விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவைப் பிராட்டியாரால் அருளிச் செய்யப்பட்டது. நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக விளங்குகின்றது. வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது… விநாயகப் பெருமான் பக்குவமுடைய ஆன்மாவுக்கு ஞானோபதேசம் செய்து ஞானநெறியிலும் யோகநெறியிலும் நிற்கச் செய்து இவ்வுலகிலேயே சீவன்முத்தனாக இருந்து சிவானந்தம் அனுபவிக்கும் நிலையினையும் தந்து, அவ்வான்மா சிவத்தைப் போலென்றும் ஒரேதன்மையுடையதாய் இருக்கும் நிலையினை அடையச் செய்கிறார்.
View More விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்Category: ஆன்மிகம்
பாவ மன்னிப்பும் பாப விமோசனமும்
சாம்பல் குவியலில் தீ இருப்பது ஒருவனுக்குத் தெரியவில்லை. அதனுள் நடந்தான்; அது காலைச் சுட்டுவிட்டது. அந்த வலியை அவன் அனுபவித்தே ஆகவேண்டும். அந்த வலியை மன்னித்து விடுகிறேன் என்று யாரும் சொல்லமுடியாது ….கொடிய செயல்களும் பிரபஞ்சத்தின் பெரிய திட்டத்தில் தகுந்த இடம் பெற்றிருக்கின்றன. பசுவின் மடியில் பால் இருப்பதும் பிரபஞ்ச நடைமுறைக்குத் தேவை. பாம்பின் பல்லில் விஷம் இருப்பதும் பிரபஞ்சத்தின் நடைமுறைக்குத் தேவை…
View More பாவ மன்னிப்பும் பாப விமோசனமும்பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி
நான்முகன் தீர்த்தத்தால் திருமாலின் பாதத்தைக் கழுவ, அதில் சில நீர்த்துளிகள் அவன் சிலம்பிற் பட்டு தெறித்ததால் ஏற்பட்ட நீரோடையே அது என்ற நம்பிக்கை உள்ளது. ஆகையால் “சிலம்பாறு” என்ற பெயர் ஏற்பட்டது. மதுரை மாநகரத்திற்குக் “கூடல்” என்ற பெயர் ஏற்பட்ட காரணம் என்ன? ..சங்க காலத்திலேயே வடநாட்டு நம்பிக்கைகளுக்கும் தென்னாட்டு நம்பிக்கைகளுக்கும் இருந்த ஒற்றுமை புலனாகிறது.. சிலப்பதிகாரம் திருவனந்தபுரத்தை ஆடகமாடம் என்று வர்ணிக்கிறது…
View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணிதரையைத் தொடாமல் வரும் கங்கை
தங்கள் கிராமத்திலிருந்து ஹரித்துவாருக்கு நடந்தே போய், வழியிலேயே காவடி தயாரித்து, அதில் ஹரித்துவாரில் நிரப்பிய கங்கை நீரை சுமந்து வந்து, தங்கள் ஊரிலிருக்கும் சிவனுக்கு அமாவாசை அன்று அபிஷகம் செய்கிறார்கள்.. இந்த பிராத்தனை பயணத்தில் பங்கு கொள்ளுபவர்கள் ஆண்டுதோறும் அதிகரித்துகொண்டே போகிறார்கள். கடந்த ஆண்டு பஙகு பெற்றவர்கள் 50 லட்சத்திற்கும் மேல்…
View More தரையைத் தொடாமல் வரும் கங்கைமாயையை அறிதல்
மாயையை அறிந்து, மாயையை உணர்ந்து, மாயையை அனுபவித்து, மாயையைக் கொண்டாடி, அதன்பின் மாயையைக் கடந்து செல்லப் பழக வேண்டும். மாயையை வெறுத்து அல்ல, மாயையை துவேஷித்து அல்ல, மாயையை அறியாமை என நினைத்து அல்ல, மாயையை இடையூறு என எண்ணியல்ல.
View More மாயையை அறிதல்பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 5
இராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் என்றைக்கோ ஓடிய காட்டாறு என்றால், பல்வேறு தலங்களில் நமக்கென்று காட்சி தரும் அர்ச்சாவதாரங்களானவை அக்காட்டாற்றின் மடுக்களில் இன்றைக்குத் தேங்கியிருந்து பல விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் கோடைக்காலமாகிய கலியுகத்தில் குளிர்ச்சி தரும் ஊற்றுநீர் போன்றதாகும். ஆகையால், பரப்பிரம்மத்தின் பரிபூரணமான வடிவம் இந்த அர்ச்சை மூர்த்தி வடிவமே என்பது பெரியோர்கள் துணிவு…
View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 5பிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை
சிவபெருமானின் இரு புதல்வர்களாகச் சிறப்பிக்கப்படுபவர்கள் விநாயகரும் முருகனும், இதில் முருகன் விஷ்ணு வடிவினராகக் கொண்டால், விநாயகர் பிரம்மாவின் வடிவம். விநாயகப்பெருமான் நரசிம்மப்பெருமானைப் போல, தேவ மனித பூத மிருக சகல ஜீவ இணைப்பை தனது திருவுடலில் காண்பிக்கும் அழகுடையவர் [..] எப்போதும் தீமைக்கு எதிராகப் போராடுகிற கடவுள். நடனம் கூட ஆடவல்லவர். இந்தக் கடவுளை பெருந்தீனி உண்பவர் என்றும் சோம்பலானவர் என்றும் நினைப்பதே பெரிய தவறு..[..]
View More பிள்ளையார் வணக்கம் ஒரு பார்வைபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 4
மதுரையைத் திருமாலின் திருவுந்தியிலே தோன்றி மலர்ந்த தாமரைப் பூவுடன் ஒப்பிடுகிறார். அந்நகரத்தில் உள்ள தெருக்கள் பிரமனைத் தாங்கும் அத்தாமரை மலரின் இதழ்களைப் போல வரிசையாக உள்ளனவாம். பாண்டியநாட்டு ராஜதானியாகிய அந்நகரத்தின் நடுவே உள்ள அரச அரண்மனையானது அப்பூவின் நடுவில் உள்ள பொன்னிற மகரந்தப் பொகுட்டினை ஒத்ததாம். அந்நகரிலுள்ள மக்கள் மகரந்தப் பொடித் துகள்களைப் போல காணப்பட்டனராம். அம்மன்னனைப் பாடிப் பரிசில்பெற வருகின்ற புலவர்கள் மலரில் காணப்படும் மகரந்தத்தையும் தேனையும் பருகப் பறந்துவரும் வண்டுகளைப் போல காணப்பட்டனராம். [..]
View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 4ரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பகுதி)
உலகு உண்மை ஒருவிதம், ஞானிகளின் உலகமோ வேறு விதம் [..] “பந்தன் நான் எனும் மட்டே பந்த முக்தி சிந்தனைகள்” என்பார் ரமணர். அந்த “நான்” இல்லாதவனுக்கு பந்தம் எப்படி வரும்? [..] ருமதி. கனகம்மாள் எழுதிய “ஸ்ரீ ரமண நூற்றிரட்டு உரை”யின் துணை கொண்டு எழுதப் பட்ட அற்புதமான தொடரின் நிறைவு பகுதி இது…
View More ரமணரின் கீதாசாரம் – 15 (நிறைவு பகுதி)ரமணரின் கீதாசாரம் – 14
ரமணரைத் தரிசிக்க வெளிமாநிலத்திலிருந்து வந்த ஒருவர், ரமணரது வாழ்க்கைச் சரிதையை எழுதியிருப்பதாகவும் அதை ரமணரே திருத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ரமணரும் ஒத்துக்கொண்டு, அதை முடித்து அந்தக் கைப்பிரதியை அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார். அதில் ரமணருக்குப் பல மனைவிகள் உண்டு என்றும், அவருக்குக் குழந்தைகள் உண்டு என்பன போன்ற உண்மைக்குப் புறம்பான விவரங்கள் இருந்தன [..]
View More ரமணரின் கீதாசாரம் – 14