ரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பகுதி)

உலகு உண்மை ஒருவிதம், ஞானிகளின் உலகமோ வேறு விதம் [..] “பந்தன் நான் எனும் மட்டே பந்த முக்தி சிந்தனைகள்” என்பார் ரமணர். அந்த “நான்” இல்லாதவனுக்கு பந்தம் எப்படி வரும்? [..] ருமதி. கனகம்மாள் எழுதிய “ஸ்ரீ ரமண நூற்றிரட்டு உரை”யின் துணை கொண்டு எழுதப் பட்ட அற்புதமான தொடரின் நிறைவு பகுதி இது…

View More ரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பகுதி)

ரமணரின் கீதாசாரம் – 14

ரமணரைத் தரிசிக்க வெளிமாநிலத்திலிருந்து வந்த ஒருவர், ரமணரது வாழ்க்கைச் சரிதையை எழுதியிருப்பதாகவும் அதை ரமணரே திருத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ரமணரும் ஒத்துக்கொண்டு, அதை முடித்து அந்தக் கைப்பிரதியை அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார். அதில் ரமணருக்குப் பல மனைவிகள் உண்டு என்றும், அவருக்குக் குழந்தைகள் உண்டு என்பன போன்ற உண்மைக்குப் புறம்பான விவரங்கள் இருந்தன [..]

View More ரமணரின் கீதாசாரம் – 14

ரமணரின் கீதாசாரம் – 13

எல்லா ஆசைகளையும் விட்டொழிப்பது என்பது சாமான்ய காரியமல்ல என்றாலும், இந்த வகையான சிறிய ஆசைகள் கூட இல்லாது இருப்பவனுக்கே மனம் ஒரு ஸ்திரநிலைக்கு வந்து அவனை மேலும் உள்நோக்கிச் செல்ல வைக்கும். அவனுக்கே தத்துவ தரிசனமும் கிட்டும். […]

View More ரமணரின் கீதாசாரம் – 13

ரமணரின் கீதாசாரம் – 10

ஒன்று கிடைக்க வேண்டும் அல்லது சேர வேண்டும் என்று நினைப்பதும் ஆசையே; ஒன்று கிடைக்க வேண்டாம் என்பதும் ஆசையே. அப்படி அது இருதரப்பட்டது போலவே, சேரவேண்டியது சேராவிட்டாலும், சேர வேண்டாதது சேர்ந்து விட்டாலும் வருவது கோபமே.[..] சலனமற்ற மனமாகிய நீர்பரப்பில் தோன்றும் குமிழிகள் போல இருப்பதால், அவை எழாத இடத்தில் மனமும் அடங்கியே இருக்கும். சாதகனைப் பொறுத்தவரை அவனது ஒவ்வொரு எண்ணமும் அடங்க அடங்க அவனுக்கும் மன அமைதி கிடைக்கும் [..]

View More ரமணரின் கீதாசாரம் – 10

ரமணரின் கீதாசாரம் – 9

சாதாரணமாக அருச்சுனன் போன்ற வீரர்கள் போர்க்களத்தில் புகுந்தால் பகைவர்களை வென்று வெற்றியைக் குவிப்பதில்தான் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஆனால் இங்கோ அருச்சுனனுக்கு ஏற்பட்ட நிலை அவனது மன சஞ்சலத்தினால் ஏற்பட்டுள்ளது. முன்னால் நிற்பவர்களைப் பகைவர்களாகப் பார்க்காது தன் சுற்றத்தினர்களாகப் பார்த்ததால் வந்த விளைவு [..]

View More ரமணரின் கீதாசாரம் – 9

ரமணரின் கீதாசாரம் – 8

ஒரு முறை ரமணர் இருக்கும் பக்கம் அவருக்கு வெகு அருகில் ஒரு பாம்பு வந்ததாம். அவர் பாம்பைப் பார்த்துக்கொண்டு நிற்க, பாம்பும் அவரைப் பார்த்து படமெடுத்துக் கொண்டு நின்றதாம். வெகு நேரம் சென்ற பின் பாம்பு தன் வழியே போக, அவரும் அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த அரிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அன்பர் ஒருவர் ரமணருக்கு அந்த சமயத்தில் என்ன மாதிரி உணர்வு இருந்தது என்று அவரிடம் கேட்டிருக்கிறார் [..]

View More ரமணரின் கீதாசாரம் – 8

ரமணரின் கீதாசாரம் – 3

தீமைகள் வளரும் போது அவைகளைத் தடுக்கும் எண்ணம் இல்லாது போனால், நன்மைகள் வளர முடியாது என்பதையும் நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம் அல்லவா? அப்போது தீமைகள் ஊக்குவிப்போரை எப்படி அடக்க வேண்டும் என்பது தானே நமது லட்சியமாய் இருக்கிறது? இந்தப் போர்க்களத்தில் நடக்கப் போவதும் அதுவே…

View More ரமணரின் கீதாசாரம் – 3

போகியை யோகி எனல்

உடலின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் ஒத்துழைத்தாலும் எதுவும் தனது சுய நலனுக்காக அல்ல. இதை ஆத்மாவுக்கு அனுசரணையாகப் பக்குவப்பட்ட உள்ளம் உணர்ந்திருக்குமானால் அதன் செயல், காமத்தின் விளைவாக நிகழும் செயலாகவே இருப்பினும் அது உள்ளத்தையும் உள் அந்தரங்கமான ஆத்மாவையும் பாதிப்பதில்லை. இதனால்தான் போகியை யோகி என்று கூற முடிகிறது.

View More போகியை யோகி எனல்

அறியும் அறிவே அறிவு – 12

கற்றவன் என்ற கர்வம் வந்ததால் எண்ணம், பேச்சு என்று எதிலும் தனது தனித் தன்மையை நிலை நாட்டும் செயல்களில் ஈடுபடுவதால் வாதங்கள் புரிவதிலும், தனது பெயரையும், புகழையும், பற்றுகளையும் பெருக்கிக் கொள்வதில் காலத்தைச் செலவிடுமே தவிர, தான் பெற்ற அறிவால் தன்னைத் தெரிந்து கொள்ளும் வழியில் இருந்து தப்பிச் சென்றுவிடும். இதுதான் அடி முடி தேடிய புராணத்தில் பிரமன் சென்று தெளிந்த பாதை […]

View More அறியும் அறிவே அறிவு – 12

அறியும் அறிவே அறிவு – 9

பிராணாயாம வழிகளில் செல்லும் போது நமது அறிவு முடிவான “உள்ள நிலை”யைத் தெரியாதிருப்பதோ, அல்லது அதைத் தேர்ந்தெடுத்துச் செல்லாதிருப்பதோ மிக அபாயகரமானது… ரமணர், “கற்றும் அடங்காரில் கல்லாதாரே உய்ந்தார்” என்பார்… இருக்கும் எல்லாப் பற்றினுள் தேகப் பற்றே ஆழமானதும் விடுதற்கு அரியதுமானதும் ஆகும்.

View More அறியும் அறிவே அறிவு – 9