காமம் தவிர்க்கப்படவேண்டியதல்ல என்பது பண்டைத்தமிழர் அறிவு. சங்ககாலப்பாடல்களில் தலைவன் தலைவி ஊடல் கூடல் , பிரிவு பற்றி எத்தனை காவியச் செய்யுள்கள் இருக்கின்றன.தமிழர் மரபுமட்டுமல்ல, மொத்த இந்தியக் குடியொழுகுமுறையே காமத்தைத் தவிர்க்கவில்லை. வெளிமதில், கோபுரங்களில் உள்ள சிலைகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு உள்ளே வருபவர்கள் மெல்ல மெல்ல, அந்த சிற்பங்கள் மாறுவதைக் கண்டு, தன் கிளர்வுகளிலும், ரசனையிலும் மாறுகிறார்கள். இறுதியில் கருவறை மெய்ஞானத்தைக் காட்டுகிறது… பதின்ம வயதில் ஆண்டாள் பிற ஆழ்வார்களைக் காட்டிலும் நாயக நாயகி பாவத்தில் எழுதியதை, அவள் ஒரு Child prodigy என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் என்ன இருக்கிறது? “அந்த காலத்தில் ஒரு பெண் எப்படி இவ்வாறு பாடியிருக்க முடியும்?” ஆண்டாள் ஒரு சாதாரணப் பெண் அல்ல.. ஆண்டாள் தவிர வைணவத்தில் மூன்று பெண்களின் சொற்கள் புனிதமாகக் கருதப்படுபவை. அவை மும்மணிகள் ரகசியம் எனப்படும்…
View More காமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்Tag: ஆபாசம்
ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்
ஆண்டாளின் பாசுரங்களை ‘பாலுணர்வு இலக்கியம்’ என்பதாக சித்தரிக்கும் ஒரு விடலைத்தனமான, முற்றிலும் தவறான கண்ணோட்டம் தொடர்ந்து சில அரைகுறைகளால் முன்வைக்கப் பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களில் பொதுத்தளத்தில் கூறப்பட்ட அத்தகைய திரிபுகளுக்கான மூன்று எதிர்வினைகள் இந்தத் தளத்திலேயே வந்துள்ளன. இப்போது அதே அபத்தக் கருத்துடன் இன்னும் சிலவற்றையும் சேர்த்து வைரமுத்து கூறுகிறார்… ஈவேராவைப் போற்றி எடுக்கப் பட்ட திரைப்படத்திற்கு “சீதையின் முதுகில் ராமன் தடவியதால் கோடுகள் இருக்குமா” என்ற ரீதியில் விரசமான பாடலை எழுதிய அந்த நபரைக் கூப்பிட்டு அழைத்து ஆண்டாளைக் குறித்துப் பேச அவருக்கு மேடை அமைத்துக் கொடுத்தவர்களுக்குப் புத்தி எங்கே போயிற்று?… உண்மையில் வைரமுத்துவின் இத்தகைய திரிபுவாதங்கள் தனிப்பட்ட ஒரு விஷயம் அல்ல. தமிழ் இலக்கியங்களின் மீதும் தமிழ்நாட்டின் இந்து சமய மரபுகளின் மீதும் திராவிட, இடதுசாரி இயக்கங்கள் கடந்த பல பத்தாண்டுகளாக நடத்தி வரும் தாக்குதலின் ஒரு பகுதியாகவே இவற்றைக் காண முடியும்….
View More ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் – சில பார்வைகள்
ஓவைசி என்றொரு பயங்கரவாதி இந்துக்களை அழித்து விடுவேன் என்று கொக்கரித்த போது இணையத்தில் பெரும்பாலான நண்பர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தங்களுக்கு பிடித்த ஒரு சினிமா நடிகரின் படத்துக்கு தடை வந்த பொழுது மட்டும் அனைவரும் பொங்கி எழுகிறார்கள்… இணையத்திற்கு வெளியே, கலை சுதந்திரத்திற்கு ஆதரவாக முஸ்லிம்களிடமிருந்து கவனிக்கத் தக்க வகையில் எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது… வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஹிந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துபவர் கமலஹாசன். அவருக்காக இன்று வாய்கிழிக்கும் முட்டாள் ஹிந்துக்களுக்கு கமல் மூன்று நாட்கள் முன்பு தொலைக்காட்சி பேட்டியில் அளித்த பரிசு – ”விநாயகர் என்று ஒரு கடவுளே இல்லை; ஹிந்துத்துவ வெறிக்காக விநாயகர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டார்”… தமிழக அரசின், காவல்துறையின் இந்த மெத்தனப் போக்கு, தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஒரு முக்கிய கேந்திரமாக ஆவதற்குத் தான் வழிவகை செய்து கொண்டிருக்கிறது….
View More விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் – சில பார்வைகள்ஆண்டாள் மீது வக்கிர அவதூறு
ஆண்டாள் துளசிச்செடி அருகில் கண்டெடுக்கப் பட்டவள் என்பது வைணவ மரபு. அவளை தாசிமகள் ஆக்கியுள்ளது இக்கதை… உலக அரங்கில் தமிழின் பெருமிதங்களாக கருதவல்ல உயர் சிகரப் படைப்புகள் தந்த பெண்ணை அவமானப் படுத்துவது தமிழினத்தை அவமானப் படுத்துவது ஆகும்.. இழிவுச் சித்திரம் படைத்தல்தான் மறுவாசிப்பா? இது இலக்கிய கயமை ஆகாதா? அவதூறு பரப்பும் ஒரு மனநோய்க்கு பாடத்திட்டத்தில் இலக்கிய அறிமுகம் வழங்குவது மிகவும் தவறான முன்னுதாரணம்… மாணவர் நலனும், பல்கலைக் கழகத்தின் தரமும், நாட்டின் எதிர்காலமும், ஒரு சிலரின் சித்தாந்த வெறிக்கு பலியாகி விடக் கூடாது…
View More ஆண்டாள் மீது வக்கிர அவதூறுபுரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்
அண்ணாத்துரை குறித்து பாரதிதாசன் தீட்டியிருக்கும் இந்தக் கட்டுரைகள் கண்ணியம் குறைவான,மிக மிக மட்டரகமான, வக்கிரம் பிடித்த விமர்சனங்கள் ஆகும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. இதைப் படிக்கும் எவருக்கும் அது புரியும்… கொள்ளையடித்தக் குற்றத்தை நம தலையில் கட்டிவிடும் ஆற்றல் அண்ணாத்துரைக்கு உண்டு என்று குழுவினர் உறுதியாக நம்பினார்கள். இன்றுவரைக்கும் அண்ணாத்துரை வரவு செலவுக் கணக்கைக் கொடுக்கவேயில்லை!
View More புரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்போகியை யோகி எனல்
உடலின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் ஒத்துழைத்தாலும் எதுவும் தனது சுய நலனுக்காக அல்ல. இதை ஆத்மாவுக்கு அனுசரணையாகப் பக்குவப்பட்ட உள்ளம் உணர்ந்திருக்குமானால் அதன் செயல், காமத்தின் விளைவாக நிகழும் செயலாகவே இருப்பினும் அது உள்ளத்தையும் உள் அந்தரங்கமான ஆத்மாவையும் பாதிப்பதில்லை. இதனால்தான் போகியை யோகி என்று கூற முடிகிறது.
View More போகியை யோகி எனல்ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்
நல்ல கணவன் அமைய செய்யும் ஒரு பாரம்பரியமிக்க நோன்பைப் பற்றி, மிக மலினமான காம வார்த்தைகளால் நிரப்பி ஒரு பாடலை எழுதியிருக்கிறார் இந்த நடிகர்… ஆண்டாள் பாசுரங்களில் இருப்பதாக கூறப்படும் காமத்தையும், தமிழ் சினிமா பாடல் ஆபாசத்தையும் நாம் ஏன் ஒன்றாகக் கருத முடியாது?.. ஆபாச வியாபாரிகள் கலையின் பெயரால் நம் பண்பாட்டின் மீது செய்யும் தாக்குதலைக் கண்டு, நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?
View More ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்கள்ளக் காதல்
ஒரு அளவில் இருக்க வேண்டிய காமத்தை, கடைச்சரக்காக்கி வீடு தோறும் பரப்பப் பட்டு வருவது சமூக மனநிலையை பாதிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சாதாரணமான காமெடிக் காட்சிகளில் கூட ஒருத்தனுடைய சம்சாரம் இன்னொருத்தனுடன் ஓடிப் போவது பற்றிய காமெடி ஒரு நூறு திரைப் படங்களிலாவது வந்திருக்கும். இதைப் பார்க்கிற சிறார்கள் மனதில் எந்த வகையான உறவு சரி எது தவறு என்ற புரிதலில் பிழை ஏற்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது.
View More கள்ளக் காதல்சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 2
நகரத்துப் பெண்கள் என்றாலே தலையை விரித்துப் போட்டுக் கொண்டு (இதுக்கு யார் என்ன சொல்லப் போறீங்களோ சொல்லுங்கள், ஆவலோடு காத்திருக்கிறேன்), சல்வார், கமீஸ் போட்டுக் கொண்டு/ அல்லது மிக மிக நாகரிகமாய்க் குட்டைப்பாவாடை அணிந்த வண்ணம்/, கவர்ச்சியான உடை உடுத்திக்கொண்டுதான் இருப்பார்கள் என்றும் அடிக்கடி ஹோட்டல்களில் அதுவும் நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற ஹோட்டல்களில் சாப்பிடலாம் என்பதும் அவர்கள் கனவு…. ஒரு ஆண் அனுப்புகிற எஸ்.எம்.எஸ்ஸுக்கும், அவனோடு பேசவும் பெண்கள் வரிசையிலே வருவார்கள். வேறு வேலைவெட்டி எதுவும் எல்லாமல் என்னவோ இதற்காகவே பெண்கள் காத்துக்கிடக்கிறாற் போல் காட்டுவார்கள். எந்தப் பெண்ணுரிமைக் கழகம் அல்லது சங்கம், அல்லது மக்கள் பிரதிநிதிகள் இதை எதிர்க்கிறார்கள்?…
View More சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 2சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள்
உடை உடுத்துதலில் தொடங்கிய ஆபாசம் இன்று கள்ளக் காதலிலும் லஞ்சம் வாங்குவதிலும் அதற்காகச் சிறு குழந்தை என்று கூடப் பார்க்காமல் கொலை செய்வதிலும் போய் முடிந்திருக்கிறது. நமக்குத் தெரிந்து வெளியே வந்திருக்கும் சில நிகழ்ச்சிகள் இவை…. எல்லாப் பெண்களுக்கும் கிடைத்துவிட்டதா என்றும் கேட்கின்றனர். சரி, இல்லை என்றே வைத்துக்கொள்வோம். எல்லா ஆண்களுக்கும் இந்தச் சம உரிமை கிடைத்திருக்கிறதா? ஏன் எல்லா ஆண்களும் உயர்ந்த இடத்தில் இல்லை? ஏன் ஒரு சிலருக்கு மட்டும் நல்ல உயர்ந்த பதவிகளும்…
View More சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள்