இந்த நான்கு பாடல்களும் யோகம்-போகம் என்னும் இரு வாழ்க்கைக் கண்ணோட்டங்களின் முரணையும் இணைவையும் சமன்வயத்தையும் வெவ்வேறு விதங்களில் முன்வைக்கின்றன… ஞானி எப்போதும் பரமாத்ம பாவனையுடன் இருப்பதால், அவரது புறச்செயல்கள் அதன் இயல்பான போக்கில் அதற்கான லயத்தில் சென்று கொண்டிருக்கும், அது போகமோ, யோகமோ, கலையோ, கல்வியோ எதுவானாலும்…
View More யோகமும் போகமும்Tag: ஞானி
வேதாந்த ஞானி மதுரை சாது நித்தியானந்தம்மாள்
மதுரையில் வைத்தியராக ப.ச. இராமலிங்க ரெட்டியாருக்கும், ஆவுடையம்மை என்பாருக்கும் மூன்றாவது மகவாய் வாய்த்தவர் நித்தியானந்தம்மையார் (13 -3- 1909). எதிர்பாராதவிதமாக வாழ்க்கை ஸ்தம்பிக்கும் தருணத்தில் தாம் மிகவும் விரும்பியும் தமக்கு அதுகால் கிடையாமல் போன கல்வியைத் தொடக்கமுதல் நன்கு பெறவேண்டும் என்ற ஊக்கம் எழுந்தது. சகோதரரின் உதவியால் அரிச்சுவடி தொடங்கிப் பயிலத் தொடங்கினார். ஆர்வமும், இறையருளும் அபாரமாய் சித்திக்கவே வெகுவிரைவில் முன்னேறி நூல்களைக் கற்றார்.. பின்பு கல்வியில் சிறந்து, வேதாந்தம் தொடங்கி நன்கு பயின்று அதில் தியானத்தில் ஆழ்ந்து, பின் பல ஆசிரியர்களிடம் நூல்களை முறைப்படப் பயின்று தாம் அதில் நன்கு திடம் பெற்று மிக எளிய முறையில் அரிய கருத்துகளைத் திரட்டி சாதாரண மக்கள் நோகாவண்ணம் கற்கத் தருவாரேயானால், நீங்களே இந்த அம்மையாரின் சிறப்பை ஊகித்துக் கொள்ளுங்கள். மிக உயர்ந்த தெளிவு இவர் இயற்றிய வேதாந்த சாஸ்திர பலதிரட்டுப் பாடல் நூலில் தெரியவருகிறது…
View More வேதாந்த ஞானி மதுரை சாது நித்தியானந்தம்மாள்ஞானேஷ்வரரும் ஆசாரவாதிகளும்
ஒருமுறை அரசவையிலிருந்த ஆச்சாரவாதிகள் ஞானேஷ்வரரையும் அவருடைய சோதரரையும் பிரஷ்டர்கள் என இகழ்ந்தனர். நிவர்த்திநாதர் ‘பூசுரரே வேதங்களை அளித்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் இவர்களெல்லாம் பிறப்பால் உயர்ந்தவர்களா? தம் வாழ்க்கையால் உயர்ந்தவர்களா?” என வினவினார். அப்போது தண்ணீரை சுமந்த படி ஒரு எருமை அங்கே வந்தது. ஞானேஸ்வரர் அந்த எருமையைக் காட்டி “உங்களுக்கெல்லாம் இந்த எருமைக்கு இருக்கும் ஞானத்தில் ஒரு சிறு பகுதி இருக்குமென்றாலும் நீங்கள் மதிக்கப்படத் தக்கவர்கள்” என்றார். இதைக் கேட்ட ஆச்சாரவாதிகள் “நீ சொன்னதை இப்போது நிரூபிக்காவிட்டால் உன்னை வெட்டிப் போடுவோம்” என்றனர்….
View More ஞானேஷ்வரரும் ஆசாரவாதிகளும்ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 18
மோகம் எனும் கடலைத் தாண்டிவந்து மூண்டு எழுகின்ற ஆசை, கோபம் முதலான அரக்கர்களை முற்றிலுமாக அழித்து, யோகியானவன் அமைதியுடன் ஆன்மாவிடத்தில் ஒன்றி ஆனந்தத்தை அடைந்தவனாகி ஒளி வீசுபவனாய் இருப்பான் என்பதைத் தெரிந்துகொள்… நீரில் நீரும், தூய்மையான ஆகாயத்தில் ஆகாயமும், தீயில் தீயும் கலப்பது போல, தூலமாகிய உடல் நீங்கும்போது, மீதமுள்ள நுண்ணியதான மனம், புத்தி இவைகளும் நீங்கி ஞானியானவன் உபாதியற்ற, எங்கும் நிறைந்த பிரம்மத்தில் கலந்து இரண்டற்ற நிலையை அடைவான்…. ஒரு காலி குடத்திலும் ஆகாயம் இருக்கிறது, வெளியேயும் ஆகாயம் இருக்கிறது. அப்போது குடத்தின் உள்ளே வெளியே என்று ஆகாயத்தைப் பிரித்துச் சொல்ல முடியும். குடத்தை உடைத்து விட்டால் உள்ளே இருந்த ஆகாயம் வெளியே கலந்துவிட்டது என்றா சொல்வது?…
View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 18[பாகம் 19] வண்டிக்கார ரிஷி பகர்ந்த பிரம்மஞானம்
ஒரு கிராமத்தின் சஞ்சாரமில்லாத ஒதுக்கிடத்தில் வண்டி ஒன்றுக்குப் பக்கத்தில் ரைக்வர் அமர்ந்து இருப்பதைச் சாரதி பார்த்தான்…. அரசன் பண்டமாற்றும் முறையில் ஞானத்தைப் பெற்றுவிடலாம் என்று எண்ணினான் போலும்! ரைக்வர் அரசனுடைய மனப்பான்மையை அறிந்து கொண்டார். … பிரம்ம ஞானத்தைத்தவிர நாம் பெறும் மற்றவைகளுக்கெல்லாம் ஒரு முடிவு உண்டு. புண்ணியச் செயல்களால் வரும் நற்பயன் நம்மை முற்றிலும் திருப்திப்படுத்துவதில்லை…. தூங்கும் போது வாக்கு பிராணனில் ஒடுங்குகிறது. பார்வையும், கேள்வியும், மனதும் ஆகிய யாவும் பிராணனிலேயே ஒடுங்குகின்றன….
