ஒரு பயணம் சில கோயில்கள்

வழியில் கிடைத்த எல்லா கோயிலுக்குள்ளேயும் நுழைந்தேன். பல முறை பார்த்த கோயில்கள், பார்க்க நினைத்த கோயில்கள் என எதையும் விட்டு வைக்க வில்லை. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் நுழைந்தேன்… சோழ பெருவளத்தான் கரிகாலன் தேரில் சென்று கொண்டிருந்தபோது தேர் திருவையாற்றிலிருந்து நகரவில்லை. தேர் அசையாதிருக்கும் இடத்தில் அகழ்ந்தெடுக்கக் காவலாளிகளை ஏவுகிறான். இங்கே முதலில் தட்டுப்படுவது சிவலிங்கம்.. ராம பக்தியை நாம சங்கீர்த்தனங்கள் மூலம் பரப்பியவர். இவரது சமாதியில் ஆழ்ந்த மௌனத்தில் ராம நாமத்தை இன்றும் பலர் கேட்கின்றனர்…

View More ஒரு பயணம் சில கோயில்கள்

சென்னையில் தெருக்கோயில்கள் இடிப்பை எதிர்த்து 14-ஜூலை அன்று கண்டன ஆர்ப்பாட்டம்

அடித்தட்டு மக்கள், வாழ்க்கையில் முன்னேற கிராமங்களின் வாழ்வாதாரங்கள் நசித்த நிலையில் அகதிகளாகவே சென்னை போன்ற நகரங்களுக்கு புலம் பெயர்ந்திருக்கும் மக்கள் – இவர்களின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் புல்டோசரால் இடித்து காயப்படுத்தி அதில் திராவிட பாசிஸ்டுகளுக்கே உரிய விதத்தில் குரூர ருசி காண்பது போன்று அரசுத் துறையினரின் செயல்பாடுகள் இருக்கின்றன.. நாகாத்தம்மன், கங்கையம்மன், முத்தாரம்மன், மாரியம்மன், அங்காளம்மன் என்று பற்பல திருப்பெயர்களில் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில்…

View More சென்னையில் தெருக்கோயில்கள் இடிப்பை எதிர்த்து 14-ஜூலை அன்று கண்டன ஆர்ப்பாட்டம்

அழைத்து அருள் தரும் தேவி

சன்னதியில் தேவி மூன்று பிண்டிகளாக (சுயம்பு ரூபங்களாக) தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள். சிலைகளோ அல்லது மூர்த்திகளோ கிடையாது…“கவலைப்படாதே! அந்த நொடியில் அருள் பாலிக்கத்தான் தேவி உன்னை அழைத்திருக்கிறாள்” என்று ஆங்கிலத்தில் யாரோ யாருக்கோ சொல்வது நம் காதில் விழுகிறது… நுழை வாயிலில் அடுக்கிய மணல் மூட்டைகளுக்கிடையே ஒளிந்திருக்கும் தூப்பாக்கிகளும் அதன் பின்னேயிருக்கும் மிடுக்கான ராணுவவீரர்களும் அந்த ரம்மியமான சூழலுக்கு சற்றும் பொருந்தாமல் இருந்தாலும்…

View More அழைத்து அருள் தரும் தேவி

தேவி சூக்தம்

மானுடர் உண்பதும் காண்பதும் சுவாசிப்பதும் சொல் கேட்பதும் எல்லாம் என்னால். அதை அறியார் ஆயினும் அவர்கள் என் உள் உறைபவரே… மனதில் எண்ணம் உருவாகி அது சொல்லாகப் பரிணமிப்பது பற்றிய ஆழ்ந்த உளவியல் தத்துவம் அது. வாக்கு அல்லது மொழி நான்கு படிநிலைகள் கொண்டது என்று தந்திர சாஸ்திரம் கூறுகிறது. பரா என்பது வாக்கின் ஆதி நிலை … கவிஞனின் தனி மனம் பிரபஞ்ச மனத்துடன் ஒன்றுபடும் தருணத்தில் ஏற்படும் ஆன்மிக பரவச நிலையிலேயே அத்தகைய கவிதை எழுகிறது. அது காலவெளியையும் கடந்து செல்கிறது.

View More தேவி சூக்தம்

வில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம்

பதினொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் வங்கத்தில் நிலவிய இந்துமத வாழ்க்கையும் நடைமுறைகளையும், நம்பிக்கைகளையும் அறிந்து கொள்வதில் என்ன பயன் இருக்கப் போகிறது என்று நினைக்கலாம். இந்து மதத்தின் வேதங்களுக்கும் தத்துவ தரிசனங்களுக்கும் முரணான, சம்பந்தமற்ற எவ்வளவோ கொடிய பழக்கங்கள் நம்பிக்கைகளும், இந்து மதத்தின் பெயரைச் சொல்லி அவ்வப்போது கால நீட்சியில் தோன்றியபோதிலும், அவ்வப்போது இந்துமதம் தன்னை விமர்சித்துக்கொண்டு புதுப்பித்துக்கொள்ளவும் செய்கிறது, அந்த விமர்சனங்கள் இந்து மதத்தின் உள்ளிருந்தே எழுகிறது என்பதை இந்த ஆவணம் நமக்குச் சொல்லாமல் சொல்கிறது.

View More வில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம்

இறைமை ததும்பும் இரவு: நவராத்திரியை முன்வைத்து ..

இரவு அச்சமூட்டுவது, வசீகரிப்பது, மர்மங்களும் ஆழ்ந்த அமைதியும் கொண்டது. அதனால் தான் நம் மரபில் இரவைப் பெண்ணாக, தேவியாக உருவகித்தார்கள் போலும்! உலகின் வெளித் தோற்றங்கள் அனைத்தும் காரிருளில் கரைந்து மறையும் அந்தக் காலவெளியை, அக எழுச்சியை விழையும் அனைத்து விதமான மாந்தர்களும் சரணடைகிறார்கள் – ஞானிகள், கலைஞர்கள், கவிஞர்கள், போகிகள், யோகிகள், இலக்கின்றித் தவிப்பவர்கள் யாராயினும்…

View More இறைமை ததும்பும் இரவு: நவராத்திரியை முன்வைத்து ..

அன்னையின் அகவழிபாடு – மாதா அமிர்தானந்தமயி

மூன்று முறை “ஓம்” ஜபிக்கவும். கண்களை மூடி, நாபியிலிருந்து ஓங்கார நாதம் எழும்பித் தலை உச்சியிலுள்ள ஸஹஸ்ராரத்தைச் சென்று அடைவதாக பாவனை செய்யவும். ஓங்காரம் ஜபிக்கும்போது நமது தீய இயல்புகளும், கெட்ட எண்ணங்களும் வெளியேறுவதாகவும், நல்ல எண்ணங்களும், நல்லியல்புகளும் நம்முள் நிறைவதாகவும் எண்ண வேண்டும். மேலும், உள்ளத்திற்கும் உடலுக்கும் புத்துணர்வும், உற்சாகமும் ஏற்படுவதாக பாவனை செய்யவும்.

View More அன்னையின் அகவழிபாடு – மாதா அமிர்தானந்தமயி

கன்யாஸ்திரீயையும் நனைக்கும் கருணை மழை

இலங்கையில் தேராவாத பௌத்தம் இனவெறியாக மாறித் தமிழர்களைக் கொன்றுபோடுகிறது. ஆனால், அங்கிருக்கும் ஒரு துறவியை இந்துமதம் அன்பினால் கவருகிறது… “ஹிந்து மதத்தின் மீது எனக்கு ஒரு ரகசிய ஈர்ப்பு ஏற்பட்டது. நமக்குப் பிடித்தமான ஒன்றில் லயித்து, அதனோடு ஒரு உறவை வளர்க்கும் ஆர்வமானது அடிப்படையான மனித இயல்பு. என்னைக் கவர்ந்தாள் காளி…கிருத்துவ மதத்தை முற்றிலும் கைகழுவினேன்.”

View More கன்யாஸ்திரீயையும் நனைக்கும் கருணை மழை

ஆயுதபூஜை, விஜயதசமி: தேசசக்தி பொங்கும் தெய்வத் திருவிழா!

நம் தேசத்தில் தர்மத்தின் வெற்றிக்காகப் போரிட்டு, நல்லாட்சி புரிந்த சேரசோழ பாண்டியர், குப்தர்கள், ராஜபுத்திரர்கள், விஜயநகர மன்னர்கள், வீரசிவாஜி, குருகோவிந்த சிம்மன் முதலிய அனைத்து வீரர்களும், மன்னர்களும் தங்கள் ராஜ்ஜிய மக்களுடன் இணைந்து கொண்டாடிய வெற்றித் திருநாள். நம் தேசத்தின் முப்படைகளும், அரசு நிறுவனங்களும், தொழில் மையங்களும், வணிகத் தலங்களூம், கல்விக் கூடங்களும், கலைஞர்களும் சக்தியும், ஊக்கமும், வெற்றியும் வேண்டி ஒவ்வோர் ஆண்டும் உற்சாகத்துடன் கொண்டாடும் தேசியத் திருநாள்.

“தேவி! மூவுலகிலும் சஞ்சரிக்கும் உனது அழகிய வடிவங்கள் எவையோ அவற்றாலும், அளவு கடந்த கோரமான வடிவங்கள் எவையோ அவற்றாலும் இப்பூவுலகையும் எங்களையும் காத்தருள்வாய்.”

View More ஆயுதபூஜை, விஜயதசமி: தேசசக்தி பொங்கும் தெய்வத் திருவிழா!

நவராத்திரி பற்றி பாரதியார்

சக்தி. நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. விக்ரமாதித்யனும், காளிதாஸனும் வணங்கிய தெய்வம். உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழையருள் புரியும் சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் வணங்கி பூஜைகள் செய்யவேண்டும் என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம். மேலான வழி.

சக்தியால் உலகம் வாழ்கிறது.
நாம் வாழ்வை விரும்புகிறோம்.
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்.

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்!

View More நவராத்திரி பற்றி பாரதியார்