இது கீதையின் அந்தக் குறிப்பிட்ட சுலோகத்தை (9.32) குறித்த முற்றிலும் தவறான திரிபுவாதமும் பொய்ப் பிரசாரமும் அன்றி வேறில்லை. பாவிகளென்னைப் பணிவாராயினும், மாதரேனும், வைசியரேனும், சூத்திரரும் பரகதி பெறுவார் என்பது மகாகவி பாரதியாரின் மொழியாக்கம்.. சூத்திரர்கள் சமூக அந்தஸ்தில் தாழ்ந்திருந்தார்கள் என்பதால் தான் *இருந்தும் கூட* என்று வருகிறது. சத்துவ குண சம்பன்னர்களான பிராமணர்களும், ராஜரிஷிகளாகவும் உள்ளவர்களைப் பற்றி என்ன சொல்வது என்பது அவர்கள் உயர்ச்சியைக் காட்டியது. அப்படி சொன்னதால் உடனே சூத்திரர்கள் பாவப்பிறபிகள் என்று ஆகிவிடாது. இதற்கு தர்க்க சாஸ்திரத்தில் நஹி நிந்தா நியாயம் என்று பெயர். உதாரணமாக, சந்திரனும் கூட இவ்வளவு ஒளிவீசுகிறது, அப்படியிருக்க சூரியன் எவ்வளவு ஒளிதரும்? என்றால் அது சந்திரனை நிந்திப்பதல்ல..
View More சூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா?Tag: தலித் துறவிகள்
‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு’
ஏதோ வழக்கமான சாதி பெருமை பேசுகிற ஒன்று என்பதைத் தாண்டிஅந்த ஃப்ளெக்ஸ் விளம்பரப் பலகையில் வேறு எதுவும் படவில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் ஏதோ கிளறின…. எனவே பறையர் எனும் பெயரே சந்திர சேகரராக விளங்கும் சிவனைக் குறிப்பதாக இருக்கலாம். அல்லது சந்திரசேகரராக சிவன் அளிக்கும் பரையோக, பரை போக, பரை அதீத நிலையில் நிலைப் பெற்றிருப்பவர், அத்தகைய ஞானிகள் கொண்ட குலத்தில் பிறந்தவர் என்பதைக் குறிப்பதாக இருக்கலாம்… இப்பெயர் இழிவானதென நினைக்கும் போக்கு பிரிட்டிஷ் காலத்தில் உருவானது. ஆன்மிகத் தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு பெயரை ஒரு சிலர் ‘தாழ்த்தப்பட்ட’ பெயர் என கருதுவது ஏமாற்று வேலை….
View More ‘பறையர் என்பது சாதியல்ல! அது ஈசன் மரபு’சாத்வியின் “வெறுப்பைத் தூண்டும் பேச்சு” ?
சாத்வி நிரஞ்சன் ஜ்யோதி தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி. உ.பியின் ஹமீர்புர் மாவட்டத்தில், கேவட் என்னும் கங்கை நதியில் படகோட்டி, மீன்பிடித்து வாழும் பிற்படுத்தப் பட்ட சாதியில் பிறந்தவர். குகனின் வழிவந்த ‘நிஷாதர்கள்’ என்று தங்கள் பாரம்பரியத்தைப் பெருமிதமாக உணரும் சாதியினர் இவர்கள்… இத்தகைய பின்னணி கொண்ட ஒருவரை இந்து விரோத ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தாக்குவதில் என்ன ஆச்சரியம்? கிறிஸ்தவ ஆதரவாளரகவோ அல்லது இந்து வெறுப்பைக் கக்கும் தலித் அரசியல்வாதியாகவோ வளர்ந்திருந்து, இதை விட மிக மோசமான “வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்களை” பேசியிருந்தால், அவரது பேச்சு ஒடுக்கப் பட்ட விளிம்பு நிலை சமுதாயத்தின் போர்க்குரலாக அங்கீகரிக்கப் பட்டிருக்கும். ஆனால், ராமாயண பிரசங்கம் செய்து பாஜகவில் சேர்ந்து அமைச்சராகவும் அல்லவா ஆகி விட்டார்…. “முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கூட ஸ்ரீராமனின் குழந்தைகள்” என்று அவர் கூறியது “வெறுப்பு பேச்சுக்கு” மற்றொரு உதாரணமாகக் காட்டப் படுவது கொடுமையிலும் கொடுமை. ஒரு ஒப்பீட்டுக்காக, ஒரு நடக்க முடியாத விஷயத்தைக் கற்பனை செய்து பாருங்கள். பாகிஸ்தானிலோ சவுதி அரேபியாவிலோ உள்ள ஒரு சுன்னி இஸ்லாமிய மௌல்வி….
