையை நோக்காது, தன்னைத் தொடர்பவர்களைக் கண்ணுற்றவாறே அமர்ந்திருந்தது தனிச்சிறப்பாக அமைந்தது. ஊர்வலம் முடிந்ததும், பேருருவப் பிள்ளையார் தனது வழக்கமான இடத்திற்குச் சென்றார். அவரை மீண்டும் காண இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டும் என்பதால், அன்றுமட்டும், தன்னிடத்தில் அடியார்கள் தன்னைக் காணட்டும் என்பதுபோல அவரது இல்லம் அன்றுமட்டும் திறந்துவைக்கப்பட்டது
View More அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார் சதுர்த்தி பிரம்மோத்சவம்ஆட்டிஸம்: தேவை பரிதாபமல்ல, முழுமனதுடன் ஏற்பு
அந்தப் பெண் அந்தச் சிறுவனை அணைத்துத் தூக்கி அவசரமாய் வெளியில் கிளம்ப முயன்றார். அந்தப் பையன் தரையில் படுத்துக் கொண்டு பிடிகொடுக்காமல் கையையும் காலையும் ஆட்டியபடி புரண்டு அழுது கொண்டிருந்தான்…. ”உலகம் உன்னையும் என்னையும் நார்மல்-னு சொல்லுது. ஆனால் நீயும் நானும் ஒரே மாதிரியா இருக்கோம்? இந்தக் குழந்தைகள் தலையில் ஒரு வார்த்தையைக் கட்டி, அதனாலேயே அவங்களை ஒதுக்கத் தேவையில்லை… ஆட்டிஸம் இருக்கற எல்லாரையும் குறைபாடு இருக்கறவங்களாப் பார்க்க வேண்டியத் தேவையில்லை. மேற்கத்திய நாடுகள் இப்ப ஆட்டிஸமை குறைபாடு-னு பார்க்காம வேறுபாடு-னு பார்க்கத் துவங்கியிருக்காங்க….”
View More ஆட்டிஸம்: தேவை பரிதாபமல்ல, முழுமனதுடன் ஏற்புஆதிசங்கரர் படக்கதை — 2
ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை வையவன் உரையாடல் வடிவில் எழுதி, ஓவியர் செந்தமிழ் படக்கதையாகத் தீட்டியிருக்கிறார். சிறுவர்களும் பெரியவர்களும் படித்து மகிழுமாறு, பெருமையுடன் இப்படக் கதையை வெளியிடுகிறோம் – பகுதி 2.
View More ஆதிசங்கரர் படக்கதை — 2ஆதிசங்கரர் படக்கதை – 1
ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு. வையவன் உரையாடல் வடிவில் எழுதி ஓவியர் செந்தமிழ் படக்கதையாகத் தீட்டியிருக்கிறார். சிறுவர்களும் பெரியவர்களும் படித்து மகிழுமாறு, பெருமையுடன் இப்படக் கதையை வெளியிடுகிறோம்.
View More ஆதிசங்கரர் படக்கதை – 1அளவிலா விளையாட்டுடைய அழகன் ஆறுமுகன்
குமரன் தன் பிஞ்சுக் கைகளால் சப்பாணி கொட்டுகிறான். இவன் சப்பாணி கொட்டக் கொட்ட என்ன நடக்கிறது? எட்டுக் குல மலைகளும் குலுங்கிப் பாதிப் பாதியாக விழுகிறது! மேரு மலையும் அதிர்வடைகிறது! தேவர்கள் நமக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. நாம் உய்ந்து போனோம் என்று சந்தோஷமடைகிறார்களாம்… “இப்படிக் கேட்டால் சொல்ல மாட்டேன் முறைப்படி நீங்கள் சீடனாக அமர்ந்து கேட்டால் சொல்லுவேன்” என்கிறான் குமரன். மைந்தன் சொன்னபடியே. சீடனாகக் கீழே அமர்ந்து பணிவோடு உபதேசம் பெறுகிறான் தந்தை… “கூனேறு மதிநுதல் தெய்வக் குறப்பெண் குறிப்பறிந்து அருகணைந்து, உன் குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கு எனக் குறையிரந்து, அவள் தொண்டைவாய்த் தேனூறு கிளவிக்கு வாயூறி நின்றவன்” என்று முருகன் வள்ளியிடம் காதல் கொண்டு சென்றதைக் கூறுகிறார் குமரகுருபரர்…
View More அளவிலா விளையாட்டுடைய அழகன் ஆறுமுகன்பட்டாசுடன் கொண்டாடுங்கள்!
உலகெங்கும் பெரும் அளவில் விளையாட்டு நிகழ்வுகள் என்றாலும் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்றாலும் மாபெரும் வான வேடிக்கைகள் அவ்விழாக்களின் அடையாளமாக இருக்கின்றன. ஆனால் வெகுமக்கள் தாங்களாகவே ஒவ்வொரு இல்லத்திலும் வானவேடிக்கை நடத்தும் சிறப்பு உலகிலேயே தீபாவளித் திருநாளுக்கு மட்டுமே உரித்தானது. இதை நாம் இழக்கலாமா…உண்மையில் பட்டாசுகளும் மத்தாப்புகளும் விளைவிக்கும் ஒலி ஒளி அளவுகளுக்கு மிக மிகச்சிறிய அளவிலேயே வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. குழந்தைகளை பணிக்குப் பயன்படுத்துவது ஒரு சமூக அவலம். இதற்கான தீர்வு தயரிப்புப் பொருட்களை தவிர்ப்பதால் நிச்சயம் வந்துவிடாது…
View More பட்டாசுடன் கொண்டாடுங்கள்!