பூமி, உன்னிடமிருந்து எதைத் தோண்டினாலும் அது விரைவில் வளரட்டும்.
உனது இதயத்தையும், மர்மஸ்தானங்களையும் நாங்கள் சேதப் படுத்தாதிருப்போமாக…
ஆழ்ந்த கவித்துவமும், ஆன்மிகமும் ததும்பும் மொழியில், இன்றைக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், புவிநேசர்களும் கூறும் சூழலியல் கருத்தாக்கங்களுடன் இயைவதாக வேத ரிஷிகளின் இந்தக் கவிதை விளங்குகிறது என்றே சொல்லலாம்.
Category: கவிதை
தமிழ் இந்து தளத்தில் பங்களிக்கும் படைப்பாளிகளின் கவிதைகள்.
இப்படித்தான் ஆரம்பம் -2
‘இனிமே வாட்சை அடகு வச்சா மீக்கற வேலையில்லை! ஒரு குச்சி இருந்தா போதும்’ என்றபடியே ஒரு குச்சியை உடைத்து பரிசோதனைகள் செய்து நிழலை அளந்து,குச்சியை அளந்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு,”ரவி!! பணி பதினொண்ணு’ என்று அறிவித்தார்.
View More இப்படித்தான் ஆரம்பம் -2நவராத்திரிப் பாட்டு – பொழுது புலர்கிற வேளையிது…
தத்துவம் அவளது கால்விரல்கள்-அன்னை
திருவடி இரண்டும் மறையொளியாம்
வித்தகர் அறிவே பட்டாடை-அவர்
விநயம் அன்னையின் அணிகலனாம்
ராஜமார்த்தாண்டன் – மனதின் கலைஞன்
ராஜமார்த்தாண்டன் கவிஞர், திறனாய்வாளர். கொல்லிப்பாவை இதழ் ஆசிரியராக இருந்தவர். தினமணியில் உதவி ஆசிரியராக இருந்தவர். ‘மனப்பறவை’ கவிதையில் மலைச்சிகரம் நோக்கிப் பறக்கும் கவிதையைப் பற்றிப் பேசுகிறார். அந்த மனப்பறவை ராஜமார்த்தாண்டனே அன்றி வேறல்ல. ‘எல்லாமே நம்பிக்கையில்தான்’ கவிதையில், தன் கவிதை நம்மாலோ நம் வாரிசாலோ எப்படியும் உணரப்படும் என்கிறார். அவர் இறந்த செய்தி கேட்டு, ராஜமார்த்தாண்டனின் கவிதைகளைத் தேடிப்பிடித்து மீண்டும் வாசித்தபோது, அவரது நம்பிக்கை உண்மையாவதை உணர்ந்தேன். அதை உணர அவரில்லை. அஞ்சலி.
View More ராஜமார்த்தாண்டன் – மனதின் கலைஞன்கவிதை: காலின் வலிகள்…
பட்டாம் பூச்சியின் சுவாசத்தில்
பதறும் புல்நுனி நெஞ்சம்
பாகை கட்டிப் பாண்டி விளையாடப்
பரவெளி தேடிக் கெஞ்சும்!
விட்ட மூலையில் சிலந்தி துறந்த
வெற்று வலைகள் மிஞ்சும்
வெளிறிப் போன விட்டில் சிறகை
வீணே காற்று கொஞ்சும்!
நகரம் நானூறு – 8
இந்த முறை நகரத்தில் திரியும் யானைகளின் உலா. சென்னைக்கு யானை; பெங்களூருக்கு ஒட்டகம். பெங்களூர் ஒட்டையை பின்னொரு நாள்பார்ப்போம். இப்போதைக்கு சென்னை நகரத்து யானைகள் இடம்பெறுகின்றன.
View More நகரம் நானூறு – 8நகரம் நானூறு – 7
‘பசும்புல் தலைகாண்பரிது‘ என்று சொன்ன மைலாப்பூர்காரர் இப்போது மைலாப்பூருக்கு வந்து பார்த்தால் விசும்பின் துளி வீழ்ந்துகொண்டிருந்தாலும் பசும்புல் தலை காண்பது அரிது என்ற புது உண்மையை உணர்ந்துகொள்வார். பெங்களூரில் பத்துப் பதினைந்து அருகம்புல் கொண்ட கட்டு ஐந்து ரூபாய்க்கு விற்கிறது!
View More நகரம் நானூறு – 7புவனேஸ்வரி நவரத்ன மணிமாலை
2000ம் ஆண்டு நவராத்ரியில் அன்னை புவனேஸ்வரியின்மேல் நான் ஒரு நவரத்ன மணிமாலை இயற்ற வேண்டும் என்று இணையப் பிதாமகர் டாக்டர் ஜெயபாரதி விரும்பினார். டாக்டர் ஜேபி, வழக்கமான யாப்பு விதிகளைக் காட்டிலும் சில அதிகமான, சிறப்பான விதிகளையும் சேர்த்தார். ஐந்தாவது பாடல் தொடங்கி ஒன்பதாவது பாடல் வரையில் ஒவ்வொரு பாடலிலும் பயிலவேண்டிய தொனி, அதன் தன்மை, அதில் பதிக்கப்பட வேண்டிய பீஜாட்சரங்கள், எந்த அட்சரத்துக்குப் பிறகு எந்த அட்சரம் வரவேண்டும் என்றெல்லாம் விரிவாக எடுத்துச் சொன்னார். முக்கியமான விஷயம் என்னவென்றால்….
View More புவனேஸ்வரி நவரத்ன மணிமாலைஒரு சொல் தொலைவு
துறவி என்பவன் அன்னையின் சம்மதத்தோடுதான் துறவேற்க முடியும் என்பது நமக்குத் தெரிந்த ஒன்று. ஒரு பக்கம் பந்தங்களை இறுத்துக் கொணடு விடுபட்டுப் போகும் உறுதியான நிலையில் ஒரு சிறுவன்; மறுபக்கம், வாழ்க்கையில் இழக்க இனி ஏதும் இல்லை என்று நினைத்திருந்தவளுக்கு, ‘தன் வாழ்க்கைக்கு ஒரேஒரு பிடிப்பாக மிகுந்திருக்கும் இந்தப் பிள்ளையையும் இழந்தே ஆகவேண்டும்’ என்ற கட்டாயச் சூழல்.
View More ஒரு சொல் தொலைவுமண்ணில் ஒரு விண் (வெண்பாக்கள்)
இதுதான் மண்ணிலே தென்படும் விண் என்ற தகுதிக்கு எதுவெல்லாம் வரக்கூடும்? ஒருசிலவற்றை வெண்பா வடிவத்தில் தந்திருக்கிறேன். சந்தவசந்தக் குழுவில் நடந்த கவியரங்கில் பங்கேற்றபோது இட்டவை இவை.
View More மண்ணில் ஒரு விண் (வெண்பாக்கள்)