மிருகநயனியின் குரல் உயர்ந்து கொண்டே போனதை அவளே அறியவில்லை. ஆனால் இறக்கமாட்டார் என்று அவள் சொன்னது பெருங்கூவலாகவே முடிந்தது. மிருகநயனியின் கண்ணீர் விசும்பல்களாக மாறும் வரை கூடாரமே நிசப்தமாக இருந்தது. அவளை திரௌபதி கொஞ்சம் தயக்கத்தோடு அணுகி அவள் கையைப் பிடித்துக் கொண்டாள். அர்ஜுனன் தலைகுனிந்து கூடாரத்தின் அடித்தள மண்ணையே பார்த்தபடி நின்றான். ஒரு சுற்று சுற்றி வந்த மிருகநயனியின் பார்வை கடைசியில் கண்ணனிடம் நின்றது. கண்ணன் முகத்தின் புன்னகை சிறிதும் மாறவில்லை. சஞ்சலமே இல்லாத கண்களுடன் அவன் மிருகநயனியை நோக்கினான். அவன் புன்னகை மிருகநயனிக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்தது. அவனைப் பார்த்து கண்ணா என்று அழைத்தாள்… கால் போன போக்கில் நடந்த கண்ணன் சில நாழிகைகள் கழித்தே தன் கூடாரத்துக்குத் திரும்பினான். திரும்பும் வழியில் ஒரு சூதன் பாடிக் கொண்டிருந்ததை தள்ளி நின்று கேட்டான்…
View More வஞ்சகன் கண்ணன் [சிறுகதை]Tag: கர்மம்
ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 4
அறியாமை என்பதற்கு ஒரு தனியான இருப்பு கிடையாது. அறிவு இல்லாமல் இருப்பதுதான் அறியாமை எனும் நிலை. அறியாமையை அகற்றுவதுதான் அறிவைப் புகட்டுவது என்றாகிறது…. கலங்கிய மாசு படிந்த நீரில் தேத்தாங் கொட்டையின் பொடியைப் போட்டால் அது எப்படி நீரைத் தெளிவாக்கியபின் தானும் நீரின் அடியில் வண்டலுடன் தங்கி மறைகிறதோ, அது போல அறியாமையில் கலங்கி இருக்கும் சீவனுக்கு, ஞானத்தை நாடி அவன் செய்யும் பயிற்சிகள் மூலம், அறியாமையைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து, பின்பு அந்த ஞானமும் தானே அழியும்… .
கர்மங்கள் எல்லாம் அஞ்ஞானத்திற்கு எதிராகச் செயல்படாததால், அவைகள் அஞ்ஞானத்தை நீக்குவதில்லை. ஞானம் ஒன்றே அறியாமையைப் போக்கும்….
ரமணரின் கீதாசாரம் – 14
ரமணரைத் தரிசிக்க வெளிமாநிலத்திலிருந்து வந்த ஒருவர், ரமணரது வாழ்க்கைச் சரிதையை எழுதியிருப்பதாகவும் அதை ரமணரே திருத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ரமணரும் ஒத்துக்கொண்டு, அதை முடித்து அந்தக் கைப்பிரதியை அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார். அதில் ரமணருக்குப் பல மனைவிகள் உண்டு என்றும், அவருக்குக் குழந்தைகள் உண்டு என்பன போன்ற உண்மைக்குப் புறம்பான விவரங்கள் இருந்தன [..]
View More ரமணரின் கீதாசாரம் – 14யோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…
அத்வேஷ்டா என்ற சொல்லுடன் ஸ்லோகம் தொடங்குவதால் அதன் பொருளை ஆராய்வோம். இச்சொல்லுக்கு, ‘பொறாமை யின்றி’ என்றும் பொருள் கொள்ளலாம். மேலும், ‘பொறாமைக் குணம் இல்லாதவர்’ என்று ஒரு நபரைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். அதையே, பிறர் தன்மீது பொறாமைகொள்ளும் படியாக நடந்துகொள்ளாதவர் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
View More யோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 2
இந்திய பண்பாட்டில் திளைத்த நமது முன்னோர்கள் பிறவிகள் பற்றி எவ்வளவு முக்கியமான விஷயங்களை நமக்கு அரிய பொக்கிஷங்களாகத் தந்து விட்டுச் சென்றிருக்கின்றனர் என்ற பெருமிதம் வந்தது. வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்றும், செய்யும் தொழிலே தெய்வம், தெய்வம் நின்று கொல்லும் என்றெல்லாம் சொன்னார்களே, நாம் அவை அனைத்தையும் சரியாக உணர்ந்திருக்கிறோமோ என்ற சந்தேகமும் வந்தன.
View More பிறப்பும் சிறப்பும் இறப்பும் – 2