… இரண்டுமே சாதாரண வரையறைகளுக்குள் அடங்காத விசித்திர பிராணியைக் கற்பனை செய்தன. ஒரு கலாசாரம் அதனை தெய்வீகத் தன்மை கொண்ட அதிசயமாகப் பார்த்தது. மற்றது சாத்தானிய (diabolical) தன்மை கொண்ட அரக்கனாகப் பார்த்தது… விசித்திரங்கள் கொண்ட புராணங்களும், கோயில் சிற்பங்களும் நாம் காணாதவை, நாம் அறியாதவை பிரபஞ்சமெங்கிலும் உண்டு என்பதை நமக்கு எப்போதும் நினைவூட்டிக் கொண்டிருக்கும். முத்திரை குத்தி மனதை மூடிக் கொள்வதைக் காட்டிலும், புரிந்து கொள்ளும் முயற்சியுடன் மனதைத் திறந்து வைத்திருப்பதே சிறந்தது என்று நமக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும்.
View More இயற்கை முரண்களும், இருவேறு கலாசாரங்களும்Category: சமூகம்
இந்து சமுதாயம், வாழ்க்கை முறை, சமூக பிரசினைகள், தீர்வுகள்…
கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்
ஒரு பெண்ணுக்கு ஆண் நண்பர்கள் இருப்பது சகஜம் என்பது இன்றைய பெண்களின் நிலை. ஆண் பெண் நட்பு நல்லது என்று பிரசாரம் செய்தவர்கள் அதன் அளவு கோலைப் பிரசாரம் செய்யவில்லை. மாறாக ஆணும் ஆணும் பழகுவதைப்போலவே பெண்ணோடு பெண் பழகுவதைப் போலவே ஆணும் பெண்ணும் பழகலாம் என்றே உசுப்பிவிட்டனர். விளைவு கேவலமான பத்திரிக்கைச் செய்திகள் நாறும் அளவிற்கு இன்றைய குடும்ப கலாச்சாரம் சீரழிந்து போய்விட்டது. ஒரு மதிப்பிற்குரிய பெண்மணியிடம் இந்த நட்பு நாகரீகத்தில் எது அளவு என்றும் நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் வரிசையாக சில விஷயங்களை அடுக்கினார்…
View More கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்ஹிந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் மின்-ஊடகங்கள்
நாட்டில் விவாதிக்கப் படவேண்டிய பல பிரச்சினைகள் இருக்கும்போதும், இந்நிறுவனம் பல முறை ஹிந்து கலாசாரம், ஹிந்து ஆன்மீகம், ஹிந்து பண்பாட்டின் பழக்க வழக்கங்கள் என்று ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட கருப்பொருள்களையே விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு, விவாதத்தினிடையே அவற்றை கேலி செய்து, நிந்தனை செய்து, அவமதித்து, அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஹிந்துப் பெரும்பான்மையின மக்களின் மனங்களில் சந்தேகம், நம்பிக்கையின்மை போன்ற விஷவித்துக்களை விதைத்து, அவர்களே தங்கள் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் வெறுத்து ஒதுக்குமாறு செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது.
View More ஹிந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் மின்-ஊடகங்கள்ஹிந்து தர்மத்தின் அதிகாரி யார்?
என்னதான் மாபெரும் கருணை பொங்கும் இதயத்திலிருந்து மானுடத்துயரனைத்தையும் நீக்க உருவெடுத்ததாகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும், ஒற்றைப்பார்வைகளும், ஒற்றை அதிகார பீடங்களும் அழிவைத்தான் ஏற்படுத்தும் …ஹிந்து தர்மத்தில் சாஸ்திர சம்பிரதாயங்கள் உறைநிலை கொண்டவை அல்ல. அவை நெகிழ்ச்சித்தன்மை கொண்டவை. காலந்தோறும் பரிணாம மாற்றம் அடைபவை. மானுட நலத்தையே தம் இலட்சியமாகக் கொண்டவை. அனைத்துயிரும் அனைத்துலகும் இன்புற்றிருப்பதையே அவை நோக்குகின்றன. அவற்றின் நோக்கம் சனாதனமானது, அழிவற்றது. அதற்கான வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.
View More ஹிந்து தர்மத்தின் அதிகாரி யார்?தேவை: சமச்சீர் வசதிகள்
அரசின் இந்த சமச்சீர் கல்வித்திட்டம் வெற்றி பெற வேண்டுமானால், ஆசிரியர்கள் முதலில் தன்னிறைவு மனநிலை பெறவேண்டும். ஆசிரியப் பணியின் உன்னதத்தை அவர்கள் உணர வேண்டும். ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கவேண்டும். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படவேண்டும். அப்போதுதான் சமச்சீர் கல்வித்திட்டம் வெற்றி பெறும். இல்லையென்றால் இது வெறும் சமச்சீர் பாடத்திட்டமாக மட்டும் நின்று போய்விடும்.
