இந்தியாவில் உள்ள ஊடகங்கள் பெரும்பாலும் கிறுத்துவ நிறுவனங்களாகவோ, அல்லது, கிறுத்துவ நாடுகளிடமிருந்து நிதி பெறும் நிறுவனங்களாகவோ, அல்லது, கிறுத்துவர்களால் நடத்தப்படும் நிறுவனங்களாகவோ, அல்லது, கிறுத்துவர்களும் இடது சாரி சிந்தனை கொண்டவர்களும் செக்யூலரிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் மௌடீக ஹிந்துக்களும் அதிக அளவில் வேலைபார்க்கும் நிறுவனங்களாகவோ இருக்கின்றன. எனவே அவை அனைத்தும், இந்த தேசத்தின் ஹிந்துத் தன்மையை முழுவதுமாக அழித்து, கிறுத்துவ கலாசாரத்தை இந்நாட்டில் நுழைக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் ஒன்று சேர்ந்து வேலை செய்கின்றன.
View More கிறுத்துவப் ‘பொதிகை’ பொழியும் மதப் பிரசாரம்!தமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ?
தமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ
கம்பனின் இராமனை வெறுப்பவர் தமிழ் வளர்ப்பவரோ
ஔவையின் முருகனை மறுப்பவர் தமிழர் தானோ …
தமிழின் கொள்கைக்கு பகைவர்
தமிழ் வளர்ப்பதேனோ – இவர்
தமிழ் விற்றே தன் குலம் செழிப்பர்
இதை உணர்வார் யாரோ …
ரத்தங்கள் சிந்தி கட்டினன் தமிழன்
சில சொற்களை சிந்தியே தகர்த்திட பார்க்கின்றார்
கபில் சிபலின் பத்து கட்டளைகள்: ஒரு பார்வை
நம் நாட்டின் இன்றைய பொருளாதார நிலையில் எல்லோருக்கும் தரமான கல்வியை அளிக்க முடியாது என்றாலும் நடைமுறையில் இருக்கும் குறைபாடுகளைக் கலைவது மிகவும் அவசியம். முக்கியமாக இக்கட்டுரைக்கு விஷயமான உயர்கல்வியில் நம் நிலை மோசமாகவும் இல்லை. இதற்கான உதாரணமாக நமக்குக் காட்டப்படும் IIT, IIM மற்றும் IISc போன்றவற்றின் நம்பகத்தன்மை. அதே நேரத்தில் CII போன்ற அமைப்புகளின்படி இந்தியாவிற்குத் தேவைப்படும் தகுதியுள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதைச் சரிசெய்ய நாம் ஒன்று, புதிய தகுதிவாய்ந்த பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும் அல்லது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிக்க வேண்டும்.
View More கபில் சிபலின் பத்து கட்டளைகள்: ஒரு பார்வைகூவாகம் கூத்தாண்டவர்: புத்தக விமரிசனம்
உலகின் பிற பாகங்களில் வாழும் அலிகளைக் காட்டிலும் இந்தியாவில் வாழும் அலிகள் கௌரவமாக வாழ்வதாகவும், இந்திய புராண இதிகாச மரபுகள் இதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அந்த ஆய்வாளர் கருதுகிறார்… தமிழ்நாட்டு அலிகள் நகர்ப்புற நாகரிகங்களிலும், திராவிடவாதிகளின் பிரச்சாரத்தையே முன்னெடுத்த திரைப்படங்களிலும், இழிவாகவே காட்டப்பட்டனர்… ஏசி அறை செமினார்களால் அல்ல, இத்தகைய பாரம்பரியங்களே இந்த மண்ணின் “விளிம்பு நிலை” மாந்தரை அழகுடனும் சுயமரியாதையுடனும் வாழ வைக்கிறது.
View More கூவாகம் கூத்தாண்டவர்: புத்தக விமரிசனம்நம்மைத் தேடி வரும் இறைவன்
நமக்கேற்ற இறைப்பணி ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதைச் செய்யும்போது அதில் சந்தேகம் மட்டும் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அப்படிச் சந்தேகம் வந்தால் அதைப் போக்குவதிலும் சற்றே காலவிரயம் ஆகலாம்….
கடவுள் எங்கும் உள்ளார், அருள் எப்போதும் உண்டு என்று நாம் கேள்விப்பட்டாலும், அது நமது அனுபவமாக ஆகும்வரை நமக்குப் பல விதமான சந்தேகங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். அவை அனைத்தையும் தீர்ப்பதுபோல் நிகழ்வுகள் நடக்கும்போது, நமது சந்தேகங்கள் ஆச்சரியமாக மாறலாம். நல்ல வேளையாக எனக்குச் சந்தேகங்கள் பெருத்த அளவில் இல்லாததாலோ என்னவோ, அனுபவங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.
View More நம்மைத் தேடி வரும் இறைவன்ஹலால் கறியா ஜட்கா கறியா?
ஆடுகளும் கோழிகளும் ஒரே வீச்சில் கழுத்து துண்டாக்கப்பட்டு கொல்லப்படுவதை ஜட்கா எனலாம். ஆனால், இஸ்லாமிய ஹலால் முறையில் ஆடுகளின் கழுத்து ஒரு கீறல் கீறப்பட்டு மெல்ல மெல்ல துடிதுடித்து சாகிறது…ஒரு மிருகம் மெல்ல மெல்ல துடிக்க துடிக்க கொல்லப்படும்போதும் அதிலிருந்து ரத்தம் வெளியேறும் போதும் அதன் உடலின் செல்களில் விஷங்கள் (toxins) உருவாக்கப் படுகின்றன. அது உடலில் உள்ள ரத்தத்தில் கலந்து ஓரளவு வெளியேறினாலும், பல விஷங்கள் அதன் கறிப்பகுதிகளில் தங்குகின்றன.
View More ஹலால் கறியா ஜட்கா கறியா?அங்காடித் தெரு – திரைப்பார்வை
‘அண்ணாச்சி’ முருக பக்தர் என்றாலும், அவருக்கு வேலுக்கும் சேவல் கொடிக்கும் நடுவில் இருப்பது முருகன் அல்ல, லாபம் மட்டும்தான். சுபம் அல்லாத லாபம்.. இரக்கமின்றி கண்காணிக்கப்பட்டு வதைத்தே விலங்குகளாக வைக்கப்படும் அந்த இடத்திலும், அனைத்து இயந்திரத்தனமான மானுடம் மறந்த மனிதர்களின் சிறைகளை உடைத்துக் கொண்டு, உயிர்த் துடிப்பு தன்னை, தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.
View More அங்காடித் தெரு – திரைப்பார்வைபிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்
‘பெற்றோர் இறந்தவுடன் அவர்களுக்கு பித்ரு காரியம் செய்கிறேன் என்றால் அவர்களுக்குத் தெரியவா போகிறது? அது அவர்களை அடையப் போகிறதா என்ன? அதற்குப் பதிலாக அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை நன்றாகக் கவனித்துக் கொண்டால் போதும். இறந்த பிறகு ஸ்ராத்தம் என்று சடங்குகள் செய்யத் தேவையில்லை. அப்படிச் செய்யவில்லை என்றால் அதனால் நம் பிள்ளைகளையும், பேரன்களையும் பாதிக்கும் என்பதெல்லாம் சும்மா புருடா.’– இதுவே இன்றைக்குப் பரவலான கருத்து.
View More பிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்தாலியும் பர்தாவும் விஜய் டிவியும் – நடந்தது என்ன?
தாலி பற்றிய நிகழ்ச்சியால் ஏற்பட்ட பின்னடைவினாலோ அல்லது ஹிந்துக்களைத் திருப்திப் படுத்துவதற்காக ஒரு நாடகம் நடத்தவேண்டும் என்ற எண்ணத்தினாலோ, விஜய் டிவி நிறுவனம், “முஸ்லிம் பெண்கள் பர்தா உடை அணிவது அவசியமா?” என்ற தலைப்பில் ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தது. நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதியும் (17-01-10) விளம்பரப்படுத்தப்பட்டது. அதை உஷாராய் கவனித்த ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்’, மாநகரக் காவல்துறை ஆணையருக்கும், விஜய் டிவி நிறுவனத்திற்கும் தனித்தனியே கடிதம் அனுப்பியது.
View More தாலியும் பர்தாவும் விஜய் டிவியும் – நடந்தது என்ன?நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்
பெரும்பாலான இந்தியமொழிகளின் இலக்கிய வரலாறு என்பதே அம்மொழிகளில் எழுதப் பட்ட ராமாயண நூலில் தான் தொடங்குகிறது. இந்திய தேசிய உருவாக்கத்தில் ராமாயணத்தின் பங்கு மகத்தானது… சீதை போன்ற மற்றொரு பெண்மணியை இதுவரை தோன்றியிருக்கும் உலக இலக்கியங்கள் ஒன்றிலும் காணமுடியாது. இனிமேலும் காண்பதரிது. சீதை ஒப்பற்றவள்… தியாகத்திற்கு எல்லை உண்டா? சகோதர பாசத்திற்கு எல்லை உண்டா? பக்திக்கு எல்லை உண்டா? ஆசைக்குத் தான் எல்லை உண்டா?
View More நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்