தமிழ் மரபில் மட்டும்தான் இவளைப் பற்றி செய்திகள் உள்ளன என்பது, தமிழர்கள் வேதக் கருத்துகளில் எந்த அளவு ஆழ்ந்திருந்தனர் என்று காட்டுகிறது … மஞ்சள் துண்டு மகிமையைக் கண்டவருக்கு, போகம் காட்டி அவன் பாதையில் திரும்ப வேண்டி மோகம் கொள்ளச் செய்ய வேண்டும். தோஷங்களை அவன் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு நிழல் போன்ற நீளா தேவியின் கருணை – கருணைக்கே கருணை காட்டும் நீர்மை- தேவைப்படுகிறது.
View More தமிழர் கண்ட நீளா தேவிCategory: வைணவம்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்.
யார் நப்பின்னை ?
தமிழ் பக்தி உலகிலும் , இலக்கிய உலகிலும் , தனியிடத்தைப் பெற்ற மர்மப் பெண் நப்பின்னை … கடல் கொண்ட பின், தமிழுலகம் இழந்து விட்ட பல இலக்கியங்களுடன், இந்தத் திருமணம் பற்றிய குறிப்புகளும் மறைந்திருக்க வேண்டும். ஆனால் தப்பிப்பிழைத்த அந்த ஆயர் குடி மக்களால், அந்த பின்னை பெற்ற பேறு மறவாமல் பேசப்பட்டு வந்திருக்கிறது.. மாயோன் என்னும் கரும் தெய்வம் முலைகள் போன்ற இவ்விரு துருவங்களுக்கு இடையேயும் உலகை அணைத்துக் கொண்டு, ‘காஸ்மிக் ரே’ எனப்படும் கதிகளில் இருந்தும், பிற வகையான தீய கதிர்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறார்.
View More யார் நப்பின்னை ?காற்றினிலே வரும் கீதம்
சிவந்து மலர்ந்த தாமரைப் பூவை வண்டுகள் சூழ்ந்து கொண்டது போல முகத் தாமரையை சுருண்ட தலைமயிர் அழகு செய் கிறது. இந்த முகத் தாமரை யிலிருந்து தேனினும் இனிய கீதம் பெருகி வருகிறது. இந்த அமுத கீதத்தைப் பருகிய மான்கள் எப்படி அனுபவிக்கின்றன? …ண்ணனின் கானா மிர்தம் கிளம்பியதுமே அங்குள்ள மரங்கள் எல்லாம் மகரந்தத் தாரைகளைப் பெருக்கு கின்றன. சில மரங்கள் இந்த வேணு கானத்தைக் கேட்பதற்காகக் கிளை களைத் தாழ்த்திக் கொண்டு நிழலைத் தரு கின்றன …
View More காற்றினிலே வரும் கீதம்தீராத விளையாட்டுப் பிள்ளை
… யசோதை கண்ணனைத் தொட்டிலில் படுக்க வைக்கிறாள். கண்ணன் தொட்டில் கிழிந்து விடும்படி உதைக்கிறான். [பின்னால் சகடாசுரனை உதைப் பதற்கு ஒத்திகை பார்த்திருப்பானோ?]ஐயோ இப்படி உதைத்து, உதைத்துக் குழந்தைக்குக் காலெல்லாம் வலிக்கப் போகிறதே யென்று ஆதங்கத்தோடு தூக்கி எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டால் இடுப்பையே முறித்து விடுகி றானாம் ….
View More தீராத விளையாட்டுப் பிள்ளைபெரியாழ்வாரின் பட்டினம்
எம்பெருமான் தன் உள்ளத்தில் குடிபுகுந்து விட்டதால் விஷ்ணுசித்தருக்கு இப்பொழுது தைரியமும் தன்னம்பிக்கையும் வந்து விட்டது. இதற்குமுன் தன் ஐம்புலன்களையும், நோய்களையும். மரணத்தையும், யமதூதர்களையும் கண்டு அஞ்சிய விஷ்ணுசித்தர் இப்பொழுது அதே ஐம்புலன்களையும், நோய்களையும், யமதூதர்களையும் தாமே வலிய அழைத்து, தன் அச்சமின்மையையும் தான் பாதுகாப்பாக இருப்பதையும் கர்வத்தோடு எடுத்துச் சொல்கிறார்…
View More பெரியாழ்வாரின் பட்டினம்திருப்பாணாழ்வார்
ஒருநாள் பாணர் கண்களை மூடிக் கருத்தினில் அரங்கனை நினந்து கவனந்தனை மறந்து அரங்கனையே தியானித்துக் கொண்டிருந்தார். பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்ய நீர் கொண்டு செல்வதற்காக அங்குவந்த லோகசாரங்க முனிவர், இவரை தூர விலகும்படிச் சொன்னார். ஆனால் அரங்கனையே நினைத்துக் கொண்டிருந்த பாணர் காதில் இது விழவில்லை. அவர் கவனம்தான் பெருமாளிடம் சென்று விட்டதே! அதனால் கோபம் கொண்ட லோகசாரங்கர் ஒரு கல்லைத் தூக்கிப் பாணர்மேல் எறிய பாணர் முகத்தில் இரத்தம் வழிந்தது. பாணர் கண்களைத் திறந்து பார்த்தார். ‘ஐயோ, அரங்கனுக்குத் திருமஞ்சனம் கொண்டு செல்லும் இம்முனிவரின் கைங்கர்யத்துக்குத் தடங்கலாக இருந்து விட்டோமே’ என்று வருந்தி விலகிச் சென்றார்…
View More திருப்பாணாழ்வார்வேட்டையாடி விளையாடும் அரங்கன்
வையாளி: இது ஸ்ரீரங்கத்தில் திருவரங்கனின் கோவிலில் மட்டுமே காணக்கிடைக்கும்
ஒரு வைபவம். ஆன்ம அனுபவம். நம்பெருமாளின் ராப்பத்து திருவிழாவின் 8-ம் நாள்
இந்த இன்ப அனுபவம் கிட்டும். இறை நம்பிக்கை உள்ளவர் இல்லாதவர் என்ற பாகுபாடு இன்றி, உணர்வுள்ள அனைவர் உள்ளங்களிலும் உயரனுபவம் ஏற்படுத்தும் உன்னத நிகழ்வு இது. பக்தரோடு, பத்தரும் பரவசமடையும் தருணம் இது.
எதனால் இந்த பரவசம் ஏற்படுகிறது? ஒத்திசையும் சக்திகள் ஒருங்கே வெளிப்படுவதால்
இந்த பரவச அனுபவம் நிகழ்கிறது. இங்கே வேகமும், வலிமையும், விவேகமும், நளினமும் ஒன்றாய் கலந்து வெளிப்படுகிறது. கடவுளின் காந்தி காந்தமாய் தீண்டுகையில் உடம்பு அதிருகிறது. மனது பரவசம் பரவசம் என்கிறது.
ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 3
ராமன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத துணிவுடைய பெரும் வீரன். துணிவு என்பது மனச்சோர்வு ஏற்படும் காலத்திலும் அதற்கு இடம் கொடுக்காது சிறிதளவும் பின்வாங்காது இருத்தலே ஆகும்.
View More ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 3அழகிய மணவாள தாசரின் அகரவரிசைப் பாடல்
அழகிய மணவாள தாசர் என்ற ஓர் அடியவர்; ‘பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்’ என்றும் அழைப்பர். இவர் எழுதியது ‘அஷ்டபிரபந்தம்’ என்னும் நூல். எட்டு நூல்களின் தொகுப்பான இந்த நூலில் ‘திருவரங்கக் கலம்பகம்’ என்னும் நூலும் அடங்கும். திருவரங்கக் கலம்பகத்தின் ஒரு பாடல் உயிர் எழுத்துகளின் வரிசையில் அமைந்துள்ளது. இப்பாடல் பெருமானுடைய ஐந்து நிலைகளையும் விளக்குவதாகவும் திகழ்கிறது. எளிய மொழி அமைப்பும், பொருட்செறிவும் மனதைக் கவர்வதாக உள்ளது…
View More அழகிய மணவாள தாசரின் அகரவரிசைப் பாடல்பாலராமாயணம் – 2
சிறுவர்களுக்காக மிக எளிமையாகச் சொல்லப்பட்ட ராமாயணம்.
அந்த வேள்வித் தீயிலிருந்து சிவந்த கண்களும் நெருப்புப் போன்ற தலைமயிரும் கொண்ட பூதம் ஒன்று தன் கையில் அமுத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டது. அதை வாங்கிப் பட்ட மகிஷிகளுக்குக் கொடுக்கும்படி தசரத சக்ரவர்த்தியை வசிஷ்டர் வேண்டிக்கொண்டார்….
View More பாலராமாயணம் – 2