View More தேவை: சமச்சீர் வசதிகள்மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்
ஹிந்து சிந்தனையை -ஒற்றைத்தன்மையற்ற பார்வையை- அவர் மானுடத்தின் சமுதாய பிரச்சனைகளுக்கு பயன்படுத்தினார். இதனால் கிடைத்த சாத்தியக்கூறுகளின் விதைகள் இன்னும் காந்திய சிந்தனையில் புதைந்து கிடக்கின்றன. அதனால் பணபலமும் அதிகாரபலமும் இல்லாமல் தர்மத்தை மட்டுமே நம்பி போராடும் எந்த மக்கள் கூட்டத்துக்கும் அவை மிகச்சிறந்த ஆயுதங்களாக உதவக்கூடியவை.
View More மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்புனிதத்தின் மீது மதச்சார்பின்மையின் தாக்குதல்
(தமிழில்: மது) ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றைக்கு தலித் மக்கள் குடியிருக்கும் சேரிக்குள் நுழைந்ததாக செய்திகள் வந்ததோ அன்றே என் நண்பரிடம் சொன்னேன் “இந்த ஒரு செய்கை போதும். அவருக்கான கைது வாரண்டை அவரே எழுதிக்கொண்டு விட்டார்’ என்று… பொங்கி எழாத இந்திய மதங்களிடம் மட்டுமே மதச்சார்பற்ற நடுநிலையுடன் அரசு நடந்து கொள்ள முடியும், மற்ற பாலைவன மதங்களுடன் அல்ல என்பது தெளிவு. அரசை பயமுறுத்தாவிட்டால் அது அக்கறை கொள்ளாது என்கிற துரதிருஷ்டமான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம்.
View More புனிதத்தின் மீது மதச்சார்பின்மையின் தாக்குதல்வேதாளம் சொன்ன கதை: குமரி மாவட்டத்தில் ஒரு பிள்ளையார் கோவில்
வேதாளம் எள்ளி நகைத்து “மகனே நீ ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? நீ உனக்காக கஷ்டப்படுகிறாயா அல்லது வேறு யாருக்காகவோவா? இந்த உலகத்தில் நன்றி கெட்டவர்கள் உண்டு அவர்கள் உன்னை பயன்படுத்திக்கொண்டு பிறகு அதிகாரத்துக்கு வந்த உடனேயே ஆதாயத்துக்காக உன் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு உனது நியாயமான கோரிக்கைகளை கூட நிராகரித்து விடுவார்கள். இதற்கு உதாரணமாக நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன் கேள் …
View More வேதாளம் சொன்ன கதை: குமரி மாவட்டத்தில் ஒரு பிள்ளையார் கோவில்அமெரிக்காவில் ஓர் அக்கப்போர்
நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்– “நாயை அடிப்பானேன் வம்பைச் சுமப்பானேன்” என்று அதையே சற்று மாற்றி இந்தச் சம்பவத்திற்குப் பொருத்தினோமானால், “நாயை அடிப்பானேன் பீரைக் குடிப்பானேன்” என்று பொருத்தி விடலாம்.. இந்தச் சம்பவம் நம் சிந்தனைகளைத் தூண்டட்டும். இந்தியா போன்று பல்வேறு கலாசாரங்கள் கலக்கும் தேசத்திற்கு, விட்டுக்கொடுத்து வாழும் வாழ்க்கையை கற்றுத் தரும் ஒரு பாடமாக அமையட்டும்.
View More அமெரிக்காவில் ஓர் அக்கப்போர்மதங்களும் மாற்றுத் திறன் கொண்டவர்களும்
கண்ணனின் கீதைக்கு நிகராக அஷ்டவக்ர கீதை என்ற புகழ்பெற்ற நூலை அருளிய அஷ்டவக்ரர் உடலில் எட்டு கோணல்களைக் கொண்டவர். நவக்ரஹங்களில் ஒரு தெய்வமான சனி பகவான் ஒரு கால் இல்லாதவர்… மிராக்கிள் ஹீலிங் (Miracle Healing) என்றொரு தனி அறிவியலையே இவர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் குறிவைப்பது ஏழை எளியவர்கள், நோயாளிகள் மாற்றுத் திறன் கொண்டவர்கள் போன்றவர்களைத்தான்….
View More மதங்களும் மாற்றுத் திறன் கொண்டவர்களும்