வடு மாங்காய், நம் நாட்டில் அழிந்து வரும் ஒரு பயிர் இனம் . இது சாகுபடி செய்யப்படுவது கிடையாது. வனப்பகுதிகளில் மானாவாரியாக விளையக் கூடியது. பழமாக மாற்றி சாப்பிட முடியாது. ஊறுகாய்க்கென பிரத்தியேகமானது.. சரி, காளமேகப் புலவரின் “திங்கள் நுதலார் திரு மனம் போலே கீறி” என்ற மாவடுப் பாடலுக்கு வருவோம். இதற்கு இரண்டு பொருள் உண்டு.. மாவடு உண்ட மகாதேவராக சிவபெருமான் 63 நாயன்மார்களில் ஒருவருக்கு அருள்புரிந்தார்..
View More அழிந்து வரும் அபூர்வ வடுமாங்காய்Tag: பெரிய புராணம்
சேக்கிழாரின் செழுந்தமிழ்
கட்டுரையாசிரியர்கள்:கம்பபாத சேகரன் (சங்கரன்) & மீனாட்சி பாலகணேஷ் இலக்கியம் என்பது மாந்தர்களை நெறிப்படுத்தி…
View More சேக்கிழாரின் செழுந்தமிழ்பல்லக்கு, சிவிகை, பாரம்பரியம், அறம்
ஆக, பல்லக்கு தமிழக அரசியல் களத்தில் சூடான விவாதப் பொருளாகி விட்டது. அச்சொல் பர்யங்க – பல்லங்க என்ற சம்ஸ்கிருத மூலம் கொண்டது. அதற்கான பழைய சொல் சிவிகை. சம்பந்தர் அழகிய சிவிகையில் அமர்ந்து காட்சி தருவதையும், ஏறி இறங்குவதையும் ஏகப்பட்ட இடங்களில் சேக்கிழார் பரவசத்துடன் வர்ணித்துச் செல்கிறார். அறத்தின் பயன் இது என்று நீட்டி முழக்கிச் சொல்லவேண்டாம்; சிவிகையில் அமர்ந்திருப்பவனையும் தூக்குபவனையும் பார்த்தாலே போதுமே என்கிறது குறள்…
View More பல்லக்கு, சிவிகை, பாரம்பரியம், அறம்சைவ மதமும் சமஸ்கிருத மொழியும்
சைவத் தமிழ் நூல்களிலும் திருமுறைகளிலும் சைவ சித்தாந்தங்களிலும் வடமொழி மேன்மை போற்றப்படுகிறது. இவற்றை மதிப்பவர் வடமொழி பிடிக்காது என்றால் சாப்பிடுவதற்கு சாதம் வேண்டும் ஆனால் அரிசி பிடிக்காது என்று சொல்லும் சிறுபிள்ளைத்தனம் போன்றது… ஆரியந்தமிழோடு இசையானவன் என்றும் வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் என்றும் அப்பர் சுவாமிகள் ஆறாம் திருமுறையில் அடித்துக் கூறுகிறார். எமது சைவம் விரிவுபடுவதை விரும்புவோம். பிரிவுபடுவதை விடுவோம்..
View More சைவ மதமும் சமஸ்கிருத மொழியும்சிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்
சிதம்பரத்தில் நந்தனார் தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் இடம் என்று ஏதேனும் உள்ளதா என்ற ஆவலில் தேடினோம். 30 ஆண்டுகளாக முறையான வழிபாடுகள் ஏதுமின்றி, பாம்பு, தேள் இன்னபிற விஷஜந்துக்களுக்கு அடைக்கலம் தந்த படியுள்ளது நந்தனார் மடம் . சுற்றிலும் ஆக்ரமிப்புகள், உள்ளே செல்ல வழியையும் அடைத்துவிட்டிருந்தனர். ஏற படியில்லை. குதித்து ஏறினாலும் நிற்க இடமில்லாதபடி தகர மடிப்புகளும், மூங்கில் கழிகளும் போட்டு வைத்திருந்தனர்… என்ன ஒரு காட்சியது. ஜடாமுடியும், நெற்றியில் இலங்கு திருநீரும், மார்பிலும் கழுத்திலும் ருத்ராக்ஷ மணிகளும், சிவப்பழமாய், தீயில் மூழ்கி யாகோற்பவமான நந்தனார் நம்முன் நின்றார்… எப்படி சீர் செய்வது? 20 சிவனடியார்கள், உழவாரப்படையினர் முயன்றால் இரண்டொரு நாளில் இந்நிலையை மாற்றலாம். அடைத்துக் கொண்டிருக்கும் குப்பையை வெளியேற்றி, இரண்டு வேளை தீபம் எரிய ஏற்பாடு செய்தாலும் போதும். இக்கோயில் தில்லைக்காளி கோயிலில் இருக்கும் அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இருப்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை…
View More சிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்மாங்கனி தந்த அம்மை
