பாலராமாயணம் – 2
சிறுவர்களுக்காக மிக எளிமையாகச் சொல்லப்பட்ட ராமாயணம்.
அந்த வேள்வித் தீயிலிருந்து சிவந்த கண்களும் நெருப்புப் போன்ற தலைமயிரும் கொண்ட பூதம் ஒன்று தன் கையில் அமுத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டது. அதை வாங்கிப் பட்ட மகிஷிகளுக்குக் கொடுக்கும்படி தசரத சக்ரவர்த்தியை வசிஷ்டர் வேண்டிக்கொண்டார்….
View More பாலராமாயணம் – 2கம்பராமாயணம் – 2 (Kamba Ramayanam Canto 2, Part 2)
கம்பராமாயணம், பாலகாண்டம், ஆற்றுப்படலத்தின் இரண்டாம் பகுதி; பாடல்கள் 11-15.
பருத்த முகங்களையும், (நீரில் புரள்வதால்) களிப்பையும் உடைய (அல்லது, நீரில் சிந்திக் கிடக்கும் கள்ளைபங {தேனை} பருகிய) யானைகள், குதிரைகள், பலவிதமான மிருகங்கள் என்று இவற்றையெல்லாம் அடித்து உருட்டிக் கொண்டு செல்கிறது வெள்ளம். இவற்றினோடு அழகான கொடிகளும் வந்து சேர்ந்து தங்குவதால் (அல்லது விலை மதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்ட கொடிகள் பறக்கின்ற தேர்களும் வந்து சேர்வதால்) அந்த ஆறு, கடல்மேல் போர் தொடுப்தற்காகப் படையைத் திரட்டிக்கொண்டு போவதைப் போல இருந்தது.
முத்து மாரியம்மன் கோவில், மலேஷியா – வீடியோ
கீதை, சீதை, தாய் தெய்வம், பெண்ணடிமைத்தனம்: சில கேள்விகள்
ஸ்ரீ கிருஷ்ணர் “பெண்களும் பரகதி பெறுவர்” (கீதை 9.32) என கீதையில் கூறுகிற போது அவர் கூறுவது ‘பெண் தாழ்ந்தவள்’ எனும் மனநிலை படைத்த ஆணினை நோக்கி என்றே கருத வேண்டும். “அவளுக்கு ஞானமும் வீடுபேறும் கிடைக்கும்” என கீதை சொல்வது மிக உன்னத நிலையை இந்த பிறவியிலேயே அவள் அடைந்திட முடியும் என்னும் எக்காலத்துக்குமான உண்மையையும் எனப் புரிந்து கொள்ள வேண்டும்….சீதை எந்த இடத்திலும் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கும் ஒரு பெண்ணடிமைப் பாத்திரமாக சித்தரிக்கப் படவில்லை. மாறாக வலுவான பெண்ணியப் பார்வை கொண்ட, அதே நேரத்தில் சமுதாயத்துக்கு ஒரு தன்னிறைவு இலட்சியமாக திகழும் பாத்திரமாகவே அவள் காட்டப் படுகிறாள். குறுகிய எல்லைகளைக் கடந்து மானுடம் முழுவதையும் அரவணைக்கும் பார்வையை சீதை மூலமாக இராமாயணம் நமக்கு வைக்கிறது
View More கீதை, சீதை, தாய் தெய்வம், பெண்ணடிமைத்தனம்: சில கேள்விகள்அனுமன் வேதம் – கவிதை
தளர்வு தகர்க்கும் சோம்பல் துடைக்கும்
மயக்கம் அறுத்து மனம் தெளிவிக்கும்
மாண்பு பெருக்கும் மாருதி மந்திரம்
அச்சம் தவிர் அச்சம் தவிர் என
அறைந்து முழங்கும் அனுமன் வேதம்
மன்மத காருணீஸ்வரர் ஆலயம், சிங்கப்பூர் – வீடியோ
எல்லா மதங்களும் ஒரே நோக்கத்தை கொண்டிருக்கின்றனவா?
எல்லா மதங்களும் ஒன்று, ஒரே நோக்கத்தைக் கொண்டவை. எல்லாம் ஒன்றுதான் என்பதுபோன்ற வசனங்களை மீண்டும் மீண்டும் நாம் கேட்டு வருகிறோம். ஆனால், இது உண்மையா? நமது இந்து மதத்தைப் போன்றவைதானா மற்ற மதங்களும்? நமது நோக்கத்தைப் போன்றதுதானா மற்ற மதங்களின் குறிக்கோள்களும்? – இத்தகைய கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் உரைநிகழ்த்தவுள்ளார்
தொழுதகு தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.
தினம்: ஜூலை 20, 2008 (ஞாயிறு) மாலை 6:30 லிருந்து 8:30 வரை.
View More எல்லா மதங்களும் ஒரே நோக்கத்தை கொண்டிருக்கின்றனவா?Living wonders of India – Temples of Tamilnadu
இந்திய மரபணுக்கள் (ஜீன்கள்) பற்றிய அறிவியல் ஆய்வுகள்
இந்திய மரபணு வகைகள் ஆராய்ச்சித் திட்டம் (The Indian Genome Variation Project or IGV Project) என்கிற இந்த இந்த ஆராய்ச்சியின் மூலமாக, மரபணுக்கள் எவ்வாறு நோய்களுக்குக் காரணமாக உள்ளன, எவ்வாறு நோய்த் தொற்றுக்கு மக்களை இலக்காக்குகின்றன, மருந்துகளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகின்றன என்பது பற்றிய பல முக்கியமான விவரங்கள் தெரியவந்திருப்பாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்…..
இந்த அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் ஆரியப் படையெடுப்பு, திராவிடர்களின் பூர்வீகம், இந்தியாவின் பண்டைக்கால புலம் பெயர்தல்கள் ஆகியவை பற்றி பொதுவாக நிலவும் வரலாற்று ஊகங்கள் பற்றிய பல துணுக்குறும் கேள்விகளை எழுப்புகின்றன.
