தன் பிரியத்துக்குரிய தெய்வக்குழந்தை காலில் தண்டையும் சதங்கையும் கொஞ்ச அருகே வந்தால் எவ்வாறிருக்கும் எனும் எண்ணமே அவர்களை இன்புறுத்துகிறது. பக்தியில் நெகிழவைத்தும் அன்பில் மகிழ வைத்தும் சிலிர்ப்பூட்டுகின்றது.
இதற்குமேல் குழந்தைக்குத் தாங்கவில்லை. தனது சிறுசோற்றுச் செப்புக்களை வீசியெறிந்து விட்டு உதடுகள்நெளிய அழுகைபொங்கிவர ஓடோடிவந்து தாயின் சேலையில் முகம் புதைத்துக்கொண்டு அவளை அணைத்துக்கொள்கிறாள்.
தாயும் தனது பொய்க்கோபத்தினை விட்டொழித்து, குழந்தையை இறுக அணைத்துக்கொள்கிறாள்.
Category: கவிதை
தமிழ் இந்து தளத்தில் பங்களிக்கும் படைப்பாளிகளின் கவிதைகள்.
குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்
காதல் நோயால் வருந்தும் தலைவியைத் தேடிக் கொண்டு குறத்தி வருகிறாள். தங்களது குற்றால மலையின் அழகையும் வளத்தையும் வர்ணித்து அவள் பாடும் பாடல்கள் அற்புதமானவை. இன்றைய பொதுப்பயன்பாட்டில் குறவன், குறத்தி ஆகிய சொற்களை நாகரீமில்லாத காட்டுமிராண்டி மக்களைக் குறிப்பது போலப் பயன்படுத்துகிறோம். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு கூட, மலைவாழ் சாதியினரான குறவர்கள் தங்களது குலத்தின் கீர்த்தியைப் பெருமிதத்துடன் எடுத்துரைப்பதை இந்த நூலில் காண முடிகிறது: “அருள் இலஞ்சி வேலர்தமக்கு ஒருபெண்ணைக் கொடுத்தோம் – ஆதினத்து மலைகளெல்லாம் சீதனமாக் கொடுத்தோம்”… குறி சொல்வதற்கு முன் தெய்வ வணக்கம் செய்கிறாள் குறத்தி. சிவபெருமான், உமையம்மை தொடங்கி பன்றி மாடன், பிடாரி வரை அனைத்து தெய்வங்களையும் துதிக்கிறாள். வரலாறு, சமூகவியல், பண்பாடு குறித்த எந்த ஆழ்ந்த புரிதலும் இல்லாமல் சிறுதெய்வம் பெருந்தெய்வம் அது இது என்று தமிழ்நாட்டு “ஆய்வாளர்கள்” கூறும் ஆதாரமற்ற கற்பனைக் கோட்பாடுகளை எல்லாம் தவிடுபொடியாக்குவதாக உள்ளது அவளது துதிப்பாடல்…
View More குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்கோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்
மன்யுவே எங்களிடம் வருக – வலியர்களிலும் வலியன் நீ – உனது நட்பான தவத்துடன் இணைந்து – எமது பகையை வென்றிடுக – நட்பற்றவர்களைத் துரத்துவோன் நீ – விருத்திரர்களை தஸ்யுக்களைத் துளைப்பவன் நீ – செல்வங்களை எமக்கு நல்கிடுக… கோபத்தின் தேவதையாக மன்யுவை வேதம் கூறுகிறது. ‘ருத்திரனே உன்னுடைய கோபத்திற்கு நமஸ்காரம்’ (நமஸ்தே ருத்ர மன்யவ) என்று தான் புனிதமான ஸ்ரீருத்ரம் தொடங்குகிறது. மன்யு என்ற சொல்லுக்கு கோபம், ஆவேசம், குமுறல், சீற்றம் (fury),உணர்ச்சிகரம் (passion),பேரார்வம் (zeal) ஆகிய அர்த்தங்கள் உண்டு. இந்தத் தேவனின் அருள் என்றென்றும் தர்மவீரர்களான நமக்கு வேண்டும். மன்யு சூக்தம்ரி க்வேதம் பத்தாம் மண்டலம் 83வது சூக்தம், ரிஷி தாபஸ மன்யு. மொழியாக்கம் எனது…
View More கோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்தூற்றிப் போற்றினரே! -2
“பலாப்பழத்தை நாடும் ஈபோல, மான்போலும் பார்வையுடைய மாதரின் சிற்றின்பத்தை நான் நாடுகிறேன். அதன் காரணமாக நீ என்னைப் புறக்கணித்து விடாதே ஈசா!
