எப்போதும் விரிந்து விரிந்து பெருகும் – ஆழ்ந்து ஆழ்ந்து ஆழம் காணும் – பறந்து பறந்து சிகரம் தேடும் – அனுபவப் பகிர்வழகே இலக்கிய சுகம், இலக்கிய ஞானம். இதற்கு ஹைக்கூவும் உதவும், காவியமும் உதவும். சிறு கதையும் உதவும், பெரு நாவலும் உதவும். நாடகமும் உதவும், திரையுலகும் உதவும்… புலனுகர்வுகள் – உணர்ச்சிகள்-கருத்துகள் – கற்பனைகள் என்பவற்றைக் கருவியாகக் கொண்டு அவற்றையே தாண்டி ஓர் ஆன்மவெளியில் கலைஞன் வந்திறங்கும் போது அக்கலைஞனின் கலைப்படைப்பில் ஒரு மகோன்னதம் சித்திக்கும்… மேலைக் காற்று இலக்கியத் திறனாய்வுக்கு வேண்டாம் என்பதல்ல நோக்கம். சுய பார்வைகளையும் , சுதேசிப் பார்வைகளையும் இழந்து – அபத்தப் பார்வைகளையும் அலக்கியப் பார்வைகளையும் வளரவிட வேண்டாம் என்பதுவே நோக்கம்….
View More ஆன்மீக இலக்கியம் – பண்பு, பார்வை, பணிTag: மாணிக்கவாசகர்
புதுமைப்பித்தனின் “அன்றிரவு” சிறுகதையை முன்வைத்து…
அடிப்படையில் இது ஒரு புராண மீட்டுருவாக்கக் கதை. இதை வைத்துக் கொண்டு ஒரு அழகான, கவித்துவமான, தத்துவமும் அங்கதமும் சுய விமர்சன நோக்கும் சுவாரஸ்யமும் இழையோடும் ஒரு இலக்கியத் தரமுள்ள ஒரு புதுமையான *நவீன* சிறுகதையை புதுமைப் பித்தன் எழுதியிருக்கிறார்… கட்டுடைப்பு” என்ற வகையில் கதையின் போக்கில் இரண்டு சிறிய மாற்றங்களை மட்டுமே செய்திருக்கிறார்… எது அந்த பொற்பிரம்பு? இயற்கையா? விதியா? பிரபஞ்ச லீலையின் ஒரு சாயலா? அல்லது இவற்றை எல்லாம் கட்டி வைத்து விளையாடும் ஒரு இலக்கிய கர்த்தாவின் எழுதுகோலா? அவனது எழுத்தே தானா அந்தப் பொற்பிரம்பு? …
View More புதுமைப்பித்தனின் “அன்றிரவு” சிறுகதையை முன்வைத்து…[பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்
ருத்ரன் என்பதன் பொருள் “அழச்செய்பவன்” என்பதாகும். உயிர்களை அழச் செய்வதன் மூலம் அவைகளைப் பண்பாடுறச் செய்வது ருத்ரனின் ஒப்பற்ற செயலாகிறது. உலகத்தவர் அழுகின்ற அழுகையின் உட்பொருளை ஆராய்ந்து பார்த்தால் அது துன்பத்தினை தவிர்த்து இன்பத்தினை நாடுவதாகவே இருப்பதைக் காணலாம்…. அழிந்து போகும் உலகப் பொருட்களை நாடி ஓடும் மனிதன் ஒருக்காலும் நிலைத்த இன்பத்தினைப் பெறமாட்டான். அதற்கு மாறாக அவன் மேலும் மேலும் துன்பத்தில் அகப்பட்டுப் பிறவிப் பெருங்கடலினூடே தத்தளிக்க வேண்டியதுதான்… யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய் – ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே…
View More [பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்மலையாளத்தில் திருவாசகம் – வெளியீட்டு விழா!
ஜுலை-23, திங்கள் மாலை 5.30 மணிக்கு திருவனந்தபுரம் கோட்டைக்ககம் கிருஷ்ணவிலாசம் அரண்மனை வெளிமண்டபத்தில்…
View More மலையாளத்தில் திருவாசகம் – வெளியீட்டு விழா!பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை
துயில் எழுப்புதலும், நீராட அழைத்தலும் இனிய ராகங்கள். வைகறையில் மானுடத்துக்கு இதைவிட இனிமை வேறு எதுவுமில்லை… அழகெல்லாம் உருகி நிற்கும் தடாகம் மணிவாசகக் கண்களில் இறைத் தடாகம் ஆகின்றது. ஆண்டாளின் இனிய பிரவாகம் காதல் வெள்ளம், பள்ளமடை திறந்த உணர்ச்சி வேகம்.. மாணிக்கவாசகரிடம் ஞானச்சிறகு விரிக்கும்; ஆண்டாளிடம் காதல் சிறகு விரிக்கும். இருவர்தம் பாவைப் பறவைகளும் ஆன்மவெளியில் பறக்கும் உயரங்களோ..
View More பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வைதிருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்
“பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பித்தனே” என்று உரிமையோடு தனக்காக அருளிய பெருமையை திருவாசகத்தில் பதிவு செய்கிறார்.. திருவாசக ஏடுகளை கொண்டு சென்று பிரம்மனுக்கும் மஹாவிஷ்ணுவிற்கும் தேவர்களுக்கும் ‘நம் அடியவன் எழுதிய இந்தத் தேன்தமிழைப் பாருங்கள் பருகுங்கள்’ என்று… மாணிக்கவாசகப் பெருமானுக்கு இன்றைக்கும் இலங்கையில் மிகுந்த சிறப்பிடம் செய்யப்பட்டு வருகின்றது. உபசாரங்கள் யாவற்றையும் மாணிக்க வாசகருக்கே வழங்கி நிறைவில் திருக்குளத்தில் மாணிக்கவாசகரின் திருவுருவத்தையே திருநீராட்டும் வழக்கமும்..
View More திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்கடவுளின் பணித்திட்டம்
உயிர்களைவிட்டுக் கணநேரமும் பிரியாமை அவனது குறிப்பு என மாணிக்கவாசகர் அனுபவித்துக் கூறுகின்றார். ‘உய்ய என் (உயிர்களின்) உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா’, ‘மருவி எவ்வுயிரும் வளர்ப்போன் காண்க’ என்பன போலத் திருவாசகத்தின் பல இடங்களில் இறைவன் உயிர்களோடு கலந்து நின்று பிரியாமல் இருப்பதன் திருக்குறிப்பை அதாவது ‘கடவுளின் பணித்திட்டத்தை’ மணிவாசகர் அறிந்து கூறுகின்றார்.
View More கடவுளின் பணித்திட்டம்“தன்பெருமை தான் அறியான்”
நெருப்புத் தணல் மீது இயல்பாகவே வெண்மையான சாம்பல் படியும். வீசினால் சாம்பல் கலையும், மீண்டும் படியும். முடிவில் தணல் இன்றி சாம்பலே மிஞ்சும். சிவனுக்கு எனத் தனியாகத் திருமேனி இல்லை. அவன் தாங்கும் திருமேனிகள் அவனுடைய திருவருளால் வேண்டும்போது கொள்வனவாகும். திருவருளே சிவசத்தி.அதுவே அம்பிகை. அவனுடைய திருவருளாகிய அம்பிகையே அவனுடைய வடிவம் என்று உணர்த்துவது இந்தத் திருநீறு.
View More “தன்பெருமை தான் அறியான்”அற வழியில் நால்வர்: ஒரு பார்வை
நான்கு வழிகளில் வந்த நால்வர்களின் வாழ்நாள் எல்லை நமக்கு உணர்த்துவது என்ன? நால்வர்களும் என்ன சாமானிய பக்தர்களா? நால்வருமே உயிரிருக்கும்போதே இறைவனை உணர்ந்த ஜீவன் முக்தர்கள். அப்படியும் அவர்கள், தங்கள் வினைப்படியும் தாங்கள் தேர்ந்தெடுத்த நெறிப்படியும், ஒரு கால வரம்பில் கட்டுண்டு வாழ்ந்தார்கள்… எந்த வழியையும் ஒருவர் பின்பற்றலாம் எனும்போது, அந்த நான்கு முறைகளில் ஓர் உயர்வு-தாழ்வு இருப்பது போல் காணப்படுவதின் உள்ளர்த்தத்தை இப்போது நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
View More அற வழியில் நால்வர்: ஒரு பார்வைஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்
மகாப் புனிதரான மாணிக்கவாசகரை ஒழுக்கம் கெட்ட பாவியென நினைக்கத் துணிந்தாரே போப்! மணிவாசகப் பெருமான் பெண் மயக்கத்தால் ஒழுக்கங்கெட்டு பாவமன்னிப்பு கேட்டு ஒப்புதல் கொடுத்தார் என்ற பழிச்சொல்லையும் உலகமுழுதும் பரவச்செய்தார்… ”இயேசு கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்?” எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார்.
View More ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்