புறமும், அகமும்: ஜான் என்னும் விஷ்ணுபக்தர்

..தனது கையால் இடித்த கோவிலை மீண்டும் தனது கையால் நிர்மாணித்தலே அமைதி பெறும் வழி என உணர்ந்தார் தாமஸ்.. உடனே கோயில் கட்டும் வேலையை நிறுத்தும்படி உள்ளூர் கிறித்தவ சபை உத்திரவிட்டது. ஜானுக்கு அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தக் கோவிலை கட்டியதும்தான் தங்களது குடும்ப நிம்மதி மீண்டது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்ததால் கிறித்தவ சபையின் எதிர்ப்பையும் மீறி கோயிலை அமைத்து வழிபாடு செய்யத்தொடங்கினார்.

View More புறமும், அகமும்: ஜான் என்னும் விஷ்ணுபக்தர்

இயக்குனர் ஸ்ரீதரின் கிறிஸ்தவ நண்பன்

.. ஆனால் அதற்கு 10 நிமிடம் முன்னதாக கிறிஸ்தவ மாணவர்களுக்காக ஒரு பிரத்யேகமான பிரேயர் நடைபெறும். அதற்கும் எல்லா ஹிந்து மாணவர்களும் கட்டாயம் வரவேண்டும் என்றது பள்ளிக்கூட நிர்வாகம். அப்படி வராதவர்களுக்கு பள்ளிக்கூட வருகைப் பதிவேட்டில் ஆப்செண்ட் போட்டார்கள்…. இறுதியாய் என்னைப் பார்த்து “நீ ஏன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறக் கூடாது?” என்று கேட்டார். நான் அதிர்ந்து போனேன்.

View More இயக்குனர் ஸ்ரீதரின் கிறிஸ்தவ நண்பன்

இந்து நேபாளம் – ஒரு பார்வை

இந்துப் பண்பாட்டின் மூலம் இயல்பாய் ஜனநாயகத்திற்குள் பிரவேசித்திருக்க வேண்டிய நேபாளம், இன்று ஜனநாயகத்தையே மறுக்கும் மாவோதிகளின் பிடியில். நலிந்து பட்ட உடலில் நோய்கள் புகுவதுபோல இன்று மோசமான நிலையில் இருக்கும் நேபாளத்தைக் குறிவைத்து மிஷநரிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. அவர்களது குறிக்கொள்கள்: கடைசி நேபாளிவரை கிறித்தவனாக மதம்மாற்றுவது.

View More இந்து நேபாளம் – ஒரு பார்வை

கட்டிப்பிடி திருமணம்!

கோட்டு, சூட்டு அணிந்து கொண்டு கண்டவனையெல்லாம் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதுதான் பண்டைய…

View More கட்டிப்பிடி திருமணம்!

ஒழியுமா ஊழலுக்கு ஆதரவு?

பொதுவாகவே ஊழலையும், நேர்மையின்மையையும், சுயநலத்தையும், சுரண்டலையும் அடித்தட்டு மக்களில் ஆரம்பித்து நாட்டு அதிபர் வரை அன்றாட நிகழ்வாக ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டோம். ஒருவன் செய்யும் குற்றத்தை இன்னொருவன் தட்டிக் கேட்கத் தகுதி இல்லாத அளவு, ஒட்டு மொத்த சமுதாயமும் நேர்மையற்றதாக மாறிக்கொண்டு இருக்கிறது.

View More ஒழியுமா ஊழலுக்கு ஆதரவு?

காவல்துறை Vs நீதித்துறை: தமிழகத்தின் பரிதாபம்

வக்கீல்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள சங்கங்களின் பலமும், அரசியல் கட்சிகளின் பக்கபலமும் இருக்க, காவலர்களுக்குச் சங்கங்கள் இல்லாமையும், அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாமையும் பெரும் பலவீனமாக உள்ளன. அவர்களை ஆளும் கட்சியினரும் காப்பதில்லை, எதிர்க் கட்சியினரும் கடுமையாகக் கண்டிக்கிறார்கள். சாதாரணப் போக்குவரத்து விதி மீறல் முதல் கிட்டத்தட்ட கொலைக்குற்றம் வரை, வக்கீல்கள் மீது வெறும் ’முதல் தகவல் அறிக்கை’ (FIR) மட்டுமே போலீசாரால் பதிவு செய்ய முடிந்துள்ளது… சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஜாதி மற்றும் அரசியல் கட்சி சார்புள்ள சங்கங்களோ இயக்கங்களோ நடத்த அனுமதிக்கக் கூடாது…

View More காவல்துறை Vs நீதித்துறை: தமிழகத்தின் பரிதாபம்

காடென்னும் கடவுள்

சொந்த வீட்டில் எங்கள் குடும்பத்தால் வளர்க்கப்பட்ட மரங்களை இழந்ததற்காகச் சிறுவயதில் வருந்தாத நான், பெங்களூரில் சாலைகளை விரிவாக்குவதற்காகச் சாலையோர மரங்கள் வெட்டப்படுவதைப் பார்க்கும்போதெல்லாம் பெரும் வலியை உணர்கிறேன்… “எப்படியாவது இந்த மரங்களைக் காப்பாற்றியாக வேண்டும். ஆனால் எப்படியென்றுதான் தெரியவில்லை!” என்று ஊர்மக்கள் அனைவரும் ஒரேகுரலில் சொல்கின்றனர். அய்யாசாமி மாவட்ட நிர்வாகத்துக்குக் கூட ஒரு புகார் மனு அளித்திருப்பதாகக் கூறுகிறார்.

View More காடென்னும் கடவுள்

’பப்’ கலாசாரம் பெண்களுக்கு அவசியமா?

ராம்சேனெ அமைப்பு தாங்களே சட்டத்தைக் கையில் எடுத்தது தவறுதான். அதற்கு அவர்களைக் கைது செய்யவேண்டியதும் முறையே. ஆனால் பெண்கள் இத்தகைய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பது தவறு என எந்த அரசியல்வாதியும் சொல்லவில்லை. நம் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கட்சியான காங்கிரஸின் பிரமுகர் ரேணுகா செளதிரி ஒரு படி மேலே போய், அனைத்துப் பெண்களையும் “பப் பரோ” (மதுக்கடையை நிரப்பு என்று பொருள்!) என்று அறைகூவல் விடுத்துப் போராட்டம் நடத்தினார். இது எத்தகைய அநியாயம் என்பதை அவர் உணரவில்லை.

View More ’பப்’ கலாசாரம் பெண்களுக்கு அவசியமா?

ஒரு குடும்பத்தின் கதை…

நண்பனின் மனைவி சில நிமிடங்களிலேயே வேற்றாட்கள் என்று பாராமல் எங்கள் முன் குமுறி அழ ஆரம்பித்தார். “என்னைச் சந்தேகப்படுகிறார், திட்டுகிறார், அடிக்கிறார், நிம்மதியே இல்லை, வயதுக்கு வந்த பெண் குழந்தை வேறு, நான் என்ன செய்வேன்!” என்று அழுதார்…

View More ஒரு குடும்பத்தின் கதை…

கண் விழித்த கானகம்: புத்தக விமரிசனம்

கதாநாயகன் பிர்ஸா முண்டா தன்னை ‘மலையிலிருந்து வந்தவன்’ என்று சொல்லிக் கொள்கிறான். உலகத்தில் உள்ளவற்றில் சிறந்தவை எல்லாமே மலையிலிருந்துதான் வரும்… கடற்கரையில் காலார நடந்து பின் வீடுவந்து கால் அலம்பிய பின்னும் விரலிடுக்கில் சிக்கி உறுத்தும் மணல்போல, கதாபாத்திரங்கள் படித்து முடித்த பின்னும், நம்மனதில் புகுந்து உறுத்துகின்றன.

View More கண் விழித்த கானகம்: புத்தக விமரிசனம்