மைக்கேல் விட்சல் சென்னை விஜயம்: ஒரு பார்வை

ஹார்வார்ட் ஸம்ஸ்க்ருத பேராசிரியர் மைக்கேல் விட்சல் சென்னைக்கும் வந்ததைத் தொடர்ந்து, தமிழ் இந்து ஆசிரியர் குழு அவரை நோக்கி சில கேள்விகளை தொடுத்திருந்தது நினைவிருக்கும். அவரது வருகையை ஒட்டி நடந்த சில சுவாரஸ்யமான, அதே சமயத்தில் தீவிரமான , சம்பவங்களையும் சொல்ல வேண்டியிருக்கிறது ……

View More மைக்கேல் விட்சல் சென்னை விஜயம்: ஒரு பார்வை

சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

பகவத் கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர் ‘நெருப்பு சுடாது என்று நூறு முறை வேதத்தில் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்; அனுபவம்தான் பிரமாணம்’ என்கிறார்… ”தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள்” என்கிறார் ஜெயகாந்தன்.

View More சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

ஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே..

“எது எப்படியானா என்ன? அவனவன் சோத்துக்கே லாட்டரி அடிக்கான். இதில வேலை வெட்டி இல்லாமல் இந்த இந்துத்துவாதிகள் அயோத்தி கோயிலுக்கும், ராமர் பாலத்திற்கும், திருப்பதி கோயிலுக்கும், தென்காசி கோயில் நிலத்திற்காகவும் எதற்காகப் போராட்டம் நடத்துகிறார்கள்? விட்டுக்கொடுத்து வாழவேண்டியதுதானே?”

View More ஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே..

சம்ஸ்கிருத அறிஞர் மைக்கேல் விட்செலுக்கு சில கேள்விகள்

மைக்கேல் விட்செல், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் சம்ஸ்கிருதத் துறைப் பேராசிரியர் இன்று மாலை சென்னையில் பேசுகிறார். எமது வ்ரலாற்று ஆர்வலர் குழு தொகுத்திருக்கும் இந்தக் கேள்விகளை இந்தத் தருணத்தில் அவரிடம் எழுப்ப விரும்புகிறோம், பேராசிரியர் கண்டிப்பாக அவற்றுக்கு விடையளிப்பார் என்ற நம்பிக்கையுடன்.

View More சம்ஸ்கிருத அறிஞர் மைக்கேல் விட்செலுக்கு சில கேள்விகள்

காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 1

கடலில் தோன்றி, கடலின்மீது அலைகள் உருண்டோடி விளையாடுவது போன்று ஜகத்தும் ஜீவனும் பரத்தில் தோன்றி பரத்தில் நிலைபெற்றிருக்கின்றன… உள்ளத்தைச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற தாமரை மலராகக் கருதவேண்டும். அதில் சுயம் ஜோதி சொரூபமாக வழிபடு தெய்வம் வீற்றிருப்பதாக உணர்தல் வேண்டும். இந்த உணர்வில் நிலைத்திருப்பது தியானமாகிறது.

View More காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 1

ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?

டி.வி.யிலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, ஏதாவது ஒரு ஜோதிடர் “இந்த ராசிக்காரர்கள், இந்த ஊரில் இந்தக் கோவிலில் உள்ள இந்த அம்மனுக்கு நெய் விளக்கை ஏற்றி இந்த திசையில் வைத்து வழிபட வேண்டும்” என்று கூறிவிடுகிறார். அவர் சொல்வதைப் பார்த்தால், அந்த கோவிலில் உள்ள ஆட்களுக்கும் இவருக்கும் ஏதாவது உடன்படிக்கையோ என்றுகூடத் தோன்றி விடுகிறது…

View More ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?

கீதை, சீதை, தாய் தெய்வம், பெண்ணடிமைத்தனம்: சில கேள்விகள்

ஸ்ரீ கிருஷ்ணர் “பெண்களும் பரகதி பெறுவர்” (கீதை 9.32) என கீதையில் கூறுகிற போது அவர் கூறுவது ‘பெண் தாழ்ந்தவள்’ எனும் மனநிலை படைத்த ஆணினை நோக்கி என்றே கருத வேண்டும். “அவளுக்கு ஞானமும் வீடுபேறும் கிடைக்கும்” என கீதை சொல்வது மிக உன்னத நிலையை இந்த பிறவியிலேயே அவள் அடைந்திட முடியும் என்னும் எக்காலத்துக்குமான உண்மையையும் எனப் புரிந்து கொள்ள வேண்டும்….சீதை எந்த இடத்திலும் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கும் ஒரு பெண்ணடிமைப் பாத்திரமாக சித்தரிக்கப் படவில்லை. மாறாக வலுவான பெண்ணியப் பார்வை கொண்ட, அதே நேரத்தில் சமுதாயத்துக்கு ஒரு தன்னிறைவு இலட்சியமாக திகழும் பாத்திரமாகவே அவள் காட்டப் படுகிறாள். குறுகிய எல்லைகளைக் கடந்து மானுடம் முழுவதையும் அரவணைக்கும் பார்வையை சீதை மூலமாக இராமாயணம் நமக்கு வைக்கிறது

View More கீதை, சீதை, தாய் தெய்வம், பெண்ணடிமைத்தனம்: சில கேள்விகள்

சோதிடம் என்பது உண்மையா பொய்யா?

வாழ்க்கையை நலமும் அழகும் செய்யப் பயன்படும் வானநூல் சாத்திரங்களை, இந்து தருமம் ஏற்கிறது. இந்துக்களின் சடங்குகள், வாழ்க்கை நிகழ்ச்சிகள், விவசாய வேலைகள் ஆகிய அனைத்திலும் பஞ்சாங்கம் ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது.
ஆனால் இந்த அழகிய பண்பாட்டு அம்சம் மூடநம்பிக்கையாக மாறுவதை இந்து தருமம் தடுக்கிறது.

View More சோதிடம் என்பது உண்மையா பொய்யா?

இந்துமதம் மாமிச உணவுக்கு எதிரானதா?

மனிதருக்கிடையே பழக்க வழக்கங்களில் இருக்கும் நியாயமான வேறுபாடுகளை இந்து மதம் ஏற்கிறது. அதுவுமன்றி,…

View More இந்துமதம் மாமிச உணவுக்கு எதிரானதா?