View More சாத்வியின் “வெறுப்பைத் தூண்டும் பேச்சு” ?ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்
இருபதாம் நூற்றாண்டிலும், தாழ்த்தப் பட்டவர்களிடையே ஆன்மீக ஞானிகள் உருவாக முடியும் என்பதை உலகிற்கு காட்டியவர் சுவாமி சகஜானந்தர். உயர்சாதி இந்துக்களும் வெள்ளையர்களும் தாழ்த்தப்பட்டவர்களின் மனதில் பதியும் அளவுக்கு எதிர் பிரச்சாரத்தை செய்த சூழலிலும், அவர்கள் இந்துக்களே என்பதை ஆணித்தரமாக நிரூபித்தவர்… எட்டாம் வகுப்பை தாண்டாத சுவாமிகள் தமிழிலும், வடமொழியிலும் மிக்க புலமை பெற்றிருந்தார்… 1959 வரை சிதம்பரம் தனித் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும் செயல்பட்டார்…. கோயில் நிலங்களை ஏழைகளுக்குக் கொடுப்பது குறித்தும், தாழ்த்தப் பட்டவர்கள் பெயரால் கிறிஸ்தவ மிஷன்களுக்கு அரசு எந்த நிதி உதவியும் வழங்கக் கூடாது என்றும் சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் புரட்சிகரமானவை… தமிழகத்தின் மாபெரும் தலித் இயக்க முன்னோடி, இந்து சமுதாய சிற்பி சுவாமி சகஜானந்தர் குறித்த விரிவான கட்டுரை இது…
View More ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்எழுமின் விழிமின் – 14
நமது சொந்த மக்களினமாகிற கடவுள் மட்டும் தான் இப்பொழுது விழித்துக் கொண்டிருக்கிறார். எங்கு நோக்கினும் அவரது கைகள்; எங்கும் அவரது திருவடிகள்; எங்குமே அவரது காதுகள்.. நம்மைச் சூழ்ந்து காணப் படும் விராட் புருஷனை வழிபடாமல் வீணான மற்ற தெய்வங்களின் பின்னால் ஏன் போக வேண்டும்?… எல்லாவற்றையும் பரிகாசம் பண்ணுவது, எதைப் பற்றியும் முனைந்து சிந்தியாதிருப்பது ஆகிய இந்த நோய் நமது தேசிய இரத்தத்தில் நுழைந்திருக்கிறது. இந்த பயங்கர வியாதியை விட்டுத் தொலையுங்கள். வலிமையுடன் இருங்கள். சிரத்தையுடன் இருங்கள். மற்றவையெல்லாம் தாமாக வந்தடைந்தே தீரும்..
View More எழுமின் விழிமின் – 14ஹிந்துத்துவமும் தாழ்த்தப் பட்டவர்களும்
ஹிந்துத்துவம் என்பது எந்த அளவு மேல்சாதி என தம்மை நினைக்கும் இந்துக்களுக்கு சொந்தமோ, அதே அளவு தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கும் சொந்தம். இந்த ஹிந்துத்துவத்தின் வளர்ச்சிக்கு தாழ்த்தப்பட்டவர்களான வான்மீகி, வ்யாதகீதையை எழுதிய ரிஷி, சொக்கமேளர் ரோஹிதாசர் ஆகியோர், அந்தணரான வசிஷ்டர், ஷத்திரியரான கிருஷ்ணர், வைசியரான ஹர்ஷர், சூத்திரரான துகாராம் போலவே பங்களித்துள்ளனர்.
View More ஹிந்துத்துவமும் தாழ்த்தப் பட்டவர்களும்தொடரட்டும் சீர்திருத்தம்
இந்தச் சாதியவாதிகள், இந்த மெக்காலேயின் கள்ளப் பிள்ளைகள், அவர்களது முதலாளிகளான ஆபிரகாமிய சாக்கடைப் புழுக்களோடு கள்ளத் தொடர்பில் பிழைப்பை நடத்துகிறார்கள்.
இந்தச் சாதியவாதிகளில் சில சாதியார் நடத்தும் பொது அமைப்புக்களில், பள்ளிகளில், சாதி அடிப்படையில் தனிப் பந்தி இன்னமும் நடக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
View More தொடரட்டும் சீர்திருத்தம்