ஒரு முறை ரமணர் இருக்கும் பக்கம் அவருக்கு வெகு அருகில் ஒரு பாம்பு வந்ததாம். அவர் பாம்பைப் பார்த்துக்கொண்டு நிற்க, பாம்பும் அவரைப் பார்த்து படமெடுத்துக் கொண்டு நின்றதாம். வெகு நேரம் சென்ற பின் பாம்பு தன் வழியே போக, அவரும் அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த அரிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அன்பர் ஒருவர் ரமணருக்கு அந்த சமயத்தில் என்ன மாதிரி உணர்வு இருந்தது என்று அவரிடம் கேட்டிருக்கிறார் [..]
View More ரமணரின் கீதாசாரம் – 8Category: இந்து மத விளக்கங்கள்
ரமணரின் கீதாசாரம் – 7
எப்படி மற்றவர்களைத் தன்னவர்களாகக் காண்பது என்னும் ஐயம் எவருக்குமே வரும். ஏனெனில் என்னதான் மற்றவர்களை நாம் அப்படிப் பார்த்தாலும் அல்லது பார்க்க முயற்சித்தாலும், ஏதோ ஒரு சமயத்திலோ அல்லது ஏதேனும் ஒரு காரணத்திற்காகவோ மற்றவர்கள் நம்மை அப்படிப் பார்ப்பதில்லையே என்று எவருக்குமே கேட்கத் தோன்றும். [..]
View More ரமணரின் கீதாசாரம் – 7ரமணரின் கீதாசாரம் – 6
ஒருவன் செய்ய வேண்டிய செய்கைகளையும், முறைகளையும் விதிகளாக வகுத்தும், அதேபோல செய்யக் கூடாதவைகளைத் தவிர்ப்பதையும் சொல்வது சாஸ்திரம். செய்யக் கூடியவைகளை தர்ம காரியங்கள் என்றும், தவிர்க்கப்பட வேண்டியவைகளை அதர்ம காரியங்கள் என்றும் பொதுவாகச் சொல்வார்கள். அவைகள் வேதத்தையே பிரமாணமாகக் கொண்டு பெரும்பாலும் செவி வழியே வந்தவை. காலத்தின் மாற்றங்களினால் எங்கு ஐயங்கள் வருகின்றனவோ அங்கெல்லாம் நம் முன்னோர்கள் என்ன சொன்னார்களோ அல்லது எதைச் செய்தார்களோ அதைப் பின்பற்றி நடப்பதும் சாஸ்திரத்தை ஒட்டி நடப்பதாகவே கொள்ளப்படும்.
View More ரமணரின் கீதாசாரம் – 6ரமணரின் கீதாசாரம் – 5
ஒரு பொருளின் இருப்பையும், இல்லாமையையும் உணர்கிறோமே, அந்த உணர்வு என்பதற்கு ஒரு வடிவமும் இல்லை, அதை நாம் நம் புலன்களாலும் அறிவதில்லை. ஆக புலன்களால் அறியப்படுவது என்பது நம்மைச் சுற்றி பிரபஞ்சத்தில் உள்ள மற்ற பொருட்களுக்கே அன்றி நமக்கோ நமது உணர்வுக்கோ இல்லை என்றே ஆகிறது.
View More ரமணரின் கீதாசாரம் – 5ரமணரின் கீதாசாரம் – 4
எது என்றும் உள்ளதோ அது நிலைத்து நிற்கும், எதற்கு இருப்பு இல்லையோ அது இல்லாததே. இன்று இருக்கிறது, நாளை இல்லாது போகும் தன்மை கொண்டது அது. ஆக முன்னும் பின்னும் இல்லாது இடையில் மட்டும் இருக்கும் தேகத்தை எப்படி நிலையானது என்று கொள்ள முடியும்?
View More ரமணரின் கீதாசாரம் – 4ரமணரின் கீதாசாரம் – 3
தீமைகள் வளரும் போது அவைகளைத் தடுக்கும் எண்ணம் இல்லாது போனால், நன்மைகள் வளர முடியாது என்பதையும் நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம் அல்லவா? அப்போது தீமைகள் ஊக்குவிப்போரை எப்படி அடக்க வேண்டும் என்பது தானே நமது லட்சியமாய் இருக்கிறது? இந்தப் போர்க்களத்தில் நடக்கப் போவதும் அதுவே…
View More ரமணரின் கீதாசாரம் – 3ரமணரின் கீதாசாரம் – 2
தேகம் வேறு, ஆன்மா வேறு என்று பகுத்து அறியும் அறிவே பகுத்தறிவு. அது அனைத்து சீவராசிகளையும் ஒன்றாகவே பார்க்க வைப்பதால், அது ஒரு புண்ணியச் செயல். அப்படியில்லாது இவர் வேறு, அவர் வேறு என்ற ரீதியில் நான்-நீ என்று பகுத்துக் காட்டும் அறிவு பகுத்தறிவு ஆகாது. அப்படி பேதங்களைப் புகுத்தும் எதுவும் பாவச் செயல்களே.
View More ரமணரின் கீதாசாரம் – 2ரமணரின் கீதாசாரம் – புதிய தொடர்
கடல் போன்ற உபநிடதங்களைக் கடைந்து, கண்ணன் வழங்கிய ஆரமுதான கீதையின் சாரமாக, நமக்காக பகவான் ரமணர் தந்த, சுருக்கமான பொருட்செறிவு மிகுந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய புதிய தொடர்!
View More ரமணரின் கீதாசாரம் – புதிய தொடர்போகியை யோகி எனல்
உடலின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் ஒத்துழைத்தாலும் எதுவும் தனது சுய நலனுக்காக அல்ல. இதை ஆத்மாவுக்கு அனுசரணையாகப் பக்குவப்பட்ட உள்ளம் உணர்ந்திருக்குமானால் அதன் செயல், காமத்தின் விளைவாக நிகழும் செயலாகவே இருப்பினும் அது உள்ளத்தையும் உள் அந்தரங்கமான ஆத்மாவையும் பாதிப்பதில்லை. இதனால்தான் போகியை யோகி என்று கூற முடிகிறது.
View More போகியை யோகி எனல்ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு
கந்தபுராணத்தில் மிகச்சிறப்பாக ஐயனாரின் அவதாரம் பேசப்பட்டுள்ளதைக் காண்கிறோம். எனவே இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயனார் வழிபாட்டில் நம் தமிழ் மக்கள்… இறைவனின் திருவடிவங்களுக்கு இடையில் உறவுமுறை பேசுவதும், ஒருவர் ஒருவருக்குப் பிறந்தார், அவர் இவருடன் சண்டையிட்டார் என்றெல்லாம் சொல்வதும்… மேல்சாந்திமார்கள் உள்ளிட்ட அர்ச்சகர்களும் வெள்ளாடை சாற்றியிருப்பதையே காணும் போது ஏன் இவ்வாறு கறுப்பாடை அணிய வேண்டும்?
View More ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு