மன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப் படாத கேள்விகள்

இவர் மெத்தப் படித்தவர். உலகத்திலேயே சிறந்த தகுதிகள் கொண்டவராம். ஆனால் படிக்காத ஒரு காமராஜர் பேச்சில் இருந்த தெளிவும் துணிவும் என்றுமே இவரது பேச்சில் இருந்தது கிடையாது… அவரிடம் கேட்கப் பட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களில் இருந்த குழப்பங்களையும், மழுப்பல்களையும், ஏமாற்றுக்களையும், சமாளிப்புக்களையும் அதில் இருந்த ஓட்டைகளையும் , அவரிடம் அவசியமாகக் கேட்டிருக்கப் பட வேண்டிய ஆனால் கேட்கப் படாத கேள்விகளையும் அலசலாம்… அயோக்கியர்களை அகற்றுங்கள். இந்தியா நமது தேசம்; அதை அந்நியருக்கும் இனிமேலும் விற்க மாட்டோம் என்று உறுதி செய்யுங்கள்.

View More மன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப் படாத கேள்விகள்

இதுவும் அறம்தான்

அவன் நன்றாக ஹாக்கி விளையாடுவான். ஒரு நாள் ஹாக்கியில் தங்கபதக்கம் வாங்கிக்கொடுப்பேன். என் பெயர் எல்லா பேப்பர்களிலும் வரும் என்று சொல்லுவான். அவன் பெயர், புகைப்படம் எல்லா பேப்பர்களிலும் வந்தது. அவன் பிணத்துடன் கதறி அழும் அவன் தாயின் படம் நக்கீரன் தொடங்கி எல்லா பேப்பர்களிலும் வந்தது. ஒரே மகன்.

View More இதுவும் அறம்தான்

அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 3

தீர்ப்பு வெளியானவுடனேயே என்.டி.டி.வி தனது வேலையைத் துவக்கிவிட்டது. பிரபல வழக்கறிஞர் ராஜீவ் தவானின் பேட்டி பலமுறை ஒளிபரப்பப்பட்டது. அவர்தான் ‘கட்டப் பஞ்சாயத்து’ பிரசாரத்தைத் துவக்கிவைத்தார்.[…]எத்தனை முறை ஒரே செக்யூலரிச பொய்யைச் சொன்னாலும் அதனால் இனி எந்தப் பயனும் விளையப் போவதில்லை. ஆயினும் இதனை நமது அபத்த ஊடகங்கள் கண்ணை மூடிக்கொண்டு பரப்புவது ஏன்?

View More அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 3

சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்

ஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார்? தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா?… இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது….

View More சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்

வேதாளம் சொன்ன பேரறிஞர் கதை

தமிழகத்தில் எத்தனையோ அறிவு ஜீவிகள் இருந்தும் அவர்களையெல்லாம் விஞ்சி நிற்கும் பேரறிஞர் அண்ணாவின் ஆளுமை பற்றி உன் கருத்து என்ன? அண்ணா தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் ஏற்றி வைத்தார் என்று சொல்லலாமா? அண்ணாவின் அரசியலை அடியொற்றி வளரும் தமிழக அரசியல் எப்படி அமையும் என்று நீ நினைக்கிறாய்?

இதற்கெல்லாம் பதில் தெரிந்தும் பேசாமல் இருந்தால் உன் தலை சுக்கு நூறு.” என்று நிறுத்தியது வேதாளம்.

View More வேதாளம் சொன்ன பேரறிஞர் கதை

“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 2 [நிறைவுப் பகுதி]

(மூலம்: ரிச்சர்ட் ஷேனிக்) இயற்கைக்கு முந்தைய கொடை என்ற இந்தக் கருத்துருவாக்கம், மிகவும் நல்ல, எல்லோரையும் அன்பு செலுத்தும் ஒரு தெய்வத்தைக் காட்டாமல் வீம்புச் சண்டை போடும் தெய்வத்தைத்தான் காட்டுகிறது… கடவுள் இல்லை என்று சொல்லும் நாஸ்திகர்களும், கடவுளைப் பற்றி கவலை இல்லை என்று சொல்லும் அக்னோஸ்டிக்குகளும், ஒழுக்க ரீதியான தார்மீக வாழ்வு வாழ்ந்தவர்களில் பெரும்பான்மையினர்… இப்படி கிறிஸ்துவ மதத்துக்கு முதல் பாவம் தேவைப்படுவதால், இந்தக் கொள்கை இல்லாமல் கிறிஸ்துவ மதமே பரிதாபமான நிலையைத்தான் அடையும்…

View More “முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 2 [நிறைவுப் பகுதி]

“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1

(மூலம்: ரிச்சர்ட் ஷேனிக்) இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை கிறிஸ்துவ மதத்தைப் பற்றியது. இது ஏன் இங்கே ‘தமிழ்ஹிந்து’வில் பிரசுரிக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழலாம்… அதுவும் நிரந்தர உண்மைகளை புனித ஆவியிடமிருந்து பெற்று கிறிஸ்துவ மக்களுக்கு இரண்டாயிரம் வருடங்களாகக் கொடுத்து வந்திருப்பதாகச் சொல்லும் சர்ச்சுக்கு இது தலைகுனிய வைக்கும் மாபெரும் தவறு… மனித இயற்கையைக் கொடுத்து, அவர்களுக்கு வலியும், துயரமும் சாவையும் கொடுத்து, ஒட்டுமொத்தமாக அவர்களது சந்ததிகளுக்கும் மிருகங்களுக்கும் அவர்கள் பொறுப்பேற்க முடியாத ஒரு செயலுக்காக இவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்திருப்பதுதான் ஒழுக்கம் கெட்ட செயல்…

View More “முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1