நம்பிக்கை – 3: நான் யார்?

நீ பார்ப்பதாகச் சொல்லும் அனைத்துப் பொருட்களும், நீ நடைமுறப்படுத்துவதற்காகப் பயன்படுத்தும் உருவங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களே அன்றி வேறில்லை. அதற்கு மேல் அவற்றுக்கு மதிப்பில்லை . ஆம். நாம் என்ன செய்கிறோம் என்றால், அதையும் தாண்டிச் சென்று, அந்தப் பொருட்கள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். பொருட்களாக, நபர்களாக, உறவுகளாக, சொத்துக்களாக, நமது சொந்த உடலாக, நமது சாதனைகளாக, என்று எதுவாக இருந்தாலும், அவைகள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், இல்லையா?… இருக்கலாம். ஆனால், அதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?.. மாமா, நாம் கடவுளைப் பற்றி விவாதிப்போம் என்று நினைத்தேன். நீங்கள் என்னை சிக்க வைக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?…

View More நம்பிக்கை – 3: நான் யார்?

நம்பிக்கை – 2: யார் கடவுள்?

நீ சாப்பிடும் உணவின் சக்தியையும் பலத்தையும் உன்னுடைய இடது காலுக்கு மட்டும்தான் நீ அனுப்பவேண்டும் என்று நான் சொன்னால், உன்னால் அவ்வாறே செயல்படுத்த முடியுமா?…. இப்போது உன் நினைவிலிருந்து அந்தப் பாடலை அழித்துவிடேன் – அதெப்படி முடியும்? என்னால் முடியாது! – ஆகவே, உன் மனதும் உன் கட்டுப்பாட்டில் இல்லை. வேறு எதுதான் உன்னுள் உன் கட்டுப்பாட்டில் உள்ளது? என்னையோ அல்லது வேறு யாரையோ உன்னால் கட்டுப்படுத்த முடியுமா?… உன் உடலின் செயல்பாடுகளையும், மனத்தின் செயல்பாடுகளையும் உன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை எனும்போது, அவை வேறு ஒன்றால் கட்டுப்படுத்தப் படுகின்றன என்பதையும் நீ ஒத்துக்கொள்கிறாய்… ஆம், ஒரு விதத்தில் ஒத்துக்கொள்கிறேன்… அதே தான் மற்ற உயிரினங்களையும் அதே விதத்தில் கட்டுப்படுத்துகிறது… இந்த அடையாளப்படுத்துதல் இருக்கின்றவரை நம்மால் உருவமில்லாத எதையுமே கண்முன் கொண்டுவர முடியாது. இந்த அடையாளப்படுத்துதல் என்பதுதான் கடவுளுக்கு உருவமளிப்பதற்கான காரணம்….

View More நம்பிக்கை – 2: யார் கடவுள்?

நம்பிக்கை – 1

“என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த என் மருமகன்கள் மற்றும் மருமகள்கள் பயன்பெறவேண்டும் என்பதற்காக, எனக்கு மிகவும் ஈடுபாடுள்ள கருத்துப்பொருளான “கடவுள் நம்பிக்கை” பற்றி எழுத வேண்டிய வாய்ப்பு கிடைத்தது.முதல் ஆறு அத்தியாயங்கள் அவர்களுக்காக எழுதப்பட்டவைதான்… ஒன்பதாவது அத்தியாயத்திலிருந்து என் மாமன்கள், அத்தைகள் போன்ற வயதில் மூத்தவர்களுக்கும் இது பிடித்துப்போக, அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதைப் படிக்க விரும்பி அவ்வாறே செயல்பட்டனர்” என்ற முன்னுரையுடன் இந்தத்தொடரை எழுதியிருக்கும் திரு.T.V.ஜெயராமன் ICWA படிப்பில் 1987-ல் இந்திய அளவில் மூன்றாவதாகத் தேர்வு பெற்று Chartered Accountant and a Cost Accountant தொழிலை மேற்கொண்டவர். மேலும் பல தளங்களில் நிபுணத்துவம் பெற்று, தேசிய அளவில் திறன் மேம்பாட்டுத் (Skill Development) துறையில் வேலையில்லா இளைஞர்களுக்குப் பல தளங்களில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் உன்னதப் பணியைத் திறம்படச் செய்து வந்தவர். ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். 2017ம் ஆண்டு மார்ச் 31ம் நாள் மறைந்தார்..

View More நம்பிக்கை – 1

திருவள்ளுவர் ஜெயந்தி [நாடகம்]

சிறுவன் அவர் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான். வகுப்பறையில் இருக்கும் அனைவருமே வள்ளுவரைக் கண்டு அதிசயித்து நிற்கிறார்கள். மடமடவென குழந்தைகளும் ஐயனை வணங்கி ஆசி பெறுகின்றன. ஒன்றிரண்டு பெரிய வகுப்பு மாணவர்கள் மட்டும் கைகளைக் கட்டியபடி தள்ளி நின்று பார்க்கிறார்கள்… இந்த முரண் என்பவை வாழ்க்கையின், உயிர்களின், உலகின் ஆதார அம்சம். மானுக்குப் புலி முரண்… பூவுக்கு முள் முரண்…நீருக்கு நெருப்பு முரண்… இரவுக்குப் பகல் முரண்… சூரியனுக்கு நிலவு முரண்… உலகம் பெரும் ஒத்திசைவால் ஆனது… அதுபோலவே முரண்களாலும் ஆனது… அறங்கள் முரண்படவில்லை… இரவையும் பகலையும் போல் இணை பாதையில் செல்கின்றன அருகருகே அகலாது அணுகாது… நல்லது ஐயனே… இப்போது லேசாகப் புரிகிறது…

View More திருவள்ளுவர் ஜெயந்தி [நாடகம்]

ஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…

“தாழ்த்தப்பட்டவனின் வீட்டில் ஒளிநுழைந்தால் அது தீண்டப்படாததாகி விடுமா? எந்த மனிதனின் வீட்டிற்குள் இறையொளி இருக்கிறதோ அவனே சான்றோன் ஆவான்” என்கிறார் சர்வக்ஞர். தன்னைப் போலவே பிறரை நேசிப்பவன் உலகமே தானாகிற சிறப்புப் பெறுகிறான். ”ஆசைகளை அடக்கி வாழ்பவனுக்கு உலகமே கைலாசமாகிறது,“ என்பது அவரது தத்துவமும், சித்தாந்தமும். பசித்தவனுக்கு உணவு தருதல், உண்மையிலிருந்து மாறாமல் இருத்தல், சகமனிதனை நேசித்தல் என்ற பண்புகள் மட்டுமே வாழ்க்கையை எளிமைப்படுத்தி உயரவைக்கும் என்கிறார்…

View More ஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…

ஓ.கே. கண்மணி: இன்னொரு பார்வை

படம் முழுவதும் லிவ் இன் தொடர்பான உறுத்தல்கள், கேள்விகள், சந்தேகங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு ஆரோக்கியமான விவாதத்தை இதன்மூலம் மணி உருவாக்க எண்ணுகிறார்… சம்பிரதாயமான திருமணங்களோ அல்லது ஒருவரை மட்டுமே காதலித்து கைப்பிடிக்கும் ‘பழைய ஸ்டைல்’ காதல் திருமணங்களோ மோசடியானவை, அவற்றில் உண்மையான அன்பு இருக்காது என்றெல்லாம் இந்தப் படம் சொல்கிறதா என்ன? மணி ரத்னத்தைப் பொறுத்த வரையில், அவரது வழக்கமான பழைய இளமை-காதல்-உறவு ஃபார்முலா ஒரு திறமையான Team மூலம் சரியாக வெளிப்பட்டிருக்கிறது என்பதைத் தாண்டி இது எந்த விதத்திலும் வித்தியாசமான படம் அல்ல…

View More ஓ.கே. கண்மணி: இன்னொரு பார்வை

ஓ.கே. கண்மணி திரைப்படம்: ஒரு பார்வை

கதை ஒன்று இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். அது எப்படி முடிகிறது? அன்பால் தொடர்ந்து நிரப்பப்பட வேண்டிய ஒரு தாம்பத்திய வாழ்க்கையை ஒரு வயோதிகப் பார்வை எனும் பயத்தால் தொடங்க வைக்கிறது. முன்பெல்லாம் “பயபக்தி” என்பார்களே. அதுதான் இது. பார்வையாளர்களை அறிவு மிக்கவர்களாக ஆக்குவதற்குப் பதிலாக பயத்தால் பணியச் செய்தவர்களாக ஆக்குகிறது; அறிவால் தனக்கு ஏற்படும் ஒவ்வொரு உலக அனுபவத்தையும் ஆய்ந்து அறிந்து வாழ்க்கையின் பயனை அறிந்துகொள்ளும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிகிறது. ஒரு வெள்ளைத் தாளைப் பார்த்து விட்டுத் தன் எண்ணங்களால் தன் மனத்தை நிரப்பிக் கொள்பவர்கள் இந்தப் படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம்..

View More ஓ.கே. கண்மணி திரைப்படம்: ஒரு பார்வை

இராமாயணத்தின் மூன்று தளங்கள்

ஜீவநதியின் பரமானந்தம் நோக்கிய நகர்வின் அழகிய சித்திரங்களே உலகின் உன்னதப் படைப்புகளில் ஒளிரும். இராமாயணம் ஒரு மகோன்னதப் படைப்பு… இராம வாழ்க்கையினை உன்னில் வடித்தெடுக்கும் போது உன் சீதா நலத்துக்கு அசோகவனம் நிச்சயம் உண்டு. இராவண அழிவிற்கும் ஸ்ரீராம ஜெயத்துக்கும அசோகவனத் திண்மை மிக முக்கியம்… உள்ளிருக்கும் தெய்வீகத்தை வாழ்க்கைப் பெருவெளியில் பிரகாசிக்கும் வண்ணம் வாழும் இலட்சிய வாழ்க்கைக்கு ஓர் ஒப்பற்ற உதாரணம் இராமசரிதம்…

View More இராமாயணத்தின் மூன்று தளங்கள்

கம்பன் பாடிய குறள்

இந்த சிறிய பிரசங்கத்தையும் கவித்துவம் மிளிரும் அழகிய பாடல்களில் கம்பன் விவரிக்கிறான்.. ஆலமரம் முழுவதையும் தன் உள்ளே அடக்கிய விதை போல, நெடியோனாகிய திருமால் வாமனனாக அவதரித்தான்.. குள்ளனான வாமனன் ஓங்கி உயர்ந்து நின்றதற்கு அபாரமான ஒரு உவமை சொல்கிறார், உயர்ந்தவர்க்கு உதவிய உதவி போல… மண்ணில் நின்று உலகம் அளந்தது வாமனக் குறள். வானிலும் மண்ணிலும் நின்று உலகம் அளந்தது வள்ளுவர் குறள்.. அன்று தன் நெடுமையால் மாயன் அளந்த உலகை எல்லாம், தன் மனத்தில் நினைந்து செய்யும் கொடுமையாள் அளந்தவள் இவள்…

View More கம்பன் பாடிய குறள்

கள்ளக் காதல்

ஒரு அளவில் இருக்க வேண்டிய காமத்தை, கடைச்சரக்காக்கி வீடு தோறும் பரப்பப் பட்டு வருவது சமூக மனநிலையை பாதிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சாதாரணமான காமெடிக் காட்சிகளில் கூட ஒருத்தனுடைய சம்சாரம் இன்னொருத்தனுடன் ஓடிப் போவது பற்றிய காமெடி ஒரு நூறு திரைப் படங்களிலாவது வந்திருக்கும். இதைப் பார்க்கிற சிறார்கள் மனதில் எந்த வகையான உறவு சரி எது தவறு என்ற புரிதலில் பிழை ஏற்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது.

View More கள்ளக் காதல்