சென்னை சம்ஸ்கிருத கல்லூரியின் ஒரு பகுதியாக, அதன் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளது குப்புசாமி சாஸ்திரி சம்ஸ்கிருத ஆய்வு மையம்… நூற்றுக்கணக்கான சுவடிகள் இந்த ஆய்வகத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன; இந்த சுவடிகளில் பல 800 முதல் 1000 ஆண்டுகள் பழமையானவை… 1995 வரை இந்த ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அளித்து வந்த நிதியுதவி, பிறகு நின்று விட்டது.. முற்றிலும் தனியார் நன்கொடைகளின் உதவியுடனேயே செயல்பட்டு வருகிறது.. நிதியுதவி சீராக இல்லாமல் ஆய்வு மையம் சிரமப் படுகிறது. இந்நிலையில் இந்தியப் பண்பாடு மற்றூம் பாரம்பரியத்தின் மீதும், சம்ஸ்கிருத மொழி மீதும் பற்றுக் கொண்டோர் உதவிட வேண்டுமென இந்த ஆய்வு மையம் கோரிக்கை வைத்துள்ளது….
View More சென்னையின் சிறப்புமிக்க சம்ஸ்கிருத ஆய்வு மையம் உதவி கோருகிறதுஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 8
துயரம் தைரியத்தைக் கெடுக்கிறது; கல்வி தந்த அறிவை மறைக்கிறது. ஆக துயரம் எல்லாவற்றையும் அழிக்கிறது. அப்படியாக துயரம் என்பது நமக்கு எதிரிகள் எல்லாவற்றுள்ளுள் பெரிய எதிரியாக உருவெடுக்கிறது. இந்த உலகில், மகன் என்னதான் தீயவனாக இருந்தாலும் எந்த பொறுப்பான தந்தை தன் மகனைக் கைவிடுவார்? அல்லது நாடு கடத்தப்படும் எந்த மகன்தான் தன் தந்தையை வெறுக்காது இருப்பான்?
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 8புதுக்கோட்டையும் அரசியல் கட்சிகளும்
ஓராண்டுகால அதிமுக ஆட்சியில் சில துறைகளில் ஏற்பட்டுள்ள அதிருப்தியைப் பயன்படுத்தி அதிமுகவுக்கு எதிராக தேமுதிக பிரசாரம் செய்துவருகிறது. எனினும் இந்த அதிருப்தி அதிமுகவை வெல்லப் போதுமானதல்ல. இந்தத் தேர்தலின் விளைவாக, தேர்தல் முடிந்தவுடன் தேமுதிக பிளவுபடக்கூடும்… எப்பாடுபட்டும் இடைத்தேர்தலில் வெல்வதை ஆளும் கட்சிகள் கௌரவப் பிரச்னையாகக் கருதுகின்றன… தமிழக அமைச்சரவையே அங்கு இடம் பெயர்ந்துவிட்டது போல, எங்கு பார்த்தாலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வாகனங்கள் பறக்கின்றன. இடைத்தேர்தல் வாழ்க!…
View More புதுக்கோட்டையும் அரசியல் கட்சிகளும்நீயே அது – சாந்தோக்ய உபநிஷதம்
அன்பு மகனே, ஒரு மண்கட்டியினால் மண்ணாலானவை அனைத்தும் அறியப் படுகின்றன. மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. மண் மட்டுமே சத்தியம்… உண்ணும் அன்னம் மூன்றாய்ப் பிரிகிறது. அதன் பருண்மை மலமாகிறது. அதன் நடுவுரு ஊனுடம்பாகிறது. நுண்மை மனமாகிறது… விதவிதமான மரங்களிலிருந்து அவற்றின் ரசத்தை எடுத்துச் சேர்த்து ஒரு ரசமாக, தேனாக சமைக்கின்றன தேனீக்கள். அந்த ரசங்களுக்கு நான் இந்த மரத்தின் ரசம், நான் அந்த மரத்தின் ரசம் என்று பகுத்தறியும் விவேகம் இருப்பதில்லை.. அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது…
View More நீயே அது – சாந்தோக்ய உபநிஷதம்இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 16
பாரத தேசத்தின் தலைநகர் டெல்லி என்பதால் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகளின் முக்கியத் தலைவர்களும் தங்களுக்குத் தேவையான அனைத்து விதமான தகவல் பெறுவதிலும், அந்தத் தகவல்களை முறைப்படி யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு அனுப்புவதற்கும், உரிய இடமாக டெல்லியை மாற்றி வைத்திருந்தார்கள்….1997-ம் ஆண்டிலிருந்து டெல்லியில் பல்வேறு இஸ்லாமியப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில், கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையில், தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடிய வகையில் உள்ளது. ஆனால் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை டெல்லியில் மட்டும் 200க்கும் மேற்பட்டது. . கொல்லப்பட்டவர்களில் ஒரு சிலர் மட்டுமே பயங்கரவாதிகள் அதுவும் என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்கள், மற்றவர்கள் அப்பாவிப் பொது மக்கள் என்பதை மறந்து விட இயலாது.
View More இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 16பாரதி: மரபும் திரிபும் – 5
இந்து என்பதின் திரிபே இந்தியா என்பதுதான் பாரதியின் கருத்து என்று சொன்னால் மதிமாறனின் விமர்சனம் தேவையற்றது. ‘பாரதம், இந்தியா’ என்ற வார்த்தைகள் பாரதி பயன்படுத்தியிருப்பது பார்ப்பனியச் சிந்தனையின் வெளிப்பாடு என்று ஒரே வரியில் சொல்லியிருக்கலாம். அப்படியில்லாமல் மதிமாறன் பாரதி இந்தியா என்ற பெயரை வேண்டுமென்றே குறிப்பிடவில்லை என்று தனியாக விமர்சனம் வைக்கிறார். பார்ப்பனீய பூச்சாண்டியைக் காட்டி வளர்ந்த திமுக அரசு ஜூன் 1970ல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக இந்தப் பாடலை அறிவித்தது. பார்ப்பினிய எதிர்ப்பில் ஊறித்திளைத்த திமுக அரசாங்கம் இந்தப் பாடலில் பரதகண்டம் வருகிறதே – இது பார்ப்பனியச் சிந்தனைதானே – இதை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று யோசிக்கவில்லைபோலும்.
View More பாரதி: மரபும் திரிபும் – 5எழுமின் விழிமின் – 14
நமது சொந்த மக்களினமாகிற கடவுள் மட்டும் தான் இப்பொழுது விழித்துக் கொண்டிருக்கிறார். எங்கு நோக்கினும் அவரது கைகள்; எங்கும் அவரது திருவடிகள்; எங்குமே அவரது காதுகள்.. நம்மைச் சூழ்ந்து காணப் படும் விராட் புருஷனை வழிபடாமல் வீணான மற்ற தெய்வங்களின் பின்னால் ஏன் போக வேண்டும்?… எல்லாவற்றையும் பரிகாசம் பண்ணுவது, எதைப் பற்றியும் முனைந்து சிந்தியாதிருப்பது ஆகிய இந்த நோய் நமது தேசிய இரத்தத்தில் நுழைந்திருக்கிறது. இந்த பயங்கர வியாதியை விட்டுத் தொலையுங்கள். வலிமையுடன் இருங்கள். சிரத்தையுடன் இருங்கள். மற்றவையெல்லாம் தாமாக வந்தடைந்தே தீரும்..
View More எழுமின் விழிமின் – 14இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 7
பெண்கள் என்று இங்கு சொல்லப் பட்டிருந்தாலும் இது ஆண்களுக்கும் பொருந்தும். ஆணோ, பெண்ணோ எவருக்குமே கஷ்டமான, துக்கமான வாழ்க்கை என்றால் அது ஒத்துக்கொள்வதில்லை. தனக்கு அறிமுகமாயிருந்த வசதிகள் எதுவும் தன் வசமின்றி கைவிட்டுப் போவதை எவருமே விரும்புவதில்லை. அப்படி ஒரு நிலை உருவானால், கூட உள்ள துணையைக் கைவிடவும் பெரும்பாலோர் தயங்குவதில்லை. பணம் பத்தையும் செய்வதால், எவருக்கும் ஏழ்மை நிலை பிடிப்பதில்லை. தானே விரும்பி இராமருடன் காட்டுக்குச் செல்வதால், சீதைக்கு இந்த அறிவுரை தேவையே இல்லை. ஆனாலும் பொதுவாக மக்களுக்குச் சரியான சந்தர்ப்பத்தில் இது போன்ற செய்திகளைக் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்பதால், வால்மீகி இடத்திற்குப் பொருத்தமான இதை எழுதியிருக்கிறார்.
View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 7களரி – தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
இந்த மையம், கூத்து, பாவைக்கூத்து, சேவாட்டம் முதலிய நிகழ்த்துக் கலைகளை பயிற்றுவிக்கும் படியான பயிற்சிப் பள்ளியை சேலம் மாவட்டம் ஏர்வாடியில் தொடங்க இருக்கிறது. அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் ஏலவே செயலாக்கம் பெற்றுவிட்டன. பெரும் நிதி வேண்டும் இக்களப்பணிக்கு அன்பர்கள் உற்ற நிதியுதவி செய்து உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.. சமூகத்தின் கடை கோடியில் வாழ்ந்துவரும் விளிம்புநிலை நிகழ்த்துக் கலைஞர்கள் மீளமுடியாத வறுமையில் உழன்றபோதிலும் தம், உடல்,பொருள், ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள்…
View More களரி – தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையம்எழுமின் விழிமின் – 13
ஹிந்து சமயத்தைப் போல உயர்வாக மனித குலத்தின் மேன்மைச் சிறப்பைப் பற்றி வேறெந்தச் சமயமும் இந்த உலகத்தில் போதிக்கவில்லை. அத்துடன் ஏழை எளியவர்களின் கழுத்தின் மீது ஏறி மிதிக்கிற சமயமாக இவ்வுலகில் ஹிந்து சமயத்தைப் போல வேறெதுவும் இல்லை. இக்குற்றத்திற்குச் சமயம் பொறுப்பு அல்ல; ஹிந்து சமயத்திலுள்ள வெளி வேஷக்காரர்கள், வறட்டு ஆசாரவாதிகள் ஆகியோரே காரணம்… அறியாமை எனும் இருண்ட மேகம் இந்நாட்டைக் கவிந்திருக்கிறதென்பதை உணர்கிறீர்களா? அவ்வுணர்ச்சி உங்கள் மன அமைதியைக் குலைத்து, உங்களுக்குத் தூக்கமில்லாமல் செய்துவிடுகிறதா? அது உங்கள் குருதியில் கலந்து, இரத்தக் குழாய்களில் ஓடி, இதயத் துடிப்போடு சேர்ந்து துடிக்கிறதா?…
View More எழுமின் விழிமின் – 13