உலகம் முழுவதுமே எல்லாத் தொழில்களும் பரம்பரை வழியிலேயே கைமாற்றித் தரப்பட்டபோதிலும் பாரதத்தில் மட்டுமே அப்படி இருந்ததாகவே மெக்காலே கல்வி முத்திரை குத்தியது. ஐரோப்பாவிலும் நவீன பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகே கல்வி அனைவருக்கும் கிடைத்தது என்றாலும் பாரதத்தில் மட்டுமே கல்வி அனைவருக்கும் மறுக்கப்பட்டதாக அவர்கள் நம் வரலாற்றை எழுதிக் கொடுத்தார்கள். அதுவே இன்றைய அறிவுஜீவி, அரசியல் ஜீவி மட்டங்களில் மனனம் செய்யப்பட்டு முழங்கப்படுகிறது…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 11Tag: தலித்துகள்
புதிய பொற்காலத்தை நோக்கி – 10
எல்லாரும் எல்லா தொழிலையும் கற்றுக் கொண்டு விருப்பமான தொழிலைத் தேர்ந்தெடுக்கும் இன்றைய பள்ளிக் கல்வி முறை அன்று உலகில் யாராலும் நினைத்துப் பார்க்கவே பட்டிருக்கவில்லை. எனவே இந்தியாவிலும் அது இருந்திருக்கவில்லை… அக மண முறையும், குல பந்தி – குல விருந்து முறையும் இயல்பான தேர்வாகவே இருந்திருக்கிறது. இந்துசமூகத்தில் மட்டும் கடைநிலையில் இருந்தவர்களும் இழிவான தொழிலைச் செய்தவர்களும் மேலேற முடியாமல் போய்விட்டது என்ற வாதத்தில் அர்த்தமே இல்லை. அவர்களுக்கான வெளிகள், உரிமைகள், அதிகாரங்கள் எல்லா காலத்திலும் இருக்கவே செய்திருக்கின்றன…
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 10திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்
பா.ரஞ்சித்திடம் பெரியார் முகமூடியை போடு இல்லையென்றால் நீ ஜாதி வெறியன் என்ற லாவணியை பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இது மெல்ல விவாதமாவது தமிழகத்தின் தலையாய தேவை. இன்றும் பெரியாரியம் யாருக்கு ஒரு முகமூடி என்பதை அரசியல் எதார்த்தம் சொல்லும். பிற்படுத்தப்பட்ட எழுச்சியும், அதிகாரமும் பட்டியல் ஜாதிகளுக்கு உறுத்தக்கூடாது என்ற ஏற்பாடு மட்டுமே பிராமண வெறுப்பு பேசுகிற திராவிடத்தின் மைய நோக்கம்… நீதிக்கட்சி இந்து மதத்திற்கு விரோதமாக இல்லை, ஆனால் தி.க/திமுகவின் இந்து மத விரோத கருத்துகள் மிஷனரி, இஸ்லாமிய மதமாற்றும் அரசியலுக்கு பயன்பட்டன. பிற்படுத்தப்பட்ட அதிகார எழுச்சி, ஆபிரஹாமிய மதமாற்ற குழுக்கள் மட்டுமே இன்றும் பெரியார் என்கிற முகமூடியை வேறு வேறு காரணத்திற்காக நீட்டித்துக் கொண்டிருக்கின்றன… ஆக, அன்று திமுக இன்று சீமான் பேசுவது போல இன்னும் சிறப்பாகவே பேசியது. தமிழர் ஆட்சி ஒப்பற்ற பேராட்சி ஆனால் பிராமணியம் சதி செய்து ஒழித்துவிட்டது என்று முன் வைத்தது. இன்று அதை மாற்றி சீமான் தெலுங்கர்கள் ஒழித்துவிட்டார்கள் என்கிறார். ஆனால் வரலாறு என்னவோ யாராவது தண்ணீர் தரமாட்டார்களா என்று சாவின் நொடியில் இழுத்துக் கொண்டிருக்கிறது இந்த நொடி வரை…
View More திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்தாமிரபரணி முதல் பரமகுடி வரை…
ஐயா இஸ்லாமிய அடிப்படைவாதியே ஒரு ஜனநாயக சமுதாயத்தில் சமூக நீதிக்காக போராடுவது என்பது நல்ல விசயம். அதற்கான ஜனநாயக சூழலை இந்து பண்பாடு அளித்திருக்கிறது. அந்த பண்பாட்டின் ஒரு ஏற்றமிகு உச்சமான டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் நிர்ணய சட்டம் அளித்திருக்கிறது. பெண்களை கல்லால் அடித்து கொல்வதைக் காட்டிலும் பிறமதத்தவரின் கழுத்தை வெட்டிக் கொல்வதைக் காட்டிலும் சவூதி அரேபியாவின் மானுடத்தன்மையற்ற சட்டங்களுக்கு வக்காலத்து வாங்குவதைக் காட்டிலும் குழந்தை திருமணங்கள் மூலமாக இந்திய சிறுமிகளை அராபிய ஷேக்குகளுக்கு மார்க்கரீதியாக விற்பதைக் காட்டிலும், அப்பாவிகளை குண்டு வெடிப்பில் கொன்று அதை ஜிகாத் என சொல்லி புளகாங்கிதமடைவதைக் காட்டிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதிக்காக போராடும் இந்துவாக இருப்பது எவ்வளவோ மேல். ஆனால் அது தங்கள் அராபிய அடிமைத்தனம் நிரம்பி வழியும் மூளையில் ஏறாதது ஆச்சரியமல்ல.
View More தாமிரபரணி முதல் பரமகுடி வரை…தலித்துகள் மீதான இஸ்லாமிய கரிசனை…
பாபா சாகேப் மேலும் தெளிவாக சொல்கிறார்: இஸ்லாமிய சமுதாயம் ஹிந்து சமுதாயத்தைக் காட்டிலும் சமூக தீமைகள் நிரம்பியது…. இதையெல்லாம் இந்து தாக்கத்தினால் வந்தது மற்றபடி இஸ்லாம் அதன் தூய வடிவில்…. என்று சப்பைக்கட்டு கட்டி நிராகரிக்கலாம்தான். ஆனால் அண்மையில் வெளிவந்த அப்துல் பரி அத்வன் என்பவரால் எழுதப்பட்ட ‘அல் கொய்தாவின் ரகசிய வரலாறு’ நூல் சொல்வதை கேளுங்கள்… இங்கே வந்து தலித்களுக்காக கரிசனை காட்டுவதாக சொல்லும் இஸ்லாமிய சகோதரர்கள் உண்மையிலேயே கரிசனை காட்ட விரும்பும் பட்சத்தில் குறைந்த பட்சம் இரண்டு விசயங்களை செய்யலாம். … இன்று ’தாத்தா’ என அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படும் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம்.
View More தலித்துகள் மீதான இஸ்லாமிய கரிசனை…தர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறை
கலப்பு காதல் திருமணங்களில் மணமகன் / மணமகள் ஆகியோரில் ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில், அது ஒரு குடும்ப ரீதியான கசப்புணர்வு என்பதையும் தாண்டி, கடும் சாதிய வெறுப்பு விஷமாக மாறி விடுகிறது…. ஒரு குடும்ப சோகத்தை, தற்கொலையை முகாந்திரமாக்கி அதன் மூலம் இன்னொரு சமூகத்தினருக்கு எதிரான கடும் வெறுப்பை கூட்டு வன்முறை மூலம் வெளிப்படுத்துவது என்பது ஒரு ஜனநாயக நாட்டில், நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாத செயல்… இந்து இயக்கங்கள் இந்த விஷயத்தில் மௌனம் காப்பது மிக மோசமான வரலாற்றுத் தவறாகும். ஒவ்வொரு இந்துவும் தன்னில் தலித் சகோதரர்களின் வலியை உணரும் நாளே உண்மையான இந்து ஒற்றுமை உருவாகும்…
View More தர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறைஉத்தப்புரம் சாதிப் பிரச்சினை தீர்வு – ஒரு நேரடி அனுபவம்
70 ஆண்டுகளாகத் தீராத பிரச்சினை அரசியல் கட்சிகளின் தலையீடு இல்லாதிருந்ததாலும்,அரசு நடுநிலையோடு செயல்பட்டதாலும் இந்து ஆன்மீகப் பெரியோர்கள், அமைதியை விரும்பும் இளைஞர்களாலும் உத்தப்புரம் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது. கட்சிகளைக் கடந்து உறவுகளே வென்றது. அந்த முத்தாலம்மன் அருளாலும் இது நடந்தது.
View More உத்தப்புரம் சாதிப் பிரச்சினை தீர்வு – ஒரு நேரடி அனுபவம்பரமக்குடி முதல் பாடசாலை வரை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற ஒரு தேசியவாதியின் இந்தத் தவறு இன்று இரு சமுதாயங்கள் இணைந்து தமிழ்நாட்டை மேம்படுத்த வழியில்லாமல் ஆக்கிவிட்டது…‘பாரம்பரிய’ வேத பாடசாலைகள் வேதம் ஓதும் உரிமையை தலித்துகளுக்கு மறுப்பது பச்சை அயோக்கியத்தனம் அல்லவா?
View More பரமக்குடி முதல் பாடசாலை வரைபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 04
அம்பேத்கர் இயோலாவில் மதமாற்றம் பற்றிய அறிவிப்பு செய்தவுடன் இந்தியா முழுவதுமே ஒரு அதிர்வலை ஏற்பட்டது. முக்கியமாக சில தீண்டப்படாத தலைவர்களிடையே அந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலான தலித் தலைவர்கள் இந்த யோசனையை நிராகரித்து விட்டனர்.
View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 04புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 03
[…] அம்பேத்கருடைய போராட்டங்களுக்கு வீர சாவர்க்கர் ஆதரவு அளித்தார். பல பிராமணர்களும், உயர்சாதி இந்துக்களும் ஆதரவு அளித்தனர். […] அம்பேத்கர் உடலளவிலும் ஆன்மீக நோக்கிலும் பூணூல் அணிவதன் சிறப்பை விளக்கினார். இதன் மூலம் வேதங்களை ஓதுகின்ற உரிமையை மீண்டும் பெற்றுவிட்டதாகத் தீண்டத்தகாத சமூகத்தினரைப் பாராட்டினார். அவருடைய பிராமண நண்பரான தேவராவ் நாயக் 6, 471 பேர்களுக்குப் பூணூல் அணிவித்துக் காயத்திரி மந்திரம் உபதேசித்தார். […]
View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 03