காஞ்சி மடத்தைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாகப் பல்வேறு தமிழ்ப்பணிகள் செய்து வருகின்றது. அரசாணையின்படி, ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள் செய்தது தவறே அல்ல. அவரும் அவர்களுடைய தர்மப்படியும் மரபின்படியும், கடவுள் வாழ்த்து பாடப்படும்போது, அமர்ந்த நிலையில் தியானம் செய்துள்ளார். இதில் வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்பு கேட்கவோ அவசியமே இல்லை.. 1971ல் தமிழ்த்தாயைக் கொச்சைப் படுத்தியும், அருவருக்கத்தக்க விதத்தில் அவமானப்படுத்தியும், “மூவாயிரம் ஆண்டுக்கு மேலாக இருக்கும் தமிழ்த்தாய் உங்களைப் படித்தவராக ஆக்கினாளா?” என்று கேள்வி கேட்டு ஈ.வெ.ரா பேசிய உரை பதிவுசெய்யப் பட்டுள்ளது. சீமான் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கொளுத்துவோம் என்று பேசியுள்ளார்… ஆண்டாளுக்கான போராட்டத்தை வெறும் பிராம்மணர்களின் போராட்டமாகக் காட்டவும் பிராம்மண – அப்பிராம்மண, சைவ – வைணவ சண்டையாகவும், மாற்றவும் முயற்சி செய்தனர். அவை பெரும் தோல்வி அடைந்தன. அந்த நிலையில், இந்தத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பிரச்சனையை ஒரு வாய்ப்பாகக் கருதி மக்களைத் திசைத் திருப்ப முயற்சி செய்கின்றனர்….
View More தமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்Tag: காஞ்சி சங்கராச்சாரியார்
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்?
சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள குறிப்பிட்ட நிகழ்ச்சியில் என்ன நடந்திருக்கிறது? ஆரம்பத்தில் ஒரு தமிழ்ப்பாடல் வருகிறது. எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். சரி, சம்ஸ்க்ருத சுலோகங்களுக்குப் பதிலாக தமிழில் உள்ள தெய்வபக்திப் பாடல் ஒன்றைப் பாடுகிறார்கள் என்று தானே சுவாமிகள் நினைத்திருப்பார்? வழக்கம் போலவே அமர்ந்திருந்து தானும் அந்தத் தருணத்தில் தெய்வ சிந்தனையில் இணைந்திருக்கிறார். உண்மையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அரசாங்கம் கொடுத்திருப்பதை விட உயர்ந்த ஸ்தானத்தைத் தான் சுவாமிகள் கொடுத்திருக்கிறார். ஸ்வாமிகள் அமர்ந்திருந்தது முற்றிலும் இயல்பான, எந்தவிதத்திலும் இங்கிதக் குறைவில்லாத செயல்… காஞ்சி மடம் இந்த விஷயம் குறித்து தெரிவிக்க வேண்டியது வருத்தமும் அல்ல, மன்னிப்பும் அல்ல, மேற்கண்ட விளக்கத்தைத் தான். மேலே உள்ள வீடியோ பதிவுகளின் க்ளிப்பிங்குகளுடன் இந்த விளக்கத்தை தொலைக்காட்சிகளிலும் மற்ற ஊடகங்களிலும் வரச்செய்ய வேண்டும்.
View More தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்?தி.க.வுக்கு எதிராக லாயக்கற்றவனின் பேச்சு!
மஞ்சை வசந்தன் ஆதாரமே இல்லாமல் தெய்வத்தின் குரல் புத்தகத்தில் சங்கராச்சாரி இப்படி சொன்னார் என்று ஒருதகவல் சொன்னார். உடனே நான் நீங்கள் எப்படி திரிபுவாதம் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும். அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் என்று சொல்லி அவர் எழுதிய புத்தகம், அவர் குறிப்பிட்ட தெய்வத்தின் குரல் புத்தகத்தோடு விளக்கினேன். என்னை முழுவதும் பேசவிடவில்லை என்றாலும் மஞ்சை வசந்தன் கோபமானார். நான் எடுத்துக்காட்டியதற்கு பதில் சொல்லவில்லை.
View More தி.க.வுக்கு எதிராக லாயக்கற்றவனின் பேச்சு!அறியும் அறிவே அறிவு – 1
“IIT என்னும் வார்த்தையில் இரண்டு I-கள் இருப்பதால் அங்கிருப்பவர்களுக்கு அகந்தை சற்றே அதிகமாக இருக்குமோ?”… ஆலமரத்திற்கு முதல் என்றும் முடிவு என்றும் இல்லாத நிலையாக விழுதுகளே வேராக வளர்ந்து ஒரு தொடர் நிகழ்வைக் குறிக்கின்றன. கல்வி, அறிவு இவைகளின் குணமும் அப்படித்தானே… எனக்குப் பகலில் சூரியன், இருளில் விளக்கு. இந்தப் பிரகாசத்தை எல்லாம் உணரக்கூடிய பிரகாசம் எது? கண்ணின் ஒளியினால் உணர்கிறேன். அந்தக் கண்ணை உணர்கின்ற ஒளி எது?…
View More அறியும் அறிவே அறிவு – 1தண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும்
இணைய வக்கிரங்களை வைத்து நாம் இன்னும் கற்காலத்திலிருந்தே வெளிவரவில்லையா என ஆதங்கப்படுவது “கொஞ்சம் ஓவர்”…அட, இந்த வக்கிர மனநிலை ஓர் இறையியலாகவே ஆபிரகாமிய மதங்களின் மூலம் அந்த மத மக்கள் மனதில் வேரூன்றி இருக்கிறது… பாகிஸ்தானிய இயற்கைப் பேரழிவின் போதும் அங்கு காஃபீர் ஹிந்துக்களை கொடுமைப்படுத்தும் ஈமானியக் கடமையை இஸ்லாமியப் பெருமக்கள் துறக்கவில்லை. ஹிந்துக்கள் அகதிகள் முகாம்களிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள் என்கின்றன பல ஊடகச் செய்திகள்…
View More தண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும்