லலிதா என்ற சொல்லே மிக அழகானது. நித்திய சௌந்தர்யமும், நித்திய ஆனந்தமும் ஒன்றான அழகு நிலை என்று அதற்குப் பொருள்.. அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும் தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும் – எல்லாம் அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும்…
View More பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்Category: இலக்கியம்
பாரதியின் சாக்தம் – 2
வாழ்வின் மூர்க்கத்தையும் கொடூரத்தையும் அழிவையும் ஸர்வநாசத்தையுமேகூட தெய்வத்தின் பிரதிமையாய்க் காணும் மரபு வங்காளத்தில் நிலவுவது சாக்தத்திற்கான வலுவான வேராகும்… ‘நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?’ என்று கேட்டு வந்த நரேந்திரரை.. பல ஆண்டுகளுக்குப் பின் அதே ‘நரேனைக் காளிக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன். நரேன் காளியை ஒப்புக்கொண்டு விட்டான் தெரியுமோ?’ என்று ஏதோ தன் பிள்ளை பெரிய பரிட்சையில் பாஸானதைப் போல வருவோர் போவோரிடம் சொல்லிக்கொண்டிருந்த கிழவராக இருந்தவரும் ஸ்ரீராமகிருஷ்ணர்…
View More பாரதியின் சாக்தம் – 2பாரதியின் சாக்தம் – 1
பெண்ணின் சுதந்திரம் பெரிதும் முடக்கப்பட்டக் காலத்திலேயே கூட, பெண்ணின் சுதந்திர வெளியை முழுதும் உள்வாங்கிய உணர்வு பூர்வமான வழிபாடு அவனால் சாக்தமாகப் பேணப்பட்டு வந்திருப்பது பெரும் சிறப்பாகத்தான் இருக்கிறது… ஒரு கையால் வைணவத்தையும், ஒரு கையால் சைவத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும். ‘இருவழிகளையும் ஒரு பார்வையால் நோக்கும்’ தரிசனம் சாக்தம் எனலாம்… விவேகானந்தரிடம் ஸ்ரீராமகிருஷ்ணர், “…மக்களுக்கு ஏற்ற வழியன்று வாமாசாரம் போன்ற முறைகள். முறையான பக்தி நெறியே மக்களுக்கு நன்மை பயப்பது,” என்றாராம்.
View More பாரதியின் சாக்தம் – 1சாதி எனப்படுவது யாதெனின்…
என்னை உற்றுப் பார்த்தவர், “உன் ஜாதி என்ன?” என்றார். “ஏன் ஜாதி என்ன கெட்ட விஷயமா?” என்று அவர் தொடர்க்கேள்வி போட, சற்று தடுமாறி, “வன்னியர்” என்று கூறி முடித்தேன்… இனி அவை உனக்குத் தேவை இல்லை. ஆனால் தன்னளவில் ஜாதிக்கு ஒரு தேவை உள்ளது..
View More சாதி எனப்படுவது யாதெனின்…பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 1
2000 ஆண்டுகள் கடந்த பின்னும் ஒரு புலவனின், நீதியறிஞனின் சொற்கள் இன்னமும் புரிகின்றன, சமுதாயத்துக்குப் பொருத்தமாக உள்ளன என்பதே இமாலய வியப்பு. அதில் ஒவ்வொரு சொல்லுமே இன்றைய சிந்தனைக்குச் சரியாகப் பொருந்தி வர வேண்டும் என்று எண்ணுவது கேட்பவனின் மடமையே தவிர, வள்ளுவனின் தவறு அல்ல… அவர்கள் இருவருக்குமே கிறித்துவ தத்துவப்படி பிறவி என்பது ஒன்றே என்பதுதான் எண்ணம்… அம்மயக்க நிலையிலேயே கேள்விகள் கேட்கக் கேட்க, ஒருவர் எடுக்கும் பல பிறவிகள் பற்றி மருத்துவர் அறிகிறார்..
View More பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 1தலபுராணம் என்னும் கருவூலம் – 7 [நிறைவுப் பகுதி]
சோழமன்னனும் அரசியும் புனலாடிக் கரையேறியபோது அரசியின் மார்பில் மாலை இல்லாததைக் கண்டான். “இறைவனே! உனக்குச் சாற்ற நினைத்த முத்துமாலையைக் காவிரிவெள்ளத்தில் இழக்கும் தீவினையை உடையவன் ஆயினேன். இந்த ஆரத்துக்கு நிகரான வேறு ஆரமெவ் வுலகினு மில்லையே!. என்னுடைய பிழையைத் தீர்த்தாண்டருள் புரிவையேல், அந்த ஆரத்தை நின் திருமேனியில் நீயே பெற்று அணிந்தருள வேண்டும்!” என்று இறைவனிடம் முறையிட்டான். முத்தாரம் சொன்னவாறு இறைவன் திருமேனியை அடைந்தது.
View More தலபுராணம் என்னும் கருவூலம் – 7 [நிறைவுப் பகுதி]மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 3
“ஜனநாயகத்தின் முதுகெலும்பு பேச்சு சுதந்திரம். ஒவ்வொரு மனிதனும் தன் மனதில் உள்ளதைக் கூற சமூகம் அனுமதிக்க வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவரின் பேச்சு சுதந்திரத்தை மட்டு படுத்தினால் நமக்கு எதிராக யார் பேசினாலும் அதை தடுக்கும் அதிகாரத்தை நாம் அடைந்து விரைவில், ஒரு ஹிந்துவும் சர்வாதிகாரியாக மாறுவார்.
View More மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 3அருணாசலத்தில் ‘ம’கரத்தின் மகத்துவம்
காலப்போக்கில், அதைப் படிக்கப் படிக்க, அதில் ஏதோ ஒரு மறைபொருள் உள்ளதோ என்று எனக்குத் தோன்றும்… ஒரு மலையாகவும் நம் பிறவிப்பிணி மருந்தாகவும் நம் கண்ணெதிரே அவன் உருவெடுத்துள்ளான் என்பதை நாம் உணரவேண்டும்…
View More அருணாசலத்தில் ‘ம’கரத்தின் மகத்துவம்சில ஆழ்வார் பாடல்கள் – 2
இனிய ஒலியெழுப்பும் கண்ணனின் குழலை விட, ஓங்கி ஒலிக்கும் சங்கைத் தான் ஆண்டாள் அதிகம் பாடியிருக்கிறாள்… அசுரர்களை அழித்து தன் அடியாரைக் காக்கும் பௌருஷம், அதோடு பெண்மைத் தனம் கொண்ட குறும்பு – இப்படி பெண் அணுக்கம் உள்ள அவ்வளவு எதிர்பார்ப்புகளின் லட்சியமாகவும் கண்ணன் இருக்கிறான்… உலகும் இயற்கையுமாய் அழகை விரிக்கும் படைப்பின் விதை அது என்பதால் “கொப்பூழில் எழு கமலப் பூவழகர்”என்றாள்…
View More சில ஆழ்வார் பாடல்கள் – 2சில ஆழ்வார் பாடல்கள் – 1
ஊர் அடங்கி விட்டது. இவள் காதலைப் பற்றி வம்பு பேசிப்பேசியே களைத்துப் போன ஊர்! அந்த வம்புப் பேச்சுக்கள் தான் இவளது காதலுக்கு உரமாக இருந்ததாம்… நம்மாழ்வார் பாடல்களில் சொல்லப் படும் தத்துவம், கோட்பாடாக, கருதுகோளாக நேரடியாக இல்லாமல் கவிதையாகவே இருக்கிறது… நாராயணன் பிரபஞ்சத்தினின்றும் வேறான ஒரு கடவுளாக அல்ல, பிரபஞ்சமாகவே நிற்கும் கடவுள் (cosmic God) என்ற சமய தத்துவத்தை… (ஊட்டி இலக்கிய சந்திப்பில் பேசியது).
View More சில ஆழ்வார் பாடல்கள் – 1