“அவ்வாறு கைவிட்டால் நான் உன்னை எவ்வாறெல்லாம் பழித்துரைப்பேன் தெரியுமா? நீ கடல் நஞ்சினை உண்டவன்; மழைமேகம் போலக் கறுத்த கண்டமுடையவன்; நல்லகுணம் இல்லாதவன் (குணம் இலி); என்னைப்போலும் மானிடன்; அறிவு குறைந்தவன் (தேய் மதியன்); வயதில் முதிர்ந்த பரதேசி என இவ்வாறெல்லாம் பழித்துப் பேசுவேன்,”
View More தூற்றிப் போற்றினரே! -2தூற்றிப் போற்றினரே! — 1
மூன்று பெண்கள் மூன்று அம்மானைக்காய்களைக் கொண்டு விளையாடும்போது, அதன் வேகத்திற்குப் பொருத்தமாகப் பாடல்களையும் அழகுறப் புனைந்து பாடுகிறார்கள். யார் சாமர்த்தியமாகக் கேள்வி கேட்பது, யார் சமயோசிதமாக விடை கூறுவது, யார் விடையில் இரு பொருள் பொதிந்து கூறுவது என்பதில் இவர்களுக்குள் போட்டி!!
View More தூற்றிப் போற்றினரே! — 1“நும்வாய்ப் பொய்யு முளவோ?”
அசோகமரம் மகளிர் பாதம் பட்டால் மலர்வளம் மிக்கதாகும் என்பது வடமொழி இலக்கியக் கவி மரபு. சங்ககாலத்திலேயே இது தமிழ்மரபுடன் கலந்து விட்டது… புலி புலி என மகளிர் கூவினால் வேங்கை மரக் கிளைகள் மலர் கொய்ய ஏதுவாகத் தாழும். மகளிர் நகைக்க முல்லை மலரும். ஏழிலைம்பாலை என்னும் மலர் மகளிர் நட்புச் செய்வதால் மலர்வது. செண்பகம் மகளிரின் நிழல்பட மலர்வது. மா மகளிரின் பார்வை படத் தழைப்பது. மகிழமரம் கொம்பை மகளிர் பல்லினாற் கவ்வ மலரும். மாதவி- குருக்கத்தி. இது மகளிர் பாட மலர்வது, புன்னை மகளிர் ஆடலுக்குப் பூப்பது. மகளிர் தழுவ மலர்வது குரவம். இவை ‘தோதகக் கிரியை’ எனப்படும். கவிராட்சச கச்சியப்ப முனிவர் காஞ்சிப்புராணம் இரண்டாம் காண்டம் இயற்கை வருணனியயில் இவற்றை அழகுற அமைத்துப்பாடுகிறார்…
View More “நும்வாய்ப் பொய்யு முளவோ?”வானம்பாடிகளும் ஞானியும் – 2
நம்மூர் கம்யூனிஸ்டுகளே கூட மார்க்ஸை அடியோடு மறந்தாயிற்று தா பாண்டியனோ, ஜி ராமகிருஷ்ணனோ மார்க்ஸ் பெயரை உச்சரித்து எத்தனை தலைமுறைகளாயிற்று என்று கேளுங்கள். இன்று கம்யூனிஸ்ட் அரசே எங்கும் இப்பூவலகில் இல்லை. சைனாவிலும் சரி, ரஷ்யாவிலும் சரி. நிலவுவது முதலாளித்துவம். ஆக, ஞானி ஏதோ உலகத்தில் தான் இன்னமும் இருந்து வருகிறார். மார்க்ஸிசத்தில் கால் பதிக்காதவர்கள் என்று ஞானி அன்று குற்றம் சாட்டிய சிற்பி, மு. மேத்தா தமிழன்பன் போன்றோர் வாழும் வாழ்க்கையும் கொண்டுள்ள பார்வையும் வேறு. இல்லாத ஒரு மார்க்ஸிசம் கற்பனையான ஒன்று யாரை கடைத்தேற்றியது?…. ஞானி எதையும் மறைக்கவில்லை. தான் உறவாடியதும், பின்னர் ஒதுக்கி விலக்கப் பட்டதும் ஆன காலகட்டத்திலும் இப்போது முப்பது வருடங்களுக்குப் பின் தன் சிந்தனை அவற்றில் தோய்ந்து விடும் போதும் அலை மோதும் முரண்கள் எதையும் அவர் மறைக்கவில்லை. தமிழ்ச் சூழலில் இது மிகப் பெரிய விஷயம்….
View More வானம்பாடிகளும் ஞானியும் – 2வானம்பாடிகளும் ஞானியும் – 1
கட்சியின் ஒருமித்த எதிர்ப்பையும் மீறி, இடதுசாரிகளின் தோற்றத்தில், இடது சாரிகளின் குரலில் வானம்பாடிகள் தம் தமிழ்ப் புலமைக் கட்டுக்களை உதறி, யாப்பறியா செல்லப்பா, க.நா.சு போன்றோரின் புதுக்கவிதையின் பாதையில் பயணிக்கத் தொடங்கியது எனக்கு வியப்பளித்தாலும், அவை கவிதையாக எனக்குத் தோன்றவில்லை. வெற்று ஆரவார கோஷங்களாகவே இருந்து விட்டன. வானம்பாடி இதழ் இரண்டு வருஷங்களோ அல்லது இன்னம் சில மாதங்களோ என்னவோ தான் வெளிவந்தது…. வயிற்று வலி காய்ச்சலுக்குக் கூட மாஸ்கோவுக்கு சிகித்சைக்கு விரையும் கட்சியினரிடம் வேறு என்ன எதிர் பார்க்க இயலும். இப்போது அவர்களது மாஸ்கோ புனித யாத்திரை நின்று ஒரு தலைமுறைக்காலம் கடந்து விட்டது. ஞானியின் முழு பண்பும் மனித நேயமும் சினேக பாவமும் கொண்டது தான். மார்க்ஸிஸத்தை ஏதோ மத விசுவாசத்தோடு அவர் கொண்டாலும்…
View More வானம்பாடிகளும் ஞானியும் – 1சிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்
அறிவையும், தொழிலையும் பெரிதாகக் கருதாமல் பக்திக்கு வீர சைவர்கள் முதலிடம் தந்தனர். சாதி – பொருளாதார வேறுபாடுகளின்மை, பெண்ணுக்குச் சம மதிப்புத் தந்து போற்றிய முறைமை ஆகியவை வீர சைவத்தின் தலை சிறந்த இயல்புகளில் சிலவாகும்… வசனங்கள் ’கன்னட உபநிடதங்கள்” என்றும் போற்றப் படுகின்றன.வசனகாரர்கள் கவிஞர்கள் இல்லை : பண்டிதர்களும் இல்லை. மனிதர்கள் மனிதர்களோடு பேசுவதான, விவாதிப் பதான முறையிலேயே அவர்களின் பாடல்கள் உள்ளன… தீ எரியும் அசைய முடியாது – காற்று அசைய முடியும் எரியாது – தீ காற்றைச் சேரும் வரை – ஓரசைவும் இல்லை – தெரிவதும் செய்வதும் அதைப் போன்றது – மனிதர்களுக்குத் தெரியுமா ராமநாதா (தேவர தாசிமையா)… எனது மனமோ அத்திப் பழம் பாரையா ஆராய்ந்து பார்த்தால் அதில் திரட்சி எதுவுமில்லை.. (பசவண்ணர்).. பொறி பறந்தால் – என் வேட்கையும் பசியும் தீர்க்கப் பட்டதாக எண்ணுவேன் – வானம் திறந்தால் என் குளியலுக்காகத்தான் என எண்ணுவேன் – தலைவனே என் தலை தோளில் சாயும் போது உன்னையே எண்ணுவேன் (அக்கா மகாதேவி)….
View More சிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்மரணமும் நோயும் நீக்கினோம் யாம் இன்று [அதர்வ வேதம்]
அவிழ்த்து விடப்பட்டு வழி காத்து நிற்கின்றன யமனின் இரு நாய்கள் – கருப்பும் வெள்ளையுமாய் – அவை தொடரவேண்டாம் உன்னை – இங்கு வா நீ – விலகிச் செல்லாதே – தொலைவில் மனதை விட்டு நிற்காதே…. ஊன் பொசுக்கி உண்ணும் அக்னி – துன்புறுத்தாதிருந்திடுக உன்னை – வானமும் பூமியும் காத்திடுக – கதிரோனும் நிலவும் காத்திடுக – எங்கும் நிறைந்த வெளி – தன் தெய்வசக்தியால் காத்திடுக…
View More மரணமும் நோயும் நீக்கினோம் யாம் இன்று [அதர்வ வேதம்]