“இந்த மாங்கனி நான் கொடுத்தனுப்பிய மாங்கனி அன்று. இதன் ருசி வேறாக இருக்கிறது. மூன்று உலகங்களிலும் இது போன்ற மாங்கனி கிடைப்பதரிது. இதை எங்கே வாங்கினாய்?” என்று கேட்க புனிதவதி திகைத்துப் போனாள். என்றாலும் நடந்ததை நடந்தபடி சொல்வது தன் கடமை என்று உணர்ந்து உண்மையைச் சொன்னாள்… புனிதவதி என்ன செய்தாள்? இனியும் இவனுக்காக இத்தனை நாள் சுமந்து கொண்டிருந்த இந்த அழகையும் தசைப் பிண்டமான் இந்த உடலையும் நீக்கி விட வேண்டும் என்று முடிவெடுத்தாள். ஆலங்காட்டு அப்பனிடம் அப்பனே! உன் தாள்கள் போற்றும் பேய் வடி வத்தை எனக்கு அருள வேண்டும்” என்று வேண்டினாள்…. புனிதவதியார் பேயுருவோடு வட திசையிலுள்ள பல இடங்களுக்கும் யாத்திரையாகச் சென்றார். எல்லா இடங்களையும் கடந்த பின் சூலபாணி யார் வீற்றிருக்கும் கைலை மலையை அடைய எண்ணி னார். ஐயன் வீற்றிருக்கும் மலையைக் காலால் மிதிக்கலா காது என்று காலால் நடப்பதை விட்டுத் தலையால் நடக்க லானார். இப்படித் தலையால் நடந்து கைலை மலையின் உச்சியை அடைந்தார்….
View More மாங்கனி தந்த அம்மைகைகொடுத்த காரிகையர்: திருவெண்காட்டு நங்கை
சோழவள நாட்டில் திருவெண்காடு என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊரில் பிறந்ததால் இவருக்கு…
View More கைகொடுத்த காரிகையர்: திருவெண்காட்டு நங்கைஅடியெடுத்துக் கொடுத்த அம்பலவாணன்
பொன்னம்பலத்துப் பிரகாரத்துக் கீழ்ச் சுவரில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கும் புடைப்புச் சிற்பங்களைக் [1] கவனிக்கிறார்…
View More அடியெடுத்துக் கொடுத்த அம்பலவாணன்மானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)
தலை மயிரை இழப்பதை பெண்கள் அபசகுனமாகவே நினைப்பார்கள்.நோய்வாய்ப்பட்டு அதன் காரணமாக தலை முடியை இழக்க நேரும் போது கூட அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுவார்கள் வருந்துவார்கள். கோவிலுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதைத் தவிர மற்ற நேரங்களில் தங்கள் கூந்தலை இழக்க மனம் ஒப்ப மாட்டார்கள். இந்த நிலையில் ஒரு பெண் தனது அலங்காரத்தோடு கூடிய கூந்தலை இழக்க நேரிட்டால்? அது எவ்வளவு கொடுமை! அதுவும் தன் திருமண நாளன்று? அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடு பட்டிருக் கும்? இப்படி ஒரு சம்பவம் நடப்பதை எந்தத் தாயால் பொறுக்க முடியும்? என்றாலும் தந்தைக்காகத் தன் அலங்கரிக்கப் பட்ட கூந்த லையும் தியாகம் செய்கிறாள் ஒரு மகள்…
View More மானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)கைகொடுத்த காரிகை: மாற நாயனார் மனைவி
மாறனார் சிறிதும் தாமதிக்காமல் வீட்டின் கூரையிலிருந்த வரிச்சுகளை வாளால் வெட்டி எடுக்கிறார். அதைக் கொண்டு ஒருவாறு அடுப்பைப் பற்றவைத்துப் பின் ஈரநெல்லை வறுக்கிறாள். அதை அரிசியாக்கி உலையில் போட்டு சோறாக்கு கிறாள். சரி, உணவு தயாராகி விடும். வந்த விருந்தினருக்கு வெறும் சோற்றை மட்டும் எப்படிக் கொடுப்பது? யோசிக்கிறாள். மறுபடியும் கணவரிடம் போய் காய்கறி ஒன்றும் இல்லையே, என்ன செய்யலாம்? என்று இருவரும் சேர்ந்து யோசிக்கிறார்கள்… இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் மாறநாயனார் வாழ்ந்த வீடும், அவர் பயிர் செய்த நிலமும் இருக்கிறது. இந்நிலத்தை “முளைவாரி அமுதளித்த நாற்றாங்கால்’ (இறைவனுக்கு அமுதளிக்க நெல் விளைந்த வயல்) என்கிறார்கள். குருபூஜையன்று மாலையில் சிவன், அம்பாள், மாறநாயனார், அவரது மனைவி புனிதவதி ஆகிய நால்வரும் ஒரே சப்பரத்தில் எழுந்தருளி புறப்பாடாவது விசேஷம். அன்று சிவனுக்கு தண்டுக்கீரை பிரதான நைவேத்யமாக படைக்கப்படும்…
View More கைகொடுத்த காரிகை: மாற நாயனார் மனைவி