‘அண்ணாச்சி’ முருக பக்தர் என்றாலும், அவருக்கு வேலுக்கும் சேவல் கொடிக்கும் நடுவில் இருப்பது முருகன் அல்ல, லாபம் மட்டும்தான். சுபம் அல்லாத லாபம்.. இரக்கமின்றி கண்காணிக்கப்பட்டு வதைத்தே விலங்குகளாக வைக்கப்படும் அந்த இடத்திலும், அனைத்து இயந்திரத்தனமான மானுடம் மறந்த மனிதர்களின் சிறைகளை உடைத்துக் கொண்டு, உயிர்த் துடிப்பு தன்னை, தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.
View More அங்காடித் தெரு – திரைப்பார்வைCategory: கலைகள்
இந்து கலாசாரத்தின் இணைபிரியாத அங்கங்களாக விளங்கும் பாரம்பரிய இசை, நடனம், சிற்பம், நாட்டுப்புறக் கலைகள்…
The Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமை
சீனாவின் சரித்திர பக்கங்களில் ஒரு மைல் கல்லாக மாறிவிட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை இத்தகையது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கக்கூடும் உங்களுக்கு. ரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஒரு மனிதனின் கதை. சீனாவை ஆண்ட Qing என்னும் அரச வம்சாவளியின் கடைசி பேரரசனாக பட்டம் சூட்டப்பட்ட ”பூ யி”-இன் வாழ்க்கையை சிதைவின்றி சித்தரிக்கிறது The Last Emperor திரைப்படம்.
View More The Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமைTaken – தந்தைகளின் திரைப்படம்
பெண்ணின் அப்பா கடத்தல்காரர்களிடம் சொல்கிறார்: நாங்கள் பலவீனமான நாடாக இருக்கிறோம், பரந்த மனப்பான்மை என்ற தவறான நோக்கில் உங்களை உள்ளே விடுகிறோம், நாங்கள் எதுவும் செய்ய இயலாத கையாலாகதவர்களாக இருக்கிறோம், உங்களைப் போன்ற வன்முறைக்குத் துணைபோகும் சக்திகள் உலகம் முழுவதும் பரவி குண்டு வைக்கிறீர்கள், எங்கள் பெண்களைக் கடத்தி ஏலம் விடுகிறீர்கள், இருந்தும் கைகள் கட்டப் பட்டவர்களாகிய நாங்கள் ஏதும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம் …
View More Taken – தந்தைகளின் திரைப்படம்UP – Animation Movie. ( பறக்கும் வீடு)
தென் அமெரிக்காவில் இருக்கும் பாரடைஸ் பால்ஸுக்கு அருகில் வீடு கட்டுவதும் அங்கு சென்று மனிதனின் கால்படாத இடங்களைப் பற்றி ஆராய்வதும், அங்கிருக்கும் விலங்கினங்கள், பறவைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதும் எல்லியின் கனவு. எல்லியைப்போலவே ஒத்த சிந்தனை கொண்ட கார்லும் நட்பைத்தொடர்கின்றனர்.
View More UP – Animation Movie. ( பறக்கும் வீடு)ஆயிரத்தில் ஒருவன் – ஜடங்களுக்கான சினிமா
சோழனையும் பாண்டியனையும் விட்டுத் தள்ளுங்கள், கற்பனையாகவே இருந்து தொலையட்டும். இந்திய ராணுவம் எவ்வாறு வியட்நாம் சென்று ஆயிரக் கணக்கில் மக்களை சுட்டுத் தள்ளுகிறது?… இந்த அரைவேக்காடுகள் பழைய தமிழர் வரலாற்றை நினைத்தபடி பயன்படுத்தி இருப்பது, கார்த்தி ரீமாவிடம் வாங்கிய கன்னத்து அறையை விட வலி தருகிறது. இந்த மாதிரி ஒரு படத்தை வேறு மொழிகளில் எடுத்திருந்தால் அங்கு பிரளயமே நடந்திருக்கும். நாம் ஜடங்களாக, வெ(ற்)றிப் படத்தைப் பார்த்து விசில் அடித்துக் கொண்டிருக்கிறோம்…
View More ஆயிரத்தில் ஒருவன் – ஜடங்களுக்கான சினிமாதிரைப்பார்வை: அவதார்
ஆனால் இத்திரைப்படம் ஒரு ஹிந்துவுக்கு இந்த கிராபிக்ஸ் பிரம்மாண்ட ‘ஆஹா’க்களை மீறி சில செய்திகளை சொல்கிறது. ஒரு விதத்தில் இத்திரைப்படம் மேற்கத்திய பண்பாட்டின் ஒரு வாக்குமூலம் என்று சொல்லலாம்.
View More திரைப்பார்வை: அவதார்காவடிகள் சிந்து பாடும் கழுகுமலை
”கருணை முருகனைப் போற்றி – தங்கக் காவடி தோளின் மேலேற்றி…. “ – காவடிச்சிந்து மெட்டுக்கள், படித்தவர், பாமரர் அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை. காவடிச்சிந்து என்றாலே நம் நினைவுக்கு வருபவர், அண்ணாமலை ரெட்டியார்… இங்கு கழுகுமலையில் கடலொத்த வீதிகள் காணப்படுகின்றன. அங்குள்ள கடைகளின் முன்பு முத்துப் பந்தல் போட்டிருக்கிறார்கள். அந்தப் பந்தலின் ஒளியினால் அஷ்ட கஜங்களுடைய தந்தங்களின் ஒளி கூட மழுங்கி விடுமாம்!
View More காவடிகள் சிந்து பாடும் கழுகுமலைஇந்து தாலிபானியம்…? – ஒரு எதிர்வினை
ஹுஸைனின் இந்த ஓவிய முறைமை அத்தகைய ஆன்மிகத் தேடலோ அல்லது வழிபாட்டு முறையோ எனக்கொள்ளும்படிக்கு ஜெயமோகனுக்கு எவ்வாறு தோன்றுகிறது? … இந்து மதத்தினரின் கண்டனத்துக்குள்ளாகும் ஒரு ஓவிய முறைமையை விடாப்பிடியாக செய்தே தீருவேன் என்று செய்பவர் வக்கிர மனத்த்தினர் தரும் மாபெரும் விலைகளுக்காக பொது நாகரிகம் கருதாத, மனித மன மரியாதையற்ற, கலை வியாபாரியாகவே இருக்க வேண்டும். அல்லது தன் மதத்தைக் காயப்படுத்தாமல் இந்து மதத்தினரைக் காயப்படுத்தி, தீவிரவாதிகள் குண்டுகளால் சாதிப்பதை தூரிகையால் சாதிப்பவராக இருக்க வேண்டும்.
View More இந்து தாலிபானியம்…? – ஒரு எதிர்வினைவயநாட்டுச் சிங்கம் பழசி ராஜா – ஒரு மாபெரும் சினிமா
காட்சி பூர்வமாகவும், தொழில் நுட்ப நேர்த்தியிலும், நடிப்பிலும், இசையிலும், கதை சொல்லப் பட்ட உத்தியிலும், நடிப்பிலும், வரலாற்றை நேர்த்தியாகவும் உண்மையாகவும் சொன்ன விதத்திலும், கலை நேர்த்தியிலும், உன்னதமான இயக்கத்திலும், ஒருங்கிணைப்பிலும் இன்னும் எண்ணற்ற விதங்களிலும் இந்த பழசி ராஜாவின் வரலாறு ஒரு உன்னதமான சினிமா அனுபவமாக உருவெடுத்துள்ளது. இது போன்ற சினிமாக்கள் ஒரு நூற்றாண்டில் ஒரு முறையே உருவாகும் அபூர்வமான கலைப் படைப்புக்கள்.
View More வயநாட்டுச் சிங்கம் பழசி ராஜா – ஒரு மாபெரும் சினிமாபோகப் போகத் தெரியும் – 38
பாலாமணி நடித்த தாரா சசாங்கம் என்ற நாடகத்தில் அவர் கதாநாயகி தாரையாக வந்து, காதலன் சந்திரனுக்கு எண்ணெய் தேய்த்து விடுவதாக ஒரு காட்சி வரும். காட்சியின் விசேஷம், தாரையின் உடலில் துணி இருக்காது.
View More போகப் போகத் தெரியும் – 38