1950கள் வரை காலரா நோய்க்கான காரணிகள் முழுவதுமாக அறியப் படவில்லை. அந்த அறிதலை அளித்தவர் டாக்டர் சம்பு நாத் டே என்ற இந்திய மருத்துவ அறிவியலாளர். காலராவை உருவாக்கும் நச்சுக்காரணி (Cholera toxin) பற்றிய திட்டவட்டமான முடிவுகளை 1959ல் அறிவித்தார். காலரா தடுப்பூசிகளும், சிகிச்சைக்கான மருந்துகளும் உருவாக இந்தக் கண்டுபிடிப்புகளே மூல காரணம்…. கடுமையான மருத்துவக் கல்லூரி ஆசிரியர் பணி மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு இடையே, சொற்பமான உபகரணங்களையும் வசதிகளையும் வைத்துக் கொண்டு தனது ஆய்வுகளை டே நிகழ்த்தினார்… மனித உயிர்களை நோயிலிருந்து காப்பதிலும் மீட்பதிலும், மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெற்ற பல அறிவியலாளர்களையும் விட, சம்பு நாத் டேயின் பங்களிப்பு மிக அதிகமானது, உயர்வானது…
View More காலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்Category: வழிகாட்டிகள்
குருமார்கள், மகான்கள், வீரர்கள், பெண்மணிகள், சமூக சீர்திருத்தவாதிகள், அறிஞர்கள், அறிவியலாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான இந்து ஆன்றோர்களையும் பற்றி..
குஹாவின் பொய்
1949 எனும் ஒரு ஆண்டில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் டெல்லியில் 79 கூட்டங்களை ஏற்பாடு செய்தது. அவற்றில் நேரு, அம்பேத்கர் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. அக்கூட்டங்களில் இந்து சட்ட மசோதா இந்த பண்பாட்டின் மீதும் இந்து பாரம்பரியத்தின் மீதும் செய்யப்பட்ட தாக்குதல் என கூறப்பட்டது என்கிறார் ராமசந்திர குஹா. உண்மை என்ன?… போலி மதச்சார்பின்மை தன்னை அரசியல் சட்ட முகப்பில் நுழைத்து கொண்ட தருணம் இந்தியா இந்திராவின் பாசிச இருளில் இருந்த காலகட்டம். எனவே, போலி மதச்சார்பின்மைக்கு எதிரான இந்துத்துவத்தின் எதிர்ப்பு இந்திய ஜனநாயகத்துக்கு ஆதரவானது; ஜனநாயக எதிர்ப்புசக்திகளான பாசிச -மார்க்ஸிய-வகாபிய அணிகளுக்கு எதிரானது….
View More குஹாவின் பொய்ஒரு கிறிஸ்தவ பாதிரியும் போலி மதச்சார்பின்மையும்
இதை சொன்னவர் யார்? ஊகிக்க முடிகிறதா? “இன்றைய அரசியல்வாதிகள் வீட்டு கூரைகளிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் தம் புதிய வழக்கமாகிவிட்ட போலி மதச்சார்பின்மையை கூவிக் கொண்டிருக்கும் போது தேசத்தின் ஒற்றுமைக்காகவும் நன்மைக்காகவும் கவலைப்பட்டு கஷ்டப்பட்டு கடும் முயற்சியுடன் உழைப்பவர்கள், அதை குறித்து மனநேர்மையுடன் சிந்திப்பவர்கள் ஆர்,எஸ்,எஸ்ஸையும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளையும் சேர்ந்த இளைஞர்கள்தான்….”
View More ஒரு கிறிஸ்தவ பாதிரியும் போலி மதச்சார்பின்மையும்ஆற்றைக் காக்க சாகும் வரை உண்ணாவிரதம் காக்கும் துறவி
ஹரித்வாரில் உள்ள சாந்தி சதன் ஆசிரமத்தில் மூன்று மாதங்களாக உண்ணா நோன்பு இருக்கிறார் அந்த 81 வயது முதிய துறவி சுவாமி ஞான ஸ்வரூப் ஸானந்த். ஒரே விஷயத்திற்காக அவர் அறிவித்திருக்கும் ஐந்தாவது கால வரையற்ற உண்ணா நோன்பு இது… கட்டுப் பாடற்ற, அசுரத் தனமான அணைத்திட்டங்களும் மின் உற்பத்தி நிலையங்களும் கங்கை நதியையும் இந்தப் பிரதேசத்தின் சூழலியலையும் முற்றிலுமாக அழித்து விடும் என்று அவர் கருதுகிறார்… சாது பழமைவாதியும் அல்ல, முன்னேற்றத்திற்கு எதிரியும் அல்ல. பூர்வாசிரமத்தில் ஜி.டி.அகர்வால் என்ற சூழலியல் பொறியாளர் (Environmental Engineer) அவர்… “2010ம் ஆண்டு எங்களது தொடர்ந்த போராட்டத்தால் மூன்று அணைக்கட்டுத் திட்டங்கள் நிறுத்தப் பட்டன. ஆனால் இப்போது அலகநந்தா நதியில் 5 மின் திட்டங்களை மறுபடியும் அறிவித்துள்ளனர். அன்னை கங்கை கட்டற்றுப் பாய்பவள். அவளது பிரவாகத்தை எந்த வகையிலும் தடுக்கக் கூடாது” என்கிறார் ஸ்வாமி ஸானந்த்…
View More ஆற்றைக் காக்க சாகும் வரை உண்ணாவிரதம் காக்கும் துறவிதனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர்
கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 7-ம் தேதி பி.என். ஸ்ரீனிவாசன் தனது 85-ம் வயதில் காலமானார் என்ற செய்தியை நான் இணையத்தில் தான் படித்தேன். பி.என். ஸ்ரீனிவாசனும் இது பற்றியெல்லாம் கவலைப் பட்டவரில்லை.அப்படி ஒரு ஜீவன், அப்படி ஒரு வாழ்க்கை. தான் வாழும் காலத்தின் தர்மங்களை, வாழ்க்கை முறைகளை, நம்பிக்கைகளைப் பற்றிக் கவலை கொள்ளாது தன் வழியில் தான் நினைத்ததை முடிந்த அளவில் செயல் படுத்தி வந்தவர். அவர் வேறு ஒரு யுகத்தில், யுக தர்மத்தில் வாழ்ந்தவர்….சென்னை மாநிலக் கல்லூரிக்கு எதிரே மெரினா கடற்கரையில் உள்ள திடலுக்கு திலகர் கட்டம் என்ற பெயரை மீண்டும் வைக்கக்கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார்… நமக்கெல்லாம் மறந்துவிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள், யாருக்கு ந. சோமையாஜுலுவை நினைவில் இருக்கும்? ஒரு காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் சுதந்திரப் போராட்ட காலங்களில் தன் பெயரை பிரகாசிகக்ச் செய்தவர். அவரைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை, பாரத மணியில் வந்திருந்தது…
View More தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர்ரமேஷ்ஜி – ஒரு முற்றுப் பெறாத சகாப்தம்
சேலம் மாநகர் மக்கள் அனைவரும் கலங்கி நின்ற தினம் ஜூலை 20-ஆம் தேதி. அன்று தான் மிக நல்ல மனிதன் என்று ஒட்டுமொத்த சேலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் பூதஉடல் மயானத்தில் தீ மூட்டப்பட்டது… உடல் பெறப்பட்டதும் சிறு சலசலப்பு – அதுவும் காவல்துறை மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்டதால் – முடிந்து உடல் நகர வீதிகள் வழியாக எடுத்துவரப் படுகிறது. மக்களின் கண்களில் தன்னிச்சையாக வழியும் கண்ணீர் அஞ்சலி. கடையடைப்புக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. சொல்லாமல் சேலம் நகரெங்கும் கடைகள் அடைக்கப் படுகின்றன. கைகள் தொழுகின்றன. கால்கள் தொய்ந்து பின் செல்கின்றன… “ஸ்ரீ ராமனுக்கு பூர்வபாஷி என்ற பெயர் உண்டு. எவரிடமும் முதலில் தான் முன் சென்று அறிமுகப்படுத்திப் பேசும் நல்ல குணத்தினால், அவருக்கு அப்படி ஒரு பெயர். அதேபோல எந்த அதிகாரிகளையும், சாதாரண மக்களையும் பார்க்கும் பொழுது முதலில் தானாக முன்வந்து பேசும் குணம் உடையவர் ரமேஷ்ஜி.” என்கிறார் ஒரு தொண்டர்..
View More ரமேஷ்ஜி – ஒரு முற்றுப் பெறாத சகாப்தம்சித்தருக்குக் கிட்டிய சித்தி
நெரூரில் சமாதி கொண்ட சித்தர் சதாசிவ பிரம்மேந்திரர். இவருடைய சமாதியின் மேல் வளர்ந்திருக்கும் விருக்ஷம் பட்டுப் போனது, இப்போது மீண்டும் துளிர்த்து வளர்வதைக் காண மக்கள் வந்து போகிறார்கள். காவிரிக் கரையில் அமைதியான சூழலில், வயல்களும், தோட்டங்களும் சூழ்ந்த இயற்கை அழகு கொஞ்சுகின்ற இடத்தில் அமைந்திருக்கிறது இவரது சமாதி….. தஞ்சாவூர் மாரியம்மன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படும் இந்த மாரியம்மன் கோயில் இருக்குமிடம் புன்னைநல்லூர். தன்னை அங்கு ஒரு சிறு பெண் அழைத்து வந்து தன் இருப்பிடம் இதுதான் என்று அந்த புற்றைக் காட்டிவிட்டு மறைந்து போனாள் எனும் செய்தியை மன்னன் சொல்ல, அந்த மகான் எழுந்து அந்த புற்றை மாரியம்மனாக உருவாக்கினார். இந்த மாரியம்மனை இதர மதத்தாரும் வந்து வழிபடுவதை நாம் பார்க்க முடிகிறது…
View More சித்தருக்குக் கிட்டிய சித்திபெருந்தலைவர் எம்.சி.ராஜா: நமக்கு அளிக்கும் கட்டளை
ஹிந்து சமுதாய ஒற்றுமை, சமத்துவம், சமரசம் ஆகியவற்றுக்காக உழைத்த பெரும் தேசிய தலைவர் எம்.சி.ராஜா ஆவார். தம்மை தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் என தம் பெயர் குறித்து கவலையின்றி தேசத்துக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைத்து தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கும் இந்து சமுதாயத்துக்காகவும் உழைத்த உத்தம பெரியவர் அம்மகான்….
View More பெருந்தலைவர் எம்.சி.ராஜா: நமக்கு அளிக்கும் கட்டளைமோடியின் குஜராத் – நூல் மதிப்புரை
இந்தியாவின் 51வது குடியரசு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கம் குஜராத்தின் கட்ஜ் பகுதியை மையமாகக் கொண்டிருந்தது. தெருக்களில் ஊர்வலமாக தேசபக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு தேசியக்கொடி ஏற்றுவதற்காக பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்த 250 மாணவர்கள் உட்பட சுமார் 20000 பேர் இந்த நிலநடுக்கத்தால் கொல்லப்பட்டனர். கட்ச் பகுதியிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள அகமதபாத்தில் கூட நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றால் அதன் பாதிப்பை சற்று நினைத்துப் பாருங்கள். ஆனால் குஜராத் அசரவில்லை. பெரும்பாலான கிராமங்கள் இரண்டே ஆண்டுகளில் சீரமைக்கப்பட்டன.
இன்று உலகின் பல பகுதிகளில் பேரிடர் அழிவுகள் ஏற்பட்டால் அவர்கள் மறுசீரமைப்பு பணியை ஆரம்பிப்பதற்கு முன் குஜராத்திற்கு வருகை தருகிறார்கள், கட்ச் பகுதியில் எப்படி மறுசீரமைப்புப் பணிகள் திட்டமிடப்பட்டன, நடைமுறைப்படுத்தப்பட்டன போன்ற விவரங்களை அறிந்து கொள்கிறார்கள். மோடியின் வித்தையை மின்சாரம் , விவசாயம் , குடிநீர் , சுகாதாரம் , உள்கட்டமைப்பு என்று பல்வகையாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் சரவணன் தங்கதுரை.
View More மோடியின் குஜராத் – நூல் மதிப்புரைஅஞ்சலி: மலர் மன்னன்
இரண்டு நாட்கள் முன் இருக்குமா? மலர்மன்னனிடமிருந்து வந்தது தொலை பேசி அழைப்பு ஒன்று. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கிக் கொண்டே தொலை பேசியை எடுத்தேன். சந்தோஷமாக சிரித்துக்கொண்டே, ”உங்க ரங்கநாதன் தெரு கட்டுரை நம்ம சென்னையில் வந்திருக்கு இந்த மாதம். பாருங்கோ நெட்லே கிடைக்கும். அச்சிலே வரதுக்கு நாளாகும்” என்றார். ”பாக்கறேன். ஆனால் நெட் கனெக்ஷன் போயிடுத்து” என்று கொஞ்சம் நிம்மதி அடைந்து அவருக்கு பதில் சொன்னேன். அவருக்கும் எனக்கும் இடையே சுமார் இருபது நாட்களுக்கும் மேலாக அவருடைய புத்தகம் “திராவிட இயக்கம், புனைவும் உண்மையும்” பற்றித் தான் பேச்சு. அது பெற்றுள்ள வரவேற்பு பற்றி அவருக்கு ரொம்ப சந்தோஷம். ”ராமகோபாலன் பத்து காபி வாங்கிண்டு போயிருக்கார். அவரைச் சுத்தி எல்லாருக்கும் கொடுக்கறதுக்கு” என்று. சொன்னார். புத்தகம் ஸ்டாலுக்கு வரதுக்கு முன்னாலேயே நெட்லேயே எல்லாம் வித்துப் போச்சாம் என்று ஒரு செய்தி. ”இனிமே மறுபடியும் அச்சடிச்சு எனக்கு எப்போ காபி கொடுக்கப் போறாளோ தெரியலை,” என்று ஒரு நாள். “வைரமுத்து, கருணாநிதிக்குக் கூட இவ்வளவு வரவேற்பு இருந்ததா கேள்விப்படலையே ஸ்வாமி, எதுக்கும் ஜாக்கிரதையா இருங்கள். அரவிந்தன் புத்தகத்துக்கு நடந்தாப்போலே, பெரியார் திடல்லே கூட்டம் போடுவாங்க உங்களைத் திட்டறதுக்கு. இல்லாட்டா, ராமமூர்த்தி புத்தகத்து பதில் கொடுத்தாப்போல, உங்களுக்கு ஒரு 400 பக்கத்துக்கு பதிலடி கொடுக்க வீரமணி தயார் பண்ணிக் கணும்” என்று இப்படி ஏதோ பேசிக்கொள்வோம். பத்ரி இந்த புத்தகத்தை எழுதச்சொல்லி இவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து இந்த தொலை பேசி சம்பாஷணை தொடர்ந்தது. புத்தகம் கைக்கு வந்ததும் எனக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்திருந்தார். அதிலிருந்து நான் அதைப் படித்தேனா என்று கேள்விகளுக்கும், படித்து விட்டேன் என்றதும் எப்படி இருக்கிறது புத்தகம்? என்றும் தொடர்ந்து கேள்விகள், பின்னர் எழுதத் தொடங்கியாயிற்றா?” என்று கேள்விகள் கேட்டு தொலை பேசி மணி அடித்தவாறு இருக்கும்.
ஒவ்வொரு தடவையும் திண்ணையில் அவர் எழுதும் கட்டுரைகள் மாத்திரம் அல்ல, பின்னூட்டங்கள் பற்றியும் கேட்பார். எனக்கு அவர் சளைக்காமல் காவ்யா, சுவனப்ரியன் (இப்படி அனேகர்), இவர்களின் விதண்டா விவாதங்களுக் கெல்லாம் பதில் அளித்துக்கொண்டிருப்பது அவர் தன் நேரத்தை வீணடிப்பதாக எனக்குப் படும். நான் சொல்வேன். ஆனால் அவர் கேட்கமாட்டார். ”எழுதி வைப்போம். இன்னம் படிக்கிறவர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு இது போய்ச் சேராதா,” என்பார். இந்த தீவிர முனைப்பும் சளைக்காத உழைப்பும், விசாலமான அனுபவம், வாசிப்பு, உற்சாகம் மிகுந்த துடிப்பு எல்லாம் அவரிடம் பார்த்து நான் பொறாமைப் பட்டதுண்டு. மேலும் மிகவும் மென்மையான சுபாவம். யாரையும் கடிந்து கொள்ள மாட்டார். சீற்றம் என்கிற சமாசாரம் அவரிடம் இருந்ததில்லை. தார்மீக காரணத்துக்கானாலும் சரிதான்….