View More [பாகம் 19] வண்டிக்கார ரிஷி பகர்ந்த பிரம்மஞானம்உமர் கய்யாமின் ருபாய்யத்
கவிஞர் ஆசையின் மொழிபெயர்ப்பில் 215 ருபாய்யத்தும் கிடைத்ததும் உமர் கய்யாமைப் பற்றி நமது பார்வையே மாறிவிடுகிறது. மதுவும் மாதுவும் கவிதையும் தான் மகிழ்ச்சி தருவன என்பதல்லாது ஒரு பரந்த உலகப்பார்வையும் வாழ்க்கை நோக்கும் கொண்டவர்… மதத்தின் நீதிமான்களே, நீங்கள் குடிப்பது மனித இரத்தத்தை, நாங்கள் குடிப்பது திராட்சையின் ரத்தத்தை. உண்மையாகச் சொல்லுங்கள் – நம்மில் யார் அதிக ரத்த வெறி பிடித்தவர்கள்?… ஒவ்வொரு பிரிவுக்கும் சந்தேகமுண்டு, என்னைப் பற்றி; நானோ, நானாக மட்டுமே இருக்கிறேன்… இன்று அதே பாரசீகத்தில் உமர் இன்றைய அயொத்தொல்லாக்கள் கையில் என்ன பாடு பட்டிருப்பார்? உயிரோடு இருந்திருப்பாரா? ருபாய்யத்துகள் நமக்குக் கிடைத்திருக்குமா?…
View More உமர் கய்யாமின் ருபாய்யத்நீயே அது – சாந்தோக்ய உபநிஷதம்
அன்பு மகனே, ஒரு மண்கட்டியினால் மண்ணாலானவை அனைத்தும் அறியப் படுகின்றன. மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. மண் மட்டுமே சத்தியம்… உண்ணும் அன்னம் மூன்றாய்ப் பிரிகிறது. அதன் பருண்மை மலமாகிறது. அதன் நடுவுரு ஊனுடம்பாகிறது. நுண்மை மனமாகிறது… விதவிதமான மரங்களிலிருந்து அவற்றின் ரசத்தை எடுத்துச் சேர்த்து ஒரு ரசமாக, தேனாக சமைக்கின்றன தேனீக்கள். அந்த ரசங்களுக்கு நான் இந்த மரத்தின் ரசம், நான் அந்த மரத்தின் ரசம் என்று பகுத்தறியும் விவேகம் இருப்பதில்லை.. அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது…
View More நீயே அது – சாந்தோக்ய உபநிஷதம்சதாசிவ பிரம்மேந்திரர் குறித்த வரலாற்றுப் புதிர்கள்
உடலை மணல்மூடி தியானத்தில் லயித்திருந்தபோது அவரது தலை மண்வெட்டியால் வெட்டப் பட்டு ரத்தம் வந்தது – நவாப் படைகளிலிருந்து தப்பிக்கவும், நதிக்கரைகளைப் பாதுகாக்கவும் முயன்றபோது படைகளால் தாக்கப் பட்டிருக்கலாம்… ”வர்ணாஸ்ரமங்களின் கட்டுப்பாடுகளைக் கடந்தவன் நான். சாஸ்திரங்களில் விலக்கப்படுபவை பற்றிய விதிகளையும் உதறித் தள்ளியவன்”…
View More சதாசிவ பிரம்மேந்திரர் குறித்த வரலாற்றுப் புதிர்கள்ரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பகுதி)
உலகு உண்மை ஒருவிதம், ஞானிகளின் உலகமோ வேறு விதம் [..] “பந்தன் நான் எனும் மட்டே பந்த முக்தி சிந்தனைகள்” என்பார் ரமணர். அந்த “நான்” இல்லாதவனுக்கு பந்தம் எப்படி வரும்? [..] ருமதி. கனகம்மாள் எழுதிய “ஸ்ரீ ரமண நூற்றிரட்டு உரை”யின் துணை கொண்டு எழுதப் பட்ட அற்புதமான தொடரின் நிறைவு பகுதி இது…
View More ரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பகுதி)தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 5
கட்சி கொடுத்த அரசியல் கொள்கை வழி தம் சித்தாந்தங்களை உருவாக்கிக்கொண்டு அதன் வழி இடது சாரி எழுத்தாளர்கள் எப்படி எழுதவேண்டும் என்று பாடம் நடத்தியவர்கள். உலகம் முழுதும் கம்யூனிஸ்டுகளின் கோட்டைகள் அத்தனையும் இடிந்து சிதிலமாகிப் போகவே, அவர்களுக்குப் போக்கிடம் ஒன்று தேவையாகியிருந்தது. அகதிகளாக வசிப்பிடம் தேடிய அவர்களுக்கு அப்போது கண்முன் தெரிந்த தலித் எழுச்சி வசதியாகிப் போயிற்று. பின் என்ன?
View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 5