மானமுள்ள வன்னியர்கள் யாராவது இருந்தால் “வன்னிய கிறிஸ்தவர்” “கிறிஸ்தவ வன்னியர்” ஆகிய அவமானகரமான பெயர்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வைக்கக் கிளர்ந்தெழ வேண்டாமா? புனிதமான அக்னிச்சட்டியின் மீது மானுட விரோத அன்னியமத சின்னமான சிலுவையை வரைந்திருப்பதை எப்படி சகித்துக் கொள்கிறீர்கள்?… அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் முழுக்க வன்னியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவருகிறார்கள். காரணம் என்னவென்று தெரியவில்லை. மதம் மாறினாலும் அவர்கள் வன்னியர் சங்கத்திலும், பாமகவிலும் தொடர்ந்து இருப்பதால் பாமக தலைமையும் கண்டுகொள்வதில்லை… மதமாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிட்ட சாதி சமுதாய அமைப்புகளும், இந்து அமைப்புகளும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இணைந்து இயங்கினால் கிறிஸ்தவ மதமாற்றப் பிசாசுகளை கட்டாயம் விரட்ட முடியும். அது நிகழ விடாமல் தடுப்பது சாதிக்கட்சிகளின் சுயநல சுயலாப அரசியலும், அதை நன்றாகப் புரிந்து வைத்துள்ள கிறிஸ்தவ மதமாற்றிகள் விரித்த வலையில் அந்த சாதி அமைப்புகள் வீழ்ந்து விட்டதும் தான்…
View More வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்Tag: சாதிகள் ஒரு புதிய கண்ணோட்டம்
தாய்மதம் திரும்புதலும் சாதியும்
இந்துமதத்தின் வரலாற்றில் அன்னியர்களை சுவீகரித்து ஏற்பதும் மதம் மாறியவர்களைத் திரும்பக் கொண்டு வருவதும் நீண்ட நெடிய காலமாக நடந்து வந்துள்ளது. இது ஒன்றும் நவீனகாலக் கண்டுபிடிப்பு அல்ல… தேவல ஸ்மிருதி (Devala Smriti) என்ற சம்ஸ்கிருத நூல் பொ.பி 10ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. மிலேச்சர்களால் கைப்பற்றப்பட்டவர்களையும் மதமாற்றத்தினால் தர்ம நெறிகளிலிருந்து தவறியவர்களையும் மீண்டும் சமுதாயத்திற்குள் சுவீகரிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை இந்த நூல் கூறுகிறது.. விஜயநகரப் பேரரசை நிறுவிய சகோதரர்களில் ஒருவரான புக்கராயரும்கூட இவ்வாறு தாய்மதம் திரும்பியவர்தான் என்று இந்தப் பேரரசு குறித்த காவியப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது… இவ்வளவு நீண்டகாலமாக இது நடந்து வந்திருக்கிறது என்னும்போது, தாய்மதம் திரும்பும் இந்துக்கள் எந்த சாதிகளுக்குள் இணைந்தார்கள்? விடை மிக எளிது…
View More தாய்மதம் திரும்புதலும் சாதியும்சூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா?
இது கீதையின் அந்தக் குறிப்பிட்ட சுலோகத்தை (9.32) குறித்த முற்றிலும் தவறான திரிபுவாதமும் பொய்ப் பிரசாரமும் அன்றி வேறில்லை. பாவிகளென்னைப் பணிவாராயினும், மாதரேனும், வைசியரேனும், சூத்திரரும் பரகதி பெறுவார் என்பது மகாகவி பாரதியாரின் மொழியாக்கம்.. சூத்திரர்கள் சமூக அந்தஸ்தில் தாழ்ந்திருந்தார்கள் என்பதால் தான் *இருந்தும் கூட* என்று வருகிறது. சத்துவ குண சம்பன்னர்களான பிராமணர்களும், ராஜரிஷிகளாகவும் உள்ளவர்களைப் பற்றி என்ன சொல்வது என்பது அவர்கள் உயர்ச்சியைக் காட்டியது. அப்படி சொன்னதால் உடனே சூத்திரர்கள் பாவப்பிறபிகள் என்று ஆகிவிடாது. இதற்கு தர்க்க சாஸ்திரத்தில் நஹி நிந்தா நியாயம் என்று பெயர். உதாரணமாக, சந்திரனும் கூட இவ்வளவு ஒளிவீசுகிறது, அப்படியிருக்க சூரியன் எவ்வளவு ஒளிதரும்? என்றால் அது சந்திரனை நிந்திப்பதல்ல..
View More சூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா?நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)
பறையர்-பள்ளர்கள் நில உடமையாளர்களாகவும் நிலக் குத்தகைதாரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய நிலை பிற தலித்களை விடப் பல மடங்கு மேலானதுதான். நில உடமைச் சமுதாயத்தினருக்குச் சேவைத் தொழில் செய்து வந்த சக்கிலியர், நாவிதர், வண்ணார், தோட்டி, வெட்டியார் போன்றவர்களே உண்மையில் ‘தலித்’ (Broken) என்று சொல்லத் தகுந்தவர்கள். இந்து சாதி அமைப்பின் கடைசிநிலையில் இருந்தவர்களாக, இருப்பவர்களாக அவர்களையே சொல்லவேண்டும்… இந்த இடத்தில்தான் சாதி அமைப்புக்கு நாம் முன்வைத்த நவீனத் தீர்வின் தோல்வி பற்றி சிந்திக்க வேண்டிவருகிறது. இந்த நவீனத் தீர்வு மூன்று வகையில் பிழையுடையதாக இருந்திருக்கிறது… பிற நாடுகளில் இருக்கும் அகமண முறை சாதியாக ஆகியிருக்காத நிலையில் இந்தியாவில் மட்டும் அகமண முறை மூலம் பிராமணர்கள் சாதிப் பிரிவினையை எப்படி நிலை நாட்டியிருக்க முடியும் என்ற கேள்வி வருகிறது….
