அவர்-அவன்

பேர்சொல்லப் பிள்ளையும் பேரனும் பேத்தியும்
பெற்றதில் பெருமை கொண்டார்.அவன்
பாருக்குள் நற்றமிழ் நாட்டினை விட்டிட
‘போர்’என்று புலம்பி நின்றார்…

வாய்ப்புள்ள போதெல்லாம் பேசிக் கொள்வார்.அவர்
வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்வார்
‘வாய்ப்’பினில், ‘சாட்’டினில் தம்மக்கள் பெருமையை
வாயாறப் பீற்றிக் கொள்வார்…

View More அவர்-அவன்

இந்து மகத்துவக் கும்மி

கும்மியடி பெண்ணே கும்மியடி – கையில்
கோலவளை கொஞ்சக் கும்மியடி
நம்மவர் ஒற்றுமை ஓங்கிடவும் – தமிழ்
நாடு செழிக்கவும் கும்மியடி.

View More இந்து மகத்துவக் கும்மி

கடவுள், மனிதன், கடைசி யுத்தம்

“என் சிருஷ்டி திசைக்கொன்றாய்
ஊதிய பஞ்சாய் வலியால் கதறியது.
யானை மிதித்த பூவாய்
அதன் மூச்சு திணறியது.”

View More கடவுள், மனிதன், கடைசி யுத்தம்

நகரம் நானூறு – 5

“கல்லறைமேல் வீடெழுப்பும் ஊருக்குள் விந்தையுண்டோ அன்னியத்தில்!”

வாழ்ந்திருந்த மக்களிடம் மண்பிடுங்கி வீடெழுப்பி
வாழ்கின்ற மக்கள் வசிக்கின்றார் – பாழுலகில்
தப்படியை வைப்பதற்கும் சாணகலம் மிஞ்சாக்கால்
இப்படியும் உண்டே இடம்.

View More நகரம் நானூறு – 5

நகரம் நானூறு – 2

“பூனையுடன் பால்குடிக்கும் பிள்ளைபோல் பற்று.”

“வீடெல்லாம் துள்ளி இறையும் துளிப்புலி”

View More நகரம் நானூறு – 2

நகரம் நானூறு – 1

“நானும் இரா முருகனும் நகரக் காட்சிகளை நானூறு வெண்பாக்களாகத் தீட்டுவதாகத் திட்டமிட்டோம். நான் எழுதியவற்றை நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்வரையில் குழுக்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். இடையில் நின்று போயிருந்த இந்த முயற்சியை இப்போது தொடர்கின்றேன். ஒரே ஒரு வித்தியாசத்துடன். எந்தக் காட்சி என்னை எழுதத் தூண்டியதோ அந்தக் காட்சியின் புகைப்படத்தையும் இணைக்கிறேன். நான் எடுத்த படங்கள்தாம்.”

View More நகரம் நானூறு – 1