உலகக் காப்பிய வரிசையில் முன்நிற்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் தனது இராமகாதையில் இலக்கியச்சுவையை அரியதொரு சுரங்கமாக்கிக் கொடுத்துள்ளான். ஒவ்வொரு வரியுமே கூட மிகுதியான இலக்கியச்சுவையுடன் அமையும். எடுத்துக்காட்டாக, அகத்தியரைக் கூறும் இடத்தில்,
View More கம்பன் காட்டும் இலக்கியச்சுவைTag: இலக்கியம்
கண்ணதாசன் தமிழின் பெருங்கவிஞன்
காலத்தால் அழியாத வெகு சில கலைஞர்கள் தெய்வத்தால் அனுப்பபடுவார்கள், முதலில் தாங்கள் யாரென…
View More கண்ணதாசன் தமிழின் பெருங்கவிஞன்காளிதாசரின் சாகுந்தலத்தில் நான்கு பாடல்கள்
“காவ்யேஷு நாடகம் ரம்யம் நாடகேஷு சகுந்தலா தத்ராபி ச சதுர்தோSங்க: தத்ர ஸ்லோக…
View More காளிதாசரின் சாகுந்தலத்தில் நான்கு பாடல்கள்தெய்வங்கள் ஊடுவரா?!
நாம் வழிபடும் தெய்வங்களுக்கு மனித வடிவுகளைக் கொடுத்து அழகு பார்த்தும், அவர்கள்…
View More தெய்வங்கள் ஊடுவரா?!யாரே அழகுக்கு அழகு செய்வார்?
மணமாகிக் கணவன் வீட்டுக்குச் சென்ற மகள் பிறந்தவீட்டுக்கு நெடுநாட்கள் கழித்து வருகிறாள். அவளைக் கண்ட தாயின் தவிப்பும் அங்கலாய்ப்பும், கணவனைப் பற்றிய மகளின் பெருமிதமும் இக்குறுங்காவியத்தில் சொல்லோவியம் ஆக்கப்பட்டுள்ளன. இதில் மகள் உமை. தாய், இமவானின் மனைவியாகிய மேனை. பரமேசுவரனைக் காதலித்து விரும்பி மணந்து கயிலைக்குச் சென்ற உமை நீண்ட காலத்துக்குப் பின் ஒருநாள் தனது இரு மக்களுடனும் தாய் வீட்டுக்கு வருகிறாள்.
View More யாரே அழகுக்கு அழகு செய்வார்?ஒரு நிஷ்காம கர்மி
உயர்ந்த மனிதர். சுமார் ஆறரை அடி உயரம். சற்று நீண்டு தொங்கும் தாடி. அப்போது இன்னம் நரை தோன்றாத காலம். மேஜையில் இருக்கும் விளக்கொளியில் குனிந்து படிக்கும் காட்சி நன்றாக இருக்கும். ஒருவாறாக, உ.வே. சாமிநாத ஐயர் ஒரு நூற்றாண்டுக்கு முன் சின்ன சிமினி விளக்கொளியில கும்பகோணம் பக்த புரி அக்ரஹாரத்துத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் ஒரு சாயலை அபிஜீத் ஐந்துக்குப் பத்து காபினில் மின்சார விளக்கொளியில் உட்கார்ந்திருக்கப் பார்ப்பதாகத் தோற்றம் தரும். ஒரு சின்ன மாற்றம். அபிஜீத் கையில் ஒரு கணேஷ் பீடி மேஜையில் ஒரு டீ கப். அதிகப் படியாகக் காட்சி தரும். இல்லையெனில் இளம் வயது தாகூர் தான்…. யமுனை நதியைக் கடந்தால் பட்பட் கஞ்சில் வீடு. தந்தை விட்டுப் போன லைப்ரரி. அது மட்டுமல்ல. புத்தகங்களோடும் சிந்தனை உலகோடும். கலைப் பிரக்ஞையொடும் வாழ்வதில் தான் அர்த்தம் உண்டு என்று நினைக்கும் கலாசாரம்….
View More ஒரு நிஷ்காம கர்மிதெய்வ தசகம்: ஸ்ரீ நாராயண குருதேவர்
தெய்வமே எங்களை காத்தருள் செய்குவாய்
கைவிடாது எம்மை நீ ஆண்டருள் செய்குவாய்
பவக்கடல் தாண்டவே செய்குவாய் தெய்வமே
நின்பதம் எம்அரும் தோணியாய் நிற்குமே….
ஒவ்வொன்றாய் எண்ணித் தொட்டு எண்ணிடும்
எல்லாப் பொருட்களும் எண்ணி முடித்தபின்
எஞ்சிடும் த்ருக்கினைப் போலவே எம்உளம்
நின்திருப் பாதத்தில் ஒன்றிடச் செய்குவாய்…
அன்னமும் ஆடையும் தேவையாம் யாவுமே
இன்னல்ஒன் றின்றியே தந்தெமைக் காத்து, மேல்
செல்வராய் மாற்றிடும் நீ ஒரு மூர்த்தியே
வல்லமை உள்ளவன் எங்கட்குத் தம்பிரான்….
மகாகவி பாரதியின் புனித நினைவில்…
அன்று எங்கள் ஊர் வாசகசாலையில் ஆண்டு விழா. தலைவர் பாரதி. மூன்று மணி நேரம் பண்டிதர்களின் மூச்சு முட்டும் முழக்கடித் தமிழ். அது வரையில் மேடையில் அமர்ந்திருந்த பாரதி ஆடவில்லை, அசையவில்லை. சுவாசம் விட்டாரோ என்னவோ, அதுகூட சந்தேகம். ஏதோ ஒரு சிற்பி செதுக்கிய ருத்ரன் சிலை அமர்ந்திருப்பது போலத் தோன்றியது. மீசையை முறுக்கும் போது அன்றி, வேறு யாதொரு சலனமும் கிடையாது. பேசுவதற்கு அவருடைய முறை வந்தது. எழுந்தார் – எழுந்தார் என்பது தப்பு; குதித்தெழுந்தார், அவர் அமர்ந்திருந்த நாற்காலி உருண்டது. மேஜை முன்னே தாவித் தயங்கியது. அவருடைய பேச்சு? அதில் வாசக சாலையைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கிடையாது. பண்டிதர்களின் மூன்று மணி நேரப் பிரசங்கங்களுக்கு மூன்று நிமிஷங்கள் முடிவுரைகூட இல்லை…
View More மகாகவி பாரதியின் புனித நினைவில்…பாரதி மரபும்,திரிபும் – 6
ஈனம் – இழிநிலை, குறைபாடு, கீழ்மை, தாழ்வு, புன்மை, கள்ளி, சரிவு, முயல். இது தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள தமிழ் அகராதியில் கூறப்பட்டுள்ள பொருள்.பல்வேறு அர்த்தங்களைத் தரக்கூடிய ஈனம் என்ற வார்த்தையை பாரதி எந்த அர்த்தத்தில் பறையர்களுக்குப் பொருத்தினார்? ‘ஈனப் பறையர்களேனும்’ என்ற வார்த்தை மோசமான விளித்தலுக்காகவே பாரதி பயன்படுத்தினாரா? பாரதியின் கருத்து என்ன? பறையர்களைப் பற்றிய பாரதியின் கருத்து மிகத்தெளிவாகவே இருக்கிறது…. பாரதி ‘ஈனம்’ என்ற சொல்ல இழிவுநிலை, கீழ்மை, தாழ்வு என்ற பொருளிலும் பயன்படுத்தி இருப்பதால் ஏன் மோசமான விளித்தலுக்கு இந்த கவிதையில் பயன்படுத்தியிருக்ககூடாது என்ற கேள்வியும் எழலாம்.
View More பாரதி மரபும்,திரிபும் – 6பாரதி: மரபும் திரிபும் – 5
இந்து என்பதின் திரிபே இந்தியா என்பதுதான் பாரதியின் கருத்து என்று சொன்னால் மதிமாறனின் விமர்சனம் தேவையற்றது. ‘பாரதம், இந்தியா’ என்ற வார்த்தைகள் பாரதி பயன்படுத்தியிருப்பது பார்ப்பனியச் சிந்தனையின் வெளிப்பாடு என்று ஒரே வரியில் சொல்லியிருக்கலாம். அப்படியில்லாமல் மதிமாறன் பாரதி இந்தியா என்ற பெயரை வேண்டுமென்றே குறிப்பிடவில்லை என்று தனியாக விமர்சனம் வைக்கிறார். பார்ப்பனீய பூச்சாண்டியைக் காட்டி வளர்ந்த திமுக அரசு ஜூன் 1970ல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக இந்தப் பாடலை அறிவித்தது. பார்ப்பினிய எதிர்ப்பில் ஊறித்திளைத்த திமுக அரசாங்கம் இந்தப் பாடலில் பரதகண்டம் வருகிறதே – இது பார்ப்பனியச் சிந்தனைதானே – இதை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று யோசிக்கவில்லைபோலும்.
View More பாரதி: மரபும் திரிபும் – 5