View More நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1
75 வருடங்களுக்கு முன்பு பாபாசாகிப் அம்பேத்கர் எழுதிய “சாதி ஒழிப்பு” (Annihilation of Caste) எனும் புத்தகத்தை இப்போது மீளாய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. முதலில் அம்பேத்கர் என்ன எழுதியிருக்கிறார் என பார்த்துவிட்டு அதற்கான விமர்சனத்தை பார்ப்போம்… இந்துக்கள் ஒரு சமூகமாக அல்லது தேசியமாக பரிணமிக்க சாதியே தடையாக இருக்கிறது. இந்துக்களுக்கு தாங்கள் ஒருவருக்கொருவர் உறவு கொண்டவர்கள் என்ற பிரக்ஞையே இல்லை. இந்துக்களுக்கு தங்களுடைய சாதியோடு மட்டும் உறவு இருக்கிறது, மற்றைய இந்துக்களுடன் கிடையாது…. சாதி என்ற அமைப்பு இந்துக்களிடையே பரஸ்பர நம்பிக்கை, உதவி, ஒருங்கிணைப்பை உண்டாக்கித் தருவது இல்லை. ஒரு சாதி இன்னோர் சாதிக்கு எதிராக இருக்கிறது. அதற்கு அடிப்படையாக நூல்கள் எழுகின்றன… சதுர்வர்ணம் சூத்திரர்களுக்கு மிகவும் கொடுமையான அமைப்பாக இருக்கும். சூத்திரர்கள் சதுர்வர்ண முறையின் கீழ் எல்லாவற்றிக்கும் மற்றவர்களை நம்பியே இருக்கவேண்டிய அவசியம் இருக்கும். மற்றவர்கள் சூத்திரர்களை கொடுமைப்படுத்த நினைத்தால் அதை யாரும் கேட்கமுடியாமல் போகும்…
View More அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1ஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்கு
கடந்த பிப்ரவரி 19 முதல் 24 வரை சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின்…
View More ஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்குதமிழ்ஹிந்து விளம்பரம் & புத்தகப் பரிந்துரைகள்
தமிழ்ஹிந்து இணையதளம் குறித்து ஒரு விளம்பரம்.. இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் கட்டாயம் வாங்கவேண்டிய புத்தகங்கள் – தமிழ்ஹிந்து பரிந்துரை.. கம்யூனிசம்: பஞ்சம் படுகொலை பேரழிவு – அரவிந்தன் நீலகண்டனின் புதிய நூல்! … இரண்டு நூல்கள் தான் இந்த வருடக் கண்காட்சியைக் கலக்கப் போகும் அரசியல்/சமூகவியல் புத்தகங்கள் என்று பல புத்தக நோக்கர்கள் ஒருமனதாக அபிப்பிராயப் படுகின்றனர்… விஜயபாரதம் அரங்கில் தமிழ்ஹிந்து வெளியீடுகள் கிடைக்கும்..
View More தமிழ்ஹிந்து விளம்பரம் & புத்தகப் பரிந்துரைகள்[பாகம் 14] அரேபிய அடிமைமுறையில் உருவான இஸ்லாமிய சாதீயம்
‘[……] பிற்காலத்தில் அடிமைத்தனம் மறைந்தொழிந்தாலும் முசல்மான்களிடையே சாதிமுறை நிலைத்து நின்றுவிட்டது. […] ஆனால் இந்த சாபக்கேட்டை, சாபத்தீட்டை ஒழித்துக்கட்டுவதற்கு ஆதரவளிக்கக் கூடிய எதுவும் இஸ்லாமில் காணப்படவில்லை. […….] இன்னும் சரியாகச் சொல்லப்போனால் … தன்னுடைய அடிமைகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் ஒரு முஸ்லீமுக்கு இல்லை.’’
View More [பாகம் 14] அரேபிய அடிமைமுறையில் உருவான இஸ்லாமிய சாதீயம்மலருங்கள் மடாதிபதிகளே…
பஞ்சமருடன் பந்தி போஜனம் செய்ய வேண்டும் என்றாவது, சம்பந்தங்கள் செய்ய வேண்டுமென்றாவது […] தர்மிஷ்டர்கள் விரும்பவில்லை. […] பறையரும், புலையரும், பள்ளரும், சக்கிலியரும் நம்மைப் போல ஹிந்துக்களென்பதையும், விபூதி நாமம் போட்டுக் கொண்டு நமது தெய்வங்களையே வணங்குவோரென்பதையும், மடாதிபதி, புரோஹிதர், குருக்கள் முதலியவர்கள் சற்று மறந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது.
[…] அதற்கு மேற்படி மடாதிபதிகள் ஏன் ஆளனுப்பவில்லை?
View More மலருங்கள் மடாதிபதிகளே…தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 5
கட்சி கொடுத்த அரசியல் கொள்கை வழி தம் சித்தாந்தங்களை உருவாக்கிக்கொண்டு அதன் வழி இடது சாரி எழுத்தாளர்கள் எப்படி எழுதவேண்டும் என்று பாடம் நடத்தியவர்கள். உலகம் முழுதும் கம்யூனிஸ்டுகளின் கோட்டைகள் அத்தனையும் இடிந்து சிதிலமாகிப் போகவே, அவர்களுக்குப் போக்கிடம் ஒன்று தேவையாகியிருந்தது. அகதிகளாக வசிப்பிடம் தேடிய அவர்களுக்கு அப்போது கண்முன் தெரிந்த தலித் எழுச்சி வசதியாகிப் போயிற்று. பின் என்ன?
View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 5