ஆங்கில மூலம்: பேராசிரியர் T. P. ராமச்சந்திரன் தமிழாக்கம்: எஸ். ராமன் முந்தைய…
View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 2Tag: இதிகாசம்
ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 1
செவி வழி வந்து, பின்பு எழுத்துக்கள் மூலம் நம்மை அடைந்ததுதான் நமது புராணங்கள், மற்றும் இதிகாசங்கள் என்பதை நாம் அறிவோம். வேத-உபநிஷத்துகள் கூறும் உயர்ந்த தத்துவங்களை, பேச்சு வாக்கில் மக்களிடம் பரப்புவதற்காக, நடந்த நிகழ்ச்சிகளை தத்துவங்களோடு ஒப்பிட்டு, வாழும் வகையைக் காட்டுவதில் இதிகாசங்கள் மென்மையான, மற்றும் மேன்மையான வழிகாட்டிகளாக விளங்கின. இதிகாசங்கள் பாரதத்தில் நடந்த நிகழ்வுகளின் கோவையான நமது பண்டைய சரித்திரங்களாக இல்லாமல் வேறு என்னவாகத்தான் இருக்க முடியும்? ஏனென்றால், எவ்வாறு வேத மந்திரங்களை ஒருவர் சொல்லி மற்றவர்கள் கேட்டு பதிவு செய்துகொண்டார்களோ, அதேபோல நடந்த நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் அனைவருக்கும் பயன்படும் முறையில் நீதி, நேர்மைக்கான கோட்பாடுகளையும் எடுத்துச் சொல்லியிருக்கின்றனர்.
View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 1வான் பறக்கும் மதகரி: ஜெயமோகனின் வெண்முரசை முன்வைத்து..
பல நல்ல மகாபாரத மறு ஆக்கங்கள் உண்டு; அவை ஒற்றைப் படையான குரல்களுடன், ஒரு குறிப்பிட்ட தரப்பின் நியாயங்களையும் தார்மீகங்களையும் வலியுறுத்துவதாகவே உள்ளன. பாரத காவியத்தின் பிரம்மாண்டத்தை அதன் முழுமையான நோக்கில் மீள் உரைக்க முற்படுவது என்பது வியாசன் சென்றடைந்திருக்கும் அதே உயரங்களுக்குத் தாவும் முயற்சி தான். வானோக்கித் துதிக்கை நீட்டிப் பறக்க எத்தனிக்கும் யானையின் முயற்சி. வெண்முரசு நாவலில் நெடுக அதைக் காண்கிறோம்… மூன்று விதங்களில் இந்த நாவலை வாசிக்கலாம். ஒரு நல்ல, சமநிலை கொண்ட வாசிப்பு என்பது இந்த மூன்று அணுகுமுறைகளையும் உள்ளடக்கியதாக, அதே சமயம் அவற்றின் எல்லைகளையும் உணர்ந்ததாக இருக்கும்…. தீவிர படைப்பூக்கம் கொண்ட ஒரு கலைஞனின் அகம் என்பது தொடர்ந்து பிரவாகித்துக் கொண்டிருக்கும் நீரோட்டம் போல. அந்த பிரவாகத்தின் இயல்புகள் அதன் ஒவ்வொரு அலை மடிப்பிலும் தெரியவராவிட்டால் தான் ஆச்சரியம்…
View More வான் பறக்கும் மதகரி: ஜெயமோகனின் வெண்முரசை முன்வைத்து..மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்
உண்மையை ஒத்துக் கொள்வதென்றால் மகாபாரதம் எனக்கு உலகத்தின் தலை சிறந்த இலக்கியம். தர்க்கபூர்வமான, அறிவுபூர்வமான அணுகுமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது அந்த உணர்வு. ஆழ்ந்த பித்து என்றே சொல்லலாம்…மகாபாரதத்தை மூலமாக வைத்து எழுதப்பட்ட புனைவுகள், எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மீது எனக்கு எப்போதும் ஒரு soft corner உண்டு. அப்படிப்பட்ட எல்லா இலக்கிய/கலை முயற்சிகளையும் ஒரு பட்டியல் போட வேண்டும் என்று எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசையும் உண்டு. இவை சுருக்கங்களாக இருக்கலாம், இந்திய மொழிகளில் பாரதத்தைக் கொண்டு போகச் செய்த முயற்சிகளாக இருக்கலாம், மறுவாசிப்புகளாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் அவற்றை ஒரு பட்டியல் போடும் முயற்சியே இந்தக் கட்டுரை…
View More மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்மஹாபாரதம் கும்பகோணம் பதிப்பு மறு வெளியீடு
தமிழில் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக சொல்லப்படும் மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு தற்போது இருப்பில் இல்லை. குறைந்த அளவே அச்சிடப் பட்ட முந்தைய வெளியீட்டின் பிரதிகள் அனைத்தும் ஒரு வருடம் முன்பு விற்றுத் தீர்ந்து விட்டன. இந்தப் பொக்கிஷத்தை இப்போது வாசிக்க விரும்புபவர்கள் புத்தகம் கிடைக்காமல் அல்லல் உறுகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்க விஷயம். இது தொடர்பாக ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ராமன் அவர்களை தொடர்பு கொண்ட போது அவர் குறைந்தது நூறு பேர் முன் வெளியீட்டுத் திட்டத்தில் இணைந்து கொண்டால் கண்டிப்பாக வெளியிடுவதாக சொல்லியிருக்கிறார். இதைத் தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் குழுமங்களுக்கும் தயை கூர்ந்து பரிந்துரைக்கவும். விவரங்கள் கீழே…
View More மஹாபாரதம் கும்பகோணம் பதிப்பு மறு வெளியீடுதீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்?: ஓர் எதிர்வினை – 1
அண்மையில் எம்.டி. முத்துகுமார சுவாமி எனும் தமிழக அறிவுஜீவி இந்து மூல நூல்கள் நான்கு வர்ணத்தாருக்கு அப்பாற்பட்ட இனக் குழுக்களை தன் மனிதர்களாகவே கருதவில்லை; அவை தீண்டாமை குறித்துப் பேசின என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு சான்றாக, மகாபாரதத்தில் உள்ள அரக்கு மாளிகை சம்பவம், காண்டவ வன அழிப்பு, கடோத்கசன் மரணம் ஆகிய சம்பவங்களைக் குறிப்பிட்டிருந்தார். .. இதனை மறுத்து, உண்மையில் இச்சம்பவங்கள் வியாச பாரதத்தில் சித்தரிக்கப் பட்டுள்ள விதம் என்ன, இவற்றில் உள்ள மானுடவியல், சமூக வரலாற்று பார்வைகள் என்ன என்பதை ஆதாரபூர்வமாக விளக்குவதற்காகவே இந்த எதிர்வினை…
View More தீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்?: ஓர் எதிர்வினை – 1இராமாயண அறம் – ஜடாயுவின் உரை
தர்மம் என்றால் என்ன என்ற அறிமுகத்துடன் ஜடாயு தனது உரையைத் தொடங்கினார். பிறகு இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு பெரும் இதிகாசங்களின் அறம் குறித்த பார்வைகள் எப்படி இணைந்தும் வேறுபட்டும் உள்ளன என்பது பற்றிக் குறிப்பிட்டார். வாலி வதம், குல தர்மம் – ஸ்வதர்மம் – உலக தர்மம், சீதையின் அறம் ஆகிய புள்ளிகளைத் தொட்டுச் சென்றது அவரது உரை. சுலோகங்களையும், கம்பராமாயணப் பாடல்களையும் இடையிடையே மேற்கோள் இட்டுப் பேசினார். உரையின் வீடியோ பதிவு கீழே..
View More இராமாயண அறம் – ஜடாயுவின் உரைஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 1
நற்குணங்களின் குன்று, வீரன், கடமையில் கருத்துடையவன், நன்றி மறவாதவன், உண்மை விளம்பி, மனத்திடம் மிக்கோன், நற்குணத்தை ஒக்கும் செயல்கள் கொண்டோன், அனைவரின் நலம் விரும்பி, கல்வி மிக்கோன், திறமை மிக்க தொழிலாளி, பழகுதற்கு எளிமையானவன், தன்னிலே இன்புற்றோன், சீற்றத்தை அடக்கியவன், அழகன், அழுக்காறு அகன்றோன், சீண்டினால் சீறுவோன் என்ற இப்பதினாறு குணங்களைக் கொண்டவனே குணசீலன் என்று இங்கு கூறப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் இப்படிப் பட்டியலிட்டு ஒவ்வொருவனும் இப்படி இருக்கவேண்டும் என்று கூறாமல், இந்தக் குணங்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒரு வாழும் அல்லது வாழ்ந்த மனிதன் ஒருவனின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலம் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் எப்படி ஒரு குணவானாக இருக்க வேண்டும் என்று கூற விரும்பி, அப்படிப்பட்ட ஒருவன் இருக்கிறானா என்று வால்மீகி முனிவர் தவச்சீலர் நாரதரிடம் கேட்கிறார்.
View More இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 1படிவங்கள் எப்படியோ?
வெளி முழுவதையும் அந்த ஒற்றைப் பாதம் தாங்கிக் கொண்டிருக்கிறதோ என்பது போல ஒரு தோற்றம்… இராமவதார காவியத்தில், விராதனுக்கு சாப விமோசனம் மட்டுமல்ல, இராம ஸ்பரிசத்தால் மேலான நல்லறிவும் உண்டாயிற்று என்று கம்பன் எழுதுகிறான்… ஒரு விலங்கினால் மற்றொரு விலங்கிற்கு விளைந்த துயர் நீக்க வந்து, இரு விலங்குகளுக்கும் முக்தியளித்தாய்… “பார்த்தா, மூன்று உலகங்களிலும் எனக்கு யாதொரு கடமையும் இல்லை. அடையாத ஒன்றை இனி அடைந்தாக வேண்டும் என்பதும் இல்லை. ஆயினும், இடையறாது கர்மத்தில் இயங்கிக் கொண்டேயிருக்கிறேன்…”
View More படிவங்கள் எப்படியோ?பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3
பெருமானே! முந்தைய மகா பிரளயத்தின்போது, பிரபஞ்சம் என்பது நாம ரூபங்களோடு இல்லாமல் இருந்தது. அப்பொழுது மாயை என்னும் மூலப் பிரக்ருதி உன்னிடமிருந்து பிரியாவண்ணம், புலன்களைக்கொண்டு நேராகவோ, அனுமானத்தாலோ அறியப்படாத ஒன்றாய் விளங்கிற்று. பிறப்பிறப்பு நிலைகளும் இல்லை; பகல் இரவு எதுவும் இல்லை. பரமானந்த சோதியாக நீ ஒருவனே பொலிந்து நின்றாய் [..]
View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3