இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 26

ராவணன் ஒரு மகாவீரன் மட்டும் அல்லாமல் ஒரு கைதேர்ந்த போர்த் தலைவன் ஆனதால், அரக்கர்களின் மூர்க்கமான தாக்குதலால் வானரர்கள் பக்கம் சரிவு ஏற்பட்டு பலத்த இழப்பு நேர்ந்தது. ஒரு கட்டத்தில் இராமரே வானரர் படையை முன்னின்று இயக்கி, ராவணனையும் நேருக்கு நேர் சந்திக்கலாமா என்று யோசித்தார். ஆனால் ராவணனுடன் நேரடித் தாக்கலில் தானே ஈடுபட விரும்புவதாக லக்ஷ்மணன் தெரிவித்தான். அதற்கு ஒத்துக்கொண்ட இராமர் எதிரியின் பலவீனத்தை பயன்படுத்தவும், தன் பலவீனத்தை எதிரி பயன்படுத்தாது இருக்குமாறும் போர் புரிய வேண்டும் என்று லக்ஷ்மணனுக்கு அறிவுறுத்தினார். எதிர்பாராமல் இருக்கும்போது எதிரிக்கு அடிகொடுக்கும் அதே சமயம், எதிரி எளிதில் தாக்கவோ, காயப்படுத்தவோ தன்னைக் காட்டிக்கொள்ளாதபடி இருக்கவும் சொன்னார்.

விழிப்புடன் இரு! கூர்மையாகக் கவனித்துக்கொண்டு, வில்லில் நாணேற்றும் போது வேகமாகச் செய்து எதிரி மேல் அம்பைச் செலுத்துவதில் முந்திக் கொள். எதிரியின் ஆயுதங்களிலிருந்து எட்டி இருந்து அவை உன்னை அடையாதபடி காத்துக்கொள்.

போர்க்களத்தில் யார் வேகமாகத் தன் தாக்குதலைச் செய்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி கிடைக்கும். ஒரு இமைப்பொழுது என்றாலும், அது ஒருவருக்கு வாழ்வா சாவா என்பதை நிச்சயிக்கும். கவனிப்பதிலோ, எய்வதிலோ, தாக்குவதிலோ எதையும் எவரால் வேகமாகச் செய்ய முடியாதோ அவருக்குப் போர்க்களத்தில் எந்த உத்திரவாதமும் இல்லை; அதனால் அவர்க்குப் போர்க்களம் ஒரு கொடுப்பினையே அல்ல.

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 26

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 25

வானரர்கள் இலங்கை மாநகரைத் தாக்குவதற்குத் தயாராக முதலில் அதைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அவர்களின் தளபதிகள் மேலிடத்தில் இருந்து வரவேண்டிய ஆணைக்குக் காத்திருக்க, போர் தொடங்குவதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிந்தன. அப்போதும் இராமர், ஒரு வேளை மனம் மாறி தனக்கும் தன் வீரர்களுக்கும் போரினால் வரக்கூடிய அழிவுகளைத் தவிர்ப்பதற்காகவே, ராவணன் திருந்துவானா என்று கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சிறிது காத்திருந்தார். அனாவசியமான போர்ச் சேதங்களையும், கொலைகளையும் தடுப்பதற்காக அந்நாளில் எதிரிகளுக்கு நிறைய கால அவகாசம் கொடுத்த பின்பே போர்கள் தொடுக்கப்படும். இங்கு அங்கதன் மூலம் இராமர் அனுப்பிய செய்தியும் அந்தப் பண்டைய வழக்கத்தை ஒட்டியதுதான். எதிரிக்கு அவகாசம் ஏதும் கொடுக்காமல் திடீரென்றும், இலை மறைவு காய் மறைவு ஏற்பாடுகளுடன் இரவோடு இரவாகவும் சரித்திரத்திலும், சமீப காலத்திலும் காணப்படும் சில போர்களில் இருந்து இது வித்தியாசமானவை.

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 25

தீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்?: ஓர் எதிர்வினை – 1

அண்மையில் எம்.டி. முத்துகுமார சுவாமி எனும் தமிழக அறிவுஜீவி இந்து மூல நூல்கள் நான்கு வர்ணத்தாருக்கு அப்பாற்பட்ட இனக் குழுக்களை தன் மனிதர்களாகவே கருதவில்லை; அவை தீண்டாமை குறித்துப் பேசின என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு சான்றாக, மகாபாரதத்தில் உள்ள அரக்கு மாளிகை சம்பவம், காண்டவ வன அழிப்பு, கடோத்கசன் மரணம் ஆகிய சம்பவங்களைக் குறிப்பிட்டிருந்தார். .. இதனை மறுத்து, உண்மையில் இச்சம்பவங்கள் வியாச பாரதத்தில் சித்தரிக்கப் பட்டுள்ள விதம் என்ன, இவற்றில் உள்ள மானுடவியல், சமூக வரலாற்று பார்வைகள் என்ன என்பதை ஆதாரபூர்வமாக விளக்குவதற்காகவே இந்த எதிர்வினை…

View More தீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்?: ஓர் எதிர்வினை – 1

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 24

“எவர் என்னை அண்டி வருகிறார்களோ அவர்களுக்கு நான் அபயம் அளிப்பேன். என்னை அடைந்தபின் அவர்களுக்கு எந்த வித பயமும் வேண்டாம். இது என்னுடைய கொள்கை” – இந்த வரிகள் மூலம் இராமரின் தெய்வீக அம்சத்தை வால்மீகி எல்லோருக்கும் உணரவைக்கிறார். இது இறைவனால் அனைவருக்குமே கொடுக்கப்பட்டுள்ள உறுதி…. எப்படி ராமராஜ்யத்தில் எல்லாமே உண்மை என்பதால் பொய் என்பதே இல்லாது போகிறதோ, அதேபோல ஆனந்த நிலையில் எந்தப் பொருளும் பரம்பொருள் ஆகிவிடுவதால், வேறு என்பதே இல்லாததாகி அச்சம் என்பதும் இல்லாது போகிறது…. சான்றோரின் குணங்களான மனவடக்கம், பொறுமை, எளிமை, இனிமையான பேச்சு, இவை அனைத்தும் நற்குணம் இல்லாதவர்களிடம் காண்பிக்கப்படும்போது, அதை அவர்கள் பலமின்மை என்று தவறாக நினைக்கிறார்கள்….

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 24

இராமாயண அறம் – ஜடாயுவின் உரை

தர்மம் என்றால் என்ன என்ற அறிமுகத்துடன் ஜடாயு தனது உரையைத் தொடங்கினார். பிறகு இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு பெரும் இதிகாசங்களின் அறம் குறித்த பார்வைகள் எப்படி இணைந்தும் வேறுபட்டும் உள்ளன என்பது பற்றிக் குறிப்பிட்டார். வாலி வதம், குல தர்மம் – ஸ்வதர்மம் – உலக தர்மம், சீதையின் அறம் ஆகிய புள்ளிகளைத் தொட்டுச் சென்றது அவரது உரை. சுலோகங்களையும், கம்பராமாயணப் பாடல்களையும் இடையிடையே மேற்கோள் இட்டுப் பேசினார். உரையின் வீடியோ பதிவு கீழே..

View More இராமாயண அறம் – ஜடாயுவின் உரை

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 23

சீதையின் அழகில் மயங்கி இருந்த ராவணனுக்கு விபீஷணன் சொன்னது பிடிக்கவில்லை; அவனது அறிவுரையை ஏற்க மறுத்தான். விபீஷணன் சொன்ன எதற்கும் அந்தக் குழுவில் இருந்த எவருமே எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதையும் அவன் உணர்ந்தான். அதே சமயம் குழுவில் இருந்த மற்றவர்கள் ஆரவாரமாகத் தாங்கள் தனியாளாக ராமனிடம் போர் புரிந்து வெற்றி பெறுவோம் என்று கை உயர்த்தி, மார் தட்டிப் பேசியதையும் அவன் வெறும் திண்ணைப் பேச்சு என்றும் புரிந்துகொண்டான். சிலரே இருந்த அந்தக் குழு என்றில்லாமல், பொது மக்களில் பலரும் இருக்கும் பெரியதொரு வட்டத்தில் தனக்கு வேண்டிய பக்கபலம் கிடைக்குமா என்று பார்க்க, அத்தகைய கூட்டத்தைக் கூட்டி அந்தப் பிரச்சினையை அவர்கள் முன் வைத்தான். அகண்ட உறக்கத்திலிருந்து எழுப்பிவிடப்பட்டு அங்கு உட்காரவைக்கப்பட்டிருக்கும் ராவணனின் இன்னொரு தம்பியான கும்பகர்ணன், அப்போது சபையில் எழுந்து நின்று ராவணன் எல்லாவற்றையும் செய்துவிட்டு இப்போது நம்மிடம் நியாயம் கேட்பது எப்படி முறையாக இருக்கும்; தண்டகாரண்ய வனத்திற்குப் போகும் முன்பாகவோ, சீதையை அபகரிக்கும் முன்பாகவோ நம்மிடம் ஆலோசனை செய்திருந்தால் அது சரியாக இருந்திருக்கும் என்று ராவணனை ஒரு பிடி பிடித்தான்.

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 23
Hanuman Returns

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 22

யஜமானன் கொடுத்துள்ள ஒரு கடினமான வேலையை எந்த ஒரு வேலையாள் அன்புடன் ஈடுபாட்டோடு செய்வானோ, அவன் மற்றவர்களை விட உயர்ந்த நிலையில் இருப்பவன்… தோற்றுவிடுவோமோ என்ற பயமே போர் புரிவதற்கு வேண்டிய மனோநிலையை இழக்கச் செய்கிறது… ராவணன், தான் பேச ஆரம்பித்ததுமே ஒருமித்த முடிவு ஒன்றை எடுப்பதையே தான் விரும்புவதாக எடுத்த எடுப்பிலேயே சொன்னான்… எந்தப் பிரச்சினையிலும் அதைத் தீர்க்க எடுக்கப்படும் முயற்சிகளில் வேறெதுவும் சரியாக வரவில்லை என்றால், போருக்குச் செல்வது என்ற முடிவு…

View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 22

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21

இருப்பதற்குள் வலிமை மிக்க ஆயுதமான பிரம்மாஸ்திரம் இந்திரஜித்திடம் உள்ளதால், முதலில் இராவணன் அவனை அனுப்பினான்… தூதனுக்குரிய தண்டனை எதுவானாலும் கொடுக்கலாம்; ஆனால் தூதனைக் கொல்வது கூடாது என்று விபீஷணன் சொன்னான்… தனக்கு வந்த கோபத்தால் எப்படி இருந்த ஊர் இப்படியாகிப் போனதே என்று ஹனுமன் மனதிற்குள் வருந்தினான்… ததிமுகாவின் வயதிற்கும் மதிப்புக் கொடுக்காமல் தன் பங்கிற்கு அங்கதனும் அவரை நையப்புடைத்து அடித்து நொறுக்கி விட்டான்… இதைத்தான் தெரிந்தோ தெரியாமலோ கடவுள் இல்லை என்பவர்கள் கூட ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்றார்கள்…

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 20

அப்போது சீதை ஒரு தெய்வீக அன்னையாக வந்து ஆண், பெண், மற்றும் திருநங்கைகளைக் கூட எந்தவொரு வித்தியாசமும் பார்க்காது வாஞ்சையோடு கட்டி அணைத்து ஆரத் தழுவுவாள்… வேறு எதற்குமே இல்லாவிட்டாலும் நம்மை உலகுக்குக் கொண்டு வந்திருப்பதன் ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமாவது நாம் பெற்றோர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம். முன்பே இராமர் சொன்னது போல, அந்தக் கடனை நாம் என்றும் திருப்பிக் கொடுக்கவே முடியாது… அரக்கர்கள்தான் வெவ்வேறு உருவம் எடுத்து வருவதில் வல்லவர்கள் ஆயிற்றே, அதனால் தோட்டத்தை அழித்துக் கொண்டிருக்கும் வானரமும் வேறு எந்த அரக்கனோ….

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 20

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 19

வாழ்வின் துன்பமான சில கட்டங்களில், அவற்றிலிருந்து மீள்வதற்கு தனக்கு மரணம் நேர்ந்தால் நல்லது என்று பலரும் நினைக்கலாம். அப்போது அவன் என்னதான் முயற்சி செய்தாலும் அவனுக்கு மரணம் வாய்க்காமல் போகும்போது, அதற்கான காலம் இன்னும் வரவில்லை என்றுதான் அர்த்தம். அதேபோல் ஒருவன் என்னதான் தவிர்க்க முயன்றாலும், அதற்கான காலம் வந்துவிட்டால் மரணத்தை எவரும் தவிர்க்க முடியாது. இதுதான் இயற்கை நியதி. அதனால்தானே மரணத்தைக் கொண்டு வருபவனுக்குக் காலன் என்றும் ஒரு பெயர் உண்டு. ஆக பிறப்பதும் நம் கையில் இல்லை, இறப்பதும் நம் கையில் இல்லை. அதனால் வாழும்போது நாம் செய்யவேண்டியது என்ன என்று யோசிப்பவனும், வாழ்வதன் பொருள் என்ன என்று சிந்திப்பவனுமே பிறந்த பிறப்பின் பயனை இறப்பதற்கு முன் உணர்ந்து கொள்ளாவிட்டாலும் அறிந்து கொள்கிறான